எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2009

தொடர்கிறது

ஒரு சுண்டல் காகிதமோ .,
வறுகடலைப்பொட்டலமோ.,
பஜ்ஜி தோய்ந்த பேப்பரோ .,
எதையும் விட்டு வைப்பதில்லை நீ... !
எழுத்துக்களில் காதல் உனக்கு...
ஏழேழு பிறப்பிலும்..
நீ அதை தொடர்கிறாயா ..
அது உன்னைத்தொடர்கிறதா ..
தெரியவில்லை.. !!
பெட்டிக்கடையிலிருந்து .,
ஹிக்கின் பாதாம்ஸ் .,
லேண்ட்மார்க் .,பபாஸி வரை
எங்கெங்கும் நீ அதன் பின்னால்... !!
கருக்கலிலும் அந்தி இருட்டிலும்...
பின்னிரவிலும் மெழுகுவர்த்தி
தலை சுட்ட போதும் ...!!
அமேசானின் ஸாப்போவிலும்...
கின்டிலிலும்., கணினியின் கணப்பிலும்.,
செல்போனிலும் கூட
இடையறாது நேசிக்கிறாய் நீ...!!
படுக்கையறையிலும்.,
பாத்ரூமிலும்.,
ஏன் அலுவலகத்தில் கூட ....!!

புதன், 30 டிசம்பர், 2009

சூரியன் மகள்

யார் விதைத்தும்
பயிராய் முளைத்து...
யார் உடைத்தும்
கனியாய்க்கனிந்து...
யார் தோண்டியும்
வெள்ளமாய்ப்பொங்கி...
யார் மரித்தும்
எனக்குள் ஏந்தி....

என்னைத்துண்டாக்கி
எல்லைக்கோடிட்டு...
தனக்குள்ளே சண்டையிட்டு...
என் மேலே ரத்தம் சிந்தி...
உன் குருக்ஷேத்ரம் தாங்காமல்
நான் பாலையாகவும்
பாளமாகவும் வெடித்து
நேசமுற்றி விளைந்தே
காயப்பட்டு...

திங்கள், 28 டிசம்பர், 2009

ஒப்பனை

அதிகம் ஜரிகை அடைத்த
பட்டுக்களுடனும் நகைகளுடனும்
வலம் வரும் நான்...
ஒரு போதும் முயன்றதில்லை
முகம் மறைக்கும் ஒப்பனைக்கு...
தலைவாரி பூச்சூடி வகிட்டிலும்
நெற்றியிலும் பொட்டிடுவதுடன்
முடிந்துவிடும் என் அலங்காரம்...

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சுருண்ட இறால்கள்

விரும்பியது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை விரும்பும்
உயர்மத்தியதரம்...

கணினியில் நிபுணனான
என் மகன் சிறுவயதில்
"டிங்குவைப்போல் ஒரு பிள்ளை"...

சனி, 26 டிசம்பர், 2009

அகநாழிகை ..... ஒரு புத்தகப்பிரியர்

புத்தகங்களைப் படித்துவிட்டு அலமாரிகளிலோ,
ட்ரங்குப் பெட்டிகளிலோ ,எடைக்கோ போடுவது
அறிந்ததுதான்... ஆனால் படுக்கையிலும் இரண்டு
அடிக்கு புத்தகங்களுடன் வாழ்பவர் சாரு.. இதில்
எனக்கு அவர் மீது ஏற்பட்ட வியப்பைவிட அவர்
மனைவி அவந்திகாவின் மேல்தான் வியப்பு
அதிகம்.. "மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்".. "சாருவுக்கு மகனும் கூட"..

சாருவின் சில பல கதைகள் கட்டுரைகள் படித்து
இருந்தாலும் ... நன்கு பழகிய ஒருவரை நீண்ட
நாட்களுக்குப் பின் ஒரு ரயில் பயணத்தில் சந்தித்து
கையசைத்துப்பிரியும் வலியை ....அவர்
வார்த்தைகளில் படித்தபோது இன்னும் அதிகமாக
உணர முடிந்தது ...

வியாழன், 24 டிசம்பர், 2009

அகநாழிகை ....ஆரியம் திராவிடம் அற்றது அன்பு

நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து படித்து
வருவது ஆனந்த விகடனும், குமுதமும். அடிக்கடி
மாற்றலாகும் தருணங்களால் ஆசையாய்
வாங்கப்பட்ட புத்தகங்கள் அதிசோக சுமையாகும்
போது [பள்ளி கல்லூரி புத்தகங்கள் தனிசுமை
வேறு] புதிதாய் புத்தகம் வாங்கும் பழக்கம்
சிறிது குறைந்து போனது உண்மை.

எங்கிருந்தாலும் படிக்கும் விகடன் குமுதங்களில்
தன்னுடைய காரசாரமான எழுத்துக்களால்
என்னையும் என் மகனையும் கவர்ந்தவர்
திரு ஞாநி அவர்கள்.. தான் கூறும்கருத்துக்களில்
வலிமையாக நிற்கும் தன்மை, உறுதி படக்கூறுவது,
எளியோருக்கு இரங்குவது, அநேக தருணங்களில்
சரியானவற்றையே கூறுவது என என் ஆரம்ப கால
பள்ளி ஆசிரியர்களின் தொகுப்பாக இருக்கிறார்..

புதன், 23 டிசம்பர், 2009

அக நாழிகை புத்தக வெளியீடு ...ஒரு பார்வை

கிட்டத்தட்ட பதினைந்து தினங்களுக்கு முன் சக
வலைப்பதிவர் பாராவின் கருவேல நிழல்
அகநாழிகை புத்தக வெளியீடு என் வீட்டுக்கு
அருகிலேயே நடப்பது மாலை ஒரு ஐந்து
மணியளவில் தெரிந்தது...

கல்லூரிக்காலத்துக்குப் பின் எழுத்துலகுக்கு ஒரு
ஆறு மாதங்களுக்குமுன் தான் அடி எடுத்து
வைத்ததால் சகவலைப் பதிவர்களை அறிந்து
கொள்ளும் நோக்கிலும் திரு பாராவின்
கையெழுத்துடன் அவர் படைப்பை வாங்கும்
நோக்குடனும் சென்றேன் .திடீரென மாலையில்
மழை இருந்ததால் நான் கொஞ்சம் அங்கு
செல்லத்தாமதம் ஆகிவிட்டது .

மாய உலகு

பாடல்கள் முடிந்த பின்னும்
மனம் இசைக்கும் இசையாய்
உன் நினைவு...
கீறல் விழுந்த
முள்ளில் ஒலிக்கும்
கிராமபோன் ரெக்கார்டாய்...
வயலினிலிருந்து
பிர்காக்கக்களும் சங்கதிகளும்
முடிவில்லாமல்...

திங்கள், 21 டிசம்பர், 2009

மணிமேகலையின் தாய்

உன் துணையைவிட்டு என்னிடம் வந்து
நீ கண்ணகியல்ல என்கிறாய் ..
ஆம்.. நான் கண்ணகியல்ல மாதவி ..

கோயில்களில் பொட்டுக்கட்டி
தேவர் அடியவராய் நடனமாடி
இறைமைக்கே வாக்கப்பட்டேன்
மனிதருக்கு அல்ல...

சனி, 19 டிசம்பர், 2009

படிக்கட்டு

பெருநகரின் தெருக்களில்
பெருநோயாளியாகவோ
பிச்சைக்காரனாகவோ இருக்கலாம்....

பிரபலமாய் இருந்ததின்
சில சந்தோஷத்திற்கும்
பல சங்கடத்திற்கும்...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

என்கவுண்டர்

ரொம்ப நாளாச்சு நான் இப்படிக் குமுறிக் குமுறி
அழுது... என்கவுண்டர்ல எசகுபெசகா சுடப்பட்ட
மாதிரி போனில ரங்கமணிக்கிட்ட என் நியோ
கவுண்டரைக் காணலைன்னு சொல்லி ரெண்டு
துண்டு நனையிற அளவு அழுகாச்சி ...

எப்போ பிளாக் ஆரம்பிச்சனோ அப்போவிலேர்ந்து
இதே ரோதனையா போச்சுன்னு நினைச்சுக்கிட்டே
அவர் கேட்டார் சினிமா பார்த்து அழுற பழக்கத்தை
நீ இன்னும் விடலயான்னு ஏதோசின்னக்கவுண்டரப்
பார்த்து நான் அழுகிறேனு நினைச்சுகிட்டு....

புதன், 16 டிசம்பர், 2009

கவிதைகளின் கடவுள்

சொர்க்கத்தின் சாம்பலிலிருந்து
உயிர்த்தெழுந்து
சாதாரணனாய்...

கவிதைகளின் கடவுள்
கதைக்க விரும்பினார்
என்னுடன்...

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வலைத்தளத்தின் காதலி

வெகுஜனப் பத்திரிக்கையில்
தானியங்களைக் கொத்திக்கொண்டிருந்த
என் பச்சைக்கிளி எதேச்சையாக
பல தானியங்கள் பரத்தியிருந்த
வலையைப் பார்த்தது...

என்று சென்று அமர்ந்ததோ
அன்றிலிருந்து மீளமுடியாமல்
அசையாமல் அதுவும்
அன்றிலாய் நானும்....

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

அடைக்கலம்

ஒரு எழுத்தாளனாகவோ
பத்திரிக்கையாளனாகவோ
நடிகனாகவோ நான் ...

உன் ஒற்றைக் குழந்தையுடன்
துணையை இழந்து இறந்தோ
பிரிந்தோ நீ என்னிடம்...

என் மனக்கூட்டுக்குள்
ஆமையாய் நத்தையாய்
சிப்பியாய் முடங்கி நான்...

சனி, 12 டிசம்பர், 2009

அம்மா அப்பாவுக்கு சமர்ப்பணம்

இது என் நூறாவது இடுகை..
15.11.84 இல் கல்லூரி விடுதியில் எழுதியது..

அப்பா

மனதில் கிடங்குள் புதைத்திருக்கும்
பாசத்தை எப்படி வெளிப்படுத்துவது
எனத் தெரியாமல் எல்லா வழிகளிலும்
புலப்படுத்திய அருமை அப்பா...
பிரியத்தை வெற்றுச் சொற்களால்
அலங்கரிக்க விரும்பாமல் செயல்களில்
தன்னை வெளிப்படுத்திக்கொள்வீர்கள்...

வியாழன், 10 டிசம்பர், 2009

வீடு

சோமாஸ்கந்தர்களும்
பிரியாவிடையும்
உற்சவமூர்த்தியும்
எழுந்த கோயில்....

உயிர் உறையும் கிண்ணங்கள்...
அறுபதோ.,எழுபதோ.,
நூறுவரையோ வாழ....

செவ்வாய், 8 டிசம்பர், 2009

முதிர்கன்னிகள்

22.11.1984 கல்லூரிக் கவிதை

அந்தப்பூக்கள் வாடிக்கொண்டு
ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும்
அந்தப்பூக்கள் வாடிக் கொண்டு ...

காம்புக்கால்களால் நின்றுகொண்டு
கதிர்களிடம் யாசிக்கின்றன ...

திங்கள், 7 டிசம்பர், 2009

ஆக்கிரமிப்பு

காட்டாற்று வெள்ளமாக
கடுங்கோடை இடியாக
ஆட்டுவிக்கிறேன் என்
அன்பெனும் அதிகாரத்தில்...

அடைமழையில் நனைந்த
கோழியாக ஆடிக்கொண்டிருக்கும்
உன்னை இன்னும்...

சனி, 5 டிசம்பர், 2009

அந்தி மந்தாரை

நந்தினியோ குந்தவையோ
வானதியோ வஞ்சியரை
எதிர்பார்த்து நான்...

அட்ட வீரட்டானத் தலங்களில்
அர்ச்சனைத் தாம்பாளங்களில்
அருள்மொழிவர்மன் அள்ளித் தூவ ...

வானதியும் கூட...
புன்னகை தேவதை...
பூக்களின் அரசி...

வெள்ளி, 4 டிசம்பர், 2009

முத்துச் சிப்பி

நாட்காட்டியோ மணிகாட்டியோ
திசைகாட்டியோ இல்லாத
ஊர்த்துவப் பொழுது...

தாம்புக்கயிறறுந்த குடம்
மெல்ல மெல்ல மூழ்குவதுபோல
உன் முத்த அலைகளுக்குள்...

கிணற்றைப்போல என்னை
விழுங்கிக் கொண்டிருந்தாய் நீ

வினோத மேகம் போல
என் உதடுகள்
மழை பொழியப் பொழிய
வெளுக்காமல் கறுத்து...

மீண்டும் மீண்டும்
மழை தேடும்
சாதகப்பறவையாய் நீ ...

உன் உதடுகளுக்குள்
சிப்பிக்குள் சிக்கிய
நன்னீர் சொட்டுப் போலும்
அன்னியப் பொருள் போலும்
இறுக்கி விளைந்த முத்தாய்
என் உதடு....

வியாழன், 3 டிசம்பர், 2009

இசைவு பிடிமானம்

நிலவு மரத்திலிருந்து
நட்சத்திரங்கள் விடியலில்
பழுத்த இலையாய்
உதிர்ந்து....

ஜன்னல் கம்பிகளுக்குள்
பறக்கவியலா பறவையாய் ...
வீடென்ற கூட்டுக்குள்...

குழந்தைகள் பறவைகளாக
பரந்த வானத்தில்
விரிந்த இறக்கைகளுடன்....
வெறுங்கூடாகிப் போனது வீடு....

முந்தானைக்குள்
முடிச்சிட்டு இருந்தேன்
தொட்டுப் பார்த்தால்
வெறும் முடிச்சு மட்டும்...

இராணித்தேனீயும்
வேலைக்காரத்தேனீயுமாய் நானிருக்க
ஆண்தேனீக்கள் அலைச்சலில்
அவரவர்க்கான தேடலில்....

புதன், 2 டிசம்பர், 2009

நட்பு

ஊர்விட்டு ஊர்
நாடுவிட்டு நாடு
தேசம்விட்டு தேசம் ஏன்
ஜென்மம்விட்டு ஜென்மம்
கடந்தும் கூட தொடரும்
கால வர்த்த பரிமாணம்
அற்றது நம் நட்பு ...

பிரபஞ்ச செடியின்
சருகாகவோ
தளிராகவோ பூவாகவோ
மரித்துக்கொண்டும்
பூத்துக்கொண்டும் நாம்...

புத்தகங்களோ பூக்களோ
பழக்கூடையோ இனிப்போ ஏன்
ஒரு டீத்தூள் பாக்கெட்டோ கூட
கொண்டு எனைப்பார்க்க
எங்கிருந்தாவது வருகிறாய் நீ....

பாதியான உடலும் உணர்வும் கொண்டு
முழுமையடைய விரும்புவதாய்...

செவ்வாய், 1 டிசம்பர், 2009

நீர் தேங்கிக் கிடக்கிறது

நீர் தேங்கிக்கிடக்கிறது
வாய்க்காலின் மையத்தில்...

இலைச் சருகுகளால்
வசந்தகாலப் பூக்களால்
அர்ச்சிக்கப்பட்டு...

தென்றலில் குளித்துக்
குளிர்ந்து போன
நீர் தேங்கிக் கிடக்கிறது....

வழிப்போக்கருக்கு என்ன தெரியும்..?
வேர்களுக்குத்தான் தெரியும் ....
வாய்க்கால் சுனையென்று...

சுரந்து சுரந்து சுமந்து
சலித்துப் போய்
வாய்மூடிக்கொண்ட
நீர் தேங்கிக் கிடக்கிறது....

அட... அள்ளிப்
பருகத்தான் வேண்டாம்...
கொஞ்சம் கால் நனைத்தாவது
கலக்கிச் சென்றாலென்ன....?
Related Posts Plugin for WordPress, Blogger...