எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 செப்டம்பர், 2016

அவ்ளோ மோசமாவா ஆயிடுச்சு காரைக்குடி.. ?

காரைக்குடியில் தற்போதெல்லாம் அடிக்கடி வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்று வருவதாகவும் அதற்காக காரைக்குடி நகர் வாழ் பொதுமக்களுக்குக் காவல்துறையின் அறிவுரைகளையும் படிக்க நேர்ந்தது.

சில வருடங்கள் முன்பு தனியே வீதியில் ஆறு மணிக்கு மேல் செல்லும் பெண்களின் - 414. சாகக் கொடுத்த ஆச்சிகளின் ( விதவைப் பெண்களைக் குறிப்பிடுவார்கள் இப்படி )   ( அநேகமாக முதியவர்கள் ) 415.கழுத்துச் சங்கிலியைப் பறித்துச் செல்லும் அவலம் நிகழ்ந்தது. இங்கே பெரும்பான்மையான விதவைப் பெண்டிர் ஒற்றைத் தங்கச் சங்கிலியாவது அணிந்திருப்பர். அவர்களிடம் பறித்துச் சென்றவர்கள் கேவலமானவர்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த உறவினர் - சுமங்கலிப் பெண்மணி கோயிலில் இருந்து வீட்டிற்கு வருவதற்குள் லேசான இருட்டில் அவரது கழுத்துத் 416. தாலிச் சங்கிலியை யாரோ பறித்துச் சென்றுவிட அதன் பின் துயரத்தில் தோய்ந்து அவர் மடிந்தே போனார். 



சென்ற சில வாரங்களுக்கு முன் ஒரு போலீஸ்காரர் வீட்டிலேயே திருடர்கள் புகுந்து கைவரிசையைக் காட்டியதாகப் பத்ரிக்கையில் படித்தேன். சூடாமணி நகர் என்று ஞாபகம். தனி வீடுகளில் வசிப்போருக்கு அச்சம் தரும் செய்தியாக அது அமைந்தது என்றால் மிகையில்லை.

இன்றைய லெவலில் ஃப்ளாட்டுகளில் வசிப்போருக்கு செக்யூரிட்டிகள் இருப்பதால் ஓரளவு பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே அதிகமான அளவில் வயதானோர் பாரம்பரிய செட்டிநாட்டு வீடுகளை விற்றுவிட்டு ஃப்ளாட்டுகளில் குடிபுகுகின்றனர்.

காவல் துறையின் அறிவிப்பைப் பார்த்தால் நகை ஏன் அணியவேண்டும் அதை பாங்க் லாக்கரிலேயேதான் வைக்கணும் எனத் தோன்றும். மேலும் ஊருக்குச் செல்வதானால் வீடுகளில் லைட் போட்டுப் போக சொல்றாங்க. அல்லும் பகலும் லைட் எரிந்தாலும் திருடர்களுக்கு சந்தேகம் வாராதா ?

சென்ற வாரம் பால் தருவதாக ஒரு நபர் ஒரு ப்ளாட் குடியிருப்பு வாசிகள் அனைவரிடமும் பேரும் போன் நம்பரும் வாங்கிச் சென்றுள்ளார். கேட்டால் கண்ட்ரமாணிக்கத்திலிருந்து தூய பசும்பால்,  எருமைப்பால் கொண்டு வந்து தருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார். ஒரு மாதமாகியும் அவர் வராததால் அந்த ப்ளாட்டில் குடியிருக்கும் தோழி பேரையும் ஃபோன் நம்பரைக் கொடுத்துவிட்டேனே என வருந்தினார். ஏன் கொடுத்தாய் எனக் கேட்டதற்கு அதில் இன்னும் சிலரும் பேரும் ஃபோன் நம்பரும் எழுதி இருந்ததாகக் கூறினார். அது அந்த ஃப்ளாட்டில் இருந்தவர்கள் ஃபோன் நம்பர்தானா என்பதையும் அவரால் உறுதியாகக் கூறமுடியவில்லை. என்னே அசட்டுத்தனம் , இனி இப்படிச் செய்யாதே எனக் கணவர் திட்டினாராம்.

ஆறு மணிக்கு மேலே மெயின் ரோடுகளில்தான் லைட் எரிகிறது. அவ்வளவாக நடமாட்டமும் இல்லை. குட்டி சைட் ரோடுகளிலும் சந்துகளிலும் மங்கிய வெளிச்சம்தான். வீட்டு ஆண்களோடு வண்டியில் சென்றால் பயமில்லை தனியாகச் செல்வோர் தெய்வத்தின் துணையோடு எங்கும் போய் வரலாம்.

காவல்துறை எச்சரிக்கைக்கு முன்னரே வியாபாரம் செய்யும் உறவினர் சிலர் வீடுகளில் சிசிடிவி காமிரா பொருத்தி இருக்காங்க.

என்னவோ போங்க. அமைதிப் பூங்காவான காரைக்குடி கூட அச்சுறுத்தும் இடமாக மாறி வருவது வருந்தத்தக்கது.


11 கருத்துகள்:

  1. சங்க காலத்தை விடுங்கள். சமீப காலத்தில் தமிழ் வளரச் சேவை புரிந்தோர் பலர் பிறந்த மற்றும் வாழ்ந்துவரும் நிலத்தில் தமிழ் அறிவிப்பில் இவ்வளவு பிழைகளா?

    பதிலளிநீக்கு
  2. வருத்தத்திற்கு உரிய செய்தி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. காரைக்குடி மட்டுமல்ல, பல இடங்கள் அவ்வாறே.

    பதிலளிநீக்கு
  4. காரைக்குடி மட்டுமல்ல பெரும்பாலான இடங்கள் இன்று அப்படித்தான் மாறி வருகிறது. வளர்ச்சி எல்லா மட்டங்களிலும் ஒரேமாதிரியாக இருந்தால் இப்படி நடப்பது மிகவும் குறைந்துவிடும். ஆனால், நம் நாட்டில் வளர்ச்சி என்பது அப்படியில்லை.
    மேலும் தற்போது வயிற்றுக்காக திருடுவதுபோய் வசதியான வாழ்க்கைக்காக திருடுவது அதிகரித்திருக்கிறது. திருடுபவர்களும் மெத்தப்படித்தவர்கள். நம் கல்வியும் சினிமாவும் 'எப்படியாவது பணம் சம்பாதி..!' என்று தவறான பாதையைத்தான் இளைஞர்களுக்கு காட்டியிருக்கிறது.
    வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  5. பெரும்பாலான ஊர்களில் இதே நிலை தான்.

    தேவைகள் அதிகமாகிவிட்டது - பல இளைஞர்கள் திருடுவதை தொழிலாகவே செய்து வருகிறார்கள்....

    பதிலளிநீக்கு
  6. காரைக்குடி, தேவகோட்டைப் பகுதியில் திருட்டு இப்போது அதிகமாகிவிட்டது. தேவகோட்டையில் ஆளில்லாத வீட்டில் வந்து 2 மூணு நாள் தங்கி சமைத்துச் சாப்பிட்டு திருடிச் சென்ற சம்பவம் எங்க சொந்தக்காரர் வீட்டில் நிகழ்ந்தது. என் நண்பர் ஒருவருடன் பேசும்போது வீட்டைப் பூட்டிட்டு வெளிய போனா பேன் போட்டு வச்சிட்டுப் போனால் அந்த சத்தத்தை வைத்து உள்ளே வருவதில்லை.... இல்லை என்றால் புகுந்துருவானுங்க என்றார்.

    காரைக்குடியில் நாங்க குடியிருந்தபோது என் மனைவியின் சித்தி பெண் (காரைக்குடியில்தான் இருக்காங்க) டியூசன் போய்விட்டு வரும்போது பைக்கில் பின்னால் வந்து செயினைப் பிடித்து இழுக்க, அது சைக்கிளை விட்டு செயினைப் பிடிக்க, கீழே விழுந்தது செயின் அதன் கையில் அவர்கள் ஒடிவிட, வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண்கள் ஓடிவந்து தூக்கி அனுப்பி வைத்தார்கள். அதன் பின் டியூசன் செல்லவில்லை என்பது வேறு கதை.

    திருட்டுக்கள் அதிகமாயிருச்சு....

    பதிலளிநீக்கு
  7. காரைக் குடியில் பழமையான வீடுகளை விற்றுப் போவதால்தானோ மார்க்கெட்டில் அரிதான மர வேலைப் பாடுள்ள கதவுகளும் சன்னல்களும் கிடைக்கின்றன.சில பொக்கிஷங்கள்

    பதிலளிநீக்கு
  8. //தனியாகச் செல்வோர் தெய்வத்தின் துணையோடு எங்கும் போய் வரலாம். // தெய்வத்திடமே அனுப்பிகிறார்களே ?! பாவிகள்.

    பதிலளிநீக்கு
  9. ஆம் ராகவேந்திரர் சார். என்ன செய்வது.. ஹ்ம்ம். கருத்துக்கு நன்றி

    ஆம் ஜெயக்குமார் சகோ

    ஆம் ஜம்பு சார்

    ஆம் செந்தில் சகோ

    ஆம் வெங்கட் சகோ

    அடக் கடவுளே. அவ்ளோ கொடுமையா தேவகோட்டையில்.. பாதுகாப்பா இருக்கவேண்டி இருக்கு குமார் சகோ

    ஆம் பாலா சார். உண்மை

    ஆமாம் பாஸ்கர் சகோ ஹ்ம்ம் :(

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  11. the position is the same in all places in tamil nadu other state rowdies mostly indulge in chain snatching

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...