எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 ஏப்ரல், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். புஜ்ஜுவும் பூந்தோட்டமும் - தேன்மொழி ராஜேந்திரன்.

முகநூலில் என் மதிப்பிற்குரிய தோழி தேன்மொழி ராஜேந்திரன். இவங்க ஒரு டாக்டர். கோவையைச் சேர்ந்தவர். இவரோட தோட்டம், பாலன்ஸ்ட் டயட், பெட் அனிமல் வளர்ப்பு  ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்து நான் இவங்க ஃபேன் ஆயிட்டேன். ( கோடைக்கு நெம்பத் தேவைங்கிறீங்களா :) 

அவங்ககிட்ட சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஒரு கேள்வி கேட்டு அத அப்போ அப்போ ஓடிப் போயிக் கேட்டுப் பதில வாங்குறதுக்குள்ள ஒம்பாடு எம்பாடு ஆயிப் போச்சு. அத ஏன் போன வாரமே வெளியிடலன்னு கேக்குறீங்களா. இன்னும் வேற எழுத சொல்லி அம்மிணிகிட்ட கேட்டிந்தேன். ஆனா அவங்க சம்மர் டூர் போயிட்டாங்க. பின்ன இருக்கதையே போட்டுட்டேன். 

இந்த நகைச்சுவைத் தென்றல், புயல், அரசி எல்லாம் சொல்றாங்கள்ல அதுமாதிரி இவங்க எழுத்துக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம். எல்லாத்தையுமே சேர்த்திக் கூடக்கொடுக்கலாம். அவ்ளோ சுவாரசியம்.

/////இது பிஃப் - 17,

அன்பின் தேனு,

நீங்க டாக்டர்னு தெரியும்.

நான் என் ப்லாகில் சாட்டர்டே ஜாலிகார்னர்னு ஒரு போஸ்ட் போடுறேன். அதுக்கு நீங்க ஏதாச்சும் எழுதித் தரணும்,பேலன்ஸ்ட் டயட், உங்க தோட்டம், உங்க அன்பு மகள் பத்தி இல்ல மாப்பிள்ளைபத்தி ஏதும் உங்களுக்குப் பிடிச்ச டாபிக்ல ஒரு 4 பாராலேருந்து 15 பாராவரை இருக்கலாம். உங்க புகைப்படம் ஒண்ணும் ஆர்ட்டிகிள் சம்பந்தப்பட்ட புகைப்படம் ஒண்ணும் வேணும்

ப்ளீஸ் அனுப்புங்க.

Thenmozhi Rajendran
Ok.. தேனம்மா

 

இது மார்ச் 4

சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதி தரச் சொல்லிக் கேட்டேனே கிடைக்குமா கெடைக்காதா. வூட்டு வாசல்ல வந்து தர்ணா பண்ணட்டா. நாளைக்கு சனிக்கிழமை. வூட்டுக்காரரை கலாய்க்கிறத என் ப்லாகுக்காக செய்து தரலாம்தானே. வித் ஃபோட்டோஸ். செமயா இருக்கும். சீக்கிரம் சீக்கிரம்

இல்லாட்டி ராத்திரி தூக்கத்துல வந்து பயமுறுத்துவேன். இன்னிக்குள்ளாற வோணும். சொல்லிப்புட்டேன் ஆமா.


20 3. 2016. 


ஆர்டிக்கிள் எப்ப கிடைக்கும்.

Thenmozhi Rajendran
எழுதிக்கிட்டே இருக்கேன்பா,,Will give it soon



 
4.1.2016. 

தேனு எழுதிட்டீங்களா

கெஞ்சிப் பாத்துட்டேன் smile emoticon

மிஞ்சிப் பார்ஹ்துட்டேன் smile emoticon

கெதறியும் பாத்துட்டேன் ஹாஹா

சீக்கிரம் அனுப்புங்க

ப்ளீஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

எதையாவது எழுதி உங்க புகைப்படத்தோட அனுப்புங்க

தோட்டம் பத்தி, உணவு பத்தி இல்லாட்டி உங்க கணவர் , பொண்னு பத்தி

நாளைக்கு சனிக்கிழமை. என் ப்லாகில் சாட்டர்டே போஸ்ட் போடுவேன் ப்ளீஸ். கருணை காட்டுங்கள் தேன்ஸ்ஸ்ஸ் smile emoticon

////அய்யய்யோ,.எனக்கு நல்லால்லாம் எழுத வராதுன்னு வெக்கப்பட்டுக்கிட்டுதான்..


இப்பிடி சொன்னவுங்க விட்டு பட்டய கிளப்பி இருக்காங்க பாருங்க. 

///ஒங்க சம்சாரம் ' தண்ணியக் குடி, தண்ணியக்குடி ' னு என்னைய டார்ச்சர் பண்றாங்க.. தண்ணியக் குடிச்சிட்டு கதவு மேல, கட்டில் மேல, பெட்டு மேல புக்கு மேல னு ஒண்ணுக்கடிச்சா என்னைய மெரட்டறாங்க.. நீங்க கொஞ்சம் சொல்லக் கூடாதா..//

///
அட...மல்லீப்பூவு இவ்ளோ பெரிசா இருக்கே..
ம்க்கும்...அது நந்தியாவட்ட...
ரோஸ் செடீல முள்ளே இல்ல..
அய்யோ...அது செவ்வரளி...
பனைமரம் கூட வளத்துறியா..
தெய்வமே...அது விசிறி வாழை...
அய்...நெல்லிக்கா இவ்ளோ பச்சையா இருக்கே...
ஏசப்பா...அது நார்த்தங்கா...(கைல பூரிக்கட்டைய எடுக்கறதுக்குள்ள ஓடிடுங்க)
இப்ப தெரிஞ்சிருக்குமே நா எவ்ளோ கஷ்டப்பட்டு ஒண்டியாளா இந்த தோட்டத்த டெவலப்பண்ணிருப்பேனு..///

///எங்க உறவினர் லேடி ஒருத்தங்க, பத்தாவது படிச்சவங்க, எப்படியோ ஒரு டாக்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.. அவங்க அலட்டல் என்ன, பண்ற மேக்கப் என்ன.,.பாத்தாலே பத்திக்கிட்டு வரும்.. அவங்க ஃபிரண்ட்ஸ் சர்க்கிள் எல்லாம் பயங்கர பணக்காரங்கதான்...அதிக வசதி இல்லாத மத்த உறவினர்கள்ட்ட அதிகம் வச்சிக்க மாட்டாங்க,..எங்க போனாலும் கழுத்து நிறைய நகைகளும், முழங்கைய மூட்றாப்ல தங்க, வைர வளையல்களும், சும்மாவே 3000 மதிப்புள்ள சேலையும் (விசேஷத்துக்குப் போனா கேக்கவே வேணாம்) அரை இஞ்ச்சுக்கு பேர் அண்ட் லவ்லியும், அடிக்கிற கலர்ல லிப்புட்டிக்கும் னு செம மேக்கப்போட போவாங்க...ஒரு ஷாப்பிங் போனாக் கூட இப்படித்தான்...அவங்களாவே சொல்லிக்குவாங்க சேல்ஸ்மேன் அப்பதான் மதிப்பான், நிறைய எடுத்துப் போடுவான்னு.. நானோ மேட்சா ப்ளவுஸ் கூட போட மாட்டன்..சிம்ப்பிளா தாலிக் கொடியும், கண்ணாடி வளவியும்தான் (எங்கப்பா போட்டது, நான் உழைச்சி சேத்துனது னு 500 பவுனு வச்சிருந்தும்), வாட்ச் கூட கட்ட மாட்டேன் ,ஹாஸ்பிடல்ல Procedure பண்றப்ப கழட்ட கஷ்டப்பட்டுக்கிட்டு.,. மேக்கப்லாம் சுத்தமா இருக்காது...கல்யாணத்துக்குப் போனா மட்டும் கண்மையி, பவுடர் போட்டுக்குவன்... எதுக்கு சொல்ல வரேனா, அவங்க அலட்றதப் பாத்து எனக்கே இன்பீரியாரிட்டி வந்துடும் 'சே இவ்ளோ படிச்சிட்டு நாம இப்டி இருக்கமே ' னிட்டு... எங்க பொண்ணு கிட்ட ஒரு நா பொலம்புனேன் அவங்க பேரைச் சொல்லி 'எப்டி மேக்கப் போட்டுக்கிட்டு ஊரச் சுத்திக்கிட்டிருக்காங்க பாரு ஆயாளும், மவுளும் ' னு.,. அதுக்கு பொண்ணு சொல்றா 'அதுல என்ன பெருமை இருக்கு...நமக்கு ஒரு நேம் வேணுமில்லையா ...அவங்களுக்கு அதத் தவிர வேறு வேலை இல்லை..நமக்கு அப்டியா.. வெறும் நூல்சேலையும், கருக மணியும் போட்டுட்டுப் போனாக்கூட நம்ம படிப்புக்கு இருக்க மரியாதை அவங்க போட்ருக்க வைரத்துக்கு இருக்குமா... ஏம்மா, நீ ஆள்தான் வளரலைனா அறிவும் கூட வளரலை உனக்கு ' னு ஒரு போடு போட்டா... இப்பல்லாம் எனக்குள்ள எந்த இன்பீரியாரிட்டியும் இல்ல...///
 
டிஸ்கி :- ஆயிரம் சதுர அடில அம்மிணி, தோட்டம்னு ஒரு ஏக்கர்ல போடக்கூடிய தாவரங்களைப்போட்டு வைச்சிருக்காங்க. அப்போ அப்போ வீட்ல மிஞ்சுற காய்கறிக் கழிவை அரைச்சு வடிகட்டி ஊத்துறது நல்ல உரம்னு சொல்றாங்க. மேலும் ஆயில் கேன் டின் போன்றவற்றை நெட்டுவாக்குல வெட்டி  அதுல மண்ணை நிரப்பி கீரை காய்கறி பயிரிட்டிருக்காங்க. தினப்படி சமையலுக்கு இதே காய்கள்தான். 


பெட் அனிமல் ( நாய்க்குட்டி ) ந்னா நெம்பப் பிரியம். டவுன் டு எர்த் பர்சன். இன்னும் இன்னும் இவங்களைப் பத்திப் புகழலாம். ( ஒரே ஒரு குறை. பொதுவா ப்லாகர்ஸ் கிட்ட ஆர்டிகிள் கேட்டா அத நம் ப்லாகுக்கு மட்டும்  அனுப்புவாங்க. ஆனா முகநூலர்கள் கிட்ட கேட்டா அத முகநூல்ல உடனே போட்டுடுவாங்க. இந்தப் போஸ்ட்ஸ் எல்லாமே எனக்கு அனுப்பின அதே நேரத்தில் முகநூல்லயும் போட்டுட்டாங்க. அவ்வ்வ்வ் என்று நகத்தைக் கடிச்சிட்டே அடுத்த ஆர்டிகிள் கேட்டிருந்தேன். அது எழுத அவங்களுக்கு டைம் இல்லைன்னு நினைக்கிறேன். அதான் அதையே போட்டிர்க்கேன் )

டாக்டர்களை எனக்குப் பொதுவாப் பிடிக்கும் மக்கள் சேவையில் அவர்களின் பங்கு அளப்பரியது.  இவங்க குடும்பமே டாக்டர்களால் நிரம்பியது. மனிதநேயமிக்க எளிமையான இந்த மனுஷியை என் தோழின்னு சொல்லிக்கிறதுல நான் பெருமைப்படுறேன். வாழ்க வளமுடன் & நன்றி தேனு.
 

10 கருத்துகள்:

  1. ஜாலிக் கார்னர் ஜாலியா இருக்கு...
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. பேட்டியும், பேட்டி எடுத்ததில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களும், படங்களும், பகிர்வும் அருமையாக விவரிக்கப்பட்டுள்ளன. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. டாக்டர் அவர்களின் பதிவு உண்மையிலே ஜாலியாகத்தான் இருந்தது. பொதுவாகவே அதிக மேக்கப் போடுபவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறைவுதான். அவர்களை சீரியஸாக யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் டாக்டர் மகளின் கூற்று உண்மைதான்.
    அருமையான பதிவு!

    பதிலளிநீக்கு
  5. தோழியை அறிமுகப்படுத்தி, அவரைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. கலகல கலக்கல் ஜாலி கார்னர் அக்காவ் .புஜ்ஜூவும் அழகு :) சுவாரசியமான பேட்டிரசித்தேன் .
    //இல்லாட்டி ராத்திரி தூக்கத்துல வந்து பயமுறுத்துவேன்// ஹா ஆஹா :) புன்னகைஅரசிக்கு பயமுறுத்த எல்லாம் தெரியுமா :)

    பதிலளிநீக்கு
  7. ஜாலி செம ஜாலியா இருக்குது...வாழ்த்துகள் சகோ

    பதிலளிநீக்கு
  8. நன்றி விஜிகே சார்

    நன்றி செந்தில் :)

    நன்றி ஜம்பு சார்

    நன்றி டா ஏஞ்சல்.

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு
  9. இந்த டாக்டர் மூஞ்சிப் புத்தகத்துல (கொடுரமா இருக்கோ பெயர்ப்பு? ஹி... ஹி..) என் தோழி. இவங்க எழுதறது எல்லாமே சூப்பரா இருக்கும். இங்கயும் ஜாலியா சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி தேனக்கா.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...