எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 28 ஜூன், 2015

கோடை விடுமுறை

கோடை விடுமுறை

வெக்கையைப் போல் தகிக்கிறது
சின்னவன் இல்லாத படுக்கை
காற்று சுழலாத ஜன்னல்போல்
காலியாகக் கிடக்கிறது தொலைக்காட்சிப் பெட்டி
அவர்களின் எச்சில் சுமந்த தலையணைகள்
பக்கம் ஒன்றாக அநாதையாகக் கிடக்கின்றன.

உழப்புவாரற்று சின்னவனுக்கும் பெரியவனுக்கும்
பிடித்த பொருட்களால் நிரம்பிக் கிடக்கிறது ஃப்ரிட்ஜ்.
மாநகரமே நரகமாக பிஞ்சுவிரல்கள் தழுவிய தோள்களில்
வெறிச்சென்று தீயூட்டுகிறது வெய்யில்
வாழ்வா கனவா இருப்பா மறுப்பாவெனப்
புகைந்தபடி செல்லும் தினப் போராட்டத்தில்
அழைக்கிறது குட்டி முகங்கள் பூத்த கைபேசி.

பிள்ளைகள் சண்டையில் தற்காலிக
பஞ்சாயத்துத் தலைவராக்கி
சட்டென்று கோடை மழை பொழிகிறது
காதுக்குள் பேரன்பு மழலையில்.

8 கருத்துகள்:

  1. பாசமும் நேசமும் மிகுந்த ஏக்கத்துடன் கூடிய ஆக்கம் அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. ரசிக்க வைத்த கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. நன்றி டிடி சகோ

    நன்றி விஜிகே சார்

    நன்றி குமார் சகோ நீண்ட நாட்களுக்குப் பின் பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். விடுமுறை சிறப்பாக இருந்திருக்கும். அனைவரும் நலமா. நன்றி :)

    நன்றி தளிர் சுரேஷ் சகோ

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...