புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 31 மே, 2016

இரண்டும் ஒன்றல்ல. வாழ்விடம் ஓரிடம்.

லால்பாகில் பூத்த இருநிறப் பூக்கள் உங்கள் பார்வைக்கு.

திங்கள், 30 மே, 2016

ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.

761. ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா..

762. living with mere images..


763. சுத்தி இருக்கவங்கள விட்டு எங்கோ இருக்கவங்களத் தேடி ஓடுறோம்.
‪#‎என்ன_டிசைன்_நாம‬

764. மந்திரப் பேழை என நினைத்தால்.
.
.
மரணபயம் காட்டிட்டாங்கடா பரமா..
‪#‎யாரோ‬.

765. Aayiram karangal maraithirunthalum aathavan maraivathillai ...( aathavanukku female gender enna..?..) .. Happy morning dear all.

766. முதலில் புகைப்படங்களை
அழிக்கத் துவங்கினேன்.
வெட்டி வெட்டிக் குப்பையில் போடும்போது
ஞாபகங்களை அழிப்பது எளிதானது.

767. ஆணியன் ரோஸ்டா ஆ ஆ

கொளத்தூர் மெயிலில் இரு குறிப்புகள்.

மார்ச் மற்றும் ஏப்ரல் இதழ்களில் உணவுக் குறிப்பும், சித்திரைப் பொங்கல் பற்றிய குறிப்பும் கோலமும் கொளத்தூர் டைஸில் வெளியாகி உள்ளது.

சனி, 28 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.



341. போரிடுதல் - குழந்தைப் பேறின் போது உடன் இருத்தல் . பிரசுபம் நிகழ உதவி செய்தல். புவாகத் ாய் க்கான் இருப்பார்கள். சிலுகில் மாமியார் நத்ாரோ மற்ற உறினோ அருகிந்து பார்த்ுக் கொள்வைப் போரிடல் என்பார்கள்.

342. . தங்கம் உரசிக் கொடுத்தல் - பிறந்த குழந்தை நாவில் தங்கம் உரசி தொட்டு வைப்பார்கள்

343. பிள்ளையைத் தொட்டிலில் போடுதல் - பட்டுத் தொட்டில் கட்டிப் போடுதல்.

344. எண்ணெய் தேய்த்துப் பாசி கட்டல்.  - பிறந்த குழந்தைகளை பட்டுத் தொட்டிலிட்டு எண்ணெய் தொட்டு வைத்து கழுத்தில் கறுப்புப் பாசி போடுதல்.

345. ராராட்டுப் பாடுதல். – தாலாட்டுப் பாடுதல். இது பற்றி நிறைய எழுதலாம்.
ஆராரோ ஆரிராரோ
கண்ணே நீ ஆராரோ
யாரடிச்சா நீ அழுதே,
அடிச்சாரச் சொல்லி அழு.
மாமன் அடிச்சாரோ
மல்லியப்பூச் செண்டாலே.
அத்தை அடிச்சாளோ
அரளிப்பூச் செண்டாலே.

மற்றும் நிறையப் பாடல்கள் உண்டு. கிடைக்கும்போது பகிர்கிறேன்.

346. . பிள்ளை பிறந்தது கேட்டல். – ஒரு சில்வர் வாளியில் ஓரிரு சீப்பு வாழைப்பழம் இரண்டு தேங்காய் வைத்துக்கொண்டு போய் பிள்ளை பிறந்தது கேட்டு வருவார்கள். 

செவ்வாய், 24 மே, 2016

காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.



 321. ஆடிச்சீர் - திருமணம் முடிந்த முதல் மூன்று வருடங்களுக்கு ஆடி மாதத்தில் வழங்கப்படும் சீர். ஆனால் இப்போதெல்லாம் முன்பே ஏதோ பணமாகக் கொடுத்து விடுகிறார்கள் . அல்லது இது இப்போது நடைமுறையில் இல்லை எனலாம். 

322. விளையாட்டுப் பொட்டி வேவு - பிள்ளை பிறந்ததும் எடுக்கப்படும் வேவு. விளையாட்டுச் சாமான்களைப் பரப்புவார்கள். வெள்ளி வேவுக் கடகாத்தில் பச்சரிசி தேங்காய் வைத்து ஆயா வீட்டில் இருந்து வேவு இறக்குவார்கள். இதற்கு அப்பத்தா வீட்டில் பலகாரம் செய்வார்கள். 

323. பொங்கல் சீர் :- சிலர் பொங்கல் சீரை வேவாகவும் எடுப்பதுண்டு. 

324. வேவு :- வீட்டு நிலை வாசலில் நடுவீட்டுக் கோலம் போடப்பட்டிருக்கும், அதன் முன் ஸ்லேட்டு விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். இந்த ஸ்லேட்டு விளக்கை அந்த வீட்டில் உள்ள திருமணமாகப்போகும் பையன்/பெண்ணின் அப்பத்தாவோ அத்தை முறை உள்ளவர்களோ ஏற்றிக் கொண்டு வந்து வைப்பார்கள். அதன் முன் வேவு இறக்கும் பங்காளிகள் தலையில் தலைப்பா கட்டி வேவு இறக்குவார்கள். 

325. மாமவேவு :- இது திருமணத்தன்று ஆயா வீட்டில் இருந்து முதல் பையன் அல்லது பெண் திருமணத்தன்று திருமணத்துக்கு முன் வேவு எடுப்பார்கள். இதில் பரங்கிக்காய் , இலைக்கட்டு, பச்சரிசி, தேங்காய், வெல்லம் போன்றவையும் சீராக எடுத்து வரப்படும். 

வெள்ளி, 20 மே, 2016

டிஸ்கவரியில் சாதனை அரசிகள், ங்கா, அன்ன பட்சி, பெண் பூக்கள்.

சாதனை அரசிகள்


http://discoverybookpalace.com/brands.php?brand=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

Product Description

வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.


வியாழன், 19 மே, 2016

ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

கோயில்களில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். சென்ற வருடம் காரைக்குடி கற்பகவிநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.  நெய்வேலியில் எப்போதோ முன்பொரு முறை திருவிளக்கு பூஜையைக் கோயிலில் செய்திருக்கிறேன்.

இங்கே சென்ற வருடம்  கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அம்மா, மாமி ஆகியோரோடு விநாயகர் சன்னதியின் எதிரில் கோலமிடப்பட்ட இடத்தில் அமர்ந்து வாழையிலையில் அட்சதை பரப்பி குத்துவிளக்கை ஸ்தாபித்து , ஐந்து முகங்களிலும் தீபமேற்றி, தண்டில் பூச்சாற்றி,  விநாயகரை மஞ்சளில் பிடித்து பிரதிஷ்டை செய்து  குங்குமம் அருகம் புல் வைத்து விக்னேஸ்வர பூஜை செய்து சோடச நாமங்களைச் சொல்லி நானாவித பத்ர பரிமள புஷ்பங்களையும் நிவேதனத்தையும் சமர்ப்பித்து வடக்கில் - யதாஸ்தானத்தில் பிரதிஷ்டாபயாமி செய்த பிறகு --  சேர்ப்பித்த பிறகு, திருவிளக்குப் பூஜையை ஆரம்பித்தோம்.

புதன், 18 மே, 2016

பூக்களோ பலவிதம் .. ஒவ்வொன்றும் ஒரு விதம்.

விதம் விதமாகப் பூத்திருக்கும் பூங்கொத்துகள் லால்பாகிலிருந்து இங்கே.


ஞாயிறு, 15 மே, 2016

தாயுமானவனின் வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் எங்கெங்கும் எப்போதும் என்னோடு.

மிக மிக அருமையான நூல்கள் மூன்றை இந்த வாரம் படித்தேன். அம்மூன்று நூல்களும் நம் வலையுலகப் பிதாமகர் விஜிகே சாரின் நூல்கள்தாம்.திருச்சிராப்பள்ளியில் இருக்கும் மிகச் சிறந்த எழுத்தாளர்.

திரு விஜிகே குழந்தையைப் போன்ற சுபாவம் உள்ளவர், மிக இனிமையானவர், இன் சொற்களால் உரியவர்களைப் பாராட்டத் தயங்காதவர், நேர்மையானவர், தான் நினைத்ததை அடுத்தவர் புண்படாவண்ணம் தெரிவிப்பதிலும், கருத்துக்களைக் கோர்வையாகச் சொல்லிச் செல்வதிலும் வல்லவர், பின்னூட்ட வள்ளல், சந்தோஷச் சிகரம், என்று இன்னும் என்ன என்ன நற்பண்புகள் உண்டோ அனைத்தையும் அவருக்கு வழங்கலாம்.

அநேகமாக அனைத்துப் பதிவுகளிலும் அவரது பின்னூட்டம் இருக்கும். அநேக பதிவர்களை  ஊக்குவித்தவர், தன்னுடைய இடுகைகளில் மட்டுமல்ல பின்னூட்டங்களிலும் ஒருவரை மதித்து உரையாடி உரிய பதில் அளிப்பவர் நம் மதிப்பிற்குரிய விஜிகே சார் அவர்கள்.

முதன் முதலாக வலையுலகத்தில் போட்டி நிகழ்த்தி சொன்ன காலகட்டத்தில் இடுகைகளையும் போட்டியையும் வெளியிட்டு உரிய நபர்கள் கொண்டு மதிப்பீடு செய்ய வைத்து  பரிசுப் பணத்தை வழங்கியதோடல்லாமல் அவர்களின் புகைப்படத்தோடு அதைத் தன் வலைத்தளத்திலும் போட்டுக் கௌரவித்தவர். 

இவர் தனது சஷ்டியப்த பூர்த்தி விழாவில் வானதி பதிப்பகத்தார் வெளியிட்ட மூன்று நூல்களை இங்கே மதிப்பீடு செய்து சொல்வதில் மகிழ்கிறேன்.

நேரக் குறைவு காரணமாக ஏதேனும் விட்டுப் போயிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். முடிந்தவரை சுருக்கமாகவும் சுவையாகவும் கூறிச் செல்ல விழைகிறேன்.

மூன்று நூல்களும் இந்தக் கோடைக்கு ஏற்ற முக்கனிகள்.


முதல் நூல் தாயுமானவள். இதில் 13 கதைகள்.

சனி, 14 மே, 2016

சாட்டர்டே போஸ்ட். ஆணென்ன பெண்ணென்ன , கார்ப்பரேட் யுகம் பற்றிக் கருணாகரன்.

பெ. கருணாகரன் 
புதிய தலைமுறையின் இணையாசிரியர், அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின என்ற நூலின் ஆசிரியர், இன்னும் சில கவிதை, கதை , கட்டுரை நூல்கள் எழுதியவர் , பல்வேறு இலக்கிய விருதுகள்  வாங்கியவர் என்பதையெல்லாம் விட முகநூலில் எனது மதிப்பிற்குரிய நண்பர் கருணாகரன்.  இவரது தினப்படி போஸ்டையும் கர்ணாவின்  ( மழைக் கவிதை ரொம்ப ஸ்பெஷல் ) கவிதைகளையும் அவ்வப்போது படிப்பதுண்டு. சினிமாப்பாடல் மெட்டுகளில் உடனடியாகப் பாடல் இயற்றும் இன்ஸ்டண்ட் கவிஞர் !

சிரியஸ் மற்றும் சீரியஸான விஷயங்களையும் அநாயாசமாகத் தொட்டுச் செல்லும் இவரது எழுத்து. பதின் பருவப் பிள்ளைகளின் பிரச்சனையாகட்டும், இணைய உலகப் பயன்பாடாகட்டும் இயற்கைப் பேரிடராகவோ, அரசியல் அக்கப்போராகவோ இருக்கட்டும் இன்னும் பலப்பல விஷயங்களையும் தன்னுடைய பாணியில் தருவதில் தனித்துவமிக்கவர்.  மிக எளிமையானவர், மிக இனிமையான எழுத்துக்கும் சொந்தக்காரர்.  நேர்பட உரைப்பதில் சிறந்தவர்.

இவரிடம் நமது வலைத்தளத்துக்காக சாட்டர்டே போஸ்ட் ஒன்று எழுதித்தரும்படிக் கேட்டவும் அரசியல் நிலவரங்களால் அரக்கப் பரக்க வேலை செய்து கொண்டிருக்கும் இந்நிலையிலும் நட்புக்காக இதை எழுதிக் கொடுத்துள்ளார். மிகச் சீரிய சிந்தனை ஆனால் முடிவில் எனது கருத்தையும் சொல்கிறேன் கருணா.

/// கருணா, இன்று உங்கள் சிந்தனையில் இருக்கும் ஒரு விஷயத்தை முகநூலில் பதிவிடாமல் எனக்காக என் வலைத்தள சாட்டர்டே போஸ்டுக்குத் தாருங்கள். இப்பவே. :) ///

நாலு பாரா போதும் ப்ளீஸ் எனக் கேட்டுக் கொண்டவுடன் எட்டுப் பாராவே எழுதி அனுப்பி விட்டார். நன்றி கருணா.

வெள்ளி, 13 மே, 2016

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்

அட்சய திரிதியை ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள் :-

1.மலாய் சம்சம்
2.சந்தேஷ்
3.தஹி குஜியா
4.ஸ்டஃப்ட் குல்சா
5.பட்டர் குக்கீஸ்
6.தயிர் சேமியா
7.தேங்காய் சேவை
8.ட்ரை கலர் பனீர் டிக்கா.
9.தேங்காய் சம்பல்
10.அரிசிப் பாயாசம்

1.மலாய் சம்சம்

தேவையானவை :-
பனீர் – 2 கப், சர்க்கரை – 2 கப், தண்ணீர் – 5 கப், குங்குமப்பூ – 2 சிட்டிகை. மலாய் செய்ய :- பால் 2 கப், சர்க்கரை – 2 கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, பிஸ்தா, பாதாம் – தலா 10.

செய்முறை:-
பனீரை உதிர்த்து நன்கு மென்மையாகப் பிசைந்து ஓவல் வடிவத்தில் உருட்டவும். சர்க்கரையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை குங்குமப்பூ போட்டு நன்கு கொதிக்க விடவும். பாகு பதம் வந்ததும் உருட்டி வைத்த பனீரை மெதுவாகப் போட்டு நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரம் கழித்து தீயைக் குறைத்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது பனீர் இருமடங்காக உப்பி வெந்திருக்கும். திரும்ப மூடியைத் திறந்து கொதிக்க வைத்து இறக்கி ஆறவிடவும். மலாய் செய்ய பாலைக் கொதிக்க விடவும். பாதியாகக் குறுகியதும் சீனியைப் போட்டு நன்கு சுண்டியதும் ஏலத்தூள் சேர்த்து இறக்கவும். பனீர் ஆறியதும் இரண்டாக வெட்டி மலாயை வைத்துப் பொடியாக அரிந்த பாதாம் பிஸ்தா குங்குமப்பூவைத் தூவி மடித்துப் பரிமாறவும்.

வியாழன், 12 மே, 2016

பிகேஆரும் இண்டர்காமும். :-



பிகேஆரும் இண்டர்காமும். :-


கணவரின் பணி நிமித்தமும் ஊர்சுற்றிப் பார்க்கவும் நிறைய மாநிலங்களுக்குச் சென்றபோது ஹோட்டல்களில் தங்க நேர்ந்ததுண்டு. இந்தத் தொடரில் அப்படி நான் சென்று வந்த ஹோட்டல்களைப் பற்றிய மதிப்பீட்டை எழுதலாம் என நினைக்கிறேன்.

இளமைத்தமிழ் போட்டிகள்.

முகநூல் நண்பர் திரு. ராஜு ரமேஷின் பக்கத்தில்  திரு பாலு மணிமாறன் அவர்கள் பகிர்ந்திருந்தை இங்கே போட்டிருக்கிறேன். பங்குபெறுங்க. பரிசு பெறுங்க.
 
////சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம், காணொளி போட்டிகளோடு இளமைத்தமிழ்.காம். மாதம்தோறும் $450 ரொக்கப்பரிசு! உங்கள் பிள்ளைகளையும், உங்களுடைய நண்பர்களின் பிள்ளைகளையும் பங்கேற்கச் சொல்லி ஊக்கமூட்டுங்கள்! நன்றி!!
www.ilamaithamizh.com



செவ்வாய், 10 மே, 2016

முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்.

முளைப்பாரி தயாரித்தல்:- நவதானியங்களை திருமணத்துக்கு இரு நாட்கள் முன்பே ஒரு செம்புத் தவலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறப் போடுவார்கள். 

பாரடைஸ் லாஸ்ட் & பாரடைஸ் ரீகெயின் - கம்பனும் ஜான் மில்டனும். - இராமகிருஷ்ணானந்தா.

/////இன்று (7-5-2016) அன்று காரைக்குடி கம்பன் கழகத்தின் மே மாதக் கம்பன் திருவிழா மாலை ஆறுமணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமிகு கவிதா அவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் காரைக்குடி கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இவ்விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பணிகள் பற்றிச் சிறப்புடன் உரைத்தார். சந்திர மண்டலத்தில் மனிதன் செல்லும் காலம் வந்தால் அந்தக் காலத்தில் தமிழ் அமைப்பு ஒன்று அங்குத் தொடங்கப்பெற்றால் அது காரைக்குடி கம்பன் கழகத்தின் கிளைக் கழகமாகத் தான் இருக்கும் என்றார். அந்த அளவு இலக்கியப் பணிகளைக் காரைக்குடி கம்பன் கழகம் ஆற்றிவருகிறது. என்றார் அவர். ////

திரு வேதானந்தா ஓமெனும் பிரணவம் ஒலிக்கப் பேசியது இன்னும் கணீரென்று காதுக்குள் ஒலிக்கிறது. நவநீத கைவல்யம் என்னும் தலைப்பில் திருக்கோயிலூர் மடத்தில்  உரையாற்ற வந்திருந்த வேதானந்தா சுவாமிகள்,  தவத்திரு ஊரன் அடிகள், சின்மயா மிஷனின் துறவி திரு இராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் ஆகியோர் தங்கள் உரைகளால் நேற்றையப் பொழுதைச் சிறப்பித்திருந்தனர்.

திங்கள், 9 மே, 2016

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப். - கோகுலம் GOKULAM KIDS RECIPES.

கருவேப்பிலை கொத்துமல்லி புதினா ிர் சூப்:-

தேவையானவை:-
(ஒரு கட்டு கருவேப்பிலை, ஒரு கட்டு புதினா, ஒரு கட்டு கொத்துமல்லியில்) ஆய்ந்த தளிர் இலைகள் மட்டும். – தலா ஒரு பெரிய கைப்பிடி. அளவு எடுத்து அலசி வைக்கவும், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பச்சைமிளகாய் – 1 , வேகவைத்த துவரம்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், பட்டை – 1, இலை – 1, கல்பாசிப்பூ -1, சோம்பு -1/2 டீஸ்பூன், சீரகம் – ½ டீஸ்பூன், மிளகு – ½ டீஸ்பூன், மஞ்சள் பொடி – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன், எண்ணெய் – 1 டீஸ்பூன், பால் – 1 டேபிள் ஸ்பூன், மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்

சனி, 7 மே, 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். - ஸ்கூல்பையனின் தொட்டால் தொடரும் குறும்பட அனுபவங்கள்.


கார்த்திக் சரவணன் சென்னையில் வசித்து வருகிறார். ஸ்கூல் பையன் என்றவுடன் ஸ்கூல் போறவர்கிட்ட பேட்டி எடுத்துட்டேன்னு நினைக்காதீங்க. இவர் திருமணமானவர். அன்புக்கும் ஆசைக்குமா ரெண்டு சுட்டி குட்டீஸும் இருக்காங்க. இவர் முகநூல் நண்பர் மட்டுமல்ல. வலைப்பதிவ சகோதரரும்கூட.

அவர் முதன் முதலில் சென்றவருடம் ஒரு குறும்படம் எடுத்துப் போட்டிருந்தார். தொட்டால் தொடரும் குடிப்பழக்கம் பற்றி மிகச் சிறப்பாகச் சொல்லப்பட்டிருந்த படம் அது. அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அந்தக் குறும்படம் எடுத்த அனுபவங்களை எழுதித்தரச் சொன்னேன்.

 மனுஷன் உடனேயே எழுதித்தந்துட்டாரு. ஒரு ப்லாகரோட கஷ்டம் இன்னொரு ப்லாகருக்குத்தான் தெரியும்கிறது எவ்ளோ உண்மை  ( அதுதாங்க புதுசு புதுசா போஸ்ட் போட்டு ப்லாகை உயிர்ப்போட ஓடியாட விடுறது :) ப்லாகர்ஸ் ஆர் ஆல்வேஸ் ப்லாகர்ஸ். இத ஃபேஸ்புக்குல எல்லாம் போடாம சுட சுட ப்லாகுல சுட்டுப் போட்டுக் கொடுத்ததுக்கு தாங்க்ஸ் சரவணன். சரி ஸ்கூல் பையன்னு ப்லாக் பேர் வைச்சிக்கிட்டதுக்காக இன்னும் ஸ்கூல்பேகை முதுகைவிட்டு இறக்காம இருக்கது கஷ்டமாயில்ல :) :) :)

////கார்த்திக் உங்க குறும்பட அனுபவங்களை என் ப்லாகுக்காக எழுதி அனுப்ப முடியுமா
சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன். அதுக்காக

இதுல ஒவ்வொரு ஃபோட்டோவையும் க்ளிக் பண்ணீங்கன்னா அதுக்கு பக்கத்துல இருக்க லிங்க் ல அவங்க எழுதியதைப் படிக்கலாம்.  :) https://www.facebook.com/thenulakshman/media_set?set=a.859819344032079.1073741842.100000120633183&type=3

ஜாலிகார்னர் & சாட்டர்டே போஸ்ட் என்று ஒன்று போடுறேன் அதுக்கு நீங்க ஒரு கட்டுரை வடிவில் உங்க குறும்பட அனுபவங்களை எழுதி இங்கே போடுங்க எடுத்துகுறேன் சனிக்கிழமை அதாவது நாளை போடணும். இப்ப ஃப்ரீயா இருந்தா எழுதி அனுப்ப வேண்டுகிறேன் உங்க புகைப்படமும், ஆர்டிகிள் சம்பந்தப்பட்ட புகைப்படங்களும் வேணும்.
முடிந்தால் மாலைக்குள் அனுப்புங்க

அடடா, இப்போ முடியாதே... எட்டு மணிக்குள் அனுப்பினால் போதுமா? அப்பிடின்னு கேட்டவர் நைட்டு டாண்ணு எட்டுமணிக்கு அனுப்பிட்டாரு. 
 
பதில் :- அதிகப்படியான சொந்த அனுபவங்கள் மற்றும் சில சிறுகதைகளையே வலையேற்றியிருக்கும் எனக்கு குறும்படம் பற்றிய அனுபவங்களைப் பகிரக் கேட்டிருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மற்றொரு பக்கம் வியப்பாக இருக்கிறது. எடுத்திருப்பது ஒரே ஒரு குறும்படம். அதை குறும்படம் என்று சொல்வதைவிட ஒரு சின்ன கான்செப்ட் என்று சொல்வதே தகும். இயக்குநர் கேபிள் சங்கர் தனது “தொட்டால் தொடரும்” படத்துக்கான வெளியீட்டுக்கு முன்னர் ஒரு குறும்படப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார். அதாவது, “தொட்டால் தொடரும்” என்ற தலைப்புக்கு ஏற்றவாறு ஒரு நிமிடத்தில் இருக்கவேண்டும் என்பதே.

வெள்ளி, 6 மே, 2016

காதல் வனம் – பாகம் - 4. - காட்டுத்தீயும் காதல் நோயும்.



காதல் வனம் – காட்டுத்தீயும் காதல் நோயும்.

ஐயையோ ஓடியாங்க ஓடியாங்க என்ற மாண்பனின் குரல் கேட்டு மொத்த பங்களாவும் விழித்துக் கொண்டது. அவன் மனைவி பொம்மியும் இன்னுமுள்ள எஸ்டேட் பணியாளர்களும் சத்ிட்டி அங்கே இங்கே ஓடிக்கொண்டிருந்தார்கள்.

கைபேசியை சார்ஜரில் இருந்து எடுத்துப் பார்த்த சாம் வேகமாக எழுந்தார். ஜன்னல் திரைச்சீலை விலக்கிக் கண்ணாடியின் மூலம் பார்த்தார். செக்கச் செவேலென இது என்ன எரிமலைக் குழம்பு வழிந்து ஓடிவருகிறதா. ஆங்கிலப் படங்களைப் பார்ப்பது போல ஜன்னல் எல்லாம் ஒரே செங்காவி நிறம், புகை. வெக்கை அனிக்கத் ுவங்கி இரந்து. படபடவென மாடியிலிருந்து கீழிறங்கத் துவங்கினார். உடன் விழித்த தேவியும் எழுந்து ஓடினாள்.

ஓங்கி உயர்ந்திருந்த தேவதாரு மரங்களும், யூகலிப்டஸ் மரங்களும் மூங்கில் மரங்களும் தீப்பிடித்துச் செவ்வண்ணமாய் எரிந்துகொண்டிருக்க காஃபிக்கொட்டைச் செடிகளும், ஏலச்செடிகளும் பக்கத்திலிருந்த வெள்ளை மிளகாய்ச் செடிகளும் காய்ந்து கருகிக் கொண்டிருந்தன

சர்வெண்ட் குவார்டர்ஸில் அன்று வாரக் கடைசி நாளாதலால் வீட்டுக்கு வெளியில் தீமூட்டிக் குளிர்காய்ந்துவிட்டு உள்ளே சென்றபின் அடித்த காற்றில் பற்றிய தீப்பொறி அது. ..ரோஜாக்களும் கினியாக்களும் டேலியாக்களும் கூட அனலலையில் வாடி விழுந்துகொண்டிருந்தன.

மாண்பனும் பொம்மியும் தாங்கள்தான் காரணகர்த்தாக்கள் என்று தெரிந்தபின்னும் யாரெனத் தெரியவில்லை என்று பம்மிப் பயந்த குரலில் கூறினார்கள்.

அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.

741. Populism - a worth reading article written by Jemo in 15 th Apr. Dinamalar.

742. யார் இந்த பெரியவர்.. ஏன் எல்லாரும் அவர் மாதிரி அவதாரம் எடுத்து ரெண்டு ரெண்டு தரம் வந்து படுத்துறீங்க.. எனி ரீசன்..:)

743. மறைக்க மறைக்க
முகம் இருளடைந்துவிடுகிறது
பொழுது சாயச் சாய
பொய்ச்சவுக்கைகள் விரித்தாடும்போது
சூரியனும் கீறல்தோற்றத்தோடு.

744.நல்லவராய் இருப்பவர்களுக்கெல்லாம் சிலுவை உண்டு.. கல்லறையின் மேல் பாறைகளும் உண்டு.. மலரைப் போல அவர் பூத்தெழுந்தார்..

#நம்பிக்கை கொள்வோம்.. நம்மின் நன்மைகள் நம்மை விட்டு விலகுவதுமில்லை. நம்மைக் கைவிடுவதுமில்லை.

745. நாம் சிலருக்கு வள்ளலாக இருக்கிறோம். நமக்கு சிலர் வள்ளலாக இருக்கிறார்கள்.

#PAY IT FORWARD..

வியாழன், 5 மே, 2016

காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

பழனி பாத யாத்திரைக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட காவடிகள் ஊர்வலம் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் இவை.தைப்பூசத்துக்குக் காரைக்குடியில் இருந்து நகரத்தார் காவடி, நாட்டார் காவடி இரண்டும் புறப்படும். பொங்கலை ஒட்டி இந்நிகழ்வு இருக்கும்.

அரண்மனைப் பொங்கல் ஐயா வீடு  என்று சொல்லப்படும் ஒருவர் வீட்டில்தான் காவடிகள் வைக்கப்பட்டிருக்கும். அங்கே இருந்து புறப்பட சில நாள் முன்பே காவடியைப் பெற்று வீட்டுக்குக் கொண்டு வந்து காவடி பூசை செய்து விநாயகர், சாமி வீடு , குலதெய்வ வழிபாடு எல்லாம் செய்து அதன் பின் காவடியை எடுத்துத் தோள் மேலேந்தி வீட்டில் சொல்லிக் கொண்டு அனைவரும் ஓரிடத்தில் கூடி பூசை செய்து அதன் பின் ஊர்வலம் வந்து அனைத்துக் கோயில்களிலும் வணங்கி பூசை செய்து காவடி புறப்படும். நேர்த்திக்கடனைப் பூர்த்தி செய்ய வருடந்தோறும் காவடி எடுப்பவர்கள் பெருகிவருகின்றார்கள்.

வீட்டில் நடக்கும் காவடி பூசை விமர்சையானது. கார்த்திகை வேல் பூசை போல காவடிக்கும் பூசை. மதியம் 7 காய்கறியுடன் பாயாசம் வடை அப்பளம் வைத்து  ஊரோடு விருந்து நடைபெறும்.  இதில் பாடப்படும் பாடல்கள் மன எழுச்சியையும் புத்துணர்வையும் தூண்டுவன. எனர்ஜி பூஸ்டர்ஸ் எனலாம். விருந்து முடிந்ததும் மாலை பானக பூசை செய்து நிறைவேறும்.

காவடிகள் வில்லிலிருந்து அம்பு போல் புறப்பட்டுச் செல்லும் காட்சி காணக் கண்கோடி வேண்டும். இடும்பன் சிவகிரி, சக்திகிரி மலைகளைச் சுமந்து சென்றபோது சுமையைப் பழனியில் முருகனின் திருவிளையாடலால் இறக்கி வைத்தபின் எடுக்க இயலவில்லையாம்.   வாழ்க்கையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகச் சுமந்து பழக இறைவனின் அருள் வேண்டியே காவடி எடுக்கப்படுகின்றது. பக்தர்கள் தம் பக்தியைச் சுமந்து இறைவனிடம் சமர்ப்பிக்கின்றனர்.
அரண்மனைப் பொங்கல் குடும்பத்தார் அனைவருக்கும் விபூதி வழங்கியபடி செல்லும் காட்சி. அக்குடும்பத்தின் இளம் சிறார்களும் பங்கேற்பார்கள்.  காவடிக்காரர்கள் நடைப்பயணம் முழுவதும் இடையில் உடுத்திய வேட்டி மட்டும்தான் உடை. சட்டை அணிய மாட்டார்கள்.

புதன், 4 மே, 2016

மூன்று நகைச்சுவை நூல்கள் - ஒரு பார்வை.


 வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.

என்பது போல் எண்ணங்களால் உயர்வோம் மகிழ்வால் ஒன்றிணைவோம் என்பதைச் சொல்லும் 20 கட்டுரைகள் கொண்ட நூல் இது. தினத்தந்தி அதிபர் திரு. சிவந்தி ஆதித்தன் முன்னுரை அளித்துள்ளார்.

அங்கங்கே திருக்குறள், திருவருட்பா, நான்மணிக் கடிகை, இனியவை நாற்பது, சிலப்பதிகாரம், நாலடியார், திருவாசகம், தேவாரம், ஆகியவற்றிலிருந்தும் அப்பர் பெருமான், சம்பந்தர், தொண்டரடிப்பொடி ஆழ்வார், விவேகானந்தர், கணியன் பூங்குன்றன், பாரதி, ஔவையார், வள்ளுவர், பட்டினத்தார், பிசிராந்தையார், குருநானக்,  கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரை மேற்கோள் காட்டியும் சிறப்பாக எழுதி இருக்கின்றார்

மொக்கும் மலரும்.

லால் பாகில்  பூத்த மொக்கும் மலரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...