எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 செப்டம்பர், 2011

வலைத்தளங்களின் வரலாறு...

நம்மில் பெரும்பாலோர் கூகுளின் உதவியுடன் ப்லாகுகள்., வேர்ட் ப்ரஸ்., ஆகியவற்றில் எழுதி வருகிறோம். வலைத்தளங்களுக்கு என்று ஒரு வரலாறு எழுதப்படவேண்டும் என நினைக்கிறேன். இது சாமான்யர்களையும் சிருஷ்டிகர்த்தாக்களாக உலவ விட்டிருக்கிறது.

முன்பு பத்ரிக்கைகளுக்கு அனுப்பி பல மாதம் காத்திருந்து பின் வெளிவந்தபின்தான் எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைக்கும். இப்போது ஃபேஸ் புக் நோட்ஸிலோ., எஸ் எம் எஸ் களிலோ மெயினாக ப்லாகுகளிலோ நாம் நினைத்ததைப் பகிர முடிகிறது. அதன் எதிர் வினைகளையும் உடனடியாக உணர முடிகிறது.


1986 இல் டெக்ஸ்ட் ஒரு மெயிலில் இருந்து பல மெயில்களுக்கு அனுப்பப் பட்டது. 1990 இல் படித்துக் கொண்டு மட்டும் இருந்த நாம் எழுதவும் முடிந்தது அதன் பெயர் GLOG -- G LOG ., BBS -BULLETIN BOARD SERVICES., FORUMS., BLOGOSPHERE., WIKI., இது எல்லாம் அதன் பரிமாணங்கள்.

1990 களில் YAHOO ஒரு ஆப்ஷனைக் கொடுத்தது -- GEOCITIES அப்பிடின்னு ஒரு வெப்சைட் க்ரியேட் பண்ணிக்கலாம். 1995 மத்தியில் ஒவ்வொருவரும் ஒரு ஃபாண்டை உபயோகப்படுத்தியதால் படிக்க முடியாமல் ஃபாண்ட் ப்ராப்ளங்களை எதிர் கொள்ள வேண்டி வந்ததாம். இப்போ பார்த்தீங்கன்னா பத்து வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் வெப்சைட் அல்லது ப்லாகுகளில் மிகப் பழைய இடுகைகள் பிழிந்த ஜிலேபி போல புரியாமல் இருக்கும். எனவே யூனிகோடின் தேவை ஏற்பட்டது.

1997 இல் WEBLOG. 1998 இல் அதன் பெயர் V BLOG என்று அழைக்கப்பட்டது. 1999 இல் அதில் இருந்துசுருங்கி BLOG ஆகிவிட்டது. 2002 இல் யூனிகோட் பாப்புலர் ஆனவுடன். யாரும் ப்லாக் ஆரம்பிக்கவும் எழுதவும்., பின்னூட்டமிடவும். பின்னூட்டங்களை மட்டுறுத்தவும் முடிகிறது.

2005 இல் விக்கி்பீடியா மிக முக்கியமானதாகிறது.

தற்போது சில கேள்விகள். உங்கள் சிறந்த ஆலோசனைகளை வழங்குங்கள்.

1.இந்த ப்லாகுகள் எந்த மொழியில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டன?

2. தோராயமாக எத்தனை உலக மொழிகளில் எழுதப்படுகின்றன?

3. தமிழில் முதன் முதலில் ப்லாகின் முன்னோடி/ முன்னோடிகள் யார்.?

4. அவர்கள் மேற்கொண்ட முறைகள்., பிரச்சனைகள் தீர்வுகள் என்ன?

5. எது சம்பந்தமாக எல்லாம் ப்லாகில் பெரும்பான்மையும் எழுதப்படுகிறது?

6. கவிதை., கதை., கட்டுரைகள் தவிர., ஓவியம்., விளையாட்டு., அரசியல்., மற்ற கலைகளுக்கு என உள்ள வலைத்தளங்கள் என்னென்ன..

7. இவை தவிர என்ன என்னவெல்லாம் ப்லாகில் எழுதப் படுகின்றன.

8. இன்னும் ப்லாகுகளை வலைமையுறச் செய்ய என்ன செய்யலாம்.

9. திரைப்படங்கள்., தொலைக்காட்சி., பத்ரிக்கை போன்ற ஊடங்களின் முன் ப்லாகை வலிமையானதாக எப்படிக் கொண்டுவரலாம்.

10 இதில் நாம் வீடியோக்கள்., படங்கள்., செய்திகள் போன்ற சினிமா., டிவி., பத்ரிக்கை தருவது அனைத்தையும் தருவதால் மிகவும் நம்பிக்கையானதாகவும்., தரமுள்ளதாகவும் கொண்டு வந்து மிக முக்கியமான ஒரு இடத்துக்கு ப்லாகுகளை முன்னிறுத்துவது எப்படி.

11. பத்ரிக்கைகள் கூட தற்போது வலையுலகில் தங்கள் லிங்குகளை நிறுவி வருவதால் ப்லாகுகள் மிக முக்கியமானவையாகின்றன். எனவே நம்முடையவற்றை மிக அருமையானதாக சிறப்பானதாகக் கொடுப்பது எப்படி.

11. உங்கள் மேலான ஆலோசனைகளைப் பின்னூட்டத்தில் வழங்குங்கள்.

10 கருத்துகள்:

  1. தேவையான தகவல்கள்...
    பகிர்வுக்கு நன்றி !!!

    பதிலளிநீக்கு
  2. அவசியமான அறிந்து கொள்ள வேண்டிய
    பதிவு.மேலே குறிப்பிட்டுள்ள கேள்விகளுக்கு எல்லாம் எனக்கு விடை தெரியாது.என்வே விடைகளை பின்னூட்டத்தில் மற்றவர்கள் குறிப்பிடுவதை அறிய காத்திருக்கிறேன்.
    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. //மிகப் பழைய இடுகைகள் பிழிந்த ஜிலேபி போல புரியாமல் இருக்கும்.//

    படித்ததும் குபுக்கென்று சிரித்து விட்டேன். ஜிலேபி போலவே தங்களின் உதாரணமும் ஒரே இனிப்பு.

    நல்ல முயற்சி எடுத்துள்ளீர்கள். வெற்றியடைய வாழ்த்துக்கள். vgk

    பதிலளிநீக்கு
  4. அறியாத பல அரிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அப்பவே வீட்டில படிடா, படிடான்னு சொன்னாங்க நா கேட்டாதானே..!! பாருங்க இப்பவும் நீங்க கேக்குர எந்த கேள்விக்கும் எனக்கு பதில் தெரியல ..!!அவ்வ்வ்வ் :-))

    பதிலளிநீக்கு
  6. இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் பின்னூட்டமிடுகிறேன். இது பத்தி கட்டுரை ஏதும் எழுதினீங்கன்னா, கண்டிப்பா இங்க பதிவுலயும் வெளியிடுங்கக்கா.

    பதிலளிநீக்கு
  7. நன்றி NAAI NAKKS

    நன்றி ராஜா

    நன்றி ராஜி

    நன்றி கோபால் சார்

    நன்றி ஜெய்

    நன்றி ரமேஷ்

    நன்றி ஹுசைனம்மா

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. 11. பத்ரிக்கைகள் கூட தற்போது வலையுலகில் தங்கள் லிங்குகளை நிறுவி வருவதால் ப்லாகுகள் மிக முக்கியமானவையாகின்றன். எனவே நம்முடையவற்றை மிக அருமையானதாக சிறப்பானதாகக் கொடுப்பது எப்படி./

    பொறுப்புணர்வை வலியுறுத்தும் வரலாற்றுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...