எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 13 மே, 2017

சாட்டர்டே போஸ்ட், பாரீசில் நடப்பது கதையல்ல நிஜம் - நலந்தா திரு செம்புலிங்கம்

நண்பர் நலந்தா  நலந்தா செம்புலிங்கம் ஒரு ஆசு கவி. இன்றைய ட்ரெண்டிங்குக்கு ஏற்றாற்போல் அவர் எழுதி இருக்கும் இக்கவிதை வித்தியாசமான ஒன்று

 திரு செம்புலிங்கம் அவர்களின் கவிதையை சாட்டர்டே போஸ்டில் பகிர்வதில் மகிழ்கிறேன்  
பாரீசில் நடப்பது
கதையல்ல நிஜம்
-நலந்தா செம்புலிங்கம்

---------------------------------

உலகம் கழுத்தொடிய
பிரான்சு நாட்டைத்
திரும்பிப் பாா்க்கிறது !
புதிய அதிபாின் புண்ணியத்தால் !



இது பாலச்சந்தா் படமல்ல!
பாலு மகேந்திரா படமுமல்ல!!
பா  ரீசில் நடக்கும்
கதையல்ல நிஜம்!

பிரான்சின் இளைய தலைவனுக்குச்
சொந்தப் பிள்ளையில்லை!எனினும்
அவன் வயதிலேயே மகளுண்டு!
ஏழு பேரன் பேத்தியா் உண்டு!!

பள்ளி நாட்களில் 
நாடகங்களில் நடித்தான்!
காதல் வயப்பட்டான்!
24 வயது மூத்த
நாடக ஆசிாியை மீதே!! அவளிடமே
வாய்விட்டும் சொன்னான்.

அந்த ஆசிாியைக்குக்
கோபம் கொப்பளிக்கவில்லை!
சிாித்துத் தீா்த்தாள்!!
சலித்துப் போய்
ஒருநாள் தெளிவான்!
என்றும் நம்பினாள்



அந்தப் ' புாியாத பித்தை '
மறக்கடிக்கத்  தம் பிள்ளையை
வெளியூருக்கு அனுப்பினா் பெற்றோா்

மன்றாடி மன்றாடி
 அவள் மனம் வென்றான்
இரண்டாண்டுகளில்

அறிவு உணர்ச்சிக்கு
வழிவிட்டு விலகியது!
இது காதலில் புதிதல்ல!!

ஆனால் அவள் சொல்கிறாள்
அவன் அறிவுச் சுடரை
மறுதலிக்க முடியாது
மனம் ஒப்பினேன்

ஈரெழு ஆண்டுகட்குப் பின்னா்
திருமணம் பூண்டனா்!!
ஈரைந்து ஆண்டுகளாய்
பிரியாமல் இருக்கின்றனா்!
ஐரோப்பிய அதிசயம்!

தோ்தல் களத்தில் பரப்புரைகளில்
மனைவி ஆசிாியா் ஆகிவிட்டாா்
பாடம் நடத்தியிருக்கிறாா்!
பயிற்சி கொடுத்திருக்கிறாா்!!

அவா் துணையின்றி நான்
அதிபா் ஆகியிருக்க மாட்டேன்!
இது சொல் நன்றி!

அதிபா் சொல்கிறாா் அரண்மனையின்
முதல் பெண்மணியாக மட்டுமல்ல
பொறுப்புள்ள பதவியும் பெறுவாா்!
இது செயல் நன்றி!!

வெற்றிக்கு முன்னா் தோ்தல் களத்திலும்
வெற்றியைத் தலைமேல் வைத்துக்
கொண்டாடும் இணையத்திலும்
இந்த இணையருக்கு
எக்கச்சக்க ஆதரவு!!

இது ஒரு புதுமாதாி சமத்துவம்;
இது,வினோத உறவுகளில்,
ஆண் பெண் பேதத்தை
முறியடித்து விட்டதாம்.

இந்த நியாயத்திற்கு அப்பாலும்
ஒரு நெருடல் இருக்கிறது

அமைதியான நதியில் ஓடிய
பிரிஜிட் ஆஸ்டொ் * திருமண ஓடம்
மாயமானது என்ன நியாயம்?


---------------------------------------------------------------------------------------------------


குறிப்பு :

ஆஸ்டொ் * =பிாிஜிட் மாக்ரோனின் முதல் கணவா். இவா்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இருந்ததாகத் தொியவில்லை. அவரை விவாகரத்து செய்துவிட்டுத் தான் பரிஜிட் தனது முன்னாள் மாணவரான மாக்ரோனை 2007இல் திருமணம் செய்துகொண்டாா்.
 டிஸ்கி :- மிகவும் டெலிகேட்டான ஒரு விஷயத்தைக் கவிதையில் கூறியமை  வெகு சிறப்பு .

விஷயத்தின் வீர்யம் கருதி இன்றைக்கு இரண்டு சாட்டர்டே போஸ்ட்கள் மக்காஸ் . தமிழ் டைப் லேது எப்பிடியோ டைப்பிட்டேன்,

கவிதைக்கு நன்றி சார் :)

4 கருத்துகள்:

  1. இதில் தவறு என்ன இருக்கமுடியும் என்று தெரியவில்லை. வயதான பெண் தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று தன்னை விட இளையவனை மணந்தால் அது அவர்களின் விருப்பமே அன்றோ? அவரும் ஒரு அன்னைதான்! அவருக்கும் அன்னையர் தின வாழ்த்து சொல்லிவிட்டு நகரலாமே!

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை! நம்மூரைப் பொருத்தவரை மிகவும் டெலிக்கெட்டான விஷயத்தை அழகாகச்க் சொன்னவிதம் அழகு! வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. ஐயாவை அறிவேன். தற்போது அவருடைய கவிதையை தங்கள் மூலமாகப் படிக்கும் வாய்ப்பு கிட்ததது. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. Thanks Chellappa sir

    Thanks Thulasi sago

    Thanks Jambu sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...