எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 செப்டம்பர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், சுரேகா சுந்தரும் ஸ்ட்ரெஸ் ரெமடியும்.

தலைப்பைச் சேருங்கள்

நீங்கதான் சாவி என்ற புத்தகம் சுரேகா எழுதியது. அதுக்கு நான் விமர்சனம் எழுதி இருக்கேன் என் வலைத்தளத்தில் . அதுக்குள்ள பார்த்தா சுரேகா சுந்தர் 6 , 7 புக் போட்டுட்டார். தன்னம்பிக்கை புக், தன்னம்பிக்கை ஸ்பீச், தன்னம்பிக்கை வகுப்புகள்னு எங்கேயோ போயிட்டார். இவர் புக்ஸ் ஹாட்செல்லர்னு சொல்றாங்க. 



வலைத்தளத்துலேயே அருமையான பகிர்வுகள் இருக்கும். அது அப்பிடி இருக்க  புத்தகமாப் போடும்போது இன்னும் கிரிஸ்பா சொல்லத்தெரிஞ்சவர் சுரேகா.  அதுதான் அவரோட வெற்றிக்குக் காரணம்னு சொல்லலாம். எல்லாரும் எழுதுறோம்னாலும் எடிட்டிங் பண்ணி சரியா சொல்லத்தெரிஞ்சா அது ஒரு வரம்தான். அந்த வரம் வாய்க்கப் பெற்ற சுரேகாவுக்கு வாழ்த்துகள்.

போன வருடம் ஒரிஸ்ஸாவுக்கு போயிட்டு வந்தார். இந்த வருடம் சிலோனுக்கு போயிட்டு வந்திருக்கிறார். ஹிந்தி, சிங்களம் இதிலெல்லாம் கூட கம்யூனிகேட் பண்றார் போல. :). வலைத்தள வாசியா உங்க உயர்வுக்கு ஒரு சல்யூட் சுரேகா. 

இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உலகில் ஓடிட்டே இருக்க மக்களுக்கு வர்ற மெயின் நோய்க்கூறு ஸ்ட்ரெஸும் ஸ்ட்ரெயினும்தான். அதுனானல் அது பத்தி சொல்லச் சொல்லி இவர்கிட்ட சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வியைக் கேட்டு வச்சேன்.

///யாரைப்பார்த்தாலும் மன அழுத்தம்னு சொல்றாங்க. இதுக்கு என்ன ரெமடி..? ///

என் நண்பர் ஒருத்தருக்கு நெஞ்சுவலின்னு மருத்துவமனையில் இருந்தார். அவரைப்போய் பார்த்தவங்க எல்லாரும் அவங்க சுற்றத்தில் நெஞ்சுவலியால் போய்ச் சேந்தவங்களைப் பத்தி சொல்லி அவரை இன்னும் பயமுறுத்தியிருந்தாங்க! 

நானும் அவரைப்பார்க்கப் போனேன். என்ன செய்யுதுன்னு கேட்டேன். நெஞ்சுல ரெண்டுபக்கமும் யாரோ சுத்தியலால் அடிக்கிறமாதிரி இருக்குன்னார். உங்களை யார் சுத்தியல் அடிக்கும்போது நடுவுல போகச்சொன்னது என்றேன். அவர் சிரித்துவிட்டார். ’சரி சரி! சீக்கிரம் ஆஃபீசுக்கு வந்துசேருங்கன்னு ஜாலியாக சில விஷயங்கள் பேசிக்கிட்டிருந்துட்டு திரும்பி வந்துட்டேன்.

 இன்றுவரை அவர் இந்த விஷயத்தை நிறைய சிலாகிக்கிறார். எல்லாரும் பயமுறுத்திக்கிட்டிருந்தப்ப, ஜாலியா பேசி என்னை நோயாளியா உணரவைக்காம இருந்தீங்க! என்று பாராட்டினார். 

இப்ப, அந்த நண்பர்மாதிரிதான். நம் மனசு.. நாம் என்ன சொல்றோமோ அது மாதிரி நடந்துக்கும். வேலை, வீடு, முடிக்கவேண்டிய பொறுப்புகள், ஒரு சில வார்த்தைகள் இதையெல்லாம் பெரிய விஷயமா மனசிடம் சொல்றோம் அதுவும் பயந்துபோய் நம்கிட்ட திரும்பத்திரும்ப அதைப்பத்தி நினைவுபடுத்திக்கிட்டே இருக்கு.. அதனால் நாம் செய்யும் வேலையிலும் அக்கறையில்லாமல், மற்ற நினைவுகளின் பிடியில் மாட்டி தவிக்கிறோம். இதெல்லாம்தான் நம்மை மன அழுத்தத்துக்கு ஆளாக்குறது… அதுக்கு தீர்வு இருக்கு.. 

எல்லாச் செயலிலும் ரெண்டு விஷயத்தை கவனிக்கணும். 

 1. Don’t Expect எதிர்பாக்கக்கூடாது 

2.Dont Compare. ஒப்பிடக்கூடாது. 

நாம் ஒரு பஸ்ஸில் போயிக்கிட்டிருக்கோம். வழியில் டயர் பஞ்சர் ஆனால், நேரத்துக்குப் போகமுடியலையேன்னு மனசில் அழுத்தம் அதிகரிக்கும். அந்த அழுத்தத்தை வச்சு, பஞ்சரை சரி செய்யவே முடியாது. அப்ப அமைதியா அதை வேடிக்கை பாத்துக்கிட்டு, அந்த நேரத்தில், பஸ் நிக்கிற இடத்தை இரசிச்சுக்கிட்டு இருந்தால், இயல்பாவும் அழுத்தமில்லாமலும் இருக்கலாம். எதிர்பார்த்தல் ரொம்ப கவலையை உருவாக்கிடும். அழுத்தமில்லாமல் இருக்க… அதிகபட்சம் என்ன விளைவோ அதை நினைச்சுப் பார்த்துட்டு விட்டுறலாம். 

ஒப்பிடுதல் என்னிக்குமே அழுத்தம் தரக்கூடியதுதான்.. என்னைவிட சின்ன வயசு தனுஷ் இன்னிக்கு பெரிய ஆளாயிட்டாரேன்னு கவலைப்படுவது மன அழுத்தத்தைக் கொடுக்கும். என் வாழ்க்கை, என் வருமானம், என் சுற்றம் இதுதான் நிதர்சனம்னு நினைச்சால் வாழ்க்கையே ஹேப்பி அண்ணாச்சி! 

இதுக்கும் மேல மன அழுத்தமா இருந்தா, ரிப்பேரான டிவி 100 ரூபாய்க்குக் கிடைக்கும் அதை வாங்கி வீட்டில் ஒதுக்குப்புறமான இடத்தில் வச்சு , ஒரு சுத்தியலால அடிச்சு நொறுக்குங்க! மனசு ரிலாக்ஸாக வாய்ப்பிருக்கு!

டிஸ்கி:- வீட்டுலயே பழைய டிவி இருக்கு. ஆளுக்கு ஒண்ணுன்னா 4 வேணுமே. ஐயோ எல்லாரும் ஒடைச்சா நான் இல்ல க்ளீன் பண்ணனும்.. சுரேகா.. ஹாஹா நல்லா வழி சொன்னீங்க. போங்க. 

அப்புறம் என்னது... தனுஷோட போட்டியா.. உங்களுக்கே இது அதிகமா இல்லை.. :)

ஸ்ட்ரெசை எதிர்கொள்வதுபத்தி ரெண்டுபாயிண்ட் சொன்னீங்க அதை ஞாபகத்துல வைச்சுக்கிட்டா ஸ்ட்ரெஸ் எட்டிப் பார்க்காதுன்னு தோணுது. முதல்ல அதுக்குப் பயிற்சி செய்யணும். சோ முயற்சி செய்யிறோம். நன்றி சுரேகா சுந்தர் .மன அழுத்தத்தை நீக்கி நிம்மதியை வழங்கும் இந்தப் பொன்னான வார்த்தைகள் சொன்னதுக்கு.

 1. Don’t Expect எதிர்பாக்கக்கூடாது 

2.Dont Compare. ஒப்பிடக்கூடாது.


11 கருத்துகள்:

  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. நீங்க சொன்ன சனிக்கிழமை என்னிக்கு வரும்னு எண்ணி எண்ணி எனக்கு மனசு அழுத்தமாயிடுச்சு !!

    ச்சும்மாவுக்காக...ச்சும்மா சொன்னேன்.

    மிக்க நன்றி தேனம்மை ஜி!!

    பதிலளிநீக்கு
  3. . Don’t Expect எதிர்பாக்கக்கூடாது

    2.Dont Compare. ஒப்பிடக்கூடாது. //

    நன்றாக சொன்னார் சுரேகா சுந்தர்.

    பதிலளிநீக்கு
  4. மிக நல்ல பகிர்வு அக்கா...
    திரு. சுரேகா அவர்கள் அருமையான இரண்டு விஷயத்தைப் பற்றி சொல்லிருப்பது சிறப்பு.
    வாழ்த்துக்கள் அக்கா...

    பதிலளிநீக்கு
  5. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி சுரேகாஜி. இதுக்குத்தான் முன்னாடியே யார்கிட்டயும் வாங்கி வைக்கக்கூடாதுன்னு சொல்றது. ஆனா ட்ராஃப்ட்ல ஒரு நாலு சாட்டர்டே ஜாலி கார்னர் இல்லைன்னா பதட்டமா இருக்கே.. :) நடுவுல நடுவுல ஊருக்கு வேற போயிடுறேன். அப்போ தமிழ்மணம்,ஜி ப்ளஸ் , ஃபேஸ்புக்குல எல்லாம் பகிர முடியாதுன்னு போஸ்ட்போன் பண்ணிடுறேன்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி கோமதி மேம்

    நன்றி குமார் தம்பி. :)உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  7. // 1. Don’t Expect எதிர்பாக்கக்கூடாது

    2.Dont Compare. ஒப்பிடக்கூடாது. //
    well said ..முதல் விஷயத்தை கூட ஈஸியா பின்பற்றலாம் ரெண்டாவது இருக்கே !! கொஞ்சம்கஷ்டம்தான் :) ஆனா அதை பின்பற்றினால் சுரேகா சார் சொல்வதுபோல நோ பிராப்லம் அட் ஆல் ..

    பதிலளிநீக்கு
  8. மிகப் பொருத்தமான ஆளைதான் கேட்டு இருக்கீங்க தேனம்மா. சுரேகா சுந்தர் பேச்சை ஒருதடவைதான் கேட்டு இருக்கேன்.வலைப்பதிவர் மாநாட்டில்தான். சிரிக்க சிந்திக்க நறுக்குத் தெரித்தாற்போல பேசினார்,. இப்பொழுது சொல்லி இருக்கும் கருத்துகளும் மிகத்தேவையானவை, கருத்தில் கொள்கிறேன். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  9. எதிர்பார்ப்புகள் கூடாது. ஒப்பிடுதலும் கூடாது....

    உண்மை தான். எதிர்பார்ப்புகள் அதிகரிக்க, அவை நடக்காத போது ஏமாற்றமும் மன அழுத்தமும் உண்டாகும்......

    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  10. நன்றி ஏஞ்சலின்

    நன்றி வல்லிம்மா

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு
  11. அழகான கருத்துரை! எதிர்பார்ப்புகள் இருந்தால் நிச்ச்யமாக ஏமாற்றம், மன அழுத்தம். சுரேகா அவர்கள் பேசுவதும் எழுதுவதும் மிகவும் அருமைதான்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...