எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி

நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :)

திருவிளையாடல் ஞாபகம் வந்திருச்சு.:)

முகநூல், ப்லாக் பத்ரிக்கை அனைத்திலும் சிறுகதை எழுதிக்கொண்டிருப்பவர்களும் , பத்ரிக்கைகளில் வெளிவருமா என்று ஆவலோடு காத்திருப்பவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு.

கல்கி மறக்கமுடியாத இதழ். சுசீலாம்மா எங்கள் கவிதைகளை அனுப்பி முதன் முதல் அச்சில் பார்த்த 10.2.1985 என்னால் மறக்கமுடியாத ஒரு பொன் தினம். அந்தக் கவிதை கிராமத் திருவிழா பற்றியது.



முதல் முதலில் ஹாஸ்டலில் 25 ரூ செக் கிடைத்து அதை பாங்கில்  கையெழுத்துப் போட்டு அக்கவுண்டில் கிரடிட் செய்து காண்டீனில் ட்ரீட் கொண்டாடி இல்லாத காலரைத் தூக்கிவிட்டுப் பெருமையோடு திரிந்த நாள் மறக்கவே இல்லை. :)

 கல்கி இன்றும் வசந்தமாய் நம்பிக்கை ஒளியாய், என்னை இத்தனை காலம் கழித்தும் எழுதத் தூண்டிய தூண்டுகோலாய் இருக்கிறது. அதன் பின் வலைப்பதிவராகி  2010 இலிருந்து இதுவரை சில கவிதைகளும் வெளியாகி இருக்கின்றன. அன்பும் நன்றியும் கல்கி குழுமத்துக்கு.

ரெண்டு வருடத்துக்கு முன் ஒரு போட்டியில் கலந்துகொண்டு அசோகமித்திரன் அவர்களுக்குப் பரிசு கிடைத்ததும் கொஞ்சம் சோர்ந்து பின் தங்கி விட்டேன். இவர்களோடு எல்லாம் போட்டி போட முடியுமா என்று. இப்போதும் எழுத தோணுது ஆனா தயக்கம் பார்ப்போம்.

ஆனா நல்லதை எல்லாம் என் ப்லாகில் பகிர்ந்து விடவேண்டும் என்ற தாகம் உண்டு. இதைப் பார்த்து என் உறவு வட்டத்திலும் முகநூல் வட்டத்திலும் உள்ள பலர் எழுதி அனுப்பக் கூடும். வலைத்தள நண்பர்களும் கூட. எனவே என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்

உங்கள் சிறுகதைகளை போஸ்டிலும் அனுப்பலாம். இணையத்திலும் அனுப்பலாம். ஏ 4 ஷீட்டில் 4 பக்கம் போதும் . விதிமுறைகளை நன்கு படித்துக் கொள்ளுங்கள். கடைசி நாள் ஜூன் 15, 2015.

அனுப்ப வேண்டிய இணைய முகவரி :-

“ அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2015 “

kalki@kalkiweekly.com



கல்கியின் துணை ஆசிரியர் திரு அமிர்தம் சூர்யா முகநூலில் கொடுத்திருக்கும் இந்த கேப்ஷன் இதை பகிரத் தூண்டியது. புன்னகையை மலரச் செய்தது. :)

///என் செல்ல நண்பர்களே..

கவிதை மட்டும் எழுதுனா போதாது.எல்லா கவிதைக்குள்ளும் ஒரு கதை இருக்குமில்ல அதை எழுதுங்க.இந்தப்போட்டியில் கலந்துக்குங்க.

கதையில் முலை யோனி போன்ற அதி பெண்ணிய சொல்லாடல் கூடாது.
விஸ்கி பிராந்தி பார் ,மற்றும் வளைய வளையமா சிகரெட் புகையை விட்டான் போன்ற வர்ணனை கூடாது.


பின்நவீனத்துவ கதை முயற்சி வேண்டாம்..

கதை பிரசுரம் ஆனால் உங்க பிள்ளையும் பொண்டாட்டியும் சத்தம் போட்டு ஹாலில் கதையை படிப்பது போல் இருக்கணும்..

இதெல்லாம் தனிப்பட்ட முறையில்
என் டிப்ஸ்..வாழ்த்துக்கள்...///


டிஸ்கி :- ஒரு வேளை போட்டி அதிகமானா சிறப்பாக எழுதி ஏதேனும் பரிசு பெறவோ அல்லது உங்கள் சிறுகதை கல்கியில் இடம் பெறும் பாக்யம் அடையவோ அட்வான்ஸ் வாழ்த்துகள்.  

ஆனால் முக்கியமா இந்தப் பத்தாயிரம் பொன்னும் உங்களுக்கே கிடைக்க வாழ்த்துகிறேன். எடுங்க பேனாவை எழுதுங்க. அல்லது வேர்ட்பேடில் டைப் செய்ய ஆரம்பிங்க. :) ஆல் தெ பெஸ்ட் மக்காஸ்.


6 கருத்துகள்:

  1. கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகளுக்கு நன்றி தனபாலன் சகோ :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...