எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 பிப்ரவரி, 2015

சனிக்கிழமையில் கல்யாணம். அர்த்தராத்திரியில் பெண் அழைப்பு.

சனி நள்ளிரவு இரண்டு மணி இருக்கும்.டண்டணக்கு டணக்குணக்கு டண்டணக்கு டணக்குணக்கு டண்டணக்கு டணக்குணக்கு டண்டணக்கு டணக்குணக்கு  என்று நெஞ்சம் அதிர்வது போல பறையொலிச் சத்தம். சும்மா காது ஜவ்வு எல்லாம் பிய்ந்துவிடும்போல அவ்வளவு சவுண்ட்.



நெஞ்சப்பாரடிக்கக் கண் திறந்து விழித்துப் பார்த்தால் ஹைதையில் எங்கள் வீட்டிலேயேதான் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறேன் என்பது புரிந்தது. என்னடா இப்படி ஒரு சத்தம் நம்மூரில் துக்கத்துக்கு மட்டும்தானே பறை கொட்டுவார்கள் என்று பதட்டத்தோடு எழுந்து வந்தால் கீழே வீட்டுக்காரர் வீட்டில் ஒரே கலகலப்பு வெளிச்சம் சத்தம்.நாலு மாடி ஏறி மொட்டை மாடிக்கு சென்று என்னவென்று பார்த்தால் ஷாமியானா மறைத்துக் கொண்டிருந்தது. ! நைட்டியோடு கீழே செல்லவும் முடியாது.
அலங்கார ரதத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும்.

சனிக்கிழமை அவர்கள் பையனுக்குக் கல்யாணம் என்று அவர்கள் கொடுத்திருந்த இன்விடேஷனில் பார்த்த ஞாபகம். புதன் கிழமையிலிருந்தே ஏகக் கூட்டம். புதன் மதிய சாப்பாட்டு நேரத்தில் கீழ் வீட்டில் இருந்து ஒரு முதிய பெண்மணியின் கோவிந்தா கோவிந்தா என்ற சத்தமும் அதைத் தொடர்ந்து தீப தூப வாசனையும் மற்றவர்களும் கோவிந்தா கோவிந்தா எனத் திரும்பச் சொல்லி வணங்குவதும் மேலே கேட்டது.

திருமண அல்லோல கல்லோலங்கள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டன. ஆமா நாங்க இருக்கும் அதே சைஸ் வீடு எப்படி இத்தனை பேரைத் தாங்குது. ( முன்பக்கம் வீட்டின் அளவு கார்/ வண்டி பார்க்கிங்  இடம் உண்டு. ) அங்கே பூரா சேர்களைப் போட்டு வைத்திருந்தார்கள்.

அதிகம் பழக்கம் இல்லாததாலும் பாஷைத் தகறாறினாலும் ( எல்லைத் தகறாறு இல்லீங்கோ ) ரொம்பப் பேசுவது இல்லை. நாம இங்கிலீஷிலும் ஹிந்தியிலும் பேச வீட்டு ஓனர் பதிலளிப்பார். ஆனால் வீட்டுக்காரம்மா மையமாகப் புன்னகைப்பார். நாம் பேசுவதில் என்ன புரிந்ததோ என்று தோன்றுமளவு இருக்கும் அந்தப் புன்னகை.. எல்லாம்  அந்த தேவுடுக்கே தெலுசு. :)

இப்படி இருக்க சனிக்கிழமை ஒரு பெரிய திருமண மண்டபத்தில் திருமணம் நடந்திருந்தது . நீங்க போகலையா என்று கேட்டால் ஆமா போகலை வழக்கம் போல வெள்ளியன்று ஒரு திருமணத்துக்குச் சென்று ஏக வெட்டு வெட்டியதில் வயிறும் தகறாறு செய்து பயமுறுத்தி இருந்தது. அந்தத் திருமணத்துக்குச் செல்லும்பொதே வாசல் படியிலிருந்த உறவினர்கள் கூட்டத்தைப் பார்த்து நானும் மையமாகப் புன்னகைத்துத்தான் கடந்து சென்றேன். மேலும் என்னவோ ஒரு தயக்கம். புது இடம். ஒருவரைக் கூடத் தெரியாது. ஈவன் வீட்டுக்காரர் & வீட்டுக்காரம்மாவையே ஓரிரு முறைதான் பார்த்திருப்பேன்.வீட்டுக்கு மணமக்கள் வந்தபின் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பு.

இங்கே எல்லாம் பறைச் சத்தம் என்றால் சும்மா கொட்டு கொட்டு என்று கொட்டித் தீர்த்து விடுவார்கள். அதற்கு உறவினர்கள் அனைவரும் நடனமணிகளைப் போல ஆடித் தீர்த்து விடுவார்கள். தெலுங்குப் பட ஹீரோக்கள் ஆடுவதெல்லாம் ஒரு ஆட்டமா என்று தோன்றும் அளவுக்கு இருக்கும் இந்த ஆட்டம்.

அலுக்காமல் சலிக்காமல் அரைமணி நேரம் இல்லீங்க ரெண்டு முதல் நாலு மணி நேரம் வரை கூட ட்ரம்ஸ் & பறை கொட்டுவாங்க & டான்ஸ் ஆடுவாங்க. ஆட்டமும் பாட்டமும் நிரம்பியதுதான் இவர்கள் திருமணம்.ஏதோ குடும்பப் பெயர்களும் ராவ் என்று முடியும் பேருமாக எல்லாப் பேரும் தெலுகு சினிமா ப்ரபலங்களை ஞாபகப்படுத்தியது. :)
ட்ரம்ஸ் கிளம்பிப் போறவரைக்கும் நின்னு எடுத்தேன் :)

இதேபோலத்தான் விநாயக சதுர்த்திக்கும் ஆடித் தீர்த்தாங்க. அப்போ பயம் விட்டுப் போச்சு. ஏன்னா ஏற்கனவே அர்த்த ராத்திரில இந்த ஆட்டத்தையும் ஸ்பாட் லைட்டுகளையும் சத்தத்தையும் கேட்டு பார்த்து இருக்கோம்ல. :)

சனிக்கிழமையில் நம்மூரில் எந்த சுப காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டோம். அதுவும் 9 - 10. 30 ராகுகாலம். ஆனா இங்கே சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள் என்பதால் திருமணம் செய்திருக்காங்க. அதுவும் 9.31 க்கு திருமணம்.  அதே நாளில் வீட்டுக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு ( ஞாயிறு கணக்கு ) பெண் அழைச்சிருக்காங்க.

நல்ல மனுஷங்க போங்க ., நல்லாத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க மாப்பிள்ளையும் பெண்ணும். :) நாள்ல என்ன இருக்கு. கோள்ல என்ன இருக்குன்னு சிந்திக்க வைச்சிட்டாங்க. :)  

10 கருத்துகள்:

  1. அருமையான அனுபவப்பகிர்வு. பாவம் ..... உங்களுக்கு அன்று தூக்கம் கெட்டுப்போயிருக்குமே !

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //நாலு மாடி ஏறி மொட்டை மாடிக்கு சென்று என்னவென்று பார்த்தால்//

    லிஃப்டில் தானே !

    //ஷாமியானா மறைத்துக் கொண்டிருந்தது. !//

    அடப்பாவமே !

    //நைட்டியோடு கீழே செல்லவும் முடியாது. //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :))))))

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. //சனிக்கிழமையில் நம்மூரில் எந்த சுப காரியத்தையும் ஆரம்பிக்க மாட்டோம். அதுவும் 9 - 10. 30 ராகுகாலம். ஆனா இங்கே சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய நாள் என்பதால் திருமணம் செய்திருக்காங்க. அதுவும் 9.31 க்கு திருமணம். அதே நாளில் வீட்டுக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு ( ஞாயிறு கணக்கு ) பெண் அழைச்சிருக்காங்க.

    நல்ல மனுஷங்க போங்க ., நல்லாத்தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க மாப்பிள்ளையும் பெண்ணும். :) நாள்ல என்ன இருக்கு. கோள்ல என்ன இருக்குன்னு சிந்திக்க வைச்சிட்டாங்க. :) //

    கோவிந்தா ! கோவிந்தா !! எனச்சொல்லிவிட்டு எது செய்தாலும், அந்தப்பெருமாள் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையே இதற்குக்காரணமாக இருக்கும். வாழ்க !

    பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  4. இப்ப நீங்க ஹைதையில் இருக்கீங்களா?

    தில்லியில் இது ரொம்பவே சகஜம். நடு இரவில் தானே கல்யாணமும். அதுக்கு முன்னாடி பராத்துக்கு ஆட்டமோ ஆட்டம். எதிர் ரோட்டில் இருந்தாலே நம்ம வீட்டில் தூங்க முடியாது. இதுல நாக்க மூக்கவும், அப்படி போடு பாட்டும் கட்டாயம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. நீங்க சொன்னமாதிரி அக்கா இங்கும் சனிக்கிழமைதான் திருமணம். தெய்வ நம்பிக்கை உள்ளவங்க மட்டும் கோவிலில் உறவினர்கள் முன்னில் தாலி கட்டி(நல்ல நாளில்) பின் சனிக்கிழமை வரவேற்புசராம் வைப்பார்கள்.ஆனால் கூடுதலானவர்கள் 2மே சனிக்கிழமைதான். வேலைதான் பிரதான காரணம்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல அனுபவம் தான். நேற்று இதே போல அனுபவம் எனக்கும் - இரவு மூன்று வரை தூங்க விடவில்லை - ஆட்டமும் பாட்டமும் தான்! [B]பராத் வரும் போதே 11.30 மணி. அதன் பிறகு தொடர்ந்து ஆட்டம், பாட்டு, சத்தம் என்று ஓயாத ஓசை.

    பதிலளிநீக்கு
  7. வேறு வழியில்லை... நாமும் குடும்பத்தோடு ஒரு ஆட்டம் போட வேண்டியது தான்...! ஹிஹி...

    பதிலளிநீக்கு
  8. கருத்துக்கு நன்றி கோபு சார். பெருமாள் பார்த்துக்குவார் என்ற நம்பிக்கைதான் காரணமா இருக்கும். உண்மைதான். :)

    ஆமா ஆதி. நாங்க கரோல்பாகிலயும் 4 வருடம் இருந்திருக்கிறோம். ராத் ஷாதி பராத் வந்தா நல்ல இன்னிசையா இருக்கும். ஆனா இங்கே கொட்டுக் கொட்டினதுதான் பதட்டமாயிடுச்சு :)

    அஹா அங்கேயும் அப்படித்தானா அம்மு. நீங்க எந்த ஊரில் இருக்கீங்க.ஜெர்மனியா

    டெல்லியில் கொஞ்சம் வித்யாசமா எண்டர்டெயினிங்கா இருக்கும் வெங்கட் சகோ :)

    நன்றி குமார்

    நன்றி தனபாலன் சகோ.குடும்பமே இந்த ஆட்டத்தைப் பார்த்து ஆடித்தான் போயிட்டோம். :)

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...