எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 அக்டோபர், 2014

தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆத்தங்கரை மரமும்..

81. பருவமே புதிய பாடல் பாடு..

சுகாசினியும் மோகனும் ட்ராக் சூட்டில் செம ஃபிட்டாக ஒரு பூங்காவில் ஜாகிங் ஓடும்போது பின்னணியில் ஹார்ட் பீட் போல் ஒலிக்கும் பாடல். இதன் ரிதமும் பாடல்வரிகளும் அழகு. பதின்பருவங்களில் அடிக்கடி ஹம் பண்ணிய பாடல். ( ஆமா இப்ப மோகனும் சுகாசினியும் எங்க இருக்காங்க.)

82. அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா.

மலேசியா வாசுதேவனின் குரலில் அருமையான பாடல். மகேந்திரன் படம். அஸ்வினியும் சந்திர சேகரும் என நினைக்கிறேன்.  மசூதியும் டோம்களும் மாடங்களும் குதிரைவண்டியும் வெளிச்ச ஓவியமும் அழகு. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள். என்ற வரி பிடிக்கும், :)


83.அத்தைக்குப் பிறந்தவளே..

செம இளமைப் பாடல்.  ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமரக் கிளையே அதிலுறங்கும் கிளியே என்று பாடல் ஆரம்பிக்கும்போது சேர்ந்து உரக்கப் பாடுவது உண்டு ஹாஹா. விக்னேஷும் அவரின் அத்தை மகளும் ( நடிகையின் பெயர் மறந்துவிட்டது .) அத்தையும் மாமனும் சுகம்தானா ஆத்துல மீனும் சொகம்தானா. அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சொகந்தானா.. என்ற வரிகள் செம.(ஸ்டூடியோக்களில் மட்டுமே எடுக்கப்பட்டுவந்த சினிமாக்கள் சரித்திரத்தை 75 களில் மாற்றி கிராமங்களின் மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்து நம்மை இயற்கை நேசர்களாக மாற்றிய பாரதிராஜா இப்ப என்ன செய்றார்.. )

84. நலம் .. நலமறிய ஆவல்.

காதல் கோட்டையில் தேவயானியும் அஜீத்தும் பாடும் பாடல். இவர் ஊட்டியிலும் அவர் ஜெய்ப்பூரிலும் இருக்க. மென்மையான குளிரும் இதமான வெய்யிலும் மாறி மாறி அடித்தது போன்ற சுகம் இருக்கும் இந்தப் பாடலில். மென்மையான காதல்.

85. தீர்த்தக் கரையினிலே..

வியாழன், 30 அக்டோபர், 2014

அக்னியின் ரேணுகை:-

அக்னியின் ரேணுகை:-
****************************

பொறாமை சுமந்தவனின்
புதல்வனைப் பெற்றவள்
துண்டான ரேணுகை.

கோடரி எடுத்துத்
தீட்டிய மரம்
தாயின் தலை.

சாணை பார்த்த
பரசுராமன்
திரும்ப ஒட்ட வைக்கிறான்.

நழுவி நழுவி
விழும் தலை
பொருந்த மறுக்கிறது.

விரிந்த இமைகளொட்டி
உறைந்த கண்ணீரோடு
ஏமாற்றப் பார்வை.

புதன், 29 அக்டோபர், 2014

எக்ஸ்னோரா.. ExNoRa



எக்ஸ்னோரா.

எக்ஸ்னோரா சிதம்பரம் என்பவரை ஒரு முறை குமரன் கல்யாண மண்டபத்தில் லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நடைபெற்ற  நவராத்ரி விழாவின்போது சந்தித்தேன். சீஃப் கெஸ்ட் மேன்மைமிகு கவர்னர் பர்னாலாவின் பேத்தி ஆயிஷா ஸாந்து ., ஸ்பெஷல் கெஸ்ட் ஃபிலிம் டைரக்டர் மதுமிதா விஜய்., மற்றும் எக்ஸ்னோரா சுலோசனா ராமசேஷன்.. குத்துவிளக்கேற்றி முப்பெரும் தேவியரும் விழாவைத் தொடங்க.. நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.. எக்ஸ்னோராவைச் சேர்ந்த சுலோச்சனா அவர்களுக்கு லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக நினைவுப் பரிசு வழங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.!

அந்த நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா மெம்பரான சிதம்பரம் என்பவரும் வந்திருந்தார். அவரிடம் அது பற்றிக் கேட்டபோது சிறிது விவரங்கள் அளித்தார்.இவர் 2 கவிதை நூல்களும், ஒரு ஜோக் நூலும் ஒரு நாவலும் ( தாய்மையே வெல்லும் ) வெளியிட்டிருக்கிறார்.

செவ்வாய், 28 அக்டோபர், 2014

விவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட் இல்லை.

ரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. ( Killi Sugar, Ganadhal ஆகிய இடங்களில் அங்கே இருக்கின்றன. எந்த ஊர் என்று பர்ஃபெக்டாக ஓட்டுநரால் சொல்ல இயலவில்லை. ) நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டி வந்தது.

அதனால் பக்கா கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பருத்திப்பஞ்சு பயிரிடப்பட்ட கரிசல்  நிலங்களைக் கடந்தோம்.சோலே என்று சொல்லக் கூடிய காபூலி சன்னாப் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தன. நீர் பாய்ச்ச குழாய்கள் போடப்பட்டிருந்தன.

திங்கள், 27 அக்டோபர், 2014

தாய்மையின் பேரன்பில் அன்ன பட்சி முன்னுரை. :-

தாய்மையின் பேரன்பில்.

ஒற்றை ஒளிக்கீற்றும் சில துளி மழையும் ஒளித்து வைத்திருக்கிறது வானவில்லை. மயில்தோகையாய் விரியும் வில்லிலிருந்து பெருகும் சொல் துளியால் கவிதை சமைத்துண்ணும் பெண்மைக்குக் கனவுகளே தானியக் கருவூலம்.

பால் நிலவு பொழியும் நீரில் பகுத்துண்டு நீந்தும் அன்னப்பட்சியாயிருத்தல் சுகம். காணும் ஒவ்வொரு மனிதரிலும் ஏதோ ஒரு குணத்தில் இனம் கண்டு ஒரு துளி சுவைத்துப் பருகி சபரியாய்ச் சிறந்ததைக் கொடுக்கும் ஆசை.


நலங்கெடப் புழுதியில் விழுந்த நற்கனிகள் புதுப்பித்து எனதென்று அறியத்தருவது என் அன்பு.

சனி, 25 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கோமதிஅரசுவும் கருத்துக் கோலங்களும்.


கோமதி மேம். நான் பெரிதும் மதிக்கும் வலைப்பதிவர். அவரது கோலங்கள் தொடர்பான ஈடுபாடு பாராட்டுக்குரியது. லேடீஸ் ஸ்பெஷலில் கோலங்கள் தொடர்பாக இவர் வலைத்தளம் குறித்துப் பதிவு ( மிகச் சிறப்பான இடுகை அது ) வாங்கியிருந்தாலும் இவரின் வலைத்தளத்தில் சுலோகங்களும் புகைப்படங்களும் இன்னொரு வசீகரம். எனக்கும் கோலங்களில் ஈடுபாடு உண்டு என்பதால் அவரிடம் சும்மாவுக்காக கோலங்கள் தொடர்பான ஒரு கேள்வி.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

பேரன்பின் அருணாசல ஐயாவுக்கு நூற்றாண்டு விழா.

எங்கள் அன்பு ஐயா.
அம்மா என்றால் அன்பு என்றோரு பாடல் உண்டு ஆனால் எங்களுக்கோ எங்கள் அப்பத்தாவீட்டு  (அருணாசல) ஐயா என்றால் அன்பு.  பொங்கும் கருணையும் அன்பையும் எங்கள் ஐயாவின் கண்வழியேதான் பார்க்கவேண்டும்.

வியாழன், 23 அக்டோபர், 2014

டிஸ்கவரி புக் பேலஸில் அன்ன பட்சி.


சென்னை கே கே நகரில் சகோ. வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸ் இருக்கிறது . ( பொன்னுசாமி பிள்ளை தெரு, மஹா வீர் பில்டிங்க் ).

இங்கே என்னுடைய நூல் அன்ன பட்சி கிடைக்கும். என்னுடைய மற்ற இரு நூல்களும் சாதனை அரசிகள் & ங்கா கிடைக்கும்.

அன்ன பட்சி பற்றி ஒரு நூல் அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள் டிஸ்கவரி நூல் நிலையத்தின் இணையப் பக்கத்தில். நன்றி வேடியப்பன்.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

நுரைத்துப் பெருகும் அருவி. ( மலைகள் இதழ் )


கண்ணோரம் காக்கைக் கால்களாய்ச் சுருங்கி விரிந்து  கிடக்கின்றன காட்டு விருட்சங்கள்..

நுரைத்துக் கிடக்கும் அருவி பெருகி வீழ்கிறது அந்தரங்கம் திறந்த மனமாய். 

தவளைகள் முணுமுணுப்போது குதித்துச் செல்கின்றன கரையோரம்.

மினுமினுப்போடு  தாவித் தாவி நீந்திக் கொண்டிருக்கிறது நதி.

முங்கிக் குளித்துக் கொண்டிருந்தன கற்கள். கரையோரம் கிடந்தவை கால் நனைத்துக் கிடந்தன.

விருட்சங்கள் விருப்பத்தோடு கரை அணைத்துத் தழுவிக் கொடியாய்க் கிடந்தன.

அள்ளி அள்ளிச் சுழற்றிச் சென்றது நீரை நதி.... குழந்தையைக் கொஞ்சுவதாய்.

எச்சில் நுரையால் முத்தமிட்டபடியே சென்றன தாவரப் பாதங்களை.

ஆனந்த அதிர்ச்சியோடு நீர்ப்பாயைப் பரப்பி விட்டது அருவி. 

திங்கள், 20 அக்டோபர், 2014

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1

சுஜாதாவின் ஒரு கதையில் யஷ் என்ற கதாபாத்திரம் சொல்வது போல ஒரு டயலாக். // யஷ் யஷ் என்று எத்தனை முறை எத்தனை ஆயிரம் காப்பிகளில் என் பெயர் ப்ரிண்ட் ஆகி இருக்கும்.// என்று . நம் பெயரும் பத்ரிக்கைகளில் ப்ரிண்ட் ஆனால் எப்படி இருக்கும் என்று படிக்கும்போதே எக்ஸைடட் ஆக வைத்த வரிகள்.

முதன் முதலில் ( கல்லூரிப்பருவ கல்கி,இன்னபிற இதழ்களுக்குப் பிறகு பல வருடம் கழித்து லேடீஸ் ஸ்பெஷலில் என் பெயர் வந்தது . அதன்பின் )  யங் லேடீஸ் கவிதைப் போட்டிக்காக லேடீஸ் ஸ்பெஷலில் முதன் முதலில் முகமற்றிருந்த எனக்கு முகம் காட்டும் விதமாக என்னுடைய புகைப்படம் வந்தது. நன்றி கிரிஜாம்மா.
அதன் பின் லேடீஸ் ஸ்பெஷலில் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் சுய உதவிக் குழுப் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகப் ப்ரச்சனைகள் குறித்துப் பேசினேன். அதன் கடைசி நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

வியாழன், 16 அக்டோபர், 2014

ப்ரதிகள்.


ப்ரதிகள் பலநேரம்
அசலைப் ப்ரதிபலிப்பதில்லை.
முன்னம் கூட்டிசைந்த பலவற்றின்
கூட்டுப் தொகுப்பாய் இருக்கின்றன.
அசலின் முத்திரை ப்ரதிகளில்
கருநிற அடையாளமாகின்றன.
பல்வேறு பயணங்கள்
சென்று திரும்பும் ப்ரதிகள்
பெரும்பாலும் அசலை வெருட்டுகின்றன.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

உணர்வுகள் தொடர்கதை.



எப்பக் கேட்டாலும் இனம்புரியாத ஒரு உணர்வுல ஆழ்த்தும் பாட்டு இது. சாஃப்ட் ராக். ப்ரேசிலைச் சேர்ந்த பாடகர் மோரிஸ் அல்பர்ட் பாடியது.70 களில் மக்களை ஆட்டிப் படைத்த பாடல்.பார்ட்டி கில்லர்ஸ் என்று சொல்வார்கள் அந்த ரகம்.

கோவை இலக்கிய சந்திப்பில் அன்ன பட்சி பற்றி கவிஞர் அகிலா புகழின் மதிப்புரை.

கோவையில் நடந்த 45 ஆவது கோவை இலக்கிய சந்திப்பில் கவிஞர் அகிலா புகழின்  அன்னபட்சி  பற்றிய மதிப்புரையை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.  இவர் சொல்லிவிட்டுச் செல், சின்ன சின்ன சிதறல்கள் என்னும் இரு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். கவிஞரின் மதிப்புரை பெற்றமையால் அன்ன பட்சியும் சிறப்புற்றது. நன்றி அகிலா புகழ். :)
கவிஞர் அகிலா புகழ் .
 நூல் : அன்னபட்சி
ஆசிரியர் : தேனம்மை லக்ஷ்மணன்
அகநாழிகை பதிப்பகம்
ஜனவரி 2014

(கோவை இலக்கிய சந்திப்பில் 
31 ஆகஸ்ட் 2014 
என்னால் மதிப்புரை வழங்கப்பட்டது..)
தேனம்மை அவர்கள் சிறந்த கவிஞர், எழுத்தாளர், திறமையான படைப்பாளி. பத்திரிகைகளில் கட்டுரை, சிறுகதை என எழுதியுள்ளார். இந்த நூலுக்கு எழுத்தாளரும் மொழிப்பெயர்ப்பாளருமான எம் ஏ சுசீலாம்மாதான் அணிந்துரை வழங்கி உள்ளார்கள்

திங்கள், 13 அக்டோபர், 2014

ஸ்வரமும் அபஸ்வரமும்.

21. ஒரே ஆற்றின் இரு கரைகளில் எழுத்தாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும். நீரோட்டமற்ற பொழுதொன்று எப்போதோ வாய்க்கிறது.

********************************************************
22. அக்கினியாத்தாள் என் கொப்பாத்தா
முத்தாத்தா எங்க முத்துமாரி
எல்லாம் எங்களுக்கு எங்களைப் பெத்த ஆத்தாதான்.
நான் இன்றிருக்கும் நிலைக்கு என் அன்னையே காரணம். அவங்க கண்டிப்பும் அன்பும்தான் இன்றும் என்றும் எங்கள வழி நடத்துது. என்ன நால்வரா இருந்தோம் இப்ப மூவரா வாழ்த்துச் சொல்றோம்.( என் நடுத் தம்பிக்கும் சேர்த்து சொல்லிக்கிறேன் ) என்னைச் செதுக்கிய அன்னைக்கு அன்னையர்தின வாழ்த்துகள்.


***********************************************************  

23. சுய இரக்கம் மிகக் கொடுமையான நோய்.

**********************************************************

24.ஞாபகமறதி.. மிகச் சிறந்த வியாதி

********************************************************   

25. மிகச்சிறப்பான தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட ஒரு விஷயம்/ கவிதை/கட்டுரை/ கதை/ பகிர்வு தனக்கான வாசகர்களைக் காலம் கடந்தேனும் எங்கோ ஒரு புள்ளியில் சந்தித்தே விடுகிறது. அப்போது அந்த விஷயத்தின் கனமும் மனமும் ஒன்றியிருக்க கருந்துளையும் பெருவெடிப்பும் மரணமும் பிறப்பும் துன்பமும் இன்பமும் ஒருசேர உணரமுடிகிறது.. விழிப்பற்ற நிலையா விழிப்பாவெனப் பகுபடாத ஒரு நிலையில் புத்தகம் சரணம் கச்சாமி..

சனி, 11 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர், ரோஷிணியின் கோடரிக்காரன் கதை.


டெல்லியில் வசிக்கும் வலைப்பதிவர், நண்பர்,  சகோ வெங்கட் நாகராஜ் வெளிச்சக் கீற்றுகள், வெங்கட் நாகராஜ், நான் ரசித்த பாடல்கள் என்று மூன்று வலைத்தளங்கள் வைத்திருக்கிறார். அவரும் அவரின் மனைவி ஆதி வெங்கட்டும் என்னுடைய வலைத்தளத்தை வாசித்து அடிக்கடி பின்னூட்டமிடுவார்கள்.

இவருடைய இடுகைகளில் வைஷ்ணோ தேவி பற்றிய இடுகை ரொம்பப் பிடித்தது . ஏனெனில் நாங்கள் சென்று வந்தபோது அதிகம் ஃபோட்டோக்கள் எடுக்கவில்லை. மேலும் அருமையான புகைப்படங்களைப் பகிர்ந்து அதற்குத் தக்க கமெண்ட்ஸ் போடுவார் ஒவ்வொன்றும் அற்புதமாக இருக்கும்

ஒரு முறை தன்னுடைய பெண்ணின் விநாயகர் ஓவியத்தைப் பகிர்ந்திருந்தார். பார்த்தால் ரொம்பவே நல்லா இருந்தது.கண்ணால் பார்ப்பதைக் கையால் செய்துவிடுவாள் என்று காரைக்குடிப்பக்கம் சமத்தான பெண் குழந்தைகளுக்குச் சொல்வார்கள். ரோஷிணியும் விநாயரைப் பார்த்து தத்ரூபமாக வரைந்திருந்தாள்.  மேலும் இரு படங்களிலேயே நமக்கெல்லாம் தெரிந்த கோடரிக்காரன் கதையைச் சொல்லி இருந்தாள். அது ஆச்சர்யமாக இருந்தது. அதனால் அவரிடம் ரோஷிணியில் ஒவியத் திறமை பற்றிக்கேட்டேன்.

/// வெங்கட் சகோ ரோஷிணியின் ஓவியத் திறமையை எப்போது கண்டுபிடித்தீர்கள். அவளுக்கு எவற்றை வரைவதில் விருப்பம் அதிகம். ? சில ஸ்பெஷல் ஓவியங்களையும் அவள் திறமையையும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். ///


எனது மகள் ரோஷ்ணிக்கு மூன்று வயதிருக்கலாம் – அப்போது அவள் பென்சில் பிடித்து அவளுக்கு தோன்றிய மாதிரி எதையாவது வரையத் துவங்கினாள். Pre-KG வகுப்புகளில் சேர்ந்த பிறகு வண்ணம் தீட்டுவதில் விருப்பம் – ஆரம்பத்தில் சில மனிதர்களின் தலைமுடிக்கு ஆரஞ்சு, பச்சை என்று வித்தியாசமாக வண்ணம் தீட்டுவாள்!! – ஒரு வேளை தில்லியில் பல இளைஞர்கள்/யுவதிகள் தங்களது தலைமுடிக்கு வித்தியாசமான வண்ணங்களை பூசிக்கொள்வதைப் பார்த்த விளைவாக இருக்கலாம்!

வெள்ளி, 10 அக்டோபர், 2014

தேன் பாடல்கள் ஆசையும் ஆட்டமும்.

71. அன்று வந்ததும் இதே நிலா

எம்ஜியாரும் சரோஜா தேவியும் பாடும் பெரிய இடத்துப் பெண்  பாடலை நாங்கள் கல்லூரி நாட்களில் நின்றபடி செய்யும் ஒரு எக்சர்ஸைஸ் போலப் பாடி இருக்கிறோம். மிக அருமையான இசைநடனப் பாடல்.  நிலவைப் போல சரோஜாதேவி ஜொலிப்பார்.

72. காதலென்னும் வடிவம் கண்டேன்..

பாக்ய லெக்ஷ்மியில் உள்ள பாட்டு இது. பருவப்பெண்கள் தனிமையில் பாடும் பாடல் என்னவோ எனக்குப் பிடித்த ஒன்று. ஈ வி சரோஜா தோட்டத்தில் ஆடிப் பாடுவார். துள்ளாமல் துள்ளும் உள்ளம், மின்னாமல் மின்னும் கன்னம் என்ற வரிகள் அழகு.  


73. ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்  ஹௌ டூ யூ டூ..:)

சாவித்ரியும் ஜெமினியும் பாடும் பாடல். மிஸ்ஸியம்மா என நினைக்கிறேன். ஜோடி அழகு.

வியாழன், 9 அக்டோபர், 2014

வைப்பரில் மரிக்கும் ஈசல்.:-

கண்ணுக்குள் ஒளிந்து
கசிகிறது ஏக்கம்
புகைப்படங்களில்
பதிந்துவிடாதபடி.

ஒளிவிடும் ஆவலை
அடக்கமுடியாமல்
அலைகிறது விழி

உன் உருவச்
சாயலொற்றவைகளை
அளைந்து களைக்கிறது மூளை.

மனதுக்குப் புரிவதில்லை
அமாவாசையெலாம்.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

இவர்கள் தூய அரசர்கள்



இவர்கள் தூய அரசர்கள் :-

உச்சியில் கயிறுகட்டிக்கொண்ட
ஒய்யாரக் கூந்தலழகிகள்
பாப் வெட்டிக்கொண்டு
தரையைத் தேய்த்துக்கொண்டு
நடப்பவர்கள்.

தரைக்குழந்தைகளுக்குத்
தினம் தினம் உடல்துடைத்து
வாரமொருமுறை நீரூற்றிக்
குளியல் செய்யும் பொறுப்புள்ள தாதிகள்.

சடைபின்னாமல்
ரப்பர்பாண்ட் போட்டதால்,
நுனி வெடித்த சிகையழகிகள்

தென்னைமரவீட்டைத்
தாயாகக்கொண்ட
செம்பரட்டைத் தலையர்கள்
வாயிலோரம் ஒதுங்கி
விடிகாலைப் பனியில்
வியர்க்க விருவிருக்க நடைபயில்வர்
அங்குமிங்கும் நடந்து
மண்வாசல் முதுகு தேய்த்துச்
சொரிந்து குளிப்பாட்டுவர்.

செம்பரட்டைத் தலையர்
வாயிலிலே சேவகம் செய்தால்
அவர்தம் பெண்சாதிகளாம்
வெள்ளைத் தோற்சிலுப்பிகள்
சமையற்கட்டின் மூலையோரங்களில்
குளிருக்கு அடக்கமாய்
முடங்கிப் படுத்துக்கிடப்பர்.

திங்கள், 6 அக்டோபர், 2014

ஞானம் பிறந்த கதை.

1. எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்வது ஒரு உத்தி என்றால் எதுவும் தெரியாதது போல் காட்டிக்கொள்வதும் ஒரு உத்திதான் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க..

*******************************************************

2. என்னடா இது தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை.
சென்னை வந்த போது போஸ்டரில் எல்லாம் ”என்னமோ நடக்குது”.. ”வாயை மூடிப் பேசவும்”. ( என்ன லாங்க்வேஜுலன்னு சொல்லல.. ) , ”என்னமோ ஏதோ”.. பேர் தட்டுப்பாடு போல இருக்கு.


*******************************************************

3. போல்டு & ப்யூட்டிஃபுல்லா.. இல்லா சாதாரணமாவா..அட வோட்டுப் போட எப்பிடிப் போவீங்கன்னு கேட்டேன். ஊர் விட்டு ஊர் மட்டுமில்ல ஸ்டேட் விட்டு ஸ்டேட் மாறிக்கிட்டே இருக்கும்போது வோட் எங்க போடுறதுன்னு தெரில..

இதுல சாதா ( மனிதன் ) தான் சோதா ( மனிதன் ) இல்லைன்னு நிரூபிக்குமா.. !


அப்பாடா நாமளும் அரசியல் ஸ்டேடஸ் போட்டு ஜோதில ஐக்கியமாயாச்சு.. இல்லாட்டா ஆட்டைல சேர்த்துக்கமாட்டாங்கபோல இருக்கே..

நானெல்லாம் அரசியல் நோக்கர்தான். கிங் மேக்கர் இல்லப்பா.


********************************************************

4. சில நதிகள் நாடுகளை இணைக்கின்றன. சில நதிகள் மாநிலங்களைப் பிரிக்கின்றன.

#தண்ணீர்_தண்ணீர்..


********************************************************


5. குப்பையில் குண்டு.

ஏம்பா உங்களுக்கு பார்க், கோயில் இதிலெல்லாம் வைச்சு அலுத்து போச்சா..
 


*********************************************************

6. கலைஞர்கள் வாழ்க்கை குழம்பிக் கிடக்கிறது அவர்களின் மனதைப் போல.
 

ததும்பும் பிரியங்களோடு வாழ்க்கை நடத்துபவர் தனித்தே இருக்கிறார்.
 

எல்லா இடங்களிலும் நடிக்கத் தெரிந்தவர்தான் வாழ்க்கையிலும் நம்பர் ஒன்னாக இருக்கிறார். 

*********************************************************

7. “அரசாளுவ.”. அப்பிடிங்கிற வார்த்தையைக் கண்டுபிடிச்சவங்க நாங்கதான். காரைக்குடிக்காரங்க. இதுக்கு காப்பி ரைட் யாரும் கோரமுடியாதுன்னு நினைக்கிறேன். இதுக்கு அர்த்தம் “அரசை ஆளுவாய்.” இப்பிடி சேட்டை செய்யிற குட்டிப் பசங்களைத் திட்டுவாங்க.. திட்டுல கூட எப்பிடி ஒரு வாழ்த்து.. செட்டிநாட்டுச் சொல்வழக்கு ரொம்ப அழகானது...

சனி, 4 அக்டோபர், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். ஏஞ்சல்மீனின் க்வில்லிங் ஓவியங்கள்.

முகநூலில் அறிமுகமானவர் என் தங்கை ஏஞ்சல். இவர் cherub crafts என்ற பேரில் வல்லிம்மாவின் தோழியாக இருந்ததால் இணைத்தேன். பின் அவரின் முகநூல் பக்கம் சென்று பார்த்தால்  க்வில்லிங்கால் செய்யப்பட்ட வண்ண வண்ண அட்டைகள் , ஓவியங்கள் பார்த்தேன். ரசித்தேன் . ரொம்ப ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அவர் இரண்டு வலைத்தளங்களிலும் எழுதுகிறார். அந்த இணைப்பைக் கீழே கொடுத்திருக்கிறேன்.  அதனால் அவர்கிட்ட ஒரு கேள்வி கேட்டு இங்கே பகிர்கிறேன். 

அதுக்கு முன்னாடி க்வில்லிங்க பத்தி ஒரு சிறுகுறிப்பு.

இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலை. ஐரோப்பிய மத குருமார்கள் தங்கள் விவிலியப் புத்தகத்துல தங்க ரேக்கினால் செய்யப்பட்ட பேப்பரால இந்த வேலைப்பாடுகளை செய்து அலங்கரிப்பாங்க. ராஜபரம்பரைக்காரங்களும் இத பொழுதுபோக்கா செய்து வைச்சுக்குவாங்க். இது காஸ்ட்லியான விஷயம்கிறதால சாதாரண மக்களை எட்டலை. அப்புறம் 1930 ல இங்கிலாந்துல விதம் விதமான பேப்பர்கள் கண்டுபிடிக்கப்பட்டபின்பு இது புனர்ஜென்மம் எடுத்ததாம். 


இதுக்கு பேப்பர் ரோலிங், பேப்பர் ஸ்க்ரோலிங், ஃபிலிக், மொசய்க் அப்பிடின்னு பல பேர் எகிப்து சரித்திரத்துல இருக்கு. 3MM, 5MM , 10MM, ன்னு மூன்று அளவுல உள்ள குவில்லிங் பேப்பர்களில் கிடைக்கும். இதுக்கு க்வில்லிங்க் ஊசின்னு ஒண்ணு இருக்கு. இது ரெண்டும் வைச்சு பலவிதமான மந்திர வேலைகள் செய்திருக்க ஏஞ்சல் கிட்ட ஒரு கேள்வி.  ( இவர் ப்ராடக் ஃப்ரம் வேஸ்ட் என்பது போல ரீசைக்கிளிங் மெத்தட்லயும் சணல் போன்றவை பயன்படுத்தியும் இந்த கார்ட்ஸ் செய்திருக்கிறார்.

வியாழன், 2 அக்டோபர், 2014

மோகன்தாஸிலிருந்து மகாத்மா வரை. ( MY LIFE IS MY MESSAGE)

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்த குஜராத்திலிருக்கும் போர்பந்தருக்குச் சென்று வந்தோம். அங்கே அவர் 7 வயதுச் சிறுவனாக இருப்பதிலிருந்து மகாத்மாவின் மரணபரியந்தம் வரை உள்ள நிகழ்வுகள் புகைப்படங்களாக இருந்தன.

அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.
காந்தியடிகளின் தாத்தா ஹர்ஜீவன் காந்தி & பாட்டி லெக்ஷ்மிம்மா

கீர்த்தி மந்திரில் (காந்திமகான் பிறந்த இடத்தில்) ஒரு கையெழுத்து.

தமிழ் நாட்டில் காந்தி சிலைகள் இல்லாத ஊரோ, காந்தி ரோடு என்று பெயரிடப்படாத சாலைகள் கொண்ட ஊரோ பார்க்க முடியாது. அந்த அளவுக்கு காந்தியின் மேல் பற்றுக்கொண்டவர்கள் நாம்.

சில நாட்களுக்கு முன் காந்தியடிகள் பிறந்திருந்த போர்பந்தருக்கு என் தம்பி குடும்பத்தினருடன் சென்றிருந்தேன். முன்பு சுதாமாபுரி என்று அழைக்கப்பட்ட ஊர் இது. இங்கேதான் சுதாமருக்கும் கோயில் உள்ளது.

நம் நாட்டின் விடுதலைக்கு அகிம்சா வழியில் பாடுபட்ட அண்ணல் அவர்களின் இல்லத்தை-- கீர்த்தி மந்திர் --  காணவே சென்றிருந்தோம்.தற்போது குஜராத் அரசால் நிர்வகிக்கப்படுகிறது. வாயில் கதவுகளின் இருபுறமும் சுதேசிச் சிந்தனையை வெளிப்படுத்தும் வண்ணம் இராட்டைச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தி பிறந்த இடத்துக்கு அடியெடுத்து வைத்தபோது மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட மகான். அவர் பிறந்த இடத்தைத் தரிசிப்பது என்பது எவ்வளவு கொடுப்பினை.

புதன், 1 அக்டோபர், 2014

மக்கள் சேவையும் மகத்தான தானமும். சு. மா. வெங்கடேஷ்.



போராடி ஜெயித்த பெண்கள் கட்டுரைப் பேட்டிக்காக எங்கள் வீட்டிற்கு மூவரும் வந்தபோது எடுத்த புகைப்படம்.
நிலையில்லா உலகினில்
நிம்மதி நிழல் தேடிடும் வேளையில்
கடந்துவந்த காலத்தின் காற்று
கனலாய் இருக்கும் சில வேளைகளில்
அதில் கருணை மழையும் பொழிந்திடும்.
நம் பருவ வயதில் – அதில் காதல் இப்போதைக்கு
அது தேவையில்லை. ஆம் வாழ்க்கைப் பயணமோ
நம் பிறப்பு இறப்பு தண்டவாளத்தில் – நாம்
பிறந்துவிட்டோம் உழலும் உலகத்தில் –
சுகாதாரம் அதில் பாதி. சீர்கேடு அதன் மீதி
இறந்துவிடுவோம் எதிர்காலத்தில்
ஏதாவது செய்திடுவோம் பெயர் விளங்கும்
விதத்தில் சுயநலமின்றி- பொதுநலன் கருதி
செய்திடுவோம் இரத்த தானம்.
செத்தாலும் பார்த்துக் கொண்டிருப்போம்
சிறந்தது கண் தானம். உடல் உறுப்புகள்
தானம் – தம்பி ஹித்தேந்திரனே முன்னுதாரணம்
மண்ணுக்கும் போகாது நெருப்பிலும்
வேகாது நமது முழு உடல்தானம், மருத்துவ
ஆராய்ச்சி மகத்துவத்திற்கு சிறந்த சாதனம்
மனிதன் மனிதனுக்காகவே ! என்றும் மனித நேயத்துடன்
உலக அரங்கில்நமது நாடு. ஆமாம்
நிலையில்லா உலகினில் நமது செயல்
என்றும் நிலையானதோடு.

Related Posts Plugin for WordPress, Blogger...