எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.


1. அழகே வா --  ஆண்டவன் கட்டளை.

ஆண்டவன் கட்டளையில் வரும் இந்தப் பாடல் கேட்கும்போதெல்லாம்  பார்க்கும்போதெல்லாம் என்னை என்னவென்று தெரியாத இனம் புரியாத மயக்கத்திலும் சோகத்திலும் ஆழ்த்திவிடும் . தேவிகாவின் அழகும், சிவாஜியின் தவிப்பும் சொல்லொணா எண்ணங்களை விதைத்துச் செல்லும்.

2. கொஞ்சும் சலங்கை ஒலி நடனங்கள். -- கொஞ்சும் சலங்கை.

மிக அருமையான நடனப் பாடல். இதன் காட்சியமைப்பும் அந்த சபையும் குமாரி கமலாவின் நாட்டியமும் கண்முன்னே விரிகிறது.

3. ஒளியிலே தெரிவது தேவதையா -- அழகி.

மோனிகா நடித்த படங்களிலேயே மிக அழகான படமும் பாடல் காட்சியும். பத்தாயம்/ நெல்லுக் குதிரும் அந்த இருட்டும்  சாணி அப்பிய தரையும் மெழுகு வெளிச்சமும் உள்ளபடியே ஒரு தேவதையைப் பேரழகியாகக் காட்டிய பாடல். 



4. இயற்கை என்னும் இளைய கன்னி -- சாந்தி நிலையம்.

காஞ்சனா நடித்த பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்.  என்ன அழகு அவர்.

5. முன் பனியா -- நந்தா.

சூர்யாவும் லைலாவும் நடித்த பாடல். கண்களாலேயே பேசிக் கொள்வது அழகு. அதிலும் சூர்யாவின் கண்கள் கொஞ்சம் சர்காஸ்டிக்காகப் பேசுவது ரொம்ப அழகு.

6. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே -- அடுத்த வீட்டுப் பெண்

இது அஞ்சலி தேவியும் சபாபதிக்காக  டணால் தங்கவேலுவும் நடித்த பாடிய பாடல். இதன் ஒரு சீனில் டின்னில் துடைப்பத்தின் பின் பக்கம் வைத்துத் தட்டி ம்யூசிக் போட்டிருப்பார்கள் .இந்தக் காலத்தில் நமக்குத் தெரியவில்லை. ஆனால் அப்போது எடுத்த படங்களில் இசைக்கும்  அநேக பாடல் வார்த்தைகளுக்கும் நான் அடிமை. அதுவும் பின்னல் ஜடை ஆடுதே என்ற வரிகள் வரும்போது அஞ்சலி தேவி தன் ஜடையைப் பின்னாடி போட்டுவிட்டு நடப்பார் பாருங்க.. சூப்பர் அழகு.

7. காலைத் தென்றல் -- உயர்ந்த உள்ளம்

காலை என்றாலே இந்தப் பாட்டு ஒரு புத்துணர்வு கொடுக்கும். ஐடியல் பெண் போல அம்பிகா ஒரு வீட்டில் சுதந்திரமாகப் புழங்கிக் கொண்டிருப்பதும் அங்கே கமல் தூங்கி எழுந்து இந்தப் பாட்டை நம்மைப் போலவே ரசிப்பதும் அழகு.

8. நான்  என்றால் அது  நானும் அவளும் .

ஜெயலலிதாம்மா அவர்கள் பாடிய பாட்டு.  எனக்கு இந்தக் குரலும் இந்தக் காட்சியமைப்பும் பிடிக்கும். ஜெயாம்மாவின் கம்பீரமான அழகும் முத்துராமனின் கொஞ்சம் பிசிறடித்த பார்வையும் இந்தப் பாடலுக்கு சுவை சேர்க்கும். சின்ன நடன அசைவு கூட அழகாகப் பொருத்தமாக இருக்கும்.

9. மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே.

என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு மூடி மனநிலையில் என்னை இந்தப் பாடல் மாற்றிவிடும். வெப்பம் படத்தில் இதன் ஹீரோவும் ஹீரோயினும் காட்சியமைப்பும்.. பாடல் வரிகளும் ஒரு கதகதப்பையும் கொஞ்சம் நிம்மதி இன்மையையும் ஒரு சேர உண்டு பண்ணும்.

10. என்னவென்று சொல்வதம்மா..கன்னி உந்தன் பேரழகை.

பிரபு பாடும் இந்தப் பாடல் பெண்ணை அவள் அழகை மென்மையை,  வர்ணித்துப் பாடுவதால் என்னுடைய தேன் பாடல்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளது.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.


4 கருத்துகள்:

  1. அடடா... எல்லாமே ரசிக்க வைக்கும் பாடல்கள்... ரசனைக்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  2. ரசனை மிகுந்த பாடல்கள். வரிசை எண்கள் மாறலாம். ஆனால் அனைவரின் ரசனைகளிலும் கட்டாயம் இடம்பெறும் பாடல்கள் இவை. பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபால் சகோ

    நன்றி ஆசியா

    நன்றி கீதா..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...