எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஏப்ரல், 2016

மாயக் குடுவையும் மனமீனும்.

721. காதலர்களின் கரங்கள் பிரிவதேயில்லை
அவர்களின் காந்தப் பார்வைaும்.
நூற்றாண்டுகளாய் நிலைத்தே இருக்கின்றன
கண்காட்சியில் கண்ட ஒரு ஓவியத்தில்.

722. திரிவேணி :-

ஒரு பூவைபோல
உன்னைப் பிரிகின்றேன்.
உன் காலடிமண்ணை முத்தமிட்டபடி.

கம்பீரச் செடியாய் நின்றிருக்கிறாய்
உதிர்ந்த கண்ணிகள்
எண்ணிக் கொண்டு.
.
உன்னடியைச் சுற்றிலும்
என்னைப் போன்ற பூக்கள் கண்டு
நானும் உரமாகிறேன்.

அடுத்து ஒரு பூஜென்மமிருந்தால்
சந்திப்போமெனச்செல்கின்றன
மகரந்தச்சேர்க்கை வண்டுகள்.


723. எத்தகு விதைகளும்
முளைப்பதில்லை
ஒரு மரத்தை வெட்டிய இடத்தில்.

724. மொழிகளை விட்டுப் பிரிவது
எளிதானதல்ல
அதைவிடத் துயரம்
மொழிகளற்ற
விழிகளைப் பிரிவது.

725. விடிகிறது ஒரு காலை
பூக்கின்றன உன் நினைவுகள்;
ஒளிவட்டமிடுகிறது மகிழ்ச்சி
தலையைச்சுற்றி வெய்யிலைப் போல.

சாட்டர்டே போஸ்ட். கம்பியில்லா மின்சாரமும் மண்பானை ஸ்பீக்கரும், காரைக்குடி விஞ்ஞானி பூபதிராஜ்.

    காரைக்குடியில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி அசத்தும் திரு பூபதிராஜ் சகோ அவர்கள் எனது முகநூல் நண்பர். இவர் முன்னாள் ராணுவ வீரர்.
    இவரது பேட்டி புதிய தலைமுறையில் வில்லேஜ் விஞ்ஞானி என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.  மிக எக்கச்சக்கமான விஞ்ஞானக்  கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி வருகிறார். !இவர் கண்டுபிடித்த பாப்பாவுக்கு பேபி கேர் எலக்ட்ரானிக் பேட் சூப்பர். !
///இது என்மகளுக்காகஉருவாக்கினேன்பிறகு பள்ளிமாணவர்களுக்குப்ரொஜெக்டாகசெய்துதந்துகொண்டுஇருக்கேன் பல வருடங்களாக பரிசுகளை வாங்கிட்டுஇருக்கு சகோ///
 
நிறையப் பத்திரிக்கை வானொலி தொலைக்காட்சி இவற்றில் இவருடைய பேட்டிகள் வந்து இருக்கு 

இவரோட  நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் YOUTUBE இல் "boopathiraj89" என்ற ID யில் உள்ளது

அவரிடம் எனது வலைத்தளத்துக்காக அவரது மின் கண்டுபிடிப்புகள் பற்றி அனுப்பும்படிக் கேட்டேன்.

மதிப்பிற்குரிய சகோ
உங்களிடம் ஒரு கோரிக்கை
என்னுடைய வலைப்பதிவில் honeylaksh.blogspot.in
ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சாட்டர்டே போஸ்ட் என்ற பதிவினை வெளியிடுகிறேன்
அதற்கு முகநூல் நண்பர்களிடம் ஒரு கேள்விகேட்டு கருத்து வாங்கி புகைப்படத்துடன் வெளியிடுகின்றேன்.
எனக்கு உங்கள் மின் கண்டுபிடிப்புகள் பற்றி எனது ப்லாகுக்காக எழுதித்தர முடியுமா
அது சம்பந்தமான புகைப்படங்கள் வேண்டும்
உங்கள் படமும் ஒன்று வேண்டும்
இப்போது அரசுக்கு யோசனையாக சிலது எழுதி இருந்தீங்க பார்த்தேன் அதையும் அனுப்புங்க ப்ளீஸ்
நாளைக்கு வெளியிடத் தோதா இருந்தா வெளியிட்டு லிங்க் அனுப்புறேன்
அன்பும் நன்றியும் தேனம்மைலெக்ஷ்மணன்
மாதிரிக்கு சில அனுப்புறேன். என் முக நூல் நண்பர்களிடம் எடுத்த பேட்டியை அவர்களின் புகைப்படத்துக்கு அருகில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் படிக்கலாம்.


வணக்கம் சகோ நிறைய உருவாக்கங்கள் இருக்கு என்னோடwallலில் அதைபகிர்ந்துள்ளேன் அதேபோல்என்னுடைய techknowledgeindia குரூப் பேஜில்அதிகமா பதிவிட்டு இருக்கேன் உங்களைஅதில் இணைத்து விடுகிறேன் தேவையானவைகளை எடுத்துகோங்க தேவையானவைகளை கேளுங்கதருகிறேன்.

கடந்த மாதம் புதியதலைமுறை தொலைகாட்சிக்கு சூரியஒளி மின்சாரம் பற்றிஇரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தினேன்அதுஇன்று தமிழகம்முழுதும் ஒருவிழிப்புணர்வைஏற்படுத்திகொண்டுள்ளது மற்றும்LEDபல்புகள்பயன்படுத்துவது பற்றியும் பாடம் நடத்தினேன் இது நேரலையாக ஒளி பரப்பிகொண்டுஇருந்தார்கள்


இது என்னுடைய ராணுவ யூனிட்டில் நான்நடத்திய அறிவியல் கண்காட்சி இதில் ராணுவதளபதி மற்றும் மத்திய ராணுவ அமைச்சர்பள்ளம் ராஜு கலந்துகொண்டனர். இன்னும் நிறைய இருக்கு சகோ முடிந்த அளவு எழுதுறேன் மற்றும் மின்சார சேமிப்பு முறைகளையும் எழுதுறேன்.

புதன், 27 ஏப்ரல், 2016

காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.


காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.

301. பெண் பார்த்தல் :- இது ஒரு சம்பிரதாயம் மட்டுமே. முக்கால் வாசி இது கோயில், வயது, படிப்பு, தகுதி எல்லாம் முன்பே பார்த்து முடிவு செய்யப்பட்டு மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்படுவது. இது சில சமயம் கோயில்களிலும் சில சமயம் உறவினர் வீடுகளிலும் ராசியான இல்லங்களிலும் நிகழ்வதுண்டு.

302. திருவிளக்கு ஏற்றுவது. :- இது பெரும்பாலும் அப்பத்தா அல்லது அய்த்தைகள் ஏற்றுவார்கள். மாப்பிள்ளை & பெண் இருவர் வீடுகளிலும். விசேஷத்தின் ஆரம்பத்தைக் குறிப்பது. 

303. கூடி ஆக்கி உண்ணுதல்: -  304. தாய பிள்ளைகள், பங்காளிகள்  அனைவரும் திருமணத்தன்று முதல் நாள் காலையிலேயே வந்திருந்து கலந்து கொள்வதைக் கூடி ஆக்கி உண்பது என்பார்கள்.



சனி, 23 ஏப்ரல், 2016

சாட்டர்டே போஸ்ட். பெர்மா கல்சரும் கீர்த்தனா ஆரண்யா அல்லியும்


5000 சதுர அடி நிலப்பரப்பு,
பெர்மாகல்ச்சர் சிஸ்டம் அமைக்க செலவு : ரூ 50,000
தின வருமானம்: 250 ரூ.

இப்பிடி ஒரு செய்தியை முகநூலில் என் தோழி ஆரண்யா அல்லியின் பக்கத்தில் பார்த்தேன். ஆர்கானிக் காய்கறி தெரியும் அதென்ன பெர்மா கல்சர் என்ற யோசனையோடு அவரிடம் ஆர்கானிக் ஃபார்மிங் பற்றியும் பெர்மா கல்சர் பற்றியும் விசாரித்தேன்.

மிக மென்மையான சுபாவம் என்று ஒருவரைப் பார்த்தவுடன் கணித்துவிடலாம் என்றால் அதில் ஆரண்யாதான் முதலிடம் வகிப்பார். நிறைய தோட்டம் பற்றியும் வீட்டில் விளைந்த காய்கள் பற்றியும் புகைப்படங்களாக ஹோம் பேஜில் வரும். நிறைய எம்ப்ராய்டரி துணி வகைகள் , புடவை ரகங்களும் அணி வகுக்கும். இது பற்றி எல்லாம் ஒரு நாளில் அவரிடம் இன்பாக்ஸில் விசாரித்திருந்தேன்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

ய்ன வும் ம்ட வும்.



ய்ன வும் ம்ட வும்.

இதென்ன ய்ன ம்ட என்கின்றீர்களா. இது ஒரு பாஷை. வாலைக்குமரிப் பருவத்தில் இருந்தபோது அறிமுகமானது. இதை உருவாக்கியவர் யார்னு தெரியாது. ஆனா நானும் முத்தாச்சியும் ( பெரியம்மா பெண் ) முகப்பின் ஜன்னலில் அமர்ந்துகொண்டு கதைபேசும்போது உபயோகமான மொழி.

வெளியில் வெய்யில் தங்கவண்ணம் பூச சிவன் கோயில் கோபுரம் ஜொலிக்கும். எதிரில் முனியன் ஆசாரி வீட்டிலிருக்கும் தூங்குமூஞ்சி மரமும் எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும். சத்யா பொட்டலுக்கு சந்தைக்குக் குறுக்கு வழியாகச் செல்பவர்கள், சிவன் கோயில் ஊரணியில் குளித்துவிட்டு ஈரச் சேலையைச் சுற்றித் தோளிலேயே ஈரத்துணிகளைப் போட்டுக்கொண்டு போபவர்கள், தெருப் பைப்பில் தண்ணீர் பிடிப்பவர்கள், சைக்கிள் பெல்லை ஏர் ஹாரன் போல அடித்து ஓட்டும் வாண்டுகள் என களை கட்டி இருக்கும் தெருவைப் பார்த்தபடி ஜன்னல் கம்பி பற்றி ஒஞ்சரித்து அமர்ந்து பேசிக்கொண்டிருப்போம்.

புதன், 20 ஏப்ரல், 2016

போதையும் போதிமரமும்.

701. sometimes we are also behaving like hyper aggressive

702.ஏப்ரல் முதல் தேதியப் பத்தி facebooklayum.. சின்னப் பசங்க எல்லாம் நம்மள யாராச்சும் ஏமாத்திடுவாங்களோன்னு ரொம்ப கவலைப்படுறமாதிரித் தெரியுது.

703. தன்னுடைய ஒரு புகைப்படத்தைக் கூடப் போடாதவர்களின் நட்பு அழைப்பை ஏற்க ஏனோ தயக்கமாக இருக்கிறது...

704. கனவு காண நமக்கெல்லாம் அதிகாரமில்லை பிட்டியா..

--- பாதையோரப் பூக்களில் வாஸந்தி..

705. adikkadi thoonuthu.. koncha naal kanama poidalama.. everything is boring..

706. முன்னெல்லாம் ப்லாக் போஸ்டை ரீஷேர் பண்ணா இணைப்பைப் பகிர்கன்னு வரும். இப்ப தொடுப்பைப் பகிர்க ந்னு வருதே. ப்லாக் மேல என்ன கோபம். யார் இப்பிடி ஃபேஸ்புக்குக்கு தப்புத் தப்பா மொழிபெயர்த்து அனுப்பியது.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

தென் தமிழ்நாட்டுச் சமையல் விருந்துகளில் செட்டிநாட்டுக் கைப்பக்குவத்துக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. தஞ்சாவூர் தாட்டிலையில் கூட்டுக்கறி, துவட்டல், பச்சடி, மண்டி, மசியல், பிரட்டல், சிப்ஸ், கட்லெட், ஊறுகாய், அப்பளம், கலவை சாதம், அக்கார அடிசில், புலவு, தயிர்ப்பச்சடி, இனிப்பு, முக்கனிகள், கெட்டிக் குழம்பு , சாம்பார், இளங்குழம்பு/தண்ணிக் குழம்பு, சூப், மோர்க்குழம்பு, ரசம், தயிர், பாயாசம் ( பழப் பாயாசம்/பாதாம் கீர் ) என மதியச் சாப்பாடு ப்ரமாதமாக இருக்கும்.

விருந்து மட்டுமல்ல விருந்தோம்பலிலும் செட்டி நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள். வீட்டின் வாயிலில் வரவேற்பதில் இருந்து முறைகளில் சடங்குகள் செய்ய விட்டு விடாமல் அழைப்பதில் இருந்து உணவருந்தும் இடத்தில் ஒவ்வொருவரையும் விசாரித்து ஒவ்வொரு பதார்த்தத்தையும் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்குப் பிரியத்தோடு பரிமாறுவார்கள். இதற்குப் 301. பந்தி விசாரணை என்று பெயர்.

முதலில் சில ஸ்பெஷல் பலகாரங்களைப் பார்ப்போம்.

302. பாதாம் அல்வா. இனிப்புகளின் அரசன். இன்னும் இங்கே தம்ஃப்ரூட் அல்வா, காரட் அல்வா எல்லாம் ஃபேமஸ்.

303. கல்கண்டு வடை. தீபாவளிப் பலகாரம்.
304. கந்தரப்பம். திருமண வைபவத்தின் முதல் நாள் இரவில் கட்டாயம் இடம் பெறும் இனிப்பு.

சனி, 16 ஏப்ரல், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். புஜ்ஜுவும் பூந்தோட்டமும் - தேன்மொழி ராஜேந்திரன்.

முகநூலில் என் மதிப்பிற்குரிய தோழி தேன்மொழி ராஜேந்திரன். இவங்க ஒரு டாக்டர். கோவையைச் சேர்ந்தவர். இவரோட தோட்டம், பாலன்ஸ்ட் டயட், பெட் அனிமல் வளர்ப்பு  ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்து நான் இவங்க ஃபேன் ஆயிட்டேன். ( கோடைக்கு நெம்பத் தேவைங்கிறீங்களா :) 

அவங்ககிட்ட சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி கேட்டு அத அப்போ அப்போ ஓடிப் போயிக் கேட்டுப் பதில வாங்குறதுக்குள்ள ஒம்பாடு எம்பாடு ஆயிப் போச்சு. அத ஏன் போன வாரமே வெளியிடலன்னு கேக்குறீங்களா. இன்னும் வேற எழுத சொல்லி அம்மிணிகிட்ட கேட்டிந்தேன். ஆனா அவங்க சம்மர் டூர் போயிட்டாங்க. பின்ன இருக்கதையே போட்டுட்டேன். 

இந்த நகைச்சுவைத் தென்றல், புயல், அரசி எல்லாம் சொல்றாங்கள்ல அதுமாதிரி இவங்க எழுத்துக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம். எல்லாத்தையுமே சேர்த்திக் கூடக்கொடுக்கலாம். அவ்ளோ சுவாரசியம்.

/////இது பிஃப் - 17,

அன்பின் தேனு,

நீங்க டாக்டர்னு தெரியும்.

நான் என் ப்லாகில் சாட்டர்டே ஜாலிகார்னர்னு ஒரு போஸ்ட் போடுறேன். அதுக்கு நீங்க ஏதாச்சும் எழுதித் தரணும்,பேலன்ஸ்ட் டயட், உங்க தோட்டம், உங்க அன்பு மகள் பத்தி இல்ல மாப்பிள்ளைபத்தி ஏதும் உங்களுக்குப் பிடிச்ச டாபிக்ல ஒரு 4 பாராலேருந்து 15 பாராவரை இருக்கலாம். உங்க புகைப்படம் ஒண்ணும் ஆர்ட்டிகிள் சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒண்ணும் வேணும்

ப்ளீஸ் அனுப்புங்க.

Thenmozhi Rajendran
Ok.. தேனம்மா

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 7,8. ( நாடகம் ).



காட்சி – 7.

[ பனகல் பார்க்கில் ஒரு பூவரசமரத்தின் பின்புறம்.]

செந்தில்நாதன் :- வள்ளிநாயகி ! என்னைக் காதலிக்கின்றேனென்று நீ சொன்னாயே ? அது உண்மையா ?

வள்ளிநாயகி :- ஆமாம். ! நீங்கள் காம்பவுண்டுச் சுவரில் ஏறிய வீரத்தனத்தைப் பார்த்ததும் என் மனம் உங்கள்பால் நாடிவிட்டது. அந்த ஆசிரியரை நீங்கள் படுத்திய பாடு. ! அவர் உங்களை எவ்வளவு பணிவுடன் வணங்கினார் என்பதை நினைத்துப் பார்த்தாலே உங்களின் மதிப்பு புரிந்தது. மேலும் இரண்டு காலும் வீங்கிய நிலையில் நீங்கள் என் அப்பாவிடமும், அவர் திட்டிய போதிலும் மரியாதையாகப் பதிலளித்த உங்கள் குணம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.  ( என்கின்ற பாணியிலேயே வள்ளி பேசிக்கொண்டே போக இனிமேலும் கேட்டுக் கொண்டிருந்தால் தான் தலைமயிரைப் பிய்த்துக் கொள்ளப் போய்விடுவோம் என்று பயந்து போனான். )

செந்தில் நாதன். : - ஆமாம் .. ஆமாம். ( எனப் பதற்றத்தில் கூற ) 

[ பக்கத்தில் இருந்த புதரிலிருந்து அருணாசலம் வெளிப்பட்டு ]

அருணாசலம் :- ( கோபாசலமாக )  ஏண்டா டேய் ! என்ன ஆலுமா ஆலுமான்னு ஆமாஞ்சாமி போடறே !. கால் வீக்கம் கொறையறதுக்குள்ள என்ன காதல் வசனம் வேண்டிக்கிடக்குங்குறேன். உன்னை உதைச்சா..

[ என்று கூறி அவனைப் பிடிப்பதற்குள் அவன் விம்மிப் புடைத்த வீரக்கால்களுடன் பாக்கின் சுவரைத் தாண்டுகின்றான்.

அருணாசலம் :- ( கருணாசலமாக ). ஏம்மா, இவனைப் போய்க் காதலிக்கிறியே ! சரியான கோழைப்பய ! அன்னக் காவடிம்மா இவன் ! ( என்க )

வள்ளிநாயகி :- ( நாணத்துடன் ) போங்கப்பா ! பெரிய வீரராக்கும் அவர் ! அவரைப் போல இந்தக் காம்பவுண்டுச் சுவரைத் தாண்டுங்களேன் பார்ப்போம். !. அவர் நீங்க பெரியவர்னு ரொம்ப மரியாதை குடுக்கிறார்பா. !

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

எங்கள் ப்லாகில் கேட்ட கதை. சொர்க்கத்தின் எல்லை நரகம்.


அன்பின் ஸ்ரீராம்,
தேனம்மை எழுதிக் கொண்டது.

இத்துடன் நீங்க கேட்ட கதையை அனுப்பி இருக்கேன்.

இது குழந்தைத் தொழிலாளி பத்தின கதை என்பதால் கல்லூரிக் கட்டத்தில் எழுதினாலும் மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். ஒரு காலகட்டத்தில் அதாவது நாங்க எல்லாம் சின்னக் குழந்தைகளாக இருந்தபோது வீடுகளில் குழந்தைகளை வைத்துக் கொள்ள என்று குட்டிகள் எனப்படும் வேலைக்காரச் சிறுமிகளை வைத்திருப்பார்கள். அந்தக் குழந்தைகள் பெரும்பாலும் கிராமத்திலிருந்து உணவுக்காகவும் உறையுளுக்காகவும் மேலும் தாய் தந்தையருக்கு பணம் ஈட்டும் கருவியாகவும் இம்மாதிரி இருக்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எல்லாரும் அப்படி அல்ல என்றாலும் ஓரிரு இடங்களில் அப்படித்தான். அவர்கள் வீடுகளில் குழந்தைகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இந்த மாதிரி சொன்ன வேலைகளைச் செய்யும் ( பாப்பாவைப் பாத்துக் கொள்வது, பாத்திரம் தேய்ப்பது, துணி மடிப்பது, அரைத்துக்  கொடுப்பது, கடை கண்ணிக்குப் போய் வருவது,காய் நறுக்குவது வெங்காயம் உறிப்பது, மாவாட்டுவது - பெரும்பகுதி பாப்பாவைப் பார்த்துக் கொண்டு அதன் துணிமணிகளைத் துவைப்பது ) போன்ற ஏவல் வேலைகளுக்கு வைக்கப்பட்டிருந்திருக்கின்றார்கள்.
சிலர் இல்லங்களில் பெற்றோருக்கு மாதாமாதம் சம்பளமாக ஒரு தொகை கொடுத்தபின்னும் இம்மாதிரிக் குழந்தைகளை தன் குழந்தைகள் போலவீட்டாரே படிக்க வைத்து வேலைக்குச் சேர்த்துத் திருமணமும் செய்துவைப்பதுண்டு.
ஒரிரு வீடுகளில் அவர்கள் நவீன அடிமைகள் போல நடத்தப்பட்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன். அதிக வேலை இல்லாவிட்டாலும் எழுவதிலிருந்து துயில்வது வரை சிறு சிறு வேலைகள் இருந்துகொண்டே இருக்கும். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவது, பூப்பறித்துத் தொடுப்பது, விருந்தினர்களுக்கு காஃபி ஜூஸ் கொடுப்பது, இன்னபிறவென்று.

எனவே எனது கல்லூரிக் காலச் சிறுகதையை குழந்தைத் தொழிலாளிகளான சிறுமிகளின் ஆசையை ( இதில் கல்வி கற்க ஆசைப்பட்ட சிறுமிகள் சிலரே ) இதில் பதிவு செய்துள்ளேன். சிறுவயதுச் சம்பவங்கள், மனித மன விநோதங்கள், கல்லூரிக் காலப் பதிவுகள், வாழ்வியல் பதிவுகள், நவீன த்ரோகங்கள், குழந்தை மேலான பாலியல் வன்முறை, குடும்பக் கட்டமைப்புக்கான விவாகம் என்னும் விஷயத்தில் எழும் ப்ரதி பேதம் எல்லாம் என் கதைகளில் இருந்தாலும் எனக்கு இது முக்கியமான கதை எனத் தோன்றியதால் அனுப்பி இருக்கிறேன்.

எங்கள் ப்லாகில் வெளியிடுவது குறித்து மகிழ்வும் அன்பும் நன்றியும்
தேனம்மைலெக்ஷ்மணன்.


சனி, 9 ஏப்ரல், 2016

மும்பையில் நகர விடுதி.

முகநூல் நண்பர் திரு. சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் மும்பையில் (Mulund West - ஜான்சன் & ஜான்சன் பக்கம் ) நகர விடுதி கட்டப்படப் போவதால் அதற்கான உதவிகளைச் செய்ய அனைவரிடமும் தனது முகநூல் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அவர் மலர் குழுவுக்கான பொறுப்பாளராகவும் இருக்கின்றார். எனவே அனைவரும் எளிய கட்டணத்தில் தங்கிச்ச்செல்ல ஏற்ற விடுதி அமைய பெருமனமுள்ளோர் இயன்றவற்றைச் செய்ய நானும் வேண்டுகிறேன். 

////மும்பையில் நகர விடுதி

ஊர் கூடி தேர் இழுப்போம் வாருங்கள்...

மும்பையில் ஒரு மிகப்பெரிய நகர விடுதி வரவிருக்கிறது என்கிற வார்த்தைகளை கேட்கையிலே மிகவும் ஆவலாக இருக்கிறது. உலகமெங்கும் நகரத்தார்கள் சென்றவிடமெல்லாம் கோவில்களும், நகர விடுதிகளும் கட்டினார்கள். பல தான, தருமங்களையும் செய்து வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றளவும் பல ஊர்களில் நகர விடுதிகள் கட்டப்படுகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன. தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை தான தருமத்திற்கு அளிப்பதில் நகரத்தார்களுக்கு ஈடு இணையே இல்லை.
மும்பையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு வாங்கிய இடத்தில் தற்போது 5000 சதுர அடியில் நகர விடுதி அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் 12 முதல் 18 மாதத்தில் இந்த நகர விடுதி கட்டி முடிக்கப்படும் என்று முடிவு செய்து கட்டிடக் குழு மிகவும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறது. சுமார் 1.50 கோடி ரூபாய் செலவில் இந்த நகர விடுதி கட்டப்படவுள்ளது.
இந்த நல்ல செய்தி ஒவ்வொரு நகரத்தாருக்கும் சென்றடைய வேண்டும் என்பது எனது விருப்பம். மலர் குழு பொறுப்பை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

வியாழன், 7 ஏப்ரல், 2016

நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.

681. சின்னச் சின்ன விஷயங்களால் சின்னச் சின்ன விசாரிப்புக்களால், அக்கறையால் வாழ்க்கை சுவாரசியமாகிவிடுகிறது.. :)

happy weekend makkas.

682. எப்ப பார்த்தாலும் ஒரு சாக்ஸ் மட்டும் காணாம போயிடுதே.. கால் முளைச்சு போயிடுதா.. பசங்க போட்டா வாஷிங் மெஷின் தின்னுடுதா..

683. கை வைக்கிற இடத்துல எல்லாம் கோக் டின்னும், சிதறிக் கிடக்கும் சிப்ஸும், வாஷிங் மெஷின்ல போட்டதா இல்லையான்னு தெரியாத துணிகளும், ஆயிரம் செண்ட் பாட்டில்களும், 10 விதமான ஹேர் ஆயிலும் இருந்தா நிச்சயம் நீங்க இருக்கது பாச்சிலர்ஸ் வீடா இருக்கும். பேலசைக் கூட குப்பைத் தொட்டியா மாத்தும் இவங்க உங்க பசங்களாயிருக்கும் பட்சத்துல அந்த கோக் டின்னாலேயே ரெண்டு போடலாமான்னு வரும்.. :)


684.  /// Chinniah Kasi
March 18, 2012 at 1:22pm ·
தேனம்மை ஆச்சிக்கு வணக்கமும், நன்றியும்!
"அது ஒரு கனாக்காலம்" .....பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சில நாட்களுக்குக் குடிக்கவும்,சமைக்கவும்.நல்லவேளை தண்ணீர் தூக்க குடிதண்ணீர் ஊரணிக்கு பித்தளை குடமும் புளியுமாக போக வேண்டாம்.அங்கெ செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளேபோய் தெளிந்த தண்ணீர் மோந்துக்கிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்த்தை இல்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதை இருந்தது. (இது அவர் தினமணி கதிரில் எழுதியுள்ள சிறப்பு பரிசு பெற்ற சிறு கதையின் ஆரம்பம். ...... இது கதை அல்ல நிஜம். அந்த கதையே நிஜம்தான்! அதற்கு சிறப்பு பரிசு என்பதைத்தான் ஏற்க இயலவில்லை- பரிசுகளுக்கே சிறப்பு சேர்க்கும் எதார்த்தம் அது!, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பங்களில் ஆண் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் ஒவ்வொரு நாட்களிலும் நடைபெறும் மனங்களை பதறக் கரைக்கும் நிகழ்வுகளே)!

புதன், 6 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! பார்ட் 4 - 6 ( நாடகம் )



 காட்சி – 4.

[சத்துணவுக் கூடம் ]

[ ஜான் அமல் கென்னடி உருட்டி உருட்டித் தர பகாசுரன் மாதிரி உணவை விழுங்கிக் கொண்டிருக்கின்றான். ஏறக்குறைய பெரிய அண்டாவில் இருந்த உணவு தீர்ந்துவிட்டது. கொஞ்சம் சோற்றுப் பருக்கைகள் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டு இருந்தன. ]

ஜான் அமல் கென்னடி :- ( தனக்குள் ) முனியம்மா வந்தா என்னைப் பார்வையாலே எரிச்சிடுவாளே ! பயம்மாயிருக்கே !

 ( சத்தமாக ) ஸார் ! நீங்க தப்பா நினைச்சுக்கப்படாது. உணவு அவ்வளவுதான். !. ஸார் ஒரு விஷயம் ! நீங்க அந்த விஷயத்தைப் பத்தி மறந்துடுங்க. ! நானும் மறந்துடுறேன். ! தயவுசெய்து யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. !

[ என்றவரைப் பார்த்து ]

செந்தில்நாதன் :- ( தனக்குள் ) சரியான லூசாயிருப்பார் போலிருக்கே !. அன்றைக்கு ஒரு கடையில் நான் கடைக்காரனுக்குத் தெரியாமல் பொட்டுக்கடலையை அமுக்கிப் பையில் போட்டுக்கிட்டு ஒவ்வொண்ணாத் தின்னுகிட்டு வர்றதைப் பார்த்தாரே. அதனால இவர் அவன்கிட்ட சொல்லிடுவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தா இவர் என்கிட்டேயில்ல பயப்படுகின்றார். நம்மளுக்கு விஷயம் ஒண்ணும் தெரியாட்டாலும் சும்மா நடிக்க வேண்டியதுதான்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அந்தமானில் கம்பராமாயணக் கருத்தரங்கு.

முகநூல் நண்பர் , கம்பன் கழக செயலாளர் , பேராசிரியர் பழனியப்பன் முத்தப்பன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கின்றேன்.

 ////கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு நிகழஉள்ளது.

திங்கள், 4 ஏப்ரல், 2016

கோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் . வயல் கம்பளம்.

3.வயல் கம்பளம். :-


மேகப்பஞ்சு அவிழுது

மழை நூலை உதிர்க்குது

நீர்ப்புடவை நெய்யுது

மின்னல் சரிகை சேர்க்குது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

சத்துணவு கல்யாண வைபோகமே ! -- பார்ட் 1 - 3. ( நாடகம் )



சத்துணவு கல்யாண வைபோகமே !

காட்சி – 1.

[அனந்த ராம விலாஸ் தொடக்கப் பள்ளியின் சத்துணவுக் கூடம். திருமதி முனியம்மா சத்துணவுக் கூடத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றாள். முனியம்மாவின் ‘பற்களை விடக் கூரானது நாக்கா அல்லது நாக்கை விடக் கூரானது பற்களா’ என்கின்ற ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பவர் சத்துணவு அமைப்பாளர் ஜான் அமல் கென்னடி ]

ஜான் அமல் கென்னடி : அம்மா, முனியம்மா கொஞ்சம் அந்த இடத்தை நல்லாப் பெருக்கேன். குழந்தைகள் உக்கார்ந்து சாப்பிடற இடம்.

[ஹூங்காரம் செய்துகொண்டு கையில் விளக்குமாற்றுடன் திருமதி முனியம்மா தன் திருமுகத்தைக் காட்டியதுதான் தாமதம் ஜான் அமல் கென்னடியின் தாத்தா முதல் பிறக்கப்போகும் பேரன் வரை அனைவரும் அவளின் திருவாயால் வாழ்த்தப்பட்டார்கள். ]. பிறகு

முனியம்மா : ஏன்யா ! பெருக்குறது கண் தெரியல. இது நொள்ளை அது நொட்டைங்கிறியே ! உன் ரகசியத்தை அம்பலப்படுத்திடுவேன். நேராய்ப் போய்ச் சொன்னேன்னா அப்புறம் நீ படும் பாடு. என்னய நீ அதிகாரம் பண்றியா ? உன்னய எப்பிடிப் பார்க்கணுமோ, எங்க பார்க்கணுமோ, அங்க பார்த்துக்கறேன். அறிவுகெட்ட மூதி , சோமாறி .

[இப்படியாக முனியம்மா பல சில சொல்லக்கூசும் வார்த்தைகளை வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் அடுக்கு மொழியில் இரைச்சலிட ,’டங், டங்’ என்ற பள்ளியின் மணீ ஒலிக்கிறது. ]

முனியம்மா : ( கோபமாக ) ஹூம். ! இப்ப பெல்லடிச்சிடுச்சு. மீதியை அப்புறம் திட்டறேன். (வறட் வறட் என்று பெருக்கிக் குப்பையை ஜான் அ. கென்னடியின் முகத்தில் வீசுவதுபோல் தள்ளிவிட்டுச் செல்கிறாள். )

{திரை விழுகிறது.}

காட்சி – 2.
பிள்ளைகள் கசமுசவென்று சத்தம்போட்டுக் கொண்டே அமர்கின்றனர்.

மாணவன் – 1. இன்னிக்கு என்னோட பிளேட் கொண்டு வரலை.

சங்கரன் :- ஐயோ எங்க மாமா இங்க வந்துடுமே !.அதுக்குள்ள சாப்பிட்டுடணுமே ! லபக் லபக் என்று விழுங்குகிறான்.

{திரை }.

Related Posts Plugin for WordPress, Blogger...