எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 ஜனவரி, 2016

நித்தமும் கவிதை கன்னடத்தில்.

கேட்ட வரங்களைக் கொடுக்கும்
கோயில்வாசல்களில் நித்தமும்
நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்

முகநூலில் நான் பதிந்த இந்தக் கவிதையை அன்பு சகோதரர் காளிமுத்து நல்லதம்பி அவர்கள் கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளார்கள். அவை

http://honeylaksh.blogspot.in/2015/02/blog-post_18.html


http://honeylaksh.blogspot.in/2015/07/blog-post_13.html

நன்றி சகோ. பெங்களூரில் வசித்துவரும் இவர் முன்பே என்னுடைய ஐந்து கவிதைகளை மொழி பெயர்ப்பு செய்திருக்கின்றார்கள். கன்னடக் கவிஞர் பி லங்கேஷ் அவர்களின்  கவிதைகளையும் மொட்டு விரியும் சப்தம் என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்து கவிதைத் தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கின்றார்கள். நாஞ்சில் நாடனின் கதை ஒன்றையும் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.


ಕೇಳಿದ ವರಗಳ ಕೊಡುವ
ಗುಡಿಯ ಬಾಗಿಲಲಿ ನಿತ್ಯ
ತುಂಬದ ಬೊಗಸಯಲೆ ಬಿಕ್ಷುಕರು




நன்றி காளிமுத்து நல்லதம்பி சகோ. :)

என் கவிதைகளும் மொட்டு விரியும் சப்தமும் இங்கே.

மொட்டு விரியும் சத்தம்

நீரின் பயணம்.

வெறுத்தலின் முடிவில்

கடவுளை நேசித்தல்.

கன்னடப் பத்ரிக்கை ஸகியில் எனது கவிதை ”நீரின் பயணம்.  ”


5 கருத்துகள்:

  1. //கேட்ட வரங்களைக் கொடுக்கும்
    கோயில்வாசல்களில் நித்தமும்
    நிறைவடையாமல் பிச்சைக்காரர்கள்//

    மிகவும் யதார்த்தமான வரிகள் !

    அவர்களுக்கும் தினமும் பகவான் இவ்வாறு படியளந்து கொண்டுதான் இருக்கிறார் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. கன்னடக்காரர்கள் நமக்குக் காவிரி தண்ணீரைத்தர அவ்வப்போது மறுத்துவந்தாலும், இங்குள்ள தேன் மொழிக்கவிதைகளை உரிமையுடன் எடுத்துக்கொண்டு, அங்குள்ள பத்திரிகைகளில் தேனாறாக ஓடவிட்டுள்ளது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ஹனி மேடத்தின் ஆக்கங்கள் இந்திய மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட வேண்டும் என்பது என் அவாவாகும்.

    அன்புடன் கோபால்

    பதிலளிநீக்கு
  3. நித்தம் நித்தம் நெல்லிச்சோறு .... நெய் மணக்கும் கத்திரிக்காய் ....

    என்ற பாட்டுபோலவே தலைப்பு ‘நித்தமும்’ என்று கொடுத்துள்ளதுடன், அடுத்த 10 நாட்களில் மகனுக்கு திருமணம் நடக்க இருப்பினும், நித்தம் நித்தம் பல பதிவுகளை வெளியிட்டு அசத்தியும் வருகிறீர்கள்.

    இவ்வாறான தங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றியோ நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. நித்தமும் கடவுள் படியளக்கிறார் என்பது உண்மைதான் விஜிகே சார்

    அஹா உலக மொழிகள் அனைத்திலும் எனது ஆக்கத்தின் மொழியாக்கம் - ஆசிக்கு நன்றிகள் சார் :)

    சோர்வில்லாமல் முடிந்தவரை செயல்படணும் என்பது எனது அவா சார் :)

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...