எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 ஏப்ரல், 2012

என்ன வாசிப்பது.

என்ன வாசிப்பது..
********************
 கண்களின் வழியோ
கண்ணாடி வழியோ
பிரதிபலிக்கிறது
நீ வாசிப்பது....
எழுத்துக்களோ., கோப்புக்களோ.,
அங்கங்களோ., ஆராய்ச்சியோ..


காக்கைக்கால் கோடுகள்
உற்சாகம் கிளப்பும் ஒன்றையும்.,
நெற்றிச் சுருக்கங்கள்
பொருளாதார வரைபடங்களையும்
கன்னக் குழிவுகள்
ஒரு கிளர்த்தும் காமத்தையும்
இதழின் இறுக்கங்கள்
உள்பூக்கும் பிடிவாதத்தையும்...

 என்னவென்று அறியாத
இன்பமாய் இருக்கிறது.
எதிர்வினைகள்
ஏதும் அற்று
எதிரே அமர்ந்து
என்ன வாசிக்கிறாய்
என்பதறியாமல்
உன்னை வாசிப்பது..

டிஸ்கி:- இந்தக் கவிதை மே 15,2011 ஞாயிறு திண்ணையில் வெளிவந்தது.

5 கருத்துகள்:

  1. //நெற்றிச் சுருக்கங்கள்
    பொருளாதார வரைபடங்களையும்
    கன்னக் குழிவுகள்
    ஒரு கிளர்த்தும் காமத்தையும்
    இதழின் இறுக்கங்கள்
    உள்பூக்கும் பிடிவாதத்தையும்...//

    எனக்கு மிகவும் பிடித்த வெகு அழகான அருமையான வர்ணிப்புகள்.

    பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  2. நமக்குப் பிடித்தவரை, அவர் அறியாமல் கண்ணுறுவது ஒரு சுகம். அவர் அதைக் கண்டும் காணாததுபோல் கவனித்திருப்பது அதிலும் சுகம். கவிதை அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி வரலாற்றுச் சுவடுகள்

    நன்றி கோபால் சார்

    நன்றி கீதமஞ்சரி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...