எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 26 நவம்பர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர். பெயிண்ட் பண்ணக் கற்றுத் தரும் விசுவநாதராவ். !

 சுமாரா 2005 லேருந்து வலைப்பூவுல எழுதிக்கிட்டு இருக்கார் நண்பர் விசுவநாத். ஆனா போனவாரம்தான் ஒரு பின்னூட்டம் மூலம் அவரோட ஹாஸ்ய உணர்வைத் தெரிஞ்சிக்கிட்டேன். மஹாராஷ்ட்ரால வசிச்சாலும் தாய் மண்ணையும் மொழியையும் மறக்காம ப்லாக் எழுதிட்டு இருக்கார் .

ப்லாகில் போய் பார்த்தா மனுஷன் நாலடியார், கபீர்தாஸ், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை, ஆண்டாள் திருமொழி, அருணகிரிநாதர் திருப்புகழ், கீத கோவிந்தம், சுப்ரபாதம், நாச்சியார் திருமொழி, மதுராஷ்டகம், கந்தபுராணம், அய்யப்பன், பக்த ப்ரகலாதன் , சுதாமர், உத்தவ கீதை, அமர்நீதி நாயனார், மெய்ப்பொருள் நாயனார், கண்ணப்ப நாயனார், வள்ளி திருமணம், சிவபுராணம், ஏனாதி நாயனார், அரிச்சந்திரன், திருவாசகம், சுப்ரமண்ய புஜங்கம் என எல்லாவற்றுக்கும் எளிய முறையில் விளக்கம் அளித்திருக்கிறார். அத்தோடு மட்டுமல்ல. தான் வரைந்த தெய்வத் திரு உருவங்களையும் இணைத்திருக்கிறார். அரிய சேவை !! 

அதுனால அவர்கிட்ட அவரோட பெயிண்டிங் இண்டரஸ்ட் பத்தி சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டிருந்தேன். ிருவிளையாடல் ுமி சிவன் பாணியில் அவர் அனுப்பிய கேள்வி பதில் வடிவம் பார்த்து அசந்துட்டேன். செம !!! . யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். :)அப்புறம் ஒரு விம். யார் ுமி யார் சிவன்னு கேக்கக்கூடு. ஏன்னண்டுமே அவர்ான் :)


உங்களப்பத்தி கொஞ்சம் :



மேடம் உங்களுக்கு ராஜராஜ சோழன் தெரியுமா ?




ஓ ... அவரோட வம்சாவழியா நீங்க ?

இல்லீங்க, அவரு ஆண்ட தஞ்சாவூர்ல தான் வளர்ந்தேன்  படிச்சேன்.



பில்ட்-அப் கொஞ்சம் அதிகமாத்தா இருக்கு.

என்னபண்றது மேடம், பில்ட்-அப் குடுக்கலேன்னா யாரு கண்டுக்கமாட்டேங்குறாங்க ?



சரி என்ன பண்றீங்க ?

காலைல எந்திரிச்சிட்டா வேலைக்குப் போறது, அங்க போய் சும்மா ஒக்காந்திருக்கறது (பார்க்க: http://viswanathvrao.blogspot.in/2016/11/blog-post_11.html). மாலைல வீட்டுக்குத் திரும்பிவர்றது. சும்மா இருக்கும்போது ...



எப்போவுமே நீங்க சும்மாதானே இருக்கீங்க போலிருக்கு ?

யாரு இல்லேன்னாங்க, வீட்டுல அந்தமாதிரி சும்மா இருக்கும்போது - பெயின்டிங் பண்ணுவேன்



வாவ் பைண்டிங் ... அதைப்பத்தி கொஞ்சம் :

மேடம் நா ரெண்டு விதமாய்ப் பெயின்டிங் பண்ணிருக்கே, இதுவரைக்கும்.



சுமாரா எவ்ளோ பெயின்டிங் பண்ணிருப்பீங்க ?

நா பண்ண எல்லாப் பெயின்டிங்கும் சுமாராத்தா பண்ணிருப்பேன்;



இன்னும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க :

grid யூஸ் பண்ணி painting பண்ணிருக்கேன். சிம்பிளா யாரு வேணும்னாலும் பண்ணலாம், ரொம்ப ஈசி. பேப்பர் ல grid வரைஞ்சி, reference image மேலேயும் ஒரு சின்ன grid வச்சி, square by square காப்பி பண்றது.



காப்பி ?

சூடா ... ப்ளீஸ்;



அதில்லேங்க, அப்போ நீங்க காப்பி பண்றீங்களா ?

அட ரகுமான் காப்பி பண்றாரு, கமலஹாசன் காப்பி பண்றாரு, நா reference எடுத்து பேப்பர் ல grid வரைஞ்சி கலர் அடிச்சி, இவ்ளோ பண்றேன் நீங்க காப்பி ன்னு சொல்லிட்டீங்களே மேடம்.



சரி விடுங்க, சாம்பிள் ஏதாச்சு ?

2 சாம்பிள் கீழ கொடுத்திருக்கேன். professional ஆர்ட்டிஸ்ட் இல்லே பாருங்க. அதனால சுமாராத்தா இருக்கு.





ஒங்க அடுத்த டைப் பெயின்டிங் பத்திச் சொல்லுங்க ?

அது OHP ட்ராயிங் மேடம்.



OHP ன்னா over head projector ல யூஸ் பண்ணுவாங்களே, see -thru சீட், அதுவா ?

அதேதா மேடம். அதை நம்ப reference image மேல வச்சி, permanent marker யூஸ் பண்ணி ட்ரேஸ் பண்ணணும்.



அதாவது ...?

காப்பி பண்ணனும். போதுமா ? outline காப்பி பண்ணிட்டு ஒங்க இஷ்டத்துக்குப் பெயிண்ட் பண்ணிக்கலாம். ட்ராயிங் ஒரு சைடு பண்ணிட்டு, பெயின்டிங் இன்னொரு சைடு பண்ணலாம். For example, ஒரு பக்கம் மஞ்சள் அடிச்சிட்டு, அது காய்ந்ததுக்கப்புறம் அதுக்குமேலேயே சிகப்பு கலர் அடிச்சிட்டு, அடுத்தப்பக்கம் திருப்பிப் பாத்தீங்கன்னா மஞ்சள் மேல தெரியும். அதுக்குக் கீழ சிகப்பு தெரியும்.



சாம்பிள் பாருங்க :




சரி இதையும் தவிர வேறெதாச்சு யூஸ்புல்லா பண்ணுவீங்களா ?

யூஸ்புல்லா ன்னு தெரியாது, பட் கவிதை எழுதுவேன், சில பல போட்டிகளுக்குக் கதை எழுதிருக்கேன். முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. (அப்பாடா பரிசு கெடச்சுதா ன்னு கேக்க முடியாது, தப்பிச்சேன்);



எழுதுனதுல ஒரு கவிதை இல்லே கதை சொல்லுங்களேன் ?

3 சாம்பிள் லிங்க் தரே. பாத்துக்கோங்க (நம்ப லட்சணத்தை).






இன்னும் பல கவிதைகள், என்னோட ப்ளாக் ல இருக்கு. URL :http://viswanathvrao.blogspot.in/

நீங்க தெய்வங்களேயே நிறைய வரைஞ்சிருக்கீங்களே, மனிதர்களை வரையமாட்டீங்களா ?

மேடம், மண்ணுலகிலிருந்து மறையும் வரை, இந்த மனிதப் பதர்களை ....



வெயிட் வெயிட் இப்போ எதுக்கு டேக்-ஆப் ஆகுறீங்க, வரையமாட்டேன்னு சொல்லிட்டுப்போங்களே ?

அதில்லிங்க, இப்போ முருகனோட வேல் வளைஞ்சியிருந்தா அவரு கோச்சிக்க மாட்டாரு.கிருஷ்ணனுக்கு மயிலிறகு வைக்க மறந்துட்டா அவரு ஆப்ஜெக்ட் பண்ண மாட்டாரு, பிள்ளையாரை ஒங்கள மாதிரி ... சாரி என்ன ?



நா ஒன்னும் சொல்லலியே ?

ஏதாச்சு சொல்லுவீங்களோன்னு நெனச்சே;



சீக்கிரம் முடிங்க சார்.

இப்போ பிள்ளையாரை ஒல்லியா வரைஞ்சா அவரு கனவுல வந்து பயமுறுத்தப்போறதில்லே. அதனால தான் கடவுளையே வரைகிறேன். இன்னொரு காரணம் கடவுளைக் காட்சிப் பொருளாக்கி வரைந்த என் ஓவியத்தைப் பார்த்துட்டு 'நல்லால்லே'ன்னு யாரு சொல்லமுடியாதில்ல. ஹிஹிஹி


சரி முடிச்சுக்கலாமா ?

அட இதுக்கெதுக்குங்க தாங்க்ஸ் லா சொல்லிக்கிட்டு ?



நா எப்போங்க தாங்க்ஸ் சொன்னே ?

சொல்லுவீங்கன்னு நெனச்சே;



சும்மா தானே இருக்கீங்க, கொஞ்சமாச்சும் உங்களுக்கு வேலை கொடுக்கலாம்னு நெனச்சே, அவ்ளோதான்;

ஓகே மேடம், நன்றி. வணக்கம். வந்தனம். எல்லாரும் நலமோடிருக்க வேறொன்றுமறியேன் பராபரமே.


டிஸ்கி: - வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை இதப் படிச்சி சிரிச்சு சிரிச்சு பல்லெல்லாம் சுளுக்கிருச்சு. பேசாம இத செவ்வாய்க்கிழமை போஸ்ட்னுபோட்டு இன்னிக்கே போட்டுறலாமான்னு நினைச்சேன். :) 

உங்க கேள்வியும் பதிலும் பயங்கர ஹாஸ்யம் விசு சார். டிவி சீரியல் எல்லாம் பிழியப் பிழிய அழ வைச்சிட்டு இருக்கு.சிரிக்க வைக்கிறதுதான் ரொம்ப கஷ்டமான காரியம். அது ரொம்ப ஈஸியா கை வருது உங்களுக்கு. வாழ்த்துகள் விசு சார். எங்க சாட்டர்டேயை ஜாலிடேயா மாத்தினதுக்கு தாங்க்ஸ். பை த பை ஓவியங்களும் சூப்பர். :)  மஹாலெக்ஷ்மியும் வாராஹியும் ரொம்ப அற்புதம் ஒரு வேளை கலர்ல இருக்கதால கண்ணைக் கவர்றாங்களோ. 

கண்ணனும் கந்தனும் கூட அழகுதான். குழலும் வேலும் வைச்சிருக்கிற மேல் சாமிகளும் மேலாக இருக்காங்க. :) நன்றி விசு சார். உங்கள் பணி (EITHER WAY  ) தொடரட்டும். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு. :)


6 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரிய திறமையினை வளர்த்துவரும்
    திரு விசுவநாதன்அவர்களை அறிந்து கொண்டேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. பேட்டியில் ஆங்காங்கே உள்ள நகைச்சுவை உணர்வுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
    உதாரணமாக.....

    1) சுமாரா எவ்ளோ பெயின்டிங் பண்ணிருப்பீங்க ?
    நா பண்ண எல்லாப் பெயின்டிங்கும் சுமாராத்தா பண்ணிருப்பேன்;

    2) காப்பி ?
    சூடா ... ப்ளீஸ்;

    3) வெயிட் வெயிட் இப்போ எதுக்கு டேக்-ஆப் ஆகுறீங்க, வரையமாட்டேன்னு சொல்லிட்டுப்போங்களே ?
    அதில்லிங்க, பிள்ளையாரை ஒங்கள மாதிரி ... :)))))))))))))))))))))))

    4) நா எப்போங்க தாங்க்ஸ் சொன்னே ?
    சொல்லுவீங்கன்னு நெனச்சேன்

    தங்களுக்கும் பேட்டியளித்துள்ளவருக்கும் என் பாராட்டுகள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி மேடம், வாய்ப்பு தந்தமைக்கு.

    பதிலளிநீக்கு
  4. சிறப்பானதோர் பகிர்வு. திரு விஸ்வநாத் அவர்களுக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி விஜிகே சார். நான் ரசித்துச் சிரித்தவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியமைக்கு நன்றி ஹிஹி :)

    நன்றி விசு சார். ப்லாகிலேருந்து ப்லாகுக்குதானே . பத்ரிக்கையில் வந்தால் நன்றி சொல்லிக்கலாம் சார்.

    நன்றி வெங்கட் சகோ :)

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...