எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

காரைக்குடியின் அதலைக் கண்மாயைக் காப்பாற்றுவோம் - ஈதல் அறக்கட்டளை.

முகநூலில் திரு நாகப்பன் அவர்கள் (எனது மாமா ) பகிர்ந்திருந்த இதை ப்லாகிலும் பகிர்கிறேன். காரைக்குடியின் மிக மிக முக்கியமான விஷயம் அதன் தண்ணீர்.

எந்த ஊரில் எந்த ராஜாங்கத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு வந்தாலும் எவ்வளவுதான் பாப்புலேஷன் பெருகினாலும் காரைக்குடிக்கு வராது. காரணம் சம்பை ஊத்து. இந்தத் தண்ணீரின் காரணமாகவே காரைக்குடிக்கு வேலை நிமித்தம் வந்தவர்கள் வீடு வாங்கி செட்டில் ஆகிவிடுவதும் உண்டு.

அதே போல் சம்பை ஊற்றுத்தண்ணீர் சிறுவாணியை விட மிக ருசியாக இருக்கும்.  அதன் நீராதாரம் வழங்கும் ஐந்து கண்மாய்களில் ஒன்று அதலைக் கண்மாய். இதன் அருகே அதலைக் காளி என்ற அம்மன் கோயிலும் உண்டு

இந்தக் கண்மாயைத் தூர் வார முடிந்த அளவு பொருளுதவியோ உடலுழைப்போ நல்குங்கள். நீர் இருக்கும் வரை நீரும் இருப்பீர். :)

ஈதல் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுவோம்.





///காரைக்குடி !
வறட்சியான அப்போதைய முகைவை மாவட்டத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் பஞ்சமே இல்லாத ஊர்.
காரணம், அங்கு இயற்கையாகவே அமைந்த Artesian Wells. அதன் பலன், என்றும் நீர் கொடுத்த சம்பை ஊற்று.
சம்பை ஊற்றுக்கு நீர் ஆதாரங்களில் ஒன்றான - சிதைந்து வரும் - அதலைக் கண்மாயை காப்பாற்றுவோம்.
நீர் ஆதாரத்தைப் பலப்படுத்துவோம்; வளப்படுத்துவோம்.
இந்த நல்ல முயற்சிக்கு நம்மால் ஆன உதவியைச் செய்வோமா?
(பள்ளிக் காலத்தில், அமைதியான அதலைக் கண்மாய்க்கு அருகே உள்ள அழகான தோட்டத்தில், Zoology Project-க்கு வண்ணத்துப் பூச்சிகளையும் வண்டுகளையும் பிடிக்கச் செல்வோமே, நினைவிருக்கிறதா? ////

 காரைக்குடியின் அதலைக் கண்மாயைக் காப்பாற்றுவோம் - ஈதல் அறக்கட்டளை.

ஈதல் அறக்கட்டளை
24, காந்திபுரம் 4 வது வீதி,
வ. உ. சி. ரோடு,
காரைக்குடி.


5 கருத்துகள்:

  1. அதலைக் கண்மாய் காப்பாற்றப்பட வேண்டும்
    முயற்சி வெல்லட்டும்

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான விஷயம்.... அனைவருக்கும் பாராட்டுகளும் ......

    பதிலளிநீக்கு
  3. Nandri Jayakumar sago

    Nandri Venkat sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. //அதலைக் கண்மாயை காப்பாற்றுவோம்.
    நீர் ஆதாரத்தைப் பலப்படுத்துவோம்; வளப்படுத்துவோம்.//

    முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    எத்தனை ஏரிகளை தூர்த்து வீடு கட்டி விட்டு, தண்ணீர் இல்லை என்று புலம்புகிறோம். இந்த வேளச்சேரி ஏரி நான் பள்ளியில் படிக்கும் நாட்கள் எவ்வளவு பெரியதாக இருக்கும் தெரியுமா? எவ்வளவு தண்ணீர்? வற்றாத ஏரிகளை வற்ற வைத்து வீடு கட்டி விட்டு ம்ம்ம்ம்ம் என்ன கொடுமை.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...