எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 ஜனவரி, 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். திருமதி சதக்கத்துல்லாவுக்குப் பிடித்த உணவு.

முகநூல் நட்புக்களில் பல வருடங்களாகத் தொடர்ந்து நட்பில் இருப்பவர் சதக். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். 

அவரின் புன்னகையும் அவரின் பெண்ணின் மென்னகையும் மறக்கவியலாத போர்ட்ரெய்ட் சிற்பங்கள்.

முக்கியத் திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் அவர் வாழ்த்த மறந்ததே இல்லை. நாம் அவர்கள் பண்டிகை தினங்களில் வாழ்ந்த மறந்தாலும் உங்ககிட்ட இருந்து ஒரு வாழ்த்தை எதிர்பார்த்தேன். மறந்துட்டீங்க என்று கடிந்து கொள்வார். மிக அருமையான நட்பு. சிறந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்.

அவரிடம் நம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி. 

 //////உங்க மனைவிக்குப் பிடிச்ச உணவு எது.. அது எப்ப தெரிஞ்சுது உங்களுக்கு/////



பொதுவா எனக்கு ஹைதராபாத் உணவுகள் பிடிக்கும்.

ஒரு நாள் நான் என் மனைவியை ஹைதராபாத் உணவுகளைச் சிறப்பாகச் சமைக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன்.

எனக்கு ஹைதராபாத் உணவுகள்ல ஹலீம் ரொம்பப் பிடிக்கும். அது அவங்களுக்கும்  பிடிக்கும்னு அவங்க துபாய் வந்தபின்னாடிதான் தெரிஞ்சுக்கிட்டேன்.  சோ எனக்கு ஒண்ணு அவங்களுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஹலீம் ஆர்டர் செய்தேன்.


எப்பவும் ஒண்ணுதான் சாப்பிடுவாங்களாம். அன்னிக்கு என்னுடைய ஹலீம் கப்பையும் எடுத்துச் சேர்த்துச் சாப்பிட்டாங்க..!!!

யூஷுவலா நான் தனியா போனா எனக்கு ரெண்டு ஹலீம் ஆர்டர் பண்ணுவேன்.  என்ன ஆச்சர்யம்னா அவங்களுக்கும் ஹலீம்னா ரொம்ம்ம்ம்ம்பப் பிடிக்குமாம். எனக்கும் ஹலீம் ரொம்ம்ம்ம்பப் பிடிச்சுப் போச்சு. :)

அடுத்த தரம் போகும்போது 3 கப் ஆர்டர் பண்ண சொன்னாங்க. அவங்களுக்கு ரெண்டு எனக்கு ஒண்ணுன்னு.. :) ஹாஹா எனக்கும் ரொம்பப் பிடிக்குமே.. சோ  அதிலேருந்து 4 ஆர்டர் பண்ணி ஆளுக்கு ரெண்டு சாப்பிடுறோம். :)

---- சதக் & திருமதி சதக் எனக்கும் சேர்த்து இன்னும் ரெண்டு கப் ஹலீம் ஆர்டர் பண்ணுங்க. உடனே துபாய்க்கு ஒரு ஃப்ளைட் டிக்கெட் போட்டுடுறேன். :)

நல்ல மனமொத்த தம்பதிகள். வாழ்க வளமுடன் :)

3 கருத்துகள்:

  1. அப்படியே எங்க ஊருக்கும் பார்சல்...! ஹிஹி... வாழ்த்துக்கள்...

    சதக் தம்பதியினருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...