எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

என்ன தவம் செய்தேன் !!!

*சமீபத்தில் ஒரு ஆன்மீக பாதயாத்திரை சென்று
வந்தேன்.. அதற்கு வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு
நன்றி .
*என்னை முதன் முதலில் வாழ்த்தி வழியனுப்பிய
என் அன்பு அம்மா திரு எம். ஏ .சுசீலாம்மா
அவர்களுக்கும் .,
*ஒரு பத்து நாள் போவதால் ஒரே நேரத்தில்
20 போஸ்ட் வரப் போகுதா என பயந்த
பேராசிரியருக்கும் (அது 40 ஆகி அவர் கிலியை
இன்னும் கிளப்பி இருக்கலாம்).,
* முகபுத்தகத்தில் தன் மனைவி மூலம் தெரிந்து
என்னைத்தேடிய சகோதர சகோதரிக்கு தகவல்
எழுதிய அன்பு நண்பருக்கும் (இவர் பேரைத்தான்
நான் கிளம்பியது முதல் முடிவு வரை
கோஷமாக கேட்டு வந்தேன்) .,

வியாழன், 21 ஜனவரி, 2010

இன்னா(வோ) நாற்பது

சத்புத்திரருக்கும் இருக்கக் கூடும்..
சொத்துபற்றிய ஏக்கம்..

அடகுக்கடை சாமி பூவில் வடிந்தது தண்ணீர்..
உழைத்தவனின் கண்ணீர்..

பாட்டியும் கதைகேட்கிறாள் குழந்தைகளோடு..
தொலைக்காட்சியில்..

வீட்டில் வேலைக்காரி
உடல் மெலிய ஃபிட்னஸ் சென்டர்...

செவ்வாய், 19 ஜனவரி, 2010

இருவருக்கும்

பனைமரங்களும் தென்னைமரங்களும்
பாய்மரங்களும் தெளித்துக் கிடக்க..
கரையோரம் ஆளைத்தழுவி
இழுத்துச்செல்லும் மின்சார அலை...
சொற்களின் அர்த்தமும்
வார்த்தைகளின் வீர்யமும்
கடந்த மௌனம்...
சும்மா பக்கத்தில் அமர்ந்து
இருப்பது கூட சுகமானதாய்...

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

மலையறுப்பு

மலையின் முலை மேகம் முட்டி
மார் சுரந்து பாலாய்ப்பெருகி...
வேர் அடைந்த மரத்தின்கீழ்
வனப்பின் மிருகம் சடைபிடித்து...
முண்டுமுடிச்சுத்தண்டுகளூடே...
குளிர்சுனை சத்தமெழாது
கழுத்துப்பாசியாய் சிறுநெளிப்போடு...
வெய்யில் கீறி உள்நுழையும்
கறுப்பு ரகசியம் தெளிந்தும் தெளியாமலும்...

வெள்ளி, 15 ஜனவரி, 2010

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம்

சொல் பேச்சு கேட்பதில்லை ..
அறிவுரை கேட்பது விட ஐ பாட் கேட்பது ஆனந்தம்.
தினமும் பைக்கை உறுமச்செய்கிறான் ...
என் கட்டயத்தின் பேரில் ஹெல்மேட்...
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்.................................................

புதன், 13 ஜனவரி, 2010

சூரியப் பொங்கல்

அந்திக்கூட்டுக்குள்
விடியலின் சிறகு முளைக்க
சூரியன் பறந்து கிளம்பி ....

சூரியப் பொங்கலில்
வெளிச்சப் பால்
பொங்கி வழிந்து...

சூரியத்தண்ணீர்
மரத்தாமரை வழி சிதறித்
தரையில் முத்துக்களாய்.....

திங்கள், 11 ஜனவரி, 2010

நாண(ந)யம் நாகப்பன்

"தோட்டத்தில் எல்லாவிதைகளும்
ஒரே நேரத்தில் விதைக்கப்பட்டு
ஒரே சூரியன் கீழ்
ஒரே கிணற்றின் தண்ணீரில்...

ஒன்று மட்டும் ஆழமாய் வேர்பாய்ச்சி
அகலமாய் கிளைபரப்பி
அண்டமெல்லாம் விரிந்து.... "

அதுதான் நாண(ந)யம் நாகப்பன் அவர்கள் .

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

ஐந்தொகை

* அழகனோ அழகியோ இல்லை
காதல் மட்டும்
அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை
வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....


* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேஷ தினங்களில்
அநேக பலகாரங்கள்
ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...

வெள்ளி, 8 ஜனவரி, 2010

தீக்குளிப்பும் குண்டு வெடிப்பும்

கிராமம் சார்ந்த
காங்க்ரீட் காடு எனது .
மௌனமாய் நகரும் பல்லி .,
ஓடி ஒளியும் கரப்பான்.,
தத்தித் தாவும் பாச்சை.,
புத்தகங்களுக்குள் சில்வர் ஃபிஷ்.,
ஓரத்து ஒட்டடைக்குடியிருப்பில் சிலந்தி.,
பருப்புகளில் வண்டு .,
காய்களில் பச்சைப்புழு.,

வியாழன், 7 ஜனவரி, 2010

வாடகை புத்தகம்

பழைய நாட்குறிப்புகளைத்
திறக்கும் போதெல்லாம்
ஒரு பறவையின் இறக்கையாயும்
குட்டி போடும் மயில் தோகையாயும்
பாடம் செய்யப்பட்ட அரச இலையாயும்
நழுவி விழுகிறது உன் நினைவு...
நூலில் இங்க் வைத்து பக்கங்களில்
இழுத்து மகிழும் வினோத பிக்காஸோவாய்
அப்பிக்கிடக்கும் உன் நினைவுகள் ...

புதன், 6 ஜனவரி, 2010

புத்தகங்கள்

புங்கைப் பூக்கள் மிதக்கும்
குளத்தின் கல்லில்
கால் நனைத்து அமர்ந்து...
மீன்களைப்போல் எண்ணங்கள்
என்னைக் கடித்துக்கொண்டு...
தொலைந்து போகிறேன் ...
ஒவ்வொரு சின்ன அலையிலும் ...
அழித்து அழித்து எழுதுகிறது ..
ஒவ்வொரு பெயராய்...

திங்கள், 4 ஜனவரி, 2010

குருக்ஷேத்திரம்

எதிர்பாராது
எதிரில் இருப்பவரே
எதிரியான குழப்பம்...
குறிவைத்தோ .,
குறிப்பிட்டதை மட்டுமே சொல்லியோ
எய்யப்பயிலாமல்...
கண்ணனே என் காதலன்.,
சாரதி., சேவகன் ஆனால்
என் போரேல்லாம் அவனுடனே ...

சனி, 2 ஜனவரி, 2010

இதுவும் கடந்து போகும்

அறியாத அருணாவுக்கு
முப்பத்தாறு ஆண்டுகள்
நினைவற்று..
உலகெங்கும் உழைக்கும்
நண்பருக்கு அயர்ந்து அமர
ஒரு வீடும் குடும்பமும்...
கார்கிலிலும் வாகாவிலும்
கடுங்குளிரில் நமக்காய்
துப்பாக்கிக் கனவான்கள்..
குரலும் பிம்பமும் கொண்டு
சேர்க்கும் வீடு ..
வான்வழிப் பயணமோ ..
வயர் வழிப் பயணமோ..
எத்தனை புத்தாண்டு..
பொங்கல் .,தீபாவளி .,
ரம்ஜான் .,கிறிஸ்துமஸ் .,
யாருமில்லாமல்.. ..
குரல் வழிக்குடித்தனத்தில்
கழிந்து போனது
புத்தாண்டுகளும் புன்னகையும்...
Related Posts Plugin for WordPress, Blogger...