எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

421. அஹா எனக்கு இன்னிக்கு ஃபேஸ்புக் குட்மார்னிங் சொல்லிருக்கு.. மெய்யாலுமே.

////GOOD MORNING, THENAMMAI !
THANKS FOR BEING HERE - ENJOY FACEBOOK TODAY.////
உங்க யாருக்காவது வந்திருக்கா..?!!!!!!

422.கோவை இலக்கிய சந்திப்பில் அகிலா எனது நூலினைப் பற்றி மதிப்புரை செய்தபோதுதான் உனது பெயரைத் தெரிந்தேன். நீ இருக்கும்வரை உனக்கு ஒரேயொரு பிறந்தநாள் வாழ்த்தைத்தான் அளித்திருக்கிறேன் நண்பா.

இருப்பதும் இறப்பதும் மனிதர் இயல்பென்றாலும் கலம்பகம் போல் மரணத்தையும் அறமாகப் பாடிச் சென்றவன் நீ. நாணற்காடன் சரவணன் எழுதி போல் இன்று நீ நாளை நாங்கள் என்றாலும் பூர்த்தி செய்யாத உன்னிரு கவிதைகளைக் காணும் துணிவற்றிருக்கிறோம்.


பெயரெழுத்தில் பூக்களைத் தூவிச் சென்றவன் நீ ஒருவனாகத்தான் இருக்கமுடியும். என்ன சொல்லித் தேற்றுவது நீ விட்டுச் சென்ற மலர்க்கொடியை. ஹ்ம்ம். 


ஜான் சுந்தரின் வார்த்தைகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 
/////வணக்கம்,
கவிஞர் ப.தியாகு அவர்களின் மனைவி திருமதி.மலர்க்கொடி அவர்களது வங்கிக் கணக்கு எண்ணை தியாகுவின் பெற்றோருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்டு பதிவிடுகிறேன். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பயனுள்ள வகையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென விரும்புகிறேன். பெரிய மனதோடு நீங்கள் செய்யப் போகும் உதவிக்காக முன் கூட்டியே உங்கள் திசை நோக்கி கை கூப்புகிறேன். நன்றி!


NAME : MALARKODI
W/O THIYAGARAJ.P
A/C NO : 5480101001056
CANARA BANK- COIMBATORE KOVAIPUDUR BRANCH
IFSC CODE : CNRB0005480
MICR CODE :641015053
முகவரி:
11/20 பழனியப்ப நாயக்கர் தெரு
குளத்துப் பாளையம்
கோயம்புத்தூர்-641042 ///

423. வான்நிலா நிலா அல்ல.. பாடலின் கடைசி வரிகளில் சிவச்சந்திரன் பின்னோக்கிப் படிகளின் மேலே ஏறுவார்..

#பின்னோக்கிப் போதல் இனிமையானது. சமவயதுக்காரர்களுடன் இணைந்து கொள்ளுதலும்..

 424. ஒரு கப் காஃபி.. தெளிவை உண்டாக்குதோ இல்லையோ ஆசுவாசத்தை உண்டாக்குது.. HAVE A NICE DAY MAKKASS.

425. பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம். இதெல்லாம் கூட தோத்துப் போயிடும்போல இருக்கு ஃபேஸ்புக் வைராக்கியத்துக்கு முன்னே. !

அரை நாள் கூட விட்டுட்டு இருக்க முடிலயே. அப்ப அப்ப லாகின்.. ஐ லவ் யூ ஃபேஸ்புக். :) :)

#திட்டணும்னா ரீஜண்டா திட்டுங்கப்பா.

இடமிருந்து வலம். ( நமது மண்வாசம் )

இடமிருந்து வலம் :-
*************************
பாப்பு கைப்பற்றினால்
க்ரையான்ஸால்
ரொப்பி வைப்பாள்.

அம்மா கைவசப்பட்டால்
கோழிக்கால் கீறலாய்ப்
பென்சிலால் குறிப்பார்.

சித்தப்பாவுக்குக் கிடைத்தால்
கிராப்பு வைத்த எழுத்துக்களால்
பூர்த்தி செய்யும்.


செவ்வாய், 24 நவம்பர், 2015

நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.

401.நாம எழுதின கதையைப் படிச்சிட்டு விளக்கம் கேக்குறவங்கள எல்லாம் என்ன செய்யலாம்.

‪#‎கோனார்_நோட்ஸ்_காலத்தவர்கள்‬.

402.ப்லாக் ஒரு காலத்துல ப்ளேபால் க்ரவுண்ட் மாதிரி இருந்துருக்கு.
ஒரே நேரத்துல ஆடுறவங்களையும் பார்க்குறவங்களையும் ரத்தக் கொதிப்பேத்துறமாதிரி.

‪#‎ப்ரபலமானவர்களின்_பழைய_போஸ்ட்ஸ்_அட்ராசிட்டீஸ்‬.

403. கள்ளப் புன்னகைன்னு ஒருத்தரைச் சொல்லும்போதே சொல்றவங்களுக்கு அவர் மேல ஒரு கள்ள ரசிகத்தனமும் கள்ள அபிமானமும் இருக்கது தெரியுது.

404. அடர் கானகம்
ஈரநிலத்தில்
தேன்கூடுடைய
சிதறிச் சரிகிறது
நதியைப் போல நிலவு

வியாழன், 19 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

கோயில்களின் வாயில்களில் கல் யாழி, சிங்கம் யானை அண்டபேரண்டப் பட்சி  போன்ற உருவங்களைப் பார்த்திருப்பீர்கள். காரைக்குடி வீடுகளில் வீட்டின் நிலையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வர்ணமடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாயில் கதவின் இரு பக்கங்களிலும் 3 சிற்பங்கள் வீதம் 6 மற்றும் நிலை உச்சியில் கீழ் நோக்கியவாறு ஒன்று என ஏழு மரச்சிற்பங்கள். இது நிலைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் சூரியப்பலகை என்னும் நிலையில் தெய்வத் திரு உருவங்கள் சமைக்கப்பட்டுள்ளன.

210. பொதுவாக காரைக்குடி நகரத்தார் சைவர்கள் - சிவ கோத்திரம் - (ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் முக்கியப் பண்டிகை - எல்லாப் பிரதோஷமும் ஸ்பெஷல் )  - என்றாலும் 211. முருகனுக்காக  கார்த்திகை விரதமிருந்து சோமவாரத்தை விசேஷமாகக் கொண்டாடுவது & தைப்பூசத்துக்குப் பழனி பாத யாத்திரை செல்வது என இருந்தாலும் , ஒரு சாரார் 212. பெருமாளை ( அரியக்குடி ) வணங்கிப் போற்றி புரட்டாசி மாதம் வீட்டில் ராமாயணம் படித்து ( பாராயணம் செய்து ) பட்டாபிஷேகம் நிகழ்த்தி மகிழ்வார்கள்.

ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கௌமாரம் என்றாலும் வைஷ்ணவமும் வாயிலில் கோலோச்சுகிறது :) !!!

இது இடதுபக்கம் கீழிருக்கும் சிற்பம்.  அன்னம் போன்ற முக அமைப்பு தெரியுது ஆனா இது 213. அண்ட பேரண்டப் பட்சி. எவ்வளவு நுணுக்கம் பாருங்கள் சுற்றிலும் தாமரை அதன் பார்டராக பச்சை ரோஸ், வெளிர் ரோஸ், மஞ்சள் நீலக் கரைகள். அதன் பின் வார்னிஷ் என அடிக்கப்பட்டிருக்கு.

புதன், 18 நவம்பர், 2015

எருக்கஞ்செடியும் வெற்றிலைக்கொடியும்.

381. கற்பக விநாயகர் நகர். இது ஒரு ஏரியா பேர். அங்கே இருக்க வீடுகள்ல எல்லா இடத்திலும் கற்பக விநாயகர். வாசல்ல, கேட்ல, நிலையில ஏன் க்ரில்லுல கூட..  :) 
 
கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம்.


382. கவர்ன்மெண்டை எதிர்பார்க்காம சொந்த செலவுல கான்க்ரீட் ரோடு போட்டுருக்காங்க.

டேமேஜே ஆகாது.. இத வசதி இருக்க எல்லாரும் ஃபாலோ பண்ணலாம். பெட்டிஷன் மேல பெட்டிஷன் போட்டு கெஞ்சிக்கிட்டு இருக்காம.. :)
 
‪#‎முட்டுசந்து_சொகுசு_குடியிருப்புவாசிகள்‬


383.ஏதோ லாரி புகுந்து போற மாதிரி ஒரு சத்தம்..

பதறி ஓரங்கட்டினா..

சுவேகா சாம்ராட்டுனு ஒரு வண்டிதான் போச்சு பக்கத்துல.:)

இதுக்கெல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதா என்ன..


384. பால்கனிங்கிறத நம்ம மக்கள் பழைய சாமான் போடுற இடம்னு வைச்சிருக்காங்க. அதுவும் வீட்டோட அங்கம் இல்லையா.

அழகான ஃப்ளாட்டுகளோட எண்ட்ரன்ஸ்ல இருக்க எல்லா முதல் வீட்டு பால்கனியும் கழிவை குப்பையை அடைச்சுவச்சு இருக்கு . திருஷ்டி பரிகாரமே தேவையில்லை. .


385. வெள்ளைக் கார்டு வைச்சிருக்கவங்களுக்கு ஏன் 5 கிலோ ஜீனி.

#சுகர்_அதிகமாகட்டும்னா :P


386 சட் சட்னு எதுக்கெடுத்தாலும் கோப வயப்படுறவங்க காதல் வயப்படுறவங்களுக்கு கவிதை எழுதுறது தீ மாதிரி.. பொறி பறக்கும்.

திங்கள், 16 நவம்பர், 2015

வெள்ளி, 13 நவம்பர், 2015

சுயத்துக்காகவும்.



5..3. 2004.

*ஒப்பனைகள் ததும்பும் முகம்
பொய்யும் புனைசுருட்டும்
கள்ளத்தனமும் காமமும்
துகிலுரிகையில்
மருண்ட மானாய் மனசு.

*விநோதமான மனோபாவங்கள்
பூகம்பமாய் வெடிக்கையில்
சிதறிச் சரியும்
ஜீவிதமாய் மனசாட்சி.

புதன், 11 நவம்பர், 2015

தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.

361. வயதாக வயதாக சிலரின் ரசனைத் திறன் மட்டரகமாக ( வாசிப்பு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இணையம் ) மாறிவருவது குறித்து பேரதிர்ச்சியாக இருக்கிறது. இந்த மூன்றாந்தர பாடாவதிகளை வெளியிடுபவர்கள் & ரசிப்பவர்கள் என்ன மாதிரியான மனிதர்கள்.?
அவர்களுக்குள்ளே ‪#‎தனி_ஒருவன்‬. ஹ்ம்ம்.

362. வறுமையிலும் கொடுமை
,
,
முதுமையில் தனிமை.

363. வீட்டுக்குள்ளே உக்கார்ந்துகிட்டு வீட்டைத் திருடுவது எப்பிடி
தங்கச்சி வீட்டுக்காரரை ஆள் வைத்து அடிப்பது எப்படி.
சொத்துக்காகவும் பணத்துக்காகவும் கொலை கூடச் செய்யலாம் எனச் சொல்லும், மிக மிக அழகான கொடூர வில்லிகள்
மிடிலப்பா..
சின்னத்திரைக்கும் தணிக்கை அவசியம்.

364. மீதியை நம் எண்ணங்களில் உறையவிட்டு பாதி உரையாடலில் விளையாட ஓடிவிடும் குழந்தைகள் கொள்ளை அழகு :)

திங்கள், 9 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

காரைக்குடி வீடுகளில் இம்மாதிரியான 202. ஓவியப் படங்களைக் காணமுடியும். கிருஷ்ணர் ராதை , குழந்தைகள் அம்மாக்கள், தேவதைகள் கண்ணுக்கு விருந்தாய் பல புகைப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். ஆனா இது 203. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னான கால கட்டத்தில் நிகழ்ந்திருக்கும்னு தோணுது. ஏனெனில் பெரும்பாலான ( கிருஷ்ணர் ராதை, புராண இதிகாச சம்பவங்கள் தவிர ) ஆங்கில மாதுக்களும் அவர்களின் அழகு ( அம்மண ! ) குழந்தைகளும் தோட்டத்தில் அல்லது மரத்தைச் சுற்றி ஆடும் படங்கள்தான்.
மேலே பாருங்க என்னா சேட்டை என்னா சேட்டை. ரெண்டு பயலுக அந்தர் பல்டி அடிக்கிறானுங்க ரெண்டு பேர் கை கோர்த்து தட்டாமாலை சுத்துறானுங்க. வீட்டுல வைச்சு மேய்க்க முடியலன்னு தோட்டத்துக்கோ மரத்தடிக்கோ தள்ளிட்டு வந்துட்டாங்க போல அம்மாக்கள். ஆனா பாருங்க எல்லாம் ஒன்னு ரெண்டுல்ல கிட்டத்தட்ட ஒன்றரை டஜன் குழந்தைகள். !
ஆனா அம்மாக்கள் இருவர்தான். ஒருவர் கைக்குழந்தை தேவதையை முத்தாடுகிறார். அவரின் முழங்காலைப் பற்றி தன்னைக் கொஞ்சமாட்டாரன்னு ஒன்னு பார்த்துட்டு இருக்கு. இன்னொருவரின் உடைக்குள் முகத்தை மூடிப் பொதித்துக் கொள்கிறது குழந்தை. அந்த அம்மா கையில் ஒரு தோல் குடுவை. மரத்தின் பீடத்தின் மேல் நிற்கும் இரண்டு குட்டி வாண்டுகள் கீழே நிற்கும் குழந்தை மேல் தண்ணீரைப் பீச்சி அடிக்கின்றன. ! பூக்களால் கட்டப்பட்ட கயிறை வைத்து ஸ்கிப்பிங்க் போல ஒரு ஆட்டம் வேறு நிகழ்கிறது அந்தப் பக்கம்.

வாதைகள் இருவிதம்:-



வாதைகள் இருவிதம்:-

திரும்பவும் சந்திக்கவே முடியாது
எனத் தெரிந்தும்
தவிர்ப்பதில் ஒரு
தற்காலிக நிம்மதி ஏற்படுகிறது.

நாம் கட்டமைத்த பிம்பங்களை
அப்படியே காப்பாற்றிக் கொள்ளலாம்.
நாமிருவர் சந்திக்க நம் சம்பந்தப்பட்டவர்
வலுக்கட்டாயமாகப் புன்னகைக்க வேண்டாம்

சனி, 7 நவம்பர், 2015

வெட்கச் செடியும் சன்யாசி மரமும். :-


வெட்கச் செடியும் சன்யாசி மரமும். :-

மழைவரும்போல் தெரிகிறது
பாதையோர குறுநீலப் பூக்கள்
பாவாடைப் பச்சையில் விரிகின்றன.

ஆழ்ந்த குளிருக்குள் தோய்கிறது வனம்.
தினத்தீர்வை முடித்து நீலப்பகலைச்
சுருட்டிச்செல்கிறது செங்காந்தள் அந்தி வானம்.

ஏழாண்டுச் சலிப்பு.

நட்பில் இணைந்தார்கள்
செல்லப்பேர் வைக்கும்
மோகத்தில் முகிழ்ந்தார்கள்
தினமொரு பூவாயும்
கணமொரு அணைப்பாயும்
பரிசளித்துக் கொண்டார்கள்
சுற்றிய ஊர் உண்ட உணவு
சுற்றத்தினர் புகைப்படங்களில்
கல்வெட்டாய் செதுக்கிக்கொண்டார்கள் பெயரை

வெள்ளி, 6 நவம்பர், 2015

தேன் பாடல்கள் :- சித்திரையும் சித்திரமும்.

சித்திரப் பாவை என்ற அகிலனின் நாவல் கல்லூரிக் காலத்தில் படித்தது. மிகப் பிடித்த வார்த்தை அது.  கலைஞர் ஒரு அரசியல் கூட்ட சுற்றுப் பயணமொன்றில் ஒரு ஊருக்கு  வர தாமதமான போது “ மாதமோ சித்திரை மணியோ பத்தரை உங்களுக்கோ நித்திரை எனக்கோ யாத்திரை “ என்று கூறிச் சென்றதாக உறவினர் ஒருவர் சொல்லக் கேள்வி.  இந்தச் சித்திரமும் சித்திரையும் மிகப் பிடித்துப் போனதால் அதிலிருந்து எனக்குப் பிடித்த சில பாடல்கள் உங்களுக்காகவும் இங்கே.


சித்திரைச் செவ்வானம். - இதை என் தோழி வஹிதா ரெஹ்மான் பாடி கேக்கணும். பதின்பருவப் பாடல். ஆனா படமாக்கப்பட்டவிதம் சொதப்பல். கவிதாவும் முத்துராமனும். ஆனால் கவிதா பயந்து ஒதுங்கி நம்மையும் பதட்டப்பட வைத்திருக்கிறார் காட்சியமைப்பில். கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எல்லாம் வொர்க்கவுட் ஆகலை போல. :) மாக்ஸி என்னும் உடையணிந்த கவிதாவும் (  ஃபுல் ஃபார்மல்ஸில் ) பாண்ட் ஷர்ட்டில் முத்துராமனும் நம்ம தமிழ் சினிமா டூயட்டின் விநோத ஸ்பெஷல். :) ஒவ்வொரு வரியையும் பிசகாமப் பாடுவோமாக்கும். :)



சித்திரமே சொல்லடி. பி பி ஸ்ரீனிவாசின் தேன் குரலில் மயக்கும் பாடல். ஸ்ரீகாந்தும் நிர்மலாவும். ஆனால் இதிலும் நிர்மலாவின் பயப்பார்வை. ஹ்ம்ம் முதல் சினிமா ஷீட்டிங். கண் என்னவோ திரு திருவென விழிப்பது போல் ஒரு தர்மசங்கடம்.. :) அதைப் பொருட்படுத்தாமல் ஸ்ரீகாந்த் ரொமான்ஸாக பாடியிருப்பார். :)

வியாழன், 5 நவம்பர், 2015

புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் கவிதை ஓவியம் & நம் தோழியில் பெண் மொழி.

புதுகை வலைப்பதிவர் மாநாட்டில் எனது கவிதையும் ஓவியமாக இடம் பெற்றிருந்ததைப் பார்த்து பிரபல வலைப்பதிவர், வலைச்சர ஆசிரியர், நண்பர் தமிழ்வாசி ப்ரகாஷ் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார். அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி நான்காவது வலைப்பதிவர் மாநாடு.
 இக்கவிதையை நிலைக்கதவுக்குமேல் பொருத்தி இருந்த விதம் ரசிக்கத்தக்கது. நிலையில் நிலையான இடம் கொடுத்த நட்பூக்களுக்கு நன்றியும் அன்பும். :)


மேலும் நம் தோழியின் பெண் மொழிப் பக்கத்திலும் எனது முகநூல் நிலைத்தகவல் வெளியாகி உள்ளது. அதைப் புகைப்படம் எடுத்து அனுப்பிய நல் உள்ளத்துக்கு நன்றி.  நன்றி நம் தோழி.



புதன், 4 நவம்பர், 2015

திரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’

ஓர் கவிதை நூலுக்கான 
புகழுரை

சாதனை அரசி திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களைப்பற்றி பதிவுலகில் அறியாதவர்களே யாரும் இருக்க முடியாது. 

இந்த ஆண்டு அவர்கள் ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினில் புதிதாக வெளியிட்டுள்ள கவிதை நூலை முழுவதுமாகப் படிக்கும் வாய்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை (30.10.2015) எனக்குக் கிடைத்தது. 

ஏற்கனவே இவர்கள் மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் ’அன்ன பட்சி’ என்பதும் ஒன்றாகும். 

அந்த ‘அன்ன பட்சி’யே தன்னுடன் இந்தப் ‘பெண் பூக்கள்’ என்ற புதிய நூலை என்னிடம் கொண்டுவந்து சேர்த்த பெருமையைப் பெற்றுள்ளது.

 
 


பூக்களைப் பார்த்தாலே பெண் நினைவும், பெண்ணைப்பார்த்தாலே பூக்களின் நினைவும் வருவது இயற்கையே. இங்கு இந்த நூலுக்கு அவர்கள் வைத்துள்ள தலைப்போ ‘பெண் பூக்கள்’ :)
மீதியைத் தொடர்ந்து கீழே கொடுத்திருக்கும் இணைப்பில் திரு. கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் படிக்கவும். :) 
  
மிக அருமையான மதிப்புரைக்கு ( புகழுரைக்கு ) மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் கோபால் சார். வாழ்க வளமுடன் :) 

டிஸ்கி :-


கோபால் சாரின் பின்னூட்டம் ஒன்றில். 


///தமிழ் மொழியின் இலக்கிய இலக்கண எழுத்துநடைகளைப் புறந்தள்ளிவிட்டு, பேச்சு வழக்கிலேயே அனைத்துக் கவிதைகளையும் படைத்துள்ளதை நான் மிகவும் ரஸித்தேன்.

முறையான படிப்பறிவே இல்லாத பாமரனுக்கும் மிகச்சுலபமாகப் புரியக்கூடியதாக, ஆத்மார்த்தமாக அவை அமைந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கதையோ, கவிதையோ, கட்டுரையோ .... எந்த ஒரு ஆக்கமும் மிகச் சாதாரணமானவர்களுக்கும், மிகச்சுலபமாகப் புரியும் வண்ணம் பேச்சுத்தமிழிலேயே எழுதப்பட வேண்டும் என்பதே என் விருப்பமும் ஆகும்.

அவ்வாறான எழுத்துக்கள் மட்டுமே வாசகர்களிடம் நல்லதொரு வரவேற்பினை பெறக்கூடும். அதற்காகத் தங்களுக்கு என் கூடுதல் நல்வாழ்த்துகள்.///


***********************************************


மிக மிகப் பணிவான வணக்கங்களும் நன்றியும் கோபால் சார்.

தங்கள் வலைத்தளத்தில் என் நூலுக்கான புகழுரையை வெளியிட்டு அதைப் பலரும் அறியச் செய்தமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

நூல் வந்ததே தெரியாமல் இருந்தது. உங்கள் வலைப்பதிவின் மூலம் அது பலரையும் சென்று அடைந்து அதற்கான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்

பெண்பூக்களை வாசித்து முழுமையான அழகான விமர்சனம் தந்தோடு மட்டுமல்ல. அதன் பின்னும் என்னைப் பற்றியும் என் நூல்களைப் பற்றியும் விவரித்துக் கூறி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்ன நன்றிக்கடன் சொல்லித் தீர்த்துவிட முடியும்.

பதில் அன்பும் நன்றியும் வணக்கங்களுமே எனது தற்போதைய நிலைப்பாடு. தொடர்ந்து வலைப்பூவில் இயங்கி வரவும், புத்தகங்கள் வெளியிடவும் உங்கள் பதிவு எனக்கு ஊக்கமூட்டுகிறது.

மீண்டும் மனமார்ந்த நன்றிகள் கோபு சார். :)


விமர்சனத்தைத் தொடர்ந்து படிக்க..

http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html

***************************************************************

என்னுடைய கவிதைத் தொகுதியான பெண் பூக்கள்


My books available at

Discovery Book Palace
New Book Land
Aashiq book centre, vadapalani
Maran book centre, kodambakkam

சென்னை கே கே நகரில் இருக்கும் டிஸ்கவரி புத்தக நிலையம்,

ந்யூ புக் லேண்ட்,

ஆஷிக் புக் செண்டர், வடபழனி

மாறன் புக் செண்டர், கோடம்பாக்கம்

Pen Pookkal available at

Chennai
New Book land
maran book centre
Aashiq book centre
Discovery book palace
UG book stall
Panuval book shop
Kanthalagam book shop

Madurai
Malligai Book centre
Bharathi Puththagaalayam


Kanchipuram.
Pathi book shop


NCBH, Vellore
Book Station, Vellore. 
எனது நாலாவது நூல் “பெண் பூக்கள்  கவிதைத் தொகுதி 

சென்னையில்

நியூ புக் லேண்ட்
மாறன் புக் செண்டர்
ஆஷிக் புக் செண்டர்
டிஸ்கவரி புக் பேலஸ்
யூஜி புக் ஸ்டால்
பனுவல் புக் ஷாப்
காந்தளகம் புக் ஷாப் 

மதுரையில்

மல்லிகை புக் செண்டர்
பாரதி புத்தகாலயம்


காஞ்சிபுரம் 
பதி புத்தக நிலையம்.

வேலூர்
என்சிபிஹெச்
புக் ஸ்டேஷன்.
 
ஆகியவற்றில் கிடைக்கும். 


--- என்றும்  உங்கள் பேராதரவை வேண்டுகிறேன் மக்காஸ்  :) 

 அன்பும் நன்றியும். தேனம்மைலெக்ஷ்மணன்.

திங்கள், 2 நவம்பர், 2015

இருட்டுறதுக்குள்.



7.5.86.

34.*இருட்டுவதற்குள்
படித்திட வேண்டும்.

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

191. இது நிலைக்கதவில் உள்ள அமைப்பு. கைப்பிடி பாருங்கள். கோயில் கதவு போலக் கதவும் முரட்டுக் கைப்பிடியும். வார்ப்பிரும்பா பித்தளையா தெரியவில்லை. ஆனா  பாலிஷ் செய்தா மஞ்சள் கலரில் தங்க வண்ணத்தில் ( பெயிண்ட் :) ஜொலிக்கும். அதில் கோட்டைகளில் இருப்பது போன்ற கெட்டி குமிழ்கள். இது போன்ற அமைப்பை கோல்கொண்டா போன்ற கோட்டைகளில் கோட்டைக் கதவுகளில் பார்த்திருக்கிறேன். யானை வந்து முட்டினால் காயம் படும். அதுக்காக அங்கே அமைக்கப்பட்டிருக்கும். இங்கே வீடுகள் கோட்டை போல இருப்பதால் இம்மாதிரி அமைத்திருக்கலாம். ஆனால் இது முகப்பின் உள்ளே உள்ள நிலைக்கதவு. பட்டாலைக்குச் செல்லும் நிலைவாயில்.
இது வலது பக்க கொண்டி. சாவியின் துவாரமும் பெரிதாக இருக்கு. சாவிகள் எல்லாம் 192. கோயில் சாவிகள் போல இரண்டு கைகளாலும் பிடித்துத் திறக்கணும். ஊருக்கு வந்துட்டுப் போனா ரெண்டு நாளைக்கு நடு விரலும் மோதிர விரலும் சேருமிடம் வலிக்கும். கதவைத் திறந்து பூட்டி கன்னிப் போயிடும். :)  அந்தப் பித்தளை கொண்டி இருக்கும் இடத்தில் எத்தனை அடுக்காய் மரச் சதுரங்கள். அதன் கீழேயே எத்தனை அடுக்காய் சதுரங்கள். இவற்றை எப்படி சிதைவடையாமல் செதுக்கினார்கள் என ஆச்சர்யப்பட்டதுண்டு. !

ஞாயிறு, 1 நவம்பர், 2015

உணர்வுகள் :-



உணர்வுகள் :-

*இனம் தெரியாத்
தாவரங்கள்
வேர் பதிக்கும்.
மண்புழுவாய்
யதார்த்தம் கிளறும்.

பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.

N.Rathna Vel added 2 new photos — with Thenammai Lakshmanan.

நான் படித்த புத்தகம்.

பெண் பூக்கள்
(கவிதைகள்)

ஆசிரியர்: திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் (honeylaksh@gmail.com)

புத்தகம் கிடைக்குமிடம்:
புதிய தரிசனம் பதிப்பகம்,
10/11, அப்துல் ரசாக் 2வது தெரு, சைதாப்பேட்டை,
சென்னை – 600 015.
போன்: 044 42147828 - மின்னஞ்சல்: puthiyadharisanam@gmail.com
வலைத்தளம்: www.puthiyadarisanam.com

பக்கங்கள்: 54 - விலை ரூ.60

புத்தகத்தைப் பற்றி:

இந்த புத்தகம் எங்கள் மூத்த பதிவர் , முகநூல் நண்பர்
திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின்
4வது வெற்றிப் படைப்பு.

Related Posts Plugin for WordPress, Blogger...