எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 மே, 2017

சாட்டர்டே போஸ்ட். ஜிஎம்பி சாரின் தேடல்களும் பகிர்வுகளும்.



பாலா சார் என்று நான் அழைக்கும் ஜி எம் பாலசுப்ரமணியன் சார் நான் வியக்கும் ஒரு பதிவர். பூவையின் எண்ணங்கள், gmb writes ஆகிய இரு பதிவுகளில் எழுதி வருகிறார். 

எல்லாரும் பாராட்டும் ஒரு விஷயத்தில் அவர் கேள்விகள் எழுப்பி இருப்பார். தற்போது அவரும் தன்மையாகவே பாராட்டிச் சென்றுவிடுகிறார். அவ்வப்போது அவரது ஆதங்கமும் கேள்விகளும் ஒளிந்துதான் இருக்கும் அவற்றுள்ளும்.

பதிவுகள் எழுதுவதிலும் வித்யாசம்தான். ஏனெனில் அவர் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் காரணம் தேடி எழுதி இருப்பார். நான் ஆத்திகனா, நாத்திகனா, நான் ஏன் பிறந்தேன், ஆலயம் சென்றதனாலாய பயன், தொடரும் தேடல்கள் ஆகியன மிகவும் சிந்திக்கவைத்த இடுகைகள். இடையறாத தேடல்தானே மனித வாழ்க்கை. 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காகக் கேட்டபோது உடன் எழுதி அனுப்பினார். அதை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். 


அன்பின்  தேனம்மைக்கு இத்துடன் ஒரு பதிவு எழுதி அனுப்பி இருக்கிறேன்


 தேனம்மை லக்ஷ்மணனுக்காகபதிவுலகில் நேரில் சந்தித்திராத  ஒரு நண்பி. அட்டகாசமாக எழுதுகிறார் நான்  என் மக்களுக்கு கூறும் ஒரு அறிவுரை நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின்  உச்சிக்காகவாவது  போகலாம் ( Aim at the stars At least you will reach the tree top) பரிவை குமாரின் தளத்தில் அவரது அபிலாக்ஷைகளை கூறி இருந்தார் . அப்போதே என் மனதில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டார்அவர் என்னிடம் எது பற்றி வேண்டுமானாலும்  எழுதுங்கள் சாட்டர்டே போஸ்டுக்கு பதிவிடலாம்  என்றார் எழுதி முடித்தபின்  பார்த்தால் பதிவின் நீளம் பயமுறுத்துகிறது ஒரு தலைப்புக்காக எழுதும்போது நீளம் பற்றிய எண்ணம் தோன்றவில்லை. இத்தனைக்கு பதிவுலகில் லிங்க்  கொடுத்தால் படிப்பவர்குறைவு என்று தெரிந்ததால் அவற்றை விட்டு விட்டிருக்கிறேன்
                  என் எழுத்தைப் பற்றி

                -------------------------------------------    
எனக்கு எழுதத் துவங்கின பிறகே என் எண்ணங்கள் என்னை எழுத வைக்கும்  என்னை எழுத வைப்பது எது என்று யோசித்துப் பார்த்தேன் ஏழு ஆண்டுகளாக வலையுலகில் எழுதி வருகிறேன்   அதை கொஞ்சம் திரும்பிப்பார்த்தால் என்ன என்று தோன்றியது சிறுவயதிலேயே எழுத ஆர்வம் உண்டு  ஆனால் பத்திரிகைகளுக்கு அனுப்ப மனம் வராது என் எழுத்தை யாராவது நிராகரிப்பது எனக்கு சங்கடம் விளைவிக்கும்  என்பதே முதல் காரணம்  இருந்தும் கலைமகள் நடத்திய நாராயண சாமி ஐயர் நாவல் போட்டிக்கு 1966ல் ஒரு நாவல் எழுதி அனுப்பினேன்   ஆனால் என்  துரதிர்ஷ்டம் அதை நான்  ரெஜிஸ்தர் தபாலில் அனுப்பியும்   மறு நாளே எனக்கு அக்நாலெட்ஜ்மெண்ட் வந்து விட்டது  தபால் நிலையத்தார்  திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பாமலேயே  சேர்ந்து விட்டதாகக் கூறிய சேதி அது என் நாவல் முதன் முதலில் எழுதியதுஅதையே வலைப்பதிவில் தொடராக எழுதி இருந்தேன்  இப்போது மின்னூலாக்கி இருக்கிறேன்  பார்த்தீர்களா ஐ யாம் டைக்ரெஸ்ஸிங்

 எழுதமுடியும் என்னும் நம்பிக்கையே என்னை பதிவுலகில் எழுதவைத்த உந்து சக்தி  ஆரம்பகாலத்தில் விபத்தின்  விளைவு என்னும்  ஒரு கவிதை (?) எழுதினேன் அதற்குப் பின்னூட்டமாக சக்திபிரபா /அற்றைத் திங்கள் அன்றொரு நாள் . எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ, சிந்தையில் தோன்றாமலே சிந்திய வித்து நான் / என்று நான் எழுதி இருந்ததை , என் தமிழ் ஆழமாகவும் அழகாகவும் வெளிப்படுவ்தாகக் கூறி பாராட்டியிருந்தார்.அதுவே வலை உலகில் எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு. அப்போதுதான் தோன்றியது நம்மாலும் பிறர் பாராட்டும்படி எழுத முடியும் என்று.

 எழுதுவது வெறுமே பொழுதுபோக்குக்கு என்றல்லாமல் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளவும் இணையத்தில் வழி இருக்கிறது. என்ன... நம் எழுத்தை பலர் படிக்கவேண்டும். .நான் எழுதுவதை எல்லோரும் அங்கீகரிக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணியதில்லை. ஆனால் என் எழுத்துக்ள் சற்றே நிமிர்ந்து வைக்கத் தூண்டுபவையாய் இருக்கவேண்டும் என்று நான் எண்ணியது உண்மை. சாதாரணமான BEATEN TRACK-ல் இல்லாமல் வித்தியாசமாக சிந்திக்கும் நான், என் எழுத்துக்கள் ஒரு ஆரோக்கியமான கலந்தெழுத்தாடல்களுக்கு வழி வகுக்கும் என்று நம்பினேன். .ஆனால் இணையத்தில் எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் பெரும்பாலோனோர் கருத்தாடல்களில் பங்கேற்பதில்லை. எதை எழுதினாலும் பலரும் பாராட்டல்கள் தவிர வேறெதுவும் எழுதுவதில்லை. அதற்காகப் பாராட்டல்கள் கூடாது என்று சொல்லவில்லை. அதனால் என்னைப் பொறுத்தவரை படித்ததும் என் மனசில் தோன்றுவதை கருத்தூட்டமாக இட்டுவரப் பழக்கிக் கொண்டேன். அதுவும் சிலரால் கூறப் பட்டிருக்கிறது. ஒரு முறை என் பதிவுக்கு வந்த ஒரு பின்னூட்டத்தில் ஒருவர் (பெயர் வேண்டாமே) என் பதிவுகளுக்குக் கருத்துப் பதிக்கும்போது மிகவும் இயல்பாய் எழுதலாம்  (ரெம்பொ உறுத்தானவர் வீடுகளில் வெறும் சாரத்துடன் இருப்பதுபோல-- மிகவும் வேண்டப் பட்டவர் வீட்டில்  நுழைகையில் உடுத்திக் கொண்டிருக்கும் கைலியிலேயே வரவேற்பது போல) என்று கூறி இருந்தார். ஒருவராவது என்னைப் புரிந்துகொண்டிருக்கிறாரே என்று மகிழ்ச்சி அடைந்தேன்.
   /  வாழ்க்கையில்   கண்ட கேட்ட, அனுபவித்த  அனுபவங்கள்   தையும் எளிதில்  ஏற்றுக்கொள்ளும்  மனநிலையைத்  தரவில்லை. மாறாகக் கேள்விகளே  அதிகம்  எழுகின்றது. சில  சமயம்  நாம்  ஏன்  இப்படி மற்றவரிடமிருந்து   மாறுபட்டு  நிற்கிறோம்   என்றும்   தோன்றும். எல்லோரையும்போல்  (  எல்லோரையும்   என்றால்   எல்லோரையும்   அல்ல ) ஏன்   எதையும்   கண்மூடித்தனமாக  நம்பிக்கையுடன்  ஏற்றுக்  கொள்ள முடிவதில்லை.?/
இந்தக் கருத்து நான்  என் தொடரும் தேடல்கள் என்னும் பதிவில் எழுதியது.

 எதைத்தான் எழுதினாலும் அதன் பாதிப்பு என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பினேன். கொள்வார் யாருமுண்டோ என்று கூக்குரலிடாத குறைதான். சரி. நான் ஆண்டுகள் பல செலவு செய்த தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுத் துறை சம்பந்தமாக எழுதலாம் என்று தரமெனப்படுவது யாதெனில் “என்று ஒரு கட்டுரை அடிப்படை விஷயங்களை விளக்கி எழுதினேன். இப்போது பார்க்கும்போது ஏறத்தாழ ஆயிரம் ஹிட்சுக்கும் மேல் வாங்கிய அந்தப் பதிவுக்கு ஒரு பின்னூட்டமும் வரவில்லை. தரம் என்பது இலவசமாகப் பெறப்படுவது என்று விளக்கியும்  எழுதிவிட்டு அந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டேன் எனலாம்நாம் என்ன எழுதினாலும் அது வாசிப்பவரையும் பாதிக்கும் சமாச்சாரமாக இல்லாவிட்டால் இணையத்தில் எழுதுவதில் பலன் இல்லை. ஆனால் வாசிப்பவரைக் கவர வேண்டி என் எழுத்துக்களை நான்compromise செய்ய விரும்பவில்லை. என் போன்றோர் படும் சில அவஸ்தைகளைப் பகிரலாம் என்று எழுதியது “செய்யாத குற்றம் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள் என்னை நிமிர்ந்து வைக்கச் செய்தது. பதிவுலகில் பரவலாக அறியப்படும் பலரது பின்னூட்டங்கள் என்னை பரவசத்தில் ஆழ்த்தியது அதில் எதையும் கற்பனை செய்து நான் எழுதவில்லை உள்ளத்தில் தோன்றிய உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிரூட்ட முயன்றேன் அன்றிலிருந்து பெரும்பாலும் உள்ளத்து உணர்ச்சிகளே பதிவாக வெளியாகிக் கொண்டிருக்கிறது என் எண்ணங்கள் பலரது எண்ணப்போக்கிலிருந்து வேறு பட்டிருக்கலாம்..அதற்காக வாசிப்பாளர் பட்டியலை அதிகரிக்கச் செய்ய நான் எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.
/வயோதிகம் குற்றமும் இல்லை. தண்டனையும் இல்லை. என் போன்ற சிறியவர்களுக்கு முன் ஏர் பிடித்துச் செல்லும் உங்களின் அனுபவம் கொடைம் வேண்டாத போது கிடைத்த வரமும்./
/அற்புதமான எழுத்து. அனுபவம் மெருகேற்றிய கருத்துக் கோர்வை.ரசித்தேன்
  பாரதி சொன்ன அக்னிக் குஞ்சாகவே நான் உங்களைப் பார்க்கிறேன் என்று தொடங்கி ஒரு நீண்ட பின்னூட்டமே எழுதி இருந்தார் அந்தத் தமிழ் பேராசிரியர்..பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டு நான் பதிலாக, “இவற்றை இந்தக் கிளிக்குக் கிடைத்த ஒரு நெல் “என்று எழுதினேன். அதையும் சிலாகித்து ஒரு கருத்து.!
இதையெல்லாம் நான் அடிக்கடி நினைவு கூறாவிட்டால் என்றோ பதிவுலகை விட்டுப் போயிருப்பேன். ஒரு முறை ஒரு நண்பர், பதிவுகளை ஒருவர் படிக்கிறார் என்றாலும் அவருக்காகவாவது தொடர்ந்து எழுதுங்கள் என்றார்.
அவதாரக் கதைகள் என்று பத்து அவதாரக் கதைகளையும் எழுதி வந்தேன். ஒரு சிறு பெண் பின்னூட்டத்தில் அவள் பாட்டும் நடனமும் படித்து வருவதாகவும் அவளுக்காகவேண்டியாவது அவதாரக் கதைகளைத் தொடர்ந்து எழுதுமாறு வேண்டி இருந்தாள். நரசிம்மாவதாரத்தை குழந்தைகளுக்குச் சொல்வது எப்படி என்னும்படி எழுதி இருந்தேன். ராமனின் கதையை ஏதோ ஒரு உந்துதலில் ஒரே வாக்கியத்தில் ஆறு காண்டங்களையும் உள்ளடக்கி சாதாரணன் ராமாயணம்  எழுதினேன். இதுவரை கிடைக்காத பாராட்டு கிடைத்தது. பிற்காலத்தில் இதை நான் வாசித்துப் பார்க்கும்போது எனக்கே வியப்பாகி இதை நானா எழுதினேன் என்று தோன்றும்,
கவிச்சோலைக் கவிதைப் போட்டி ஒன்று வைத்தார். திரு.எல்.கே. சங்க காலப் பாடல் ஒன்று கொடுத்து அதற்கு அர்த்தமும் கொடுத்து அதை தற்காலக் கவிதையாக எழுதக் கேட்டிருந்தார். நானும் எழுதினேன் . இரண்டு கவிதைகள். அதில் ஒன்று சென்னைத் தமிழில் “சும்மா டமாஷுக்காக “ எழுதினேன்.பாராட்டுக்கள் கிடைத்தது
 ஆங்கிலத்தில் வெளியான I AM OK, YOUARE OK  என்ற புத்தகத்தின் சாராம்சத்தை “வாழ்வியல் பரிமாற்றங்கள் “என்று எழுதி இருந்தேன்,TRANSACTIONAL ANALYSIS என்ற துறையில் சிறந்தவர் ஒருவரிடமிருந்து அங்கீகாரம் வாங்கிக் கொடுத்த பதிவு அது. (
வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்ற மாதிரி.)
வார்ததைகளை மடக்கிப் போட்டு எழுதும் வகைதான் என் கவிதைகள் எல்லாம். இருந்தாலும் மரபுக் கவிதை பற்றி ஓரளவாவது தெரிய வேண்டும் என்று முயன்று வெண்பா இலக்கணங்களைக் கற்றேன் ஒரு வெண்பாவும் இயற்றினேன். பின் தொடர்ந்து முயற்சி செய்யவில்லை. இலக்கணம் தேடும்போது வார்த்தைகள் சிதையுருதல் போல உணர்ந்தேன். ஒரு முறை ஆலய தரிசனத்தின் போது கும்பகோணக் கோவில் ஒன்றில் திருவெழுக்கூற்றிருக்கை என்று எழுதி இருந்தது கண்டேன். என்ன என்று புரியாமல் பதிவில் விளக்கம் கேட்டேன். இரண்டு மூன்று பேர் விளக்க முயன்றனர். பிறகு வலையில் மேய்ந்து பாடலுக்கு விளக்கம் கொடுத்திருந்த ஒருவரை நாடி அது என்ன என்று தெரிந்து கொண்டேன். நானும் என் பாணியில் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை எழுதினேன். ஆனால் என் பாட்டு கடவுளிடம் கேட்பது போலல்லாமல் சக மனிதனைக் கேட்பது போல் எழுதினேன்.இங்கேபார்க்கவும் “.http://gmbat1649.blogspot.com/2012/08/blog-post_21.html
ஒரு சமயம் நான் இறந்துவிட்டேன் என்னும் நிலையை கடந்து பிழைத்தேன். எனக்கு உறுதுணையாய் இருந்த என் மனைவிக்கு பாவைக்கு ஒரு பாமாலை எழுதினேன். அது ஒரு அந்தாதிக் கவிதையாய் எழுதினேன்.
ஏழு வருடங்களுக்கும் மேலாக வலை உலகில் இருந்து வருவதைத் திரும்பிப் பார்க்கும் போது ஒரு நிறைவு தெரிகிறது.எழுதும் முறையிலும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்தியிலும் வேறுபாடுகள் காட்டிக் கொண்டே வருகிறேன். சிறு கதைகள், என் பாணி கவிதைகள், கட்டுரைகள், நெடுங்கதை , நாடகங்கள் என்று பல்வேறு சுவைகளிலும் எழுதி இருக்கிறேன். சுய அனுபவங்கள், பயண அனுபவங்கள் என்று வெரைட்டியாக எழுதி வருகிறேன்
.
நான் மிகவும்  ரசித்த பின்னூட்டங்கள் சில

"அவர்கள் மனம் ஏற்கும் விஷயங்கள் முதலில் காரணம் கேட்பதில்லை.காரணம் காணத் துவங்குகையில் விரும்பிய பொருளிலோ கருத்திலோ முரண்படத் துவங்குகிறோம் என நினைக்கிறேன்"

"தூரத்தில் நின்று கடவுளின் உருவை யூகிக்க வேண்டியுள்ளது".... 

I can't help but smile! :) light or no light-- aren't we all doing the same?

எண்ணத்தறியில்  எட்டுமணிநேரம் எனும் பதிவுக்கு வந்த பின்னூட்டம்

மகிழ்ச்சி..வியப்பு..எண்ணங்களின் அதிர்வுகள் என உறைந்துபோய்நிற்கிறேன். ஒரு கைதேர்ந்த சிற்பியின் கைவண்ணத்தில் உருவாகும் கலைநயம் மிளிரும் சிலையைப்போல இந்தக் கட்டுரையைக் காண்கிறேன். உங்களின் அபாரமான எழுத்தாற்றலை உங்கள் பணி விழுங்கி செரித்திருக்கிறது பல்லாண்டுகளாக என்றுஉணர்ந்துகொள்கிறேன். எரிமலைபோல மனதுக்குள்ளே கனன்றுகனன்று இன்று வெடித்து பரவுகிறது. அருமையான சுய அனுபவத்தில் அனுபவித்த பொருண்மையை அல்லது அருகிருந்து பார்த்த பொருண்மையை இத்தனை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பது அருமை. நல்ல கலைநயத்தோடு உண்மை பொறுப்புணர்ச்சியோடும் அலசப்பட்ட கட்டுரை இது.

வாழ்வின் விளிம்பில்  என்ற சிறுகதைக்கு வந்த பின்னூட்டம்

இருத்தலையும் இல்லாதிருத்தலையும் இவ்விரண்டையும் மனமெனும் குறளி
 பார்க்கும் பார்வையையும் எத்தனை அற்புதமாகச் சொல்லியிருக்கிறீர்கள் பாலு சார்?

இறுதியாக ஒன்று சொல்ல வேண்டும். இதெல்லாம் படிக்கிற நேரத்துப் பார்வையில் பட்ட கருத்துக்களே தவிர, இப்படித் தான் இந்தக் கதையைப் பார்க்க வேண்டும் என்றில்லை. 
இன்னொரு நேரத்துப் படிக்கும் பொழுது வேறு வகையான எண்ணங்கள் தோன்றலாம். இப்படியெல்லாம் சிந்திக்க வைப்பதே நல்ல கதைகளுக்கு அடையாளம். வெறும் பொழுது போக்கு கதைகளுக்கில்லாத சிறப்பும் கூட. அதனால் தான் எழுதுகிற எழுத்தின் மூலம் ஏதாவது ஒரு செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்ற நினைப்புகளே எக்காலத்தும் போற்றுதலுக்குள்ளாகிறது.

விடியலுக்காகக் காத்திருக்கிறேன்  என்னும் பதிவுக்கு

அறிவியலையும்,
 ஆன்மீகத்தையும் கேள்வி கேட்டு, அந்த இரண்டையும் குழைத்து கொடுத்திருக்கிறீர்கள். விடை தெரியா வினாக்களை எழுப்பியிருக்கிறீர்கள்.

இதெல்லாம் கேள்வி கேட்டு பதில்
 சொல்வதில்லை, ஜிஎம்பீ சார்! அது இதுவோ என்று சலனமாக உணரப் படுவது.. உணர்ந்ததும் போக்குக் காட்டி இதுவில்லையோ என்று மயங்க வைப்பது. வார்த்தைகளால் விவரித்து இன்னொருத்தருக்குச்சொல்லமுடியாது, வியக்க வைப்பது. தானே தன்னுள் தோண்டி தானின் தரிசனம் காண்பது.

கேள்விக்குள் பதிலை மறைத்து பதிலுக்குள் கேள்வியை விதைத்துச் செல்லும் உங்கள் பதிவு அருமை

தன்னுள்
 தோண்டி தானிiன் தரிசனம் காண விழையும்போது, தன்னுள் ஒரு தான் இருப்பதாக எண்ணிக்கொண்டே தேடுகிறோமோ?இதுவோ அதுவோ என்று போக்கு காட்டும் ஒன்றை தன்னுள் தேடுதல், இந்த வாழ்வில் இயலாதது. மனிதாலயத்தில் அரனாயிருந்த எனும்போது, ஏதோ ஒன்றை முடிவாய் நினைத்து தேடுதல் போலாகும் . என் கூற்றை சற்றே கவனமாய்ப் பாருங்கள் அண்டமே ஒன்றின் , இருட்டின் வியாபிப்பு என்ற மெய்ஞானப்படி தேடுவதும், உயிரென்பதும் ஆன்மா என்பதும் எண்ணிக்கையில் மாற்றமில்லாதிருக்க வேண்டும் என விஞ்ஞானப்படி அறிவதும், வரைந்து முடித்தவட்டத்தின் துவக்கப் புள்ளியை தேடுவது போன்ற பலன் தராத ஒன்று. ஆகவே இருளில் இருப்பதே சுகம், நம்பிக்கையே ஞாயிறின் ஒளி என்று கூறி என்னை நானே தேற்றிக் கொண்டு அந்த விடியலுக்காக காத்திருக்கிறேன் என்றே கூறியுள்ளேன்.

தேடலின் நிழல் நீண்டு செல்கிறது ஒளி தேடி.பின் ஒளி மங்கி நிழல் மடிந்து ம்ற்றொரு விடியலுக்காய்க் காத்திருக்கிறது.

அது எதுவென நினைக்கிறோமோ அது அதுவில்லை.

புதிரும் விடையும் ஒன்றில் ஒன்றெனப் பிணைந்து படரும் இவ்வாழ்க்கையின் சக்கரத்தை நான் என் மகனிடம் கொடுத்துச் செல்வேன்.அவன் கேள்விகள் மேலும் தொடர அவன் மகனிடம் கொடுத்துச் செல்ல மெல்ல உருளும் நில்லாச் சக்கரம்
காதல் என்  கோணத்தில் பதிவுக்கு

மற்றெல்லா உணர்ச்சிகளையும் போலத்தான் காதலும். 

காத்திருத்தல்-விட்டுக்கொடுத்தல்-பரஸ்பர நம்பிக்கை-வெளிப்படையான தன்மை-மரியாதையாய் நடத்துதல்-இவையெல்லாம் இருந்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் மட்டுமல்ல,எல்லா இரு பந்தக்களுக்குமிடையில் சொர்க்கம் பிறக்கும்.

இந்த மாதிரியான குணங்கள் கொண்ட இருவரில் ஒருவர் பேசினால்-ஒருவர் சிந்தித்தால்-போதும் என்ற அளவில் ஒத்த சிந்தனை நிலவும்.

ஆதலினால் மானிடரே எல்லாவற்ரையும் காதல் செய்வீர்.காதல் என்ற வார்த்தைக்குள் அடைபடாத காதல் செய்வீர்.

நல்ல பதிவு. "காதல்" என்ற வார்த்தையைக் கண்டதும் உங்கள் பதிவின் பக்கம் வராமல் இருக்க முடியவில்லை..காதல் என்ற வார்த்தைக்கே அத்தனை வலிமை இருக்காக்கும் :))

//குறைகளையும் அரவணைத்து விட்டுக்கொடுக்கும் சுபாவம்தான் காதல் வாழ்வில் வெற்றிக்கு வழி வகுக்கும்.//
இது உண்மை ஐயா...ஜெமினி கணேஷன் முதல் மனைவி பாப்ஜி அவர்கள் கிட்டே அவங்க பெரிய பொண்ணு கமலா கேட்டு இருக்காங்க..."எப்படியம்மா ...இந்த அப்பாகிட்டேசகிச்சுட்டு குடும்பம் நடத்தின...உன் காதலை துச்சமாக்கிட்டு எத்தனை பொண்ணுங்களை கட்டிக்கிட்டு வரார் னு"...அதுக்கு பாப்ஜியம்மா சொல்லி இருக்காங்க..." நான் அவரை மிகவும் காதலிக்கிறேன்...காதல் என்பது குறைகளையும் தாண்டி நேசிப்பது தான்....பெண்களிடம் சபலப்படுவது அவர்குறை...ஆனால் அந்த குறையவும் தாண்டி அவரை காதலிக்கிறேன்..." அப்படி னு சொல்லி இருக்காங்க...(இதை நான் ஒரு புத்தகத்தில் படிச்சேன் பாலு ஐயா...நீங்க அந்த வரிகளை சொல்லும்போது இந்த சம்பவம் தான் மனதில்.

ஐயா... கொட்டியிருக்கிறீர்கள். அன்பின் வழியது உயர்நிலை என்பார்கள் ஆன்றோர்கள். அன்புதான் அழியாக் காதல். அது மனதின் ஊடாட்டத்தால் வருவது. யாயும் யாயும் யாராகியரோ...குறுந்தொகைப் பாடல் அற்புதமாய் காதலுக்குவிளக்கம் கூறும். இப்போது அதிக விழுக்காடு மெய்யின் புணர்ச்சிக்காகவே அலைபாய்கிறது காதல் எனும் பெயர் சூட்டி. இதுதான் இப்போது காணும் மெய். பள்ளிக்கூடம் செல்லும் சிறு பெண் பிள்ளைகளை ரவுடிகள் காதல் கொள்வதுபோல பலபடங்கள் இந்த மண்ணில் காதலைக் குழிதோண்டிப் புதைக்க வழி செய்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எனும் பெயரால் அவை சீரழிவைத் தொடங்கி வைத்துவிட்டன கேவலமாய் பணத்தை ஈட்டிக்கொண்டு.
அன்பே சிவம் என்று திருமூலர் இன்னும் உயர்வாக உயர்த்தி வைத்தார். 47 வருட உங்கள் காதல்வாழ்விற்கு ( இப்போது 53 வருடங்கள்) என்னுடைய பெருமைமிகு பணிவான வணக்கங்கள் வாழ்த்துக்கள். காதல் இல்லாமல் காதலின் பொருண்மை புரியாமல் காதலை பெருமைப்படுத்தாமல் கௌரவப்படுத்தால் உயர்த்திப் பிடிக்காமல் அந்தப் பெயரை பலிபீடமாக வைத்துக்கொண்டு பல உயிர்கள் வதைபடுகின்றன நாள்தோறும். வருத்தம். மிகவருத்தம். சரியான நேரத்தில் சரியான பதிவு. இளையவர்கள் படிக்கவேண்டும். அனுபவம் நல்ல இலக்கைக் காட்டும் பாதையாகும்.


டிஸ்கி:- ஏன் என்ற கேள்வி மனிதன் கேட்காமல் வாழ்வதில்லை. இது அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் எல்லாரும் சமரசம் செய்துகொண்டுபோய்விடுவார்கள். ஆனால் உங்களின் தேடல் சார்ந்த கேள்விகள் எந்தக்காலத்திலும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. அதுவே உங்களை இன்னும் எழுத்தில் நிலைபெறச் செய்திருக்கிறது. 

/// கேள்விக்குள் பதிலை மறைத்து பதிலுக்குள் கேள்வியை விதைத்துச் செல்லும் உங்கள் பதிவு அருமை// என்று பின்னூட்டம் இட்டவர் சரியாகத்தான் கணித்திருக்கிறார் உங்களைப் பற்றி. உங்கள் இடையறாத தேடல்கள் நீங்கள் அணுகும் எல்லாவற்றிலும் தொடர்வது போல நாங்களும் எங்கள் வழியில் பலசமயம் சமரசத்தோடும் சில சமயம் கேள்விகள் எழுப்பியும் சென்று கொண்டிருக்கிறோம். தொடரட்டும் உங்கள் தேடல்களும் அதைப் பற்றிய பகிர்வுகளும். அன்பும் நன்றியும் வாழ்த்துகளும் சார்.  


16 கருத்துகள்:

  1. இந்த இளைஞரை இரண்டு முறை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  2. ஐயாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம். அவருடைய ஒவ்வொரு எழுத்தும் நமக்குப் பாடங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஜி.எம்.பாலசுப்ரமணியன் ஐயா அவர்களின் பட்டறிவு (அனுபவ) வெளியீடு, என் போன்ற சின்னவர்களுக்கு நல்ல வழிகாட்டல்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா ! மிகவும் அருமையான அறிவுரை // நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின் உச்சிக்காகவாவது போகலாம் ( Aim at the stars At least you will reach the tree top)// நீங்கள் மிகவும் வித்யாசமான தந்தை ..எத்தனை பெற்றோர் இப்படி இருப்பார்கள் வானத்தை தொட்டே ஆகனும் என நிர்பந்திப்போர் மட்டுமே அதிகம் ..

    நானும் கண்டு பிடித்துவிட்டேன் சார் நோ காம்ப்ரமைஸ் டைப் என்பதை ..நீங்கள் நீங்களாகவே இருப்பது நன்று .ஒரு விஷயத்தில் காம்ப்ரமைஸ் செய்ய போனால் வாழ்க்கையே காம்ப்ரமைஸ் ஆகிடும் ...நேர்பட பேசுவது சாரின் இயல்பு அதுதான் நல்லது நான் சமீபத்து பதிவில் பயந்து பேரை மாற்றி சித்தபப என கற்பனையாய் விளித்து எழுதியபோது நீங்கள் சொன்ன பின்னூட்டம் நினைவிருக்கு .உண்மையில் தைரியமாக பேருடன் எழுதிபோயிருந்தால் முழு மனத்திருப்தி எனக்கு கிடைத்திருக்கும் :)
    உங்களது பிற பதிவுகளையும் வாசித்து பின்னூட்டமிடனும் ..அழகான பதிவு தொகுப்பு ..பகிர்வுக்கு நன்றி தேனக்கா

    பதிலளிநீக்கு
  5. //உங்களின் தேடல் சார்ந்த கேள்விகள் எந்தக்காலத்திலும் உயிர்த்துடிப்போடு இருக்கிறது. அதுவே உங்களை இன்னும் எழுத்தில் நிலைபெறச் செய்திருக்கிறது. //


    ஜிஎம்பி சார் பற்றி நீங்கள் சொன்னது சரிதான் தேனம்மை.


    அருமையான நினைவலைகள் அழகாய் சொல்லி இருக்கிறார்.
    சாருக்கு வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு நன்றி தேனம்மை.


    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஐயா
    மன ஓட்டங்களை அழகாக நதிபோல் நகர்த்திய விதம் அழகு

    செல்லில் எழுதுவதால் விரிவாக எழுத இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  7. ஹை நம்ம ஜி எம் பி சார்! எத்தனை முறை சந்தித்திருக்கிறோம். வழக்கம் போல தனது எண்ணங்களை பதிவுகள் மூலமும், அதற்கு வந்த பின்னூட்டங்கள் மூலமாகவே அழகாகச் சொல்லிவிட்டிருக்கிறீர்கள் சார். தேனம்மை சகோ/ தேனு சார் பற்றிய தங்களது இன்ட்ரோ அப்படியே! இப்போதும் இளைஞர்தான்!!! வாழ்த்துகள் இருவருக்குமே!

    ----துளசி, கீதா

    கீதா: மிகவும் அருமையான அறிவுரை // நட்சத்திரங்களைக் குறி வை ஒரு மரத்தின் உச்சிக்காகவாவது போகலாம் ( Aim at the stars At least you will reach the tree top)// சார் இதை என் மகனுக்குச் சொல்லியது. சொல்லுவது....காதல் பற்றிய கருத்துகளும் அருமை...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. இங்கு வந்ததன் மூலம் பல விசயங்கள் தெரிந்து கொண்டேன் , இவ்ளோ பொறுமையாக இவ்வளவையும் தொகுத்து எழுதிய உங்களை நினைக்க பெருமையாக இருக்கு.. வாழ்த்துக்கள் ஐயா GMB.

    பதிலளிநீக்கு
  9. உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து எழுந்து வந்திருக்கும் எண்ணங்கள். இவர் எப்போவுமே இப்படித் தான். தன் மனதில் நினைப்பதை வெளிப்படையாகக் கூறுவார். அதனாலேயே இவரின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்ப்பேன். இப்போதெல்லாம் அதிகம் வர முடிவதில்லை போலும்! :( தொடர்ந்து இவர் தன் எண்ணங்களைப் பகிர்ந்து வரப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அவரின் பின்னூட்டங்களும் சிந்திக்க வைக்கும்...

    ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  11. என் அழைப்புக்கு இணங்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  12. GMB சாரின் சுவாரஸ்யமான பதிவை வெளியிட்டமைக்கு நன்றி தேனம்மை. அவர் பற்றிய உங்கள் பார்வையும் மிகவும்சரியே! மனதில் படுவதைத் தயங்காமல் சொல்வது அவரின் ஸ்டைல். பலகாலம் அவருடைய எழுத்துக்கு பழகியவர்கள் அவர் கருத்தை இயல்பாகவே எடுத்துக் கொள்வார்கள்.
    அதன் காரணம் அவரின் அறவுணர்ச்சியே என்று புரிந்து கொண்டால் போதும். நான் சந்திக்க விரும்பும் சில பதிவர்களில் ஒருவர். ஏனோ சந்தர்ப்பம் அஅடையாமலே இருக்கிறது. அவர் பெயிண்டிங்குகளைப் பார்க்கவும், ஆம்பிளை சமையல் குறிப்புகள் கேட்கவும் சந்திக்க வேண்டும்.எனக்கு டீ சர்ட் வாங்கித் தருவதாக வேறு சொல்லிசொல்லி அழைப்பார். We love you GMB சார்!

    பதிலளிநீக்கு
  13. appadiya Sriram !

    unmai Jambu sir

    nandri yarlpavannan sago.

    thanks da Angel

    thanks GOmathi mam

    thanks Killergee sago

    thanks Geeths & Tulsi sago

    thanks Madhavi

    thanks Adhira

    thanks Geetha mam

    thanks DD sago

    thanks Tulsi

    thanks Bala sir

    thanks Mohanji. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  14. ஜிஎம்பி அவர்களிடம் எனக்குப் பிடித்தது அவர் எதைப் பற்றியும் சிந்தித்துக் கருத்து தெரிவிப்பதுதான் . வாழ்க !

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...