எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 மார்ச், 2013

இன்னும் தெரியலை.. யார் அந்த ஃபேன்..

இன்னும் தெரியவில்லை எனக்கு யார் இந்த ஃபேன் அப்பிடின்னு.

ஒரு நாள் ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் போடும்போது “ As  I am suffering from fever kindly grand ( t) me leave for 2 days " அப்பிடின்னு போட்டுட்டேன். எல்லாரும் அச்சோ, டேக் கேர், கெட் வெல் சூன் அப்பிடின்னு சொல்ல ஒருத்தர் மட்டும் கிண்டலடிச்சுட்டுப் போயிருந்தார். நான் ரெண்டு நாள் கழிச்சுப் போறதுக்குள்ள நிறையப்  பேர் ஃபேஸ்புக்குல என்ன கிராமர் பார்த்தா நாம தங்கிலீஷ்ல டைப் பண்றோம். அது ஒரு பெரிய தப்பான்னு எனக்காக வரிஞ்சு கட்டிட்டு வக்காலத்து வாங்கி இருந்தாங்க.. அப்பாடா நமக்காகப் பேசக்கூடியவங்களை அடைஞ்சிருக்கோம்னு ஆசுவாசமா இருந்துச்சு.


பட் அடுத்த நாளே இன் & அவுட் சென்னை ஆஃபீசுக்கு என் பேர்ல ஒரு கூரியர். அதுல இந்த 4 புத்தங்களும் வந்திருக்கு. இன் அண்ட் அவுட் சென்னையின் எடிட்டர் விஜயகுமார் அது ஏதோ குண்டு பார்சல்னு நினைச்சுட்டு வாங்கல. அப்புறம் என்கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிட்டு வாங்கிப் பிரிச்சுப் பார்த்திருக்கார். அதுல ஒரு ஃபேன் படம் வரைஞ்சு  SONMUGA SUNTHARI  ந்னு போட்டிருந்திருக்கு. உடனே எனக்கு ஃபோன் பண்ணாரு. நான் அது எந்தக் கூரியர் எந்த ஏரியாவிலேருந்து போஸ்ட் ஆயிருக்குன்னு கேட்டப்ப அது மந்தை வெளி ஏரியான்னும்  ப்ரொஃபஷனல்  கூரியர்னும் சொன்னார்.

எனக்கு அனுப்பாம ஏன் உங்களுக்கு அனுப்பினாங்கன்னு கேட்டேன். மேடம் நீங்க ப்லாகிலேயோ வேறெங்கேயுமோ அட்ரஸ் போடல .இப்ப நீங்க இதுல எழுதுறதால ஃபேஸ்புக்குல இந்த பேப்பர் அப்லோட் பண்றதால இந்த அட்ரஸுக்கு அனுப்பி இருக்காங்கன்னு சொன்னார். இது பத்தி நாங்க முகநூல்ல போட்டு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டே இருக்கும் போது எனக்கு இந்த புத்தகங்களை அனுப்பினவர்., விஜயோட  இன்பாக்ஸ்ல வந்து ”இத ஏன் இப்படி பெரிசு படுத்துறீங்க.. நான்  ஷண்முக சுந்தரியும் இல்ல. சொப்ன சுந்தரியும் இல்ல. நான் ஒரு ஆண்தான். இத எதுக்கு அனுப்பி இருக்கேன்னு கண்டு பிடிச்ச மாதிரி நான் யாருன்னும் கண்டுபிடிங்க. அவங்க புத்தக வெளியீட்டில் இன்று மாலை சந்திப்போம் “னு  மெசேஜ் பண்ணி இருந்தார்.

என்னுடைய புத்தக வெளியீடு ( சாதனை அரசிகள் ) முடிந்ததும் இரண்டு  நாள் கழிச்சி சகோ விஜய்  என்னுடைய அதே ஸ்டேடஸ் கீழ வந்து மேடம் கண்டு பிடிச்சுட்டீங்களான்னு கேட்டார். நான் புக் ரிலீஸ்ல டென்ஷனா இருந்ததால யார்னு தெரியலைன்னு சொல்லி இருந்தேன். பட் இன்னி வரைக்கும் அது யார்னே தெரியலை.. அவங்களா ஒரு நாள் சொல்லட்டும்னு நானும் அதன் பின் எதுவும் முயற்சியும் எடுக்கல.

 அந்த 4 புக்கும் சேர்த்து விலை 6, 500 ரூபாய் இருக்கும். விஜய் ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்துல விலை விசாரிச்சிருக்கார். அங்கே இந்த புக்ஸ் இல்லையாம். எனவே இது வேற எங்கேயோ பெரிய புக் லாண்டுல எந்த ரிடக்‌ஷனும் இல்லாம வாங்கப்பட்டிருக்குன்னு சொன்னார். என் வேலைக்காரப் பெண் சொன்னா ( கடலூர்ல இருக்க அவ வீட்டுக்கு) இந்தப் பணத்துல கூரை மாத்தி இருப்பேனே.. அக்கா உனக்கு பாரு அனுப்பி இருக்காங்கன்னு சொன்னா. !

நான் கூட நினைச்சேன் எந்த புக் வேணும்னு கேட்டிருந்தா அந்த புக்கே வாங்கிக்கிட்டு இருக்கலாமே. இப்ப திரும்ப நாம முகநூல்லதான் உக்கார்ந்து அரைகுறை  இங்கிலீஷ், தங்கிலீஷ்ல எல்லாம் மொக்கை போட்டுட்டு இருக்கோம். அந்த புத்தகங்கள் எல்லாம் புக் ஷெல்ஃப்ல வரிசைல அட்டென்ஷன்ல நிக்கிறாங்க. இந்த புத்தகங்களை வாங்கித் தந்தவங்க. நம்ம கிட்ட அவங்க யார்னு சொல்லிட்டு வாங்கித் தந்திருந்தாங்கன்னா பெருமிதமும் பெருமையும் இன்னும் அதிகமா இருந்திருக்கும். :)

5 கருத்துகள்:

  1. அவ்வ்வ்வ! ஆங்கிலம் சிம்பிளா(!) எழுதினா இப்படிக்கூட அனுகூலம் உண்டா...? எனக்கு இப்படில்லாம் ஃபேன்ஸ் இல்லயேன்னு பொறாமையா இருக்குக்கா... நானும் இனி வதனப்புத்தகத்துல... அடச்சீ, இன்னும் என்னடா தமிழ்? ஃபேஸ்புக்ல இங்கிலீஷ்ல பொளந்து கட்டி(?) அதை ஒரு வழி பண்ணப் போறேன்! சொக்கா....! எனக்கும் யாராவது புத்தகம் அனுப்பற மாதிரி பண்ணிட மாட்டியா?

    பதிலளிநீக்கு
  2. அது சரி...
    அப்ப நாமளும் இப்படி டிரைப் பண்ணலாமோ?

    பதிலளிநீக்கு
  3. ஹஹா அருமை பாலகணேஷ்.. :) என்ன புத்தகம் வேணும் சொல்லுங்க நான் அனுப்பி வைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...