எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தேன் பாடல்கள்.. நிலவும் மயிலும்.



51. வான் நிலா நிலா அல்ல

பட்டினப் பிரவேசம் படத்தில் சிவச்சந்திரன் பாடும் இந்தப் பாடல் ரொம்ப அருமையா ரிதமிக்கா இருக்கும். மரவீட்டில் மாடிப் படிகளில் பின்னோக்கி ஏறியபடியே கிடார் வாசித்தபடி பாடும் இந்தப் பாடல் என் ஃபேவரைட் .

52. பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே.

மிகப்பெரும் கண்களை உடைய மாதவி ஆடும் பாடல். விழியாலே காதல் கதை பேசுவார் கமல் இதில். ஃபோட்டோகிராஃபராக வரும் கமலைப் பார்த்தபின் எந்த ஃபோட்டோகிராஃபரைப் பார்த்தாலும் ஏதோ கமல் சாயல் அடிப்பது போல் இருக்கும்.

53. இது ஒரு நிலாக்காலம்.

இதுவும் டிக் டிக் டிக் பாடல் . இதில் மாதவியோடு இன்னும் இருவரும் ஆடுவார்கள். வித்யாசமாக தண்ணீரில் மிதந்தபடி பாடும் காட்சி.



54. உயிரே உயிரே.. பம்பாய்

அரவிந்த் சாமி நடித்த படங்களில் சிறந்த படம். அந்த மலைக்கோட்டையின் மதிலில் நின்றுகொண்டு அவர் உருக உருகப் பாடுவதும் மனீஷா கொய்ராலா ஓடிவருவதும் மழை நனைத்த பூமியும் அற்புதம்.

55. பூவே வாய் பேசும்போது

சிம்ரனும் எனக்குப் பிடித்த நடிகை. ஷாமும் அவரும் பாடி ஆடும் இந்தப் பாடலும் ரொம்பப் பிடித்தமான ஒன்று. 

56. நெஞ்சம் மறப்பதில்லை
 
கல்யாண்குமாரும் தேவிகாவும் பாடும் பாடல். நிஜமாவே அவர்களின் பூர்வஜென்மத்தில் இப்படித்தான் நடந்திருக்குமோ என எண்ண வைத்த படம்.

57. காதலின் தீபம் ஒன்று..

ரஜனியும் மாதவியும் நடித்த படம். என் கல்லூரிப் பருவத்தில் வந்தது. இதன் பாடல் வரிகளும் காட்சியமைப்பும் அழகு.என்னை நான் தேடித் தேடி உன்னிடம் கண்டு கொண்டேன். என்ற வரிகள் பிடிக்கும்.

58.  இச்சுத்தா.. இச்சுத்தா.. -- ரன்

மீரா ஜாஸ்மினும் மாதவனும் நடித்த குறும்பான பாடல் காட்சி. மீரா குட்டியாக இருந்தாலும் கொள்ளை அழகு. மாதவனின் சிங்கப் பல் சிரிப்பும் அழகு.

59.சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..

சூர்யா ஜோதிகா நடித்த முதல் படம். வாழ்க்கையிலும் இணைந்துவிட்டார்கள். அருமையான ஜோடி. விஷுவல் டிலைட்.

60. வசீகரா.. என் நெஞ்சினிக்க

ரீமா சென் நடனமாடும் பாடல். மாதவனைக் காதலிப்பார். இதன் ஒவ்வொரு வரிக்கும் நான் அடிமை. தாமரையின் வரிகளில் பாடல் ஜொலிப்பது அழகு.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.




3 கருத்துகள்:

  1. நலமாக உள்ளீர்களா தேனக்கா.... ரசனையான தேன் பாடல் பகிர்வு
    அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி தேனக்கா.

    பதிலளிநீக்கு
  2. பூவே வாய் பேசும்போது - 12பி -சிம்ரன்/ஷாம் ; காதலின் தீபம் ஒன்று - தம்பிக்கு எந்த ஊரு - ரஜினி/மாதவி

    பதிலளிநீக்கு
  3. நலம்தாண்டா புவனேஷ்வரி. நீங்கள் நலமா.. நன்றிடா கருத்தளித்தமைக்கு.

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி உமேஷ். திருத்திவிட்டேன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...