எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஜூலை, 2017

சுவையான மட்டன் குழம்பு வைப்பது எப்படி ? – பேச்சிலர் சமையல்.



முதல்ல அரை கப் அரிசி எடுத்து இண்டக்‌ஷன் குக்கர்ல போட்டு கழுவியோ கழுவாமலோ இரண்டரை கப் தண்ணீர் ஊத்தி சோறு வைக்கணும். அட சோறு சமைச்சாத்தானுங்களே கறிக்குழம்போட சாப்பிட முடியும். குழம்பையும் அதே குக்கர்ல வைக்கப் போறதால முதல்ல சாதம் வைச்சா வீசாம இருக்கும். வெந்துச்சோ வேகலையோன்னு ஒரு சவுண்ட்ல அமத்திட்டு லாப்டாப் பாக்கணும். ஹாஹா.

அடுத்து பத்து நிமிஷம் கழிச்சு நெனைப்பு வந்தாப்புல குக்கரை அடுப்புல இன்னொரு சவுண்ட் வர வரைக்கும் வைச்சு ஆஃப் சேசு. சோறு எப்பிடியும் ஆயிடும். உள்ளே இருக்க பயபுள்ள ப்ரஷர் வேகாம விடுமா என்ன.

அட சோறு வெந்தேபூடுச்சுபா. J
 
சரி சோத்தை அப்பிடிக்கா ஒரு பாத்துரத்துல மாத்திட்டு லேசா கயிவினா போதும்.



கால்கிலோ கறியக் கழுவி அப்பாலிக்கா வைச்சிடணும். ரொம்பக் கழுவினா ருசி போயிடும். நல்லா தண்ணியப் பிழிஞ்சு மூடிபோட்டு வைக்கணும். 

பத்துப் பன்னெண்டு சின்ன வெங்காயம் ஏழெட்டு வெள்ளைப்பூண்டு, ஒரு தக்காளி இதெல்லாத்தையும் சுத்தமா உரிச்சி நறுக்கி வைக்கணும்.



கொத்துமல்லியையும் சுத்தம் செய்து வைக்கணும்.

ஒரு பவுல்ல ஒரு டீஸ்பூன் மிளகாய்ப் பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லிப்பொடியைப் போட்டுக் கலக்கி வைக்கணும். பொடி பத்தலன்னா வீட்ல இருக்குற கரம் மசாலா, கறிமசால்பொடி, சாம்பார் பொடி சேர்த்துக்கலாம். ஆனா ஆம்சூர் மட்டும் சேர்க்கக்கூடாது J


பொடியப் பார்த்தாலே நெம்பக் கொஞ்சமா இருக்குல்ல. கொழம்பு அதுக்கேத்தாப்படித்தான் வரும். 

கலர் கலரா வேற இருக்கு. என்ன என்ன பொடி எல்லாம் கொடுத்தனோ தெரிலயே. இல்லாங்காட்டி புள்ள என்ன பொடியெல்லாம் போட்டு வைச்சிதோ தெரில. J  





இது புளி ஊறவைச்ச தண்ணீராம். கொஞ்சம் பயந்துதான் போயிட்டேன். பின்ன ஒரு சுளை புளி கரைச்சு ஊத்தினா போதும் மிளகாய்த்தூள் எரிக்காமலிருக்க. இதென்னவோ புளிக்குழம்புக்குப் போட்டா மாதிரி பாத்தாலே வயித்துல புளியக் கரைச்சுது. J



மொதல்ல குக்கர்ல கழுவின மட்டனைப் போட்டு மூழ்கும் அளவு அரை கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரும்வரை வேகவைச்சு இறக்கி வைச்சிடணும். 

திரும்ப குக்கரைக் கழுவி ஃபோன்ல சொல்லிக்கொடுத்தபடி எண்ணெயில பட்டை கிராம்பு ஏலம் சோம்பு போட்டு அதுல வெங்காயம் பூண்டு தக்காளி போட்டு வதக்கி ( அதை எல்லாம் எடுக்கல. எசகு பெசகா செல் வதக்குறதுல விழுந்துட்டா என்ன பண்றது ? ) அதுல மிளகாய்ப்பொடியை எல்லாம் கொட்டி புளியைக் கரைச்சு ஊத்தி வெந்த மட்டனைப் போட்டு கொத்துமல்லித்தழையையும் போட்டு திரும்ப குக்கரை மூடி 3 சவுண்ட் வேக விடணும்.



தெறக்குனதெல்லாம் சரிதான். ஆனா பொடி பத்தலையே. புள்ளைக்கு என்ன பொடியைப் போட்டா திக் ஆவும்னு தெரில வேற. அப்பிடியே மூடி வைச்சு வேக வைச்சிருச்சு.  



அட கொழம்பு ஆயிட்டுதே.  வாசம் வருதே. தண்ணியா இருந்தா என்ன மட்டன் எலும்புக் கொழம்புன்னோ, மட்டன் தண்ணிக் கொழம்புன்னோ பேர் வைச்சிட வேண்டியதுதான்.

சிப்ஸை வைச்சு சோத்துல குழம்பைப் போட்டு சூப் சாதம் மாதிரி சாப்பிடவேண்டியதுதான். நீங்களும் செஞ்சு பார்த்து ஒரு பிடி பிடிங்க. பேச்சிலர் சமையல்னா இப்பிடித்தான் எதிர்ப் பேச்சு இல்லாம சாப்பிடணும்.



அடுத்த நாள் இதேமாதிரி வெங்காயம் வெள்ளைப்பூண்டுக் குழம்பும் வைச்சிச்சாம் புள்ள. கேட்டா ”இதென்ன கம்பசித்திரமா.. மட்டன் இல்லாம பொடியை எல்லாம் நிறையாப் போட்டு வெச்சேன்”னுச்சு. 

”சரி அதென்ன முழி முழியா இருக்கே வெங்காயம் பூண்டு எல்லாம்”னு கேட்டா ”கட் பண்ணிப் போட்டா என்னா முழுசாப் போட்டா என்ன வெந்திருச்சு சாப்பிட்டுட்டே"ன்னுச்சு. 

அப்பிடிப் போடுடா அருவாளை. அம்மா சமையல்னாதான் ஆயிரத்தெட்டு ஐட்டம் செய்யச் சொல்லுவீங்க. உங்க சமையல்னா அது வெந்துச்சோ வேகலையோ அப்பிடியே சாப்பிடுவீங்க. நல்லா வருவீங்கடா J  


3 கருத்துகள்:

  1. அக்கா! சைவ சமையலும் கொஞ்சம் சொன்ன நன்னா இருக்குமே!

    பதிலளிநீக்கு
  2. HAHA DD SAGO SAIVAMA NEENGKA

    NICHAYAM POST PANREN UYIRTHULIGAL. ENNODA THENUS RECIPES BLOG PARUNGKA


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...