எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 ஏப்ரல், 2016

சாட்டர்டே போஸ்ட். கம்பியில்லா மின்சாரமும் மண்பானை ஸ்பீக்கரும், காரைக்குடி விஞ்ஞானி பூபதிராஜ்.

    காரைக்குடியில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி அசத்தும் திரு பூபதிராஜ் சகோ அவர்கள் எனது முகநூல் நண்பர். இவர் முன்னாள் ராணுவ வீரர்.
    இவரது பேட்டி புதிய தலைமுறையில் வில்லேஜ் விஞ்ஞானி என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.  மிக எக்கச்சக்கமான விஞ்ஞானக்  கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி வருகிறார். !இவர் கண்டுபிடித்த பாப்பாவுக்கு பேபி கேர் எலக்ட்ரானிக் பேட் சூப்பர். !
///இது என்மகளுக்காகஉருவாக்கினேன்பிறகு பள்ளிமாணவர்களுக்குப்ரொஜெக்டாகசெய்துதந்துகொண்டுஇருக்கேன் பல வருடங்களாக பரிசுகளை வாங்கிட்டுஇருக்கு சகோ///
 
நிறையப் பத்திரிக்கை வானொலி தொலைக்காட்சி இவற்றில் இவருடைய பேட்டிகள் வந்து இருக்கு 

இவரோட  நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோக்கள் YOUTUBE இல் "boopathiraj89" என்ற ID யில் உள்ளது

அவரிடம் எனது வலைத்தளத்துக்காக அவரது மின் கண்டுபிடிப்புகள் பற்றி அனுப்பும்படிக் கேட்டேன்.

மதிப்பிற்குரிய சகோ
உங்களிடம் ஒரு கோரிக்கை
என்னுடைய வலைப்பதிவில் honeylaksh.blogspot.in
ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சாட்டர்டே போஸ்ட் என்ற பதிவினை வெளியிடுகிறேன்
அதற்கு முகநூல் நண்பர்களிடம் ஒரு கேள்விகேட்டு கருத்து வாங்கி புகைப்படத்துடன் வெளியிடுகின்றேன்.
எனக்கு உங்கள் மின் கண்டுபிடிப்புகள் பற்றி எனது ப்லாகுக்காக எழுதித்தர முடியுமா
அது சம்பந்தமான புகைப்படங்கள் வேண்டும்
உங்கள் படமும் ஒன்று வேண்டும்
இப்போது அரசுக்கு யோசனையாக சிலது எழுதி இருந்தீங்க பார்த்தேன் அதையும் அனுப்புங்க ப்ளீஸ்
நாளைக்கு வெளியிடத் தோதா இருந்தா வெளியிட்டு லிங்க் அனுப்புறேன்
அன்பும் நன்றியும் தேனம்மைலெக்ஷ்மணன்
மாதிரிக்கு சில அனுப்புறேன். என் முக நூல் நண்பர்களிடம் எடுத்த பேட்டியை அவர்களின் புகைப்படத்துக்கு அருகில் உள்ள லிங்கை க்ளிக் செய்தால் படிக்கலாம்.


வணக்கம் சகோ நிறைய உருவாக்கங்கள் இருக்கு என்னோடwallலில் அதைபகிர்ந்துள்ளேன் அதேபோல்என்னுடைய techknowledgeindia குரூப் பேஜில்அதிகமா பதிவிட்டு இருக்கேன் உங்களைஅதில் இணைத்து விடுகிறேன் தேவையானவைகளை எடுத்துகோங்க தேவையானவைகளை கேளுங்கதருகிறேன்.

கடந்த மாதம் புதியதலைமுறை தொலைகாட்சிக்கு சூரியஒளி மின்சாரம் பற்றிஇரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தினேன்அதுஇன்று தமிழகம்முழுதும் ஒருவிழிப்புணர்வைஏற்படுத்திகொண்டுள்ளது மற்றும்LEDபல்புகள்பயன்படுத்துவது பற்றியும் பாடம் நடத்தினேன் இது நேரலையாக ஒளி பரப்பிகொண்டுஇருந்தார்கள்


இது என்னுடைய ராணுவ யூனிட்டில் நான்நடத்திய அறிவியல் கண்காட்சி இதில் ராணுவதளபதி மற்றும் மத்திய ராணுவ அமைச்சர்பள்ளம் ராஜு கலந்துகொண்டனர். இன்னும் நிறைய இருக்கு சகோ முடிந்த அளவு எழுதுறேன் மற்றும் மின்சார சேமிப்பு முறைகளையும் எழுதுறேன்.


1. ரேடியோ :- R A D I O என்பதின் விரிவாக்கம் (மீள் பதிவு) ; இரண்டு நாட்களுக்கு முன் நான் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன் அது R A D I O என்பதின் விரிவாக்கம் இதனை விளக்கும் முதல் தமிழன் நான்தான் ஏன் என்றல் இதனை பற்றிய விபரம் வலை தளங்களில் தேடி கிடைக்க வில்லை எல்லாம் மின் காந்த அலைகள் பற்றியே பதில் இருந்தது ஆனால் இது ஒவொரு எழுத்தும் குறிப்பது எவற்றை என்று பதில் இல்லை ரேடியோ ஒரு காலத்தில் அனைவராலும் கேட்க பட்டது இன்றும் ஒலி பரப்பு உள்ளது மீடியம் வேவ் ஷார்ட் வேவ் அதாவது மத்திய அலை வரிசை மற்றும் சிற்றலை வரிசை பயன் பாட்டில் இருந்தது இன்று FM (frequency modulation) நெட் அலைவரிசை அதிக பயன் பாட்டில் உள்ளது ஏன் என்றால் அதன் ஒலி பரப்பின் துல்லியம் அப்படி பொதுவாக RADIO என்போம் இதில்முதல் தலை முறை ரேடியோக்கள் வால்வுகள் மூலம் தயாரித்தனர் இவை அதிக வோல்டில் இயங்க கூடியது அதன் பிறகு TRANSISTOR பயன் வந்தது இது டரன்சிஸ்டர் ரேடியோ ஆனது இது குறைந்த வோல்டில் இயங்க கூடியது அடுத்து IC (இன்ட்கரேட்டடு சர்கியூட்)ஆனது இதுவும் குறைந்த வோல்டில் இயங்க கூடியது R A D I O இதில் 5 பகுதி உள்ளது அவை முறையே 1.... R... RECTIFIER இது வானொலி இயங்க செய்யும் மின்சார பகுதி 2.... A .. AUDIO இது ஒலி கொடுக்கும் பகுதி 3.....D...DETECTOR மின் காந்த அலைகளோடு கலந்து வரும் ஒலி ...............................அலையை கண்டு பிடித்து பிரித்து கொடுப்பது 4.....I.... I F (intermediate frequency) இது ஒலி பரப்பாகும் வானொலி ....................................நிலையத்தின் மின்காந்தஅலைகள் மற்றும் ...................................வானொலி பெட்டியில் உருவாகும் அலை இவை ....................................இரண்டும் கலந்து ஒரு பொது மின்ஒலி அலையாக ....................................மாற்றும் பகுதி 5....O.. OSCILLATOR ..... (LOCAL OSCILLATOR ) இது வானொலியில் சுயமாக மின்ஒலி அலையை உற்பத்தி செய்யும் பகுதி ஆன்டனா வழியாக வரும மின் காந்த ஒலி அலைகளை தன்னுடன் கலக்க செய்யும் பகுதி இவை தான் RADIO வின் விரிவாக்கம் லி.பூபதிராஜ் காரைக்குடி 


2.

உலகை ஒளி மாயமாக்கியவர் 700 க்கு மேற்பட்ட கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் விஞ்ஞானி களால் கிறுக்கு
விஞ்ஞானி என்று அழைக்க பட்டவர் உலக மக்களுக்கு
மின்சாரத்தை wire less முறையில் இலவசமாக் கொடுக்க வேண்டும் என்றுவிரும்பியவர் இவர் கண்டு பிடிப்புகள் உலகையே மாற்றி உள்ளது யாரை மறந்தாலும் இவரை
மறக்க கூடாது மறக்க முடியாது இவர் கண்டு பிடிப்புகளில்
ஒரு முத்தான பத்து
01.அல்டேர்னடிவ் கரண்ட் AC
02.லைட் .... என்ன லைட் டா என்று கேட்பது தெரிகிறது ஆம் நியான் சைன் tube light
03. X RAY
0 4.ரேடியோ .... என்ன ரேடியோ வா புரியுது புரியுது உண்மைதான் முதலில் இதற்கு நம் நாட்டில் பிறந்த
விஞ்ஞானி "ஜகதீஸ் சந்திரபோஸ்" காப்புரிமைபெற
வேண்டிய முதல் விஞ்ஞானி
அன்று தொலைதொடர்பு இல்லாத காரணத்தால் இவரின்
கண்டு பிடிப்பு முடங்கி போயிற்று அடுத்து இவர்தான் அந்த
இடத்தில 1897 இல் அமெரிக்க பேடன்ட் அலுவகலகத்தில்
பதிவாக்கினார் ஆனால்" மார்கோனி" யின் பதிவை மட்டுமே முன் நிறுத்தி " மார்கோனி''க்கு காப்புரிமை வழங்க பட்டது காரணம் பணபலம்
05. ரிமோட் கண்ட்ரோல்
06 .எலெக்ட்ரிக் motor
07.ரோபோடிக்ஸ்
08. லேசர்
09. வயர் லெஸ் கம்யுனிகேசன்
10.ப்ரீ எனெர்ஜி `
பார்த்தீர்களா இந்த பத்து உலகையே மாற்றி போட்டுள்ளது இன்று நாம் எல்லோரும் பயன் படுத்துவது இவரின் கண்டு பிடிப்புகள் தான் இன்னும் 690 கண்டு பிடிப்புகள் உள்ளது இவைகள் பயனில் உள்ளது இவரின் கண்டு பிடிப்பை பயன் படுத்தி இருந்தால் ஜப்பான் நாடு தப்பித்து இருக்கும் ஜப்பானியர்களின் விமான தாக்குதலை சமாளிக்க முடியாமல்
அமெரிக்க அணுகுண்டு தாக்குதலை துவக்கியது உண்மையில்
இவரின் கண்டு பிடிப்பான "death ray" என்னும் கருவியை பயன் படுத்தி ஒரே நேரத்தில் ஆயிர கணக்கான விமானங்களை செயல் இழக்க செய்ய முடியும் ஐன்ஸ்டின் அணுகுண்டு இவரின் "death ray" அமெரிக்க ராணுவத்தில் முன் நிறுத்த பட்டது அமெரிக்காவின் முட்டாள் தனமான முடிவு ஐன்ஸ்டின் அணுகுண்டு பயன் படுத்தியது இதனால் சரித்திரத்தில் பெரும் கரும்புள்ளி அமெரிக்காவுக்கு கிடைத்தது கடல் போருக்கு இவரின் "டோர்பிடோக்கள் " பயன் படுத்த பட்டது
முதல் முதலில் எலெக்ட்ரிக் கார் கண்டு பிடித்து 140 மைல் வேகத்தில் ஒட்டி காண்பிக்கப் பட்டது இவராலே '' யாரு யாரு
அவர்தாங்கா நம்ம கொண்டாட வேண்டிய மக்கள் விஞ்ஞானி "
நிகோலாஸ் டெஸ்லா " இவர் குரோசியா வில் 1856 ஜூலை10 அன்று பிறந்தவர் இவ்ளோ கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர்
ஆனபின்பும் அமெரிக்க விஞ்ஞானிகளால் ஒதுக்க பட்ட தற்கு
காரணம் இவர் வேற்று கிரவாசிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததே கரணம் என்று சொல்கிறார்கள் இவர் எடிசனிடம் உதவியாளராய் இருந்தார் இவரின் திறமைய கண்டு பொறாமை கொண்ட எடிசன் உதாரணம் ...எடிசன் DC மின்சாரம் தயாரித்தார் இந்த மின்சாரம் நீண்ட தொலைவுகளுக்கு கொண்டு செல்ல முடியாது காரணம் மின் கம்பிகளின் ரெசி ஸ்ட்டிவிட்டி ஆனால் AC மின்சாரம் அப்படி அல்ல நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று நிருபித்ததால்
நாம் இன்று அதனை பயன் படுத்துகிறோம் ஆனால் எடிசன் இதனை எதிர்த்த இந்த AC மின்சாரத்தால் ஆபத்து என்று
மக்கள் முன்னிலயில் ஒரு நாயை மின்சாரம் செலுத்தி கொன்றும் அதே போல் உருவத்தில் பெரிய யானை மின்சாரம் செலுத்தி கொன்றும காண்பித்தார் இந்த வயிறெரிச்சல் உள்ள
விஞ்ஞானி மக்கள் விஞ்ஞானி டெஸ்லா மக்கள் மனதில் என்றும் நிலைத்து உள்ளார் இவரின் wireless .மின்சாரம் உலகத்தில் தொடர்ந்து ஆய்வில் உள்ளது தமிழனான நானும் பெருமையாக
சொல்லி கொள்வேன் நானும் இந்த ஆய்வில் ஒரு அடி தூரத்துக்கு கம்பி இல்லாமல் மின்சாரத்தை கடத்தி உள்ளேன் இது எதிர்கால் வாழ்விற்கு பெருதும் பயன் படும் என்பதை கர்வத்துடன் சொல்லிகொள்கிறேன் இப்ப இவற்றை நான் கல்லுரி மாணவர்களுக்கு ப்ரஜக்டாக செய்து கொடுக்கிறேன்

மக்கள் விஞ்ஞானி டெஸ்லா வை பற்றி எழுத எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் மக்கள் விஞ்ஞானி டெஸ்லா நியூ யார்க் மன்ஹட்டன் நகரில் ஜனவரி..07..1943..இல் மாரடைப்பால் காலமானார் வாழ்க மக்கள் விஞ்ஞானி "நிகலோஸ் டெஸ்லா "
;
ஆசிரியர் .லி.பூபதிராஜ் காரைக்குடி



3. பல்புகள் ப்யூஸ் போகாது காரணம் பல்புகளில் பயன் படுத்தி

உள்ள டங்க்ஸ்டன் கம்பி சுருள் சுமார் 3600 டிகிரி

வெப்பத்தையும் தாங்க கூடியது ஆனால் கடைகளில் வாங்கும்

பல்புகள் பியூஸ் போகுதே காரணம் என்ன? இப்படி ஒரு

பல்பை தயாரிச்சு 110வருடம் வரை எரிய விட்டா தயாரிக்கும்

கம்பெனி காரன் கதி என்னாகுறது அப்படி பியூஸ் போக

காரணம் என்ன ?வீட்டுக்கு வரும் மின்சாரத்தின் அளவு 230

வோல்ட் அப்பரம் எப்படி பியூஸ் போகுது அங்கே தான் விய

பார தந்திரம் தொழில் நுட்பம் உள்ளது டங்க்ஸ்டன் கம்பி

சுருளுடன் இயயம் (LED) சிறுது சேர்க்கபடுகிறது ஒரு

குறிப்பிட உஸ்ணத்தில் அல்லது குறிப்பட்ட அளவு

மின்னோட்டத்தில் எரியும் படி அதன் மின் தடுப்பு (resistivity )

அமைந்து இருக்கும் அந்த மின்னோட்டத்தை மீறி வரும்

மின்சாரத்தில் இய்யம் (led) உருகி கம்பி அறுந்து விடும் இதை

தான் பல்ப் பியூஸ் போச்சுன்னு சொல்லுவாங்க
லி.பூபதிராஜ் காரைக்குடி

4. மண் பானை ஸ்பீக்கர்
;
நாமெல்லாம் யாரு ஸ்பீக்கர் பாக்ஸ் வரதுக்கு
முன்னாடி மண் பானையில்
ஸ்பீக்கர் வச்சு பாட்டு கேட்ட பரம்பரை
அதனோட எபக்ட் நமக்கு நல்லா தெரியும்
சும்மா கும் கும் ன்னு இசை பொங்கும் அப்பவே இப்படி செஞ்சு
வித்தா வருமானம் கொட்டும்னு
சொன்னோம் யாருகேட்டாஆனா பாருங்க மண் பாண்ட கலைஞர்ர்கள்
இதை ஒரு தொழிலா செய்து இருந்தாங்கன்னா
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கலாம்
தொழில் இல்லைன்னு வருத்தப்படாம அதிக வருமானம்
பார்த்து இருக்கலாம் இப்ப இதையே வெளி நாட்டுக்காரன்
செஞ்சு செராமிக் ஸ்பீக்கர் ன்னு பலமாடல்களில் செஞ்சு
ஆயிரக்கணக்கான டாலருக்கு விக்கிறான் மண்பானையில் பாட்டு கேட்டவங்க
எல்லாம் வரிசையா உங்க அனுபவங்களை சொல்லுங்க
பாப்போம் மண் பானை ஸ்பீக்கர் பற்றி
டிஸ்கி :- இன்னும் இவர் விதைத்த உடன் அறுவடை செய்யக்கூடிய சூரியஒளி மின்சாரம் என்னும் தலைப்பில் அவருடைய நேரடி பயிற்சியில் . சூரிய ஒளி மின்சார வகுப்பில் மாணவர்களுக்கு இயற்கை சக்திகளை பயன் படுத்தும்
முறைகளை பயிற்றுவித்து வருகிறார்.  அதில் வீட்டில் தொலைக்காட்சி காண பயன் படுத்தும் D T H தட்டை பயன் படுத்தி எப்படி சமைப்பது என்பதை பற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.  இதில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பொங்கலும் வைத்திருக்கிறார் !.


;
;பத்து ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் பணி புரிந் ததற்காகவும்  you tube ல் பதிவேற்றி உள்ள இவருடைய நூற்றுக்கனக்கான தொழில் நுட்ப விடியோக்களுக்கு டாலர்களில்  வருமானம் கிடைத்துள்ளது.  இவரோட  you tube ID "boopathiraj89" யில் இவருடைய வீடியோக்களை காணலாம்.



மின்சார சேமிப்பு பத்தியும் கம்பியில்லா மின்சாரம் ரேடியோ, மண்பானை ஸ்பீக்கர் பத்தியும் விரிவா சொன்னதுக்கு நன்றி. புதிது புதிதாய் தினம் தினம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கீங்க. இன்னும் இன்னும் சிறப்பான கண்டுபிடிப்புகளைக் கொடுத்து மனித குலத்துக்கு சேவை செய்ய வாழ்த்துகள் பூபதிராஜ் சகோ.  நீங்கள் எங்கள் காரைக்குடிக்காரர் என்பதில் இன்னும் பெருமையுடன் வாழ்த்துகிறேன் . வாழ்க வளமுடன். 
  

 

6 கருத்துகள்:

  1. காரைக்குடி அறிவியலாளரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. அவரது பணி சிறக்க வாழ்த்துகள். மண் பானை ஸ்பீக்கர் புகைப்படம் வித்தியாசமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    நன்றி ஹாஜா

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...