எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 அக்டோபர், 2009

துலிப் பூக்கள்

ரஷிதியாவிலிருந்து
எமிரேட் மால்வரைக்கும்
மெட்ரோவில் வந்தேன்...
உன்னைப் பார்க்க...

ஷூமுதல் தலை வரை
சிக்கென உடை அணிந்த
பூவாய் நீ...

பொக்கிஷம் போல்
பொலிந்திருந்தாய்...
ச்வரோஸ்கி கற்கள் போலும்
டீ பீர்ஸ் வைரம் போலும்...

எக்ஸலேட்டரில்
இறங்கிவந்த பிலிப்பைனின்
விற்பனைப் பெண்ணாய்...

என்ன நிறம்...
என்ன நிறம் ...
கண் இமைக்க
மறந்து விட்டேன்...

இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல
என அறிவிக்கப்படாத
உயிர்ப்பூ நீ...

பொக்கே ஷாப்பில் நின்று
உன் கண் சிரித்த
புன்சிரிப்பில கலர்
கலராய் துலிப் பூ ...

எதை எடுக்க ...
எதை விட ...
அத்தனையும் அள்ளி
அணைத்துக் கொண்டேன்
பூங்கொத்தாய் ...

13 கருத்துகள்:

  1. காதல்... காதல் இல்லேயேல் சாதல் சாதல் என்ற வரிகள்..

    காதலை அப்படியே குழைத்து குழைத்து செய்த மண்பாண்டம் மாதிரி சொல்லியிருக்கீங்க...

    // இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல
    என அறிவிக்கப்படாத
    உயிர்ப்பூ நீ... // அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. தேனு எத்தனை பூக்களைத் தெரிந்திருக்கிறது உங்களுக்கு !பூக்களாலேயே நிரப்புகிறீர்களே உங்கள் பக்கத்தை.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ராகவன்
    உங்க வலைப் பூவில் அடுத்த புதுப் பூ எப்ப பூக்கும்
    தினம் சென்று பார்க்கிறேன்
    சீக்கிரம் எழுதுங்க

    பதிலளிநீக்கு
  4. நன்றி என் ஹேமா
    உங்கள் பயந்தாங் கோழிக் கடவுள் பற்றி எனக்கும் கோபம் வந்தது ஹேமா

    பதிலளிநீக்கு
  5. பல பூக்களை பற்றி நான் அறிந்தது உங்களிடம்தான். G R E A T.

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கவிதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
    நேயத்தை பூக்களின் வாசத்துடன் சொல்ல உலகம் பழக்கி வைத்திருக்கிறது
    ஆனால் ஒவ்வொரு பூவிற்கும் ஒவ்வொரு விதமாய் நேயத்தை பகிரும் கலை உங்களுக்குத்தான் வாய்த்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. பூவின் கதம்பம் அருமைங்க..
    (துபாய் ட்ரிப் நல்லப்படியா போகுதா..:) )

    பதிலளிநீக்கு
  8. எப்படி இவ்வளவு அருமையா எழுதுறீங்க.கலக்கலா இருக்கு!!

    பதிலளிநீக்கு
  9. விஜய் அழகு மிக அழகு
    என்னவளின் கோணல் வகிடு

    அடடா உங்கள் ரசனை அருமை

    நன்றி விஜய் பாராட்டுக்கு

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...