எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

முன்ன ஒரு காலத்துல...

முன்ன ஒரு காலத்துல ஆர்குட்னு ஒண்ணு இருந்தது . அதுதான் ஃபேஸ்புக்குக்கு முன்னோடி மாதிரி..அதுல நாம் சேத்து வச்சது. :)
Thenammai Lakshmanan
relationship status: married
email: **********
birthday: July 14
location: chennai, India
address: state: tamilnadu, postal code: 600078
edit
Social
children: yes - at home full time
ethnicity: asian
religion: Hindu
political: depends
humor: friendly
sexual orientation: straight
fashion: smart
smoking: no
drinking: no
pets: I don''t like pets
living: with partner
home town: karaikudi
passions: cooking and reading . sudoku crazy :D
sports: Not so interested
books: everything which is scribbled . one day i was reading news from bajji soaken paper :O
music: old songs which sound very stupid nowadays to my children . So i started listenin to MJ . Whoohooo smooth criminal :D
tv shows: Oh crap !! usually my age ladies watch soaps but dude am young in heart :P
movies: action adventure comedy n everything which is interesting :) obviously not tamil movies
cuisines: i am a cook who teaches taj hotel chefs.. !! thats wot both of my sons tel me :D
edit

காய்ந்துதிரும் பூ.

இதழ் ரேகைகளுக்குள்
ஒளிந்து கிடக்குமது
என்றும் கழன்று விழுவதில்லை.
ஏங்கிக்கிடக்கும் வயல்வெளியில்
எப்போதோ சிதறும் சாரல்துளியாய்

திங்கள், 29 செப்டம்பர், 2014

நிஸிம் இசக்கியேல். இருளின் கீதங்கள். NISSIM EZEKIEL. HYMNS IN DARKNESS.

நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன்.

தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன்.

மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் இசக்கியேல் மும்பையிலும் பின் லண்டனிலும் கல்வி கற்றுள்ளார்.  காலனித்துவத்துவக் கோட்பாடுகளுக்குப் பின்னான இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருந்தார்.தனது 65 ஆவது வயது வரை பத்ரிக்கைப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். இவருடைய ஓரிரு கவிதைகள் என் சி ஈ ஆர் டியிலும் ஐ சி எஸ் சி யிலும் பாடத்திட்டமாக உயர்நிலை வகுப்புகளில் அமல்படுத்தப் பட்டிருந்தன. கிட்டத்தட்ட 10 கவிதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தனது 80 ஆவது வயதில் 2004 இல் மறைந்தார். 

1976 இல் வெளிவந்த ஹிம்ஸ் இன் டார்க்னெஸ் ( HYMNS IN DARKNESS ) என்ற இந்தக் கவிதைத் தொகுதியில் எனது கருத்துகளோடு அவரது கவிதைகள் சிலவும் பகிர்ந்துள்ளேன்.

மரபைச் சார்ந்தும் மரபை மீறியும் உள்ள கருத்துக்களை வலிமையாகப் பதிவு செய்கிறார். எல்லாவற்றிலும் இவரின் எள்ளல் தன்மை வெளிப்படுகிறது. காதல் , காமம், பெண் உடல் , திருமண உறவு, பந்தம், அதன் நீட்சி போன்றவற்றினைப் பற்றிப் பேசும் கவிதைகளே இத்தொகுதியில் பெரிதும் இடம் பெறுகின்றன.

வயது வந்தோருக்கான கவிதைகள் என்றும் கூறலாம். குட் பை பார்ட்டி ஃபார் மிஸ் புஷ்பா டி.எஸ் என்ற கவிதை தன் தாய்மொழி வேறாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையில் எழுத்தப்பட்ட ஒரு நையாண்டிக் கவிதையாகும். 

THE COUPLE, THE RAILWAY CLERK, THE TRUTH ABOUT THE FOODS, ON BELLASIS ROAD ( ABOUT A WOMAN ) , GOOD BYE PARTY FOR MISS PUSHPA T.S. , ADVICE TO A PAINTER.

எல்லாமே அடலசண்ட் கவிதைகள் தான். ஓன்லி பெரியவங்களுக்கு மட்டும்.

1. PASSION POEMS:-

1. SUMMER :-

TOO WARM
FOR LOVE MAKING
NOT TO WARM
FOR CARESSING.
WE ARE COOL AFTER BATHING
TOGETHER.

(வேனில் காலம்:-

காதல் செய்வதற்கு ஆகாத
வெக்கையான பொழுது.
மிருதுவாய்த் தடவ ஆகாததல்ல
இணைந்து குளித்தோம்
குளிர்ந்தோம். )

சனி, 27 செப்டம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட்,ஆன்மநேயர் கதிர்வேலும் மனித உறவுகளும்.

எனவே இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஒரு கேள்வி கேட்டேன்.

///இன்றைய வாழ்க்கைமுறையில் மனித உறவு எப்படி இருக்கிறது. அதை மேம்படுத்த என்ன செய்யலாம். ?///

புதன், 24 செப்டம்பர், 2014

அகநாழிகை வெளியீடுகளும் எனது புத்தகங்களும் வாங்க.. இங்கேவாங்க.

அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கீழ்க்கண்ட இடங்களில் கிடைக்கும்.

சென்னை:-

1. அகநாழிகை புத்தக உலகம் - சென்னை.  
2. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.
3. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.
4. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.
5. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.

மற்றும்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

1000 ரூபாயில் சந்தோஷத்தை வாங்கிட முடியுமா.

சந்தோஷத்தைப் பணத்தால் வாங்கிட முடியுமா.


ஹிந்தி நடிகர் வருண்ப்ருதி  நிரந்தரமற்ற வருமானம் உள்ள இந்த வியாபாரிகளுக்கு உதவி செய்யும் வீடியோவைப் பார்த்தவுடன் இரண்டு விஷயங்கள் கண்ணில் பட்டது

ஒன்று அவர் உழைப்பாளிகளுக்குப் பணம் கொடுத்து அவர்களின் முகத்தில் இறைவனைக் கண்டிருக்கிறார். ( அது தேவைப்பட்டவர்களைப் போய்ச் சேர்ந்துள்ளது என்ற எண்ணமும் அதை அவர்கள் தக்கபடி உபயோகிப்பார்கள் என்ற எண்ணமும்தான் காரணம். )

இரண்டாவது அவருக்குக் கடவுள் மேல் உள்ள பக்தி. விசுவாசம் . அந்த உழைப்பாளிகள் தங்கள் உழைப்பின் மீதும் கடவுள் மீதும் உள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தியதும் கடவுள் தன்னை அனுப்பினார் என்று கூறி  அவர்களுக்கு பணம் வழங்கியது.# HATS OFF ACTOR VARUM PRUTHI. !

குழந்தைக் கலைஞர்களுக்கு உதவித் தொகையும் பயிற்சிப்பட்டறையும்.


நிறைய குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், பாட்டு , நடனம் என்று திறமைகள் இருக்கும். அதிலும் சில குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். அப்படிப்பட்ட குழந்தைகள் உங்கள் இல்லத்தில் இருந்தால், நண்பர் அல்லது உறவினர் வட்டத்தில் இருந்தால் இதைப் படிங்க. அவங்களுக்கும் சொல்லுங்க.

என் முகநூல் தோழி சுந்தரி செல்வராஜ் அவர்களின் பகிர்வில் இருந்து இதை எடுத்து இங்கே பகிர்கிறேன். திறமை இருப்பவர்கள் பெற்றுப் பயனடையட்டும்.

///உங்கள் மகன் அல்லது மகள் இல்லை தெரிந்தவர்கள் பிள்ளைகள், பாட்டு, நடனம்,ஓவியம், இதர கலைகளில் களிமண் பொம்மை செய்வது கூட சிறந்து விளங்கினால், மத்திய அரசிடம் இருந்து ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.. மாணவருக்கும் கற்றுக் கொடுக்கும் குருவுக்கும் சேர்த்தே கிடைக்கும்.. மாணவர்களின் வயது 9 முதல் 13 வரையில்.. கல்லூரியில் படிக்கும் வரையில் இந்த ஊக்கத்தொகை கிடைக்கும்..

அவர்களின் கற்றுக் கொள்ளூம் திறமையை பொறுத்து.. 2 வருடங்களுக்கு ஒரு முறை தகுதி தேர்வு நடை பெறும்.. பாரம்பரிய கலைஞர்கள் வீட்டு மாணவர்களூக்கும் வாய்ப்பு உண்டு.. தப்பு, பறை அடித்தல், தோல் பாவை கூத்து போன்றவை கூட பயிலலாம்.. மேலும் விபரங்களுக்கு Website :

சனி, 20 செப்டம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், சுரேகா சுந்தரும் ஸ்ட்ரெஸ் ரெமடியும்.

தலைப்பைச் சேருங்கள்

நீங்கதான் சாவி என்ற புத்தகம் சுரேகா எழுதியது. அதுக்கு நான் விமர்சனம் எழுதி இருக்கேன் என் வலைத்தளத்தில் . அதுக்குள்ள பார்த்தா சுரேகா சுந்தர் 6 , 7 புக் போட்டுட்டார். தன்னம்பிக்கை புக், தன்னம்பிக்கை ஸ்பீச், தன்னம்பிக்கை வகுப்புகள்னு எங்கேயோ போயிட்டார். இவர் புக்ஸ் ஹாட்செல்லர்னு சொல்றாங்க. 

வியாழன், 18 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.

181. அம்மா என்றால் அன்பு.
ஜெயலலிதாம்மா பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல். அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் தெய்வம். என்ற அந்தப் பாடல் அம்மாவின் குரலுக்காகவே பிடிக்கும்.படம் அடிமைப்பெண்.

182. அன்பே அமுதா.
ரவிச்சந்திரன் விஜயகுமாரி நடித்த பாடல். ./// நீ பாலமுதா, சுவைத் தேனமுதா இல்லை பாற்கடலில் பிறந்த சொல் அமுதா, உந்தன் சொல் அமுதா இல்லை சுவை அமுதா. கொஞ்சம் நில் அமுதா அதைச் சொல் அமுதா./// ப்ளஸ்டூவில் என்னோடு படித்த அமுதாவிடம் தினம் ஒரு முறையாவது இந்தப் பாடலைப் பாடி இருப்போம். 

183. மெல்ல மெல்ல மெல்ல என்மேனி நடுங்குது மெல்ல
ஜெமினியும் சரோஜா தேவியும் நடித்த பாடல். படம் பணமா பாசமா. ///மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல. சொல்ல சொல்லச் சொல்ல என் சிந்தை குளிருது சொல்ல. ஒரு பெண்ணின் மென்மையான காதல் உணர்வுகளை, மெல்லிய காமத்தை அற்புதமாகப் படம் பிடித்த வரிகள்.

செவ்வாய், 16 செப்டம்பர், 2014

பனிப்பறவைகள்.

பனிப்பறவைகள்:-
**********************************
“வான ராஜ்ஜியத்தில்
ஒளியரசனை வரவேற்கக் காத்திருக்கும்
வைகறைத் தாரகையே
தனிமை உனக்கு மட்டும் உரிமையல்ல.
அதன் பங்குதாரி நானும்தான். “

என்று தன் டயரியில் எழுதி மூடிவைத்தாள் பவித்ரா, அம்மா நாலாவது தடவையாக “ பவித்ரா. இங்கே வாயேன்.” என்று அழைத்துக் கொண்டிருந்தாள். அடுத்த தடவை கூப்பிடாமல் நேராக ஹாலுக்கு வந்துவிட்டாள்.

வரும்போதே எண்ணெய்ச் சட்டியில் போட்ட கடுகு போல படபடவென்று பொரிந்து தள்ளிக்கொண்டே வந்தாள். “ பெண் பிள்ளைன்னா எல்லாம் தானாத் தெரியணும். ஏதாடா அம்மா ஒத்தையா கஷ்டப்படுறாளே அவளுக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவோம் இல்லைன்னா பேங்கில் போய் பணம் எடுத்துக் கொண்டு வருவோம். ஒண்ணும் தெரியாது. என்னவோ எந்நேரம் பார்த்தாலும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் வைச்சுக்கிட்டு இராவும் பகலும் விடியக்காலைலயும் நட்சத்திரத்தையும் பறவைக்கூட்டத்தையும் மரத்தையும் மட்டையையும் பார்த்து என்ன எழுத வேண்டிக் கிடக்குங்குறேன்.  சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப்புடுவம்னாலும் ஒருத்தன் அகப்பட மாட்டேங்குறான்.


ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

மதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழா. 2014.




வலைப்பதிவ நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் வணக்கம். 

மிக நீண்ட நாட்களுக்கு முன்பே என் வலைத்தளத்தில் சாட்டர்டே போஸ்ட் என்ற இடுகையில் ( சீனா சாரும் வலைச்சரமும். )சீனா சார் மதுரையில் அடுத்த வலைப்பதிவர் மாநாடு இருக்கும் என்று கூறினார்கள். அதன் படி இந்த மூன்றாம் வருட வலைப்பதிவர் திருவிழாவை சிறப்புற நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

சங்கம் வளர்த்துச் செழித்த மதுரையில் இணையத்திலும் தமிழ் வளர்க்கும் தமிழர்களுக்கான திருவிழா வரும் அக்டோபர் 26, 2014, ஞாயிறு அன்று நிகழ இருக்கின்றது. அதற்கு வருகை தரும் வலைப்பதிவர்கள் அனைவரும் திண்டுக்கல் தனபாலன் சகோ அவர்களின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்வாசி ப்ரகாஷ் அவர்களையும், மற்றும் பாலகணேஷ் , சரவணன், முத்து நிலவன், தமிழ் இளங்கோ, சுரேஷ் குமார், ஜீவானந்தம் , சதீஷ் சங்கவி ஆகிய  வலைப்பதிவ நண்பர்களைத் தொடர்பு கொண்டால் முழு விவரங்களையும் அறியலாம்.  ( 2012, 2013 இல் கலந்துகொண்ட நட்சத்திரப் பதிவர்களையும் அறியலாம். இது ரொம்ப அருமையா இருக்கு . :) )

சனி, 13 செப்டம்பர், 2014

சாட்டர்டே ஜாலிகார்னர். பரிவை சே குமாரின் பத்ரிக்கைப் பயணம்.




வலைத்தளம் மூலம் அறிமுகமான என் அருமைத் தம்பிகளில் ஒருவர் சகோதரர் குமார். நாட்கள் எவ்வளவு ஆனாலும் என் இடுகைகளை வந்ததும் தவறாமல் படித்துப் பின்னூட்டம் இடுபவர் சகோ குமார். இவரின் வலைத்தளத்தில் முன்பு கவிதைகளும், பின் கதைகளும் இப்போது கிராமத்து நினைவுகளும் படித்து மகிழ்வது உண்டு. தொடர்ந்து வலைத்தள சகோதரர்களின் ஊக்குவிப்பால் நாம் எழுதிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்.அந்த வகையில் என்னை மட்டுமல்ல இன்னும் பலரையும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அன்புச் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய என்னுடைய உயர்வில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது குமார்.

எனக்கு மிகப் பிடித்தது பரிவை சே குமாரின் கதைகள். முகநூலிலும் பல்வேறு இடங்களில் இவரின் கவிதைகளும் கதைகளும் பகிரப்பட்டிருக்கும். நிறைய பேர் குமாரின் கதைகளைப் பகிர்ந்து படித்திருக்கிறேன்.  மிக அருமையான சரளமான மொழிக்குச் சொந்தக்காரர் குமார். தனக்கென பத்ரிக்கையிலும் வலையுலகிலும் தனி இடம் பிடித்திருக்கும் குமாரிடம் அவருக்கும் பத்ரிக்கைகளுக்கும் உள்ள பந்தம் பற்றி ஒரு கேள்வி. 

///பரிவை சே குமார் என்ற பெயரில் உங்கள் சிறுகதைகளும் கவிதைகளும் அநேக பத்ரிக்கைகளில் வந்துள்ளன. நீங்கள் எழுதுவதில் உங்களுக்குப் பிடித்தமானது எது. எது எதுல வெளிவந்துருக்குங்குற   முழு விவரமும் கொடுங்க..///

அன்பின் அக்கா...

வணக்கம்...

நலம் நலமே ஆகுக.

தாங்கள் கேட்டு ஒரு மாதத்திற்கும் மேலாகியும் ஊருக்கு வந்திருந்த காரணத்தால் கேட்ட நேரத்தில் அனுப்ப முடியாமல் போனதற்கு முதலில் மன்னியுங்கள்.

உங்கள் கேள்விக்கான பதிலை என் எழுத்தில் சொல்கிறேன்.

நான் எழுத ஆரம்பித்தது கல்லூரியில் படிக்கும் போதுதான்... அதுவும் எனது பேராசான் மு.பழனி அவர்களும் எனது நண்பன் முருகனும் (பாருங்க எங்க எல்லாருடைய பேரும் தமிழ்கடவுள் பேராய் அமைந்திருப்பதை) கொடுத்த தூண்டுதலே காரணம்.

முதலில் எழுத ஆரம்பித்தது கதைதான்... எப்படியிருந்ததோ படித்த ஐயா அருமை என்று சொல்லி வைத்தார்... நான் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கவிதைகளில் மனம் பாய, 'ஒரு கட்-அவுட் நிழலுக்கு கீழே' அப்படின்னு ஒரு கவிதை அம்மா ஜெ... யோட கட்-அவுட் கலாச்சாரத்தை வைத்து எழுதினேன். அது ஐயாவை ரொம்பக் கவர, அவரது முயற்சியில் திரு.பொன்னீலன் ஐயா அவர்களால் தாமரையில் பிரசுரிக்கப்பட்டது. இதுதான் முதல் பத்திரிக்கைப் பயணம்.

வியாழன், 11 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள் 180. மார்கழியும் மல்லிகையும்

171. நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.
காதலிக்க நேரமில்லை படத்தில் முத்துராமனும் காஞ்சனாவும், ராஜஸ்ரீயும் ரவிச்சந்திரனும் ( விசிலில் )  பாடும்பாடல். ஒன்று பி பி ஸ்ரீனிவாஸ் குரல் என்று நினைக்கிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலும் மிக அருமையாக இருக்கும். ஏதோ அணைக்கட்டின் பூங்காவில் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. இளமையான, துள்ளலான ஹீரோஸ் & ஹீரோயின்ஸ்.

172. மார்கழித் திங்கள் அல்லவா..
சங்கமம் படத்தில் விந்தியாவும் ரஹ்மானும் நடித்த பாடல் காட்சி. கிராமிய நடனக் கலைஞனான ரஹ்மானும் பரத நாட்டியக் கலைஞியான விந்தியாவும் காதலிப்பார்கள். திருமணம் செய்து கொள்ள அப்பா விஜயகுமார் தடை விதித்திருப்பார். அதனால் இந்தப் பாடல் காட்சியில் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு நடனமாடுவார் விந்தியா. மனதைத் தொடும் வரிகள்.

173. அந்தி மழை பொழிகிறது.
பள்ளி செல்லும் பதின் பருவத்தில் கேட்ட பாடல். பித்துப் பிடிக்காத குறைதான். வாஹ் வாஹ் வாஹ் வஹ்ஹாஹா என்று ஹம்மிங்கோடும் ம்யூசிக்கோடும் பாடிய பாடல். கண் தெரியாத ராஜபார்வைக்கார கமல் , காந்தக் கண்ணழகி மாதவியைக் காதலிக்கும் பாடல். /// ஈவினிங் ரெயின் ஷவரிங். இட்ஸ் ஒன் ஒன் ட்ராப்ஸிலும் யுவர் ஃபேஸ் ஸீயிங்ங்ங்ங் /// என்று என் அக்கா ரேவ் பாடுவாள்.

174. ஏண்டி சூடாமணி ..
சிம்ரனும் கமலும் நடித்த பம்மல் கே சம்பந்தம் படப்பாடல். ஏண்டி சூடாமணி காதல் வலியைப் பார்த்ததுண்டோடி. என்று இசையோடு கேட்கும் சமயம் வயிற்றைப் பிசைவது போன்றும் நெஞ்சைப் பிழிவது போன்றும் சோகம் உண்டாகும். 


175. கண்மணி அன்போடு காதலன்
குணாவில் கமல் பாடும் பாடல். என்று கேட்டாலும் பிடிக்கும். // மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல. அதையும் தாண்டிப் புனிதமானது.// என்ற வரிகள் அற்புதம். மானே தேனே போட்டுக்கணுமா என்று கேட்கும் இடங்கள் புன்னகையை வரவழைக்கும். அந்த மலைக் குகை இருட்டும். லேசாகப் பிளந்த இரு பாறைகளுக்கிடையேயான இடை வெளியில் கமல் கால் பாவிக் குதித்து ஆடுவது திகிலான அற்புதம். கொடைக்கானல் சென்ற போது இந்தக் ( குணா கேவ்) குகைக்குள் போக முடியாமல் போய்விட்டது. அபாயகரமான குகை என்று கைட் தடுத்து விட்டார்.

புதன், 10 செப்டம்பர், 2014

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகுதி - 1.தாப்பூ தாமரைப் பூ.

குழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும்:-

குழந்தை பிறந்து ஓரிரு மாதங்களில் முகம் பார்த்துச் சிரிக்கத்துவங்கியதும் அதனுடன் பேசவும் விளையாடவும் ஆரம்பித்து விடுவோம். குழந்தை கை கால்களை நன்கு அசைக்கவும் மொழியைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பாட்டுகள் சொல்லி சிரிக்கவைத்து விளையாடுவதுண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். 

குழந்தைப்பாட்டு :-

1. தாப்பூ தாமரைப்பூ

தாப்பூ தாமரைப் பூ தாத்தா தந்த செண்பகப்பூ
பூப்பூ புளியம்பூ பொன்னால் செய்த தாழம்பூ
தீப்பூ தித்திப்பூ .

செவ்வாய், 9 செப்டம்பர், 2014

மேகவிரலும் மழைத் தீண்டலும்.

வலிநீங்க வன்மையாய்
சுழற்றிச் செல்கிறது
காட்டாறு.
வலித்தவை
முண்டுமுடிச்சாய்த் தேங்க
அடுத்த சுழற்சிக்குத் தயாராய்ப்
பதுங்கிக் கிடக்கிறது..

நுரைபொங்க ஆவிபறக்க
ருசியாய்ப் பாய்கிறது
அருவி.
கோரம்பாய்க் கோடுகளாய்
வெய்யிலில் மின்னுகிறது
அருவிகளற்ற தடம்.

சனி, 6 செப்டம்பர், 2014

சாட்டர்டே போஸ்ட், தடய அறிவியல் துறையில் சாதிக்கும் நளினா கீரன்,

முகநூலில் என் அன்புத் தங்கைகளில் ஒருவர் நளினா கீரன். இவரின் அப்பா கீரன் ஒரு சொற்பொழிவாளர். மன அமைதி தரும் மகா பெரியவரின் படமும் ஷிர்டிசாய்பாபாவின் படமும் அடிக்கடிப் பகர்வார். இவர் பணிபுரியும் துறையோ வித்யாசமானது.

அவர் மலேஷியாவில் ஒரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்துவந்தார். பேராசிரியை என்று நினைத்திருந்தால் ஒரு தருணத்தில் தான் தடய அறிவியல் துறையில் சயிண்டிஃபிக் ஆஃபீசராகப் பணிபுரிந்து வந்ததைக்கூறினார். அட என்று சுவாரசியமேற்பட நான் அவரிடம் அது பற்றி விசாரித்தேன்.

குற்றங்கள் பெருகிவிட்ட இந்த சூழ்நிலையில் குற்றவாளிகளைப் பிடிக்க தடய அறிவியல் துறையின் உதவி அவசியம். ஒரு குற்றம் நடந்ததும் அங்கே கிடைக்கும் தடயங்களை வைத்து அவற்றை ஆராய்ச்சிக் கூடத்தில் சோதனைக்கு உட்படுத்தி உண்மையை அறிந்து தெரிவிக்கும் துறையின் பணி சவாலானது.

எனவே இவர் எதிர்கொண்ட சில சவால்கள் பற்றி சாட்டடே போஸ்டுக்காகக் கூறும்படிக் கேட்டேன். அவர் அனுப்பியவற்றை அப்படியே பிரசுரிக்கிறேன். (தமிழில் மாற்றினால் சில இடங்களில் சரியான அர்த்தம் மாறிவிடலாம் என்பதால் அப்படியே ஆங்கிலத்தில் தருகிறேன். )

அவரிடம் நான் கேட்ட கேள்வி.


/// தட அறிவியல் துறையில் வேலை பார்க்கும்போது ஏற்பட்ட ஒரு நிகழ்வை விவரிக்க முடியுமா..மேலும் தட அறிவியல் துறை எப்பிடி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவியதுன்னும் சொல்ல வேண்டுகிறேன். ///

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். - பெருமித ஆசிரியர்.



பார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். :-

திருப்பூர் பார்க் கல்லூரிக்கு மகளிர் மன்ற விழாவுக்குப் போனபோது அங்கே திருமாறன் ஜெயராமன் சார் , ரெங்கராஜன் சார் ஆகியோரோடு எஸ் வீரராகவன் அவர்களையும் சந்தித்தேன்.

மிக ஆச்சர்யத்துக்கு உரிய மனிதர். சாஃப்ட் ஸ்கில்ஸ் ட்ரெயினராக இருக்கிறார். மாணவிகளைத் தன் பெண் குழந்தைகளை போல அன்பு செலுத்துகிறவர்.. ஆங்கிலத்தில் பேசப் பயிற்சிகள் அளிக்கிறார். 

நான் பேசி முடித்ததும் நடனங்கள் ஆரம்பித்தது. அங்கே இருந்த திருமாறன் ஜெயமாறன் சார் “நான் இருந்தால் அவர்கள் கூச்சப்படுவார்கள். இது மகளிர் மன்றம். எனவே அவர்களுக்கான தினம். மகிழ்வாய்க் கொண்டாடட்டும் ” எனச் சொல்லிப் புன்முறுவலோடு விடை பெற்றார்.

அப்போது ஒரு பெண் குழந்தை அற்புதமாக நடனமாடினாள். அருகே அமர்ந்திருந்த வீரராகவன் சார் வியப்போடு பார்த்து ”இந்தப் பெண் எப்படி அற்புதமாக நடனமாடுகிறாள். ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் பேசக் கூப்பிட்டால் பேசவே மாட்டேன்” என்கிறாள்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.

131. சங்கீத ஸ்வரங்கள். ஏழே கணக்கா

அழகனில் மம்முட்டியும் பானுப்பிரியாவும் பாடும் பாடல். இரவில் ஆரம்பித்து விடியற்காலையில் முடியும். இரவு தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவும் காலையில் சூரிய கிரணங்களோடு தொலைக்காட்சி ம்யூசிக்கும் அழகு. மேலும் இருவரும் படுத்தபடியும் அமர்ந்தபடியும் திரைச்சீலையைத் தொட்டுக் கொண்டும் பேசிக் கொண்டே இருப்பார்கள். இந்தப் பாடல் பலரின் தூக்கத்தைக் கெடுத்ததோடு மட்டுமல்ல ரிங் டோனாகவும் இருக்கிறது. :)

132. ஜல் ஜல் ஜல் என்னும் சலங்கை ஒலி.

அவன் தான் திருடன் என்றிருந்தேன். அவனை நானே திருடிக் கொண்டேன். முதன் முதல் திருடும் காரணத்தால் முழுசாய்த் திருட மறந்துவிட்டேன். என்ற வரிகள் பிடிக்கும்.  புன்னகை முகத்தோடு சரோஜா தேவி பாடும் நல்ல ரிதமிக்கான பாடல். பள்ளிக் கூடத்துக்குத் தினமும் மாட்டு வண்டியில் போவோம் அந்த இனிமையான நினைவுகள் மறுபடியும் நிழலாடும் இந்தப் பாடல் கேட்கையில்.

133. காற்றில் எந்தன் கீதம்.

ஸ்ரீதேவியும் ரஜனியும் நடித்த படம் ஜானி. இதில் டபிள் ஆக்ட் ரஜனி. இந்தப் பாடல் ரொம்ப மெலடியஸாக இருக்கும். தனிமையும் ஏக்கமும் பொங்கி வழியும் பாடல். 

134. ஆசையக் காத்துல தூதுவிட்டு.

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

திசையறிவிக்கும் மரம்.

மரம்
முற்றிவிட்டது
துளிர்விட்டுக்கொண்டும்..

******************************
மொட்டை மரங்களும்
அழகிய நிர்வாணத்தோடு
திசையறிவித்தபடி.

******************************


வீழ்த்தப்பட்டபின்னும்
மரக்கிளைகள் வேர்பிடித்து
வேறொருவம்ச ஆணிவேராய்..

திங்கள், 1 செப்டம்பர், 2014

மந்திராலயம்.

ரொம்ப வருடங்களுக்கு முன் நான் ., என் பையன்கள் இருவருடன் 91., 92 இருக்கும் ., மார்ச் மாதத்தில்  என் மாமனார் ., மாமியாருடன் மந்த்ராலயம் சென்று வந்தது நினைவுக்கு வந்தது. வங்கியில் வேலை செய்யும் என் கணவர் வருடக் கடைசி என்பதால் வர இயலவில்லை.

கோவையிலிருந்து பாம்பே செல்லும் ட்ரெயினில் மந்த்ராலயம் ரோட் என்ற இடத்தில் இறங்கி பஸ்ஸில் சென்றோம்.. மிக மோசமான பஸ் மற்றும் பாதை.. கவர்மெண்ட் கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்..  குழந்தைகளுடனும்  மேலும் சில வயதான உறவினர்களுடனும் சென்றதால் நிறைய உணவுவகைகள் கொண்டு சென்றோம்.. தயிர் சாதம்., சப்பாத்தி., பிஸ்கட்டுக்கள் என.

Related Posts Plugin for WordPress, Blogger...