சனி, 30 செப்டம்பர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்


சஷிகா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதிவரும் எங்கள் அன்பு தங்கை மேனகா சத்யா மிக ருசியாக வகைவகையாக சமைப்பார். அது மட்டுமல்ல செக்ஷன் வாரியாகப் பிரித்து தொகுத்திருப்பார். தினம் ஒன்று ஜொள்ளு விட வைக்கும் அளவு இருக்கும். எந்த உணவுக்கு எது காம்பினேஷன் என்றும் கரெக்டாக ஜோடி சேர்த்து காம்போ வழங்குவதில் அவருக்கு இணை அவரே . 

சஷிகா என்ற பேரின் பின்னணியிலும் ஒரு தகவல் இருக்கு. மேனகாவின் கணவர் சத்யா. மகள் பெயர் ஷிவானி. சத்யாவிலிருந்து "ச " ஷிவானியிலிருந்து "ஷி" மேனகாவிலிருந்து "கா" என எடுத்து இணைத்து "சஷிகா" ஆகிவிட்டார்.   

அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டபோது அவர் முதல் முதலில் சமையல் செய்யும்போது என்னென்ன சொதப்பல்கள் செய்தார் எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் இதை அனுப்பினார். இரு குழந்தைகளுடன் வலைப்பூவிலும் அவர் எழுதிக் கொண்டிருப்பது பிரயத்தனமான செயல். அதற்காக அவருக்கு என் அன்பும் வாழ்த்தும்.

இனி அவர் சொன்னது இங்கே.
என்னை பற்றி

என் பெயர் மேனகா சத்யா...சஷிகா என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.சொந்த ஊர் புதுச்சேரி,இரண்டு குழந்தைகளுடன் வசிப்பது பிரான்சில்...

அன்றாடம் செய்யும் சமையல் குறிப்புகளையே வலைப்பூவில் விளக்கபடங்களுடன் எழுதுகிறேன்.

தற்போது ஆங்கில வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்..

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

100 சிறந்த சிறுகதைகளில் 75 - 100ம் அதில் சிறந்த கருப்பு ரயிலும் பத்ம வியூகமும்.



100 சிறந்த சிறுகதைகளில் 75 - 100ம் அதில் சிறந்த கருப்பு ரயிலும் பத்ம வியூகமும்.



76. சித்தி :- மா. அரங்கநாதன். ஒரு ஒட்டப்பந்தயவீரன் பற்றிய கதை. மாபெரும் வெற்றி பெற்ற வீரனாக இருந்தாலும் தன்னுடைய ஓட்டத்தைத் தவிர எதையும் அவன் கற்றுக்கொள்ள விழையவில்லை என்பது கசப்புணர்வு தரும் முடிவாக அமைந்துள்ளது. ஒரு விளையாட்டு வீரனின் உணர்வுகள் சாகடிக்கப்படும்விதம் பற்றியும் கதையூடே வருவது சிந்திக்கத்தக்கது.

77. புயல் :- கோபிகிருஷ்ணன். மத்தியதர வர்க்கத்து கணவன் மனைவி பற்றிய கதை. வெளியுலகில் ஏற்படும் வினோத அனுபவங்கள் பற்றி கணவன் முடிவில் மனதுள் அங்கலாய்ப்பது யோசிக்க வைத்தது. அப்பா அம்மா பண்ணின பாவம் பிள்ளைகள் மேல் விடியும் என்பது போல கணவன் பண்ணின பாவம் மனைவி மேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாக நினைவில்லை என்று நினைக்கும் கணவன் செய்த பாவம் என்னவென்றால்  ஒரு மாது போட்ட கோலத்தை மிதித்ததும் கடையில் இன்னொரு மாதுபக்கம் தான் பிடித்த சிகரெட் புகை சென்றதால் அவர் முகம் மாற (அந்த சிகரெட்டைப் போட்டு மிதித்ததும்தான்) வைத்ததும்தான்.

புதன், 27 செப்டம்பர், 2017

100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.



100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாசனமும் அந்நியர்களும்.

51. ஓடிய கால்கள் :- ஜி நாகராஜின் இக்கதை தப்பியோட முயன்ற ஒரு கைதியை லாக்கப் மரணத்துக்கு சாமர்த்தியமாக உள்ளாக்குவது குறித்தது. படித்த பதைப்பு இன்னும் போகவில்லை.

52. தங்க ஒரு :- கிருஷ்ணன் நம்பி . தங்க ஒரு வீடு கிடைக்காததை மிகவும் வித்யாசமான முறையில் செருப்பு அளவு வீட்டுக்காக உருவத்தை சுருக்கிக் கொள்ளும் மனிதனுடன் முடிகிறது. பட்டணத்தில் வீடு கிடைப்பது குதிரைக்கு கொம்பாக இருப்பதும் விலைவாசி ஏறி வயிற்றைச் சுருக்கிக்கொள்வதுமான முடிச்சு இறுக்கியது

53. மருமகள் வாக்கு :- மிக அருமையான இக்கதை மாமியாரிடம் மருமகள் அந்தக் காலத்தில் எவ்வளவு கட்டுப்பட்டு கட்டுப்பெட்டித்தனமாக இந்திருக்க வேண்டியதிருக்கிறது என்பதை வலியுடன் புரிய வைத்தது. இதுவும் கிருஷ்ணன் நம்பி கதைதான் . இதில்தான் அவர் மிக துல்லியமாக வெளிப்படுகிறார்.

திங்கள், 25 செப்டம்பர், 2017

பானிபூரியும் ஃபேட்ஸோ பேமிலியும்

1581. ஒரு வாக்கியம்
முடிந்துவிட்டதாக இடப்படும்
ஒரு முற்றுப்புள்ளி
முற்றும்புள்ளியாகி
இடைவெளியை உண்டாக்குகிறது.
இடைப்பட்ட இரண்டு வாக்கியங்களை
இணைக்கும்புள்ளியாகவும்
விழுந்திருக்கலாம்தானே !

1582. POT# Pani# Puri# Potato# "PULITHANNI.".

aiyo..vayithula puliya karaikkuthu..

no more pani puri..

kepiya kepiya inime road la vikirathellam kepiya.

1583. ஒரு பனித்துளியைப் போல மறைந்து விட முடிந்தால்
ஒரு இசையைப் போல கரைந்துவிட முடிந்தால்
ஒரு மழையைப் போல உதிர்ந்துவிட முடிந்தால் 
ஒரு இலையைப் போல இறங்கிவிட முடிந்தால்
எவ்வளவு அழகாக இருக்கும் வாழ்வு. 

1584. now PHD is easy...
,
,jus make a call.and your PIZZA will be delivered by PIZZA HUT DELIVERY. :D:D:D:D

1585. என் கசின் பிரதர் உபயோகிக்கும் வார்த்தை, "marana mass ". நான் உபயோகிக்கும் வார்த்தை.." SEMA.. OR SEMA NACH.".
அதுமாதிரி நீங்க சொல்ற வார்த்தை என்ன..?

1586. ஓரளவு உடுத்திய புடவைகளை யாருக்கும் கொடுத்துவிடலாம் என நினைக்கும்போது ஞாபகத்தின் வாசனை அதில் அதிகமாகிவிடுகிறது.

IBA AWARDS. இந்தியன் பிலாகர் அவார்ட்ஸ்.

The Indian Blogger Awards 2017

Arumugham Manavalan
All the best.

நித்யா குமார் ·
All the best...


ThiruVenkat Lakshmanan ·

Best blog for poems

Bala Sathya ·
My heartiest best wishes.



Orientalstocks Chennai · 
 Best nativity stories ever we have seen with local slang.

சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள். மை க்ளிக்ஸ் . MY CLICKS.

ஜாப்பனீஸ் பார்க் அருகில் உள்ள கட்டிடம். மெட்ராவில் இருந்து எடுத்தது
ஜூராங் பறவைப் பூங்கா.

சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.

சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ்.

ஸுவாலாஜி   ஒரு பாடமாக இருந்தாலும் சிங்கப்பூர் சந்தோஷா பீச் அண்டர்வாட்டர் வேர்ல்டுக்குச் சென்றபோது ஸீ அர்சின்ஸ் , ஸீ குக்கும்பர், ஸீ ஹார்ஸ், ஆக்டோபஸ், லாமலிடன்ஸ், வேல், ஷார்க், கோரல், டால்பின், ஈல்,ஷ்ரிம்ப் , சீல் ,ஐசோபாட்ஸ் ஜெல்லிபிஷ், லோப்ஸ்டர்  , மனடி , ஆயிஸ்டர், ப்ரான் , ஸ்டார் பிஷ் , க்ராப் ,ஸ்னேய்ல் என கடல்வாழ் உயிரினங்கள் பற்றிப் படித்திருந்தாலும் இதை எல்லாம் சரியாக ஆய்வு செய்யாமல் அப்படியே எடுத்துள்ளேன். 

எடுத்தவை அப்படியே உங்கள் பார்வைக்கு. இங்கே.


சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS,



வருடம்தோறும் வசந்தம் தேடி வருவோம் இங்கே.. 

மஞ்சள் முகத்தழகி 

புதுவெள்ளை மழை ஒன்று பொழிகின்றது
அழகழகாப் பூத்திருக்கு

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன். HOLLYWOOD HEROS NO.1. LIAM NEESON.

ஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன்.


என்னைக் கவர்ந்த ஹாலிவுட் ஹீரோஸ் வரிசையில் நிச்சயம் லியம் நீஸனுக்கு முதலிடம் உண்டு. நான் அவரது பெரும்பாலான படங்களை பார்த்ததில்லை என்றாலும் பார்த்த சில படங்கள் அவரது காரெக்டரை உண்மையான பர்சனாலிட்டி போல மனதில் பதியவைத்தவை.

எல்லாருக்கும் அவரது தந்தைதானே முதல் ஹீரோவாய் இருக்கக்கூடும். லியம் நடித்த டேக்கன் படத்தில் அவர் பதின்பருவப் பெண் ஒருவருக்குத் தந்தையாய் நடித்திருப்பார். அந்த முதல் இம்ப்ரஷனே பிடித்தது. மகாநதி கமல் டைப் கதை அது. தன்  பெண்ணை மீட்கப் போராடும் தகப்பனின் கதை அது. மகாநதியைப் பார்த்துவிட்டுப் புரண்டு புரண்டு அழுத ( பெண்குழந்தைக்குத் தகப்பன்களான ) ரங்க்ஸின் நண்பர்கள் ஏராளம். 

லியம் பிறந்தது பிரிட்டனில் உள்ள  வடக்கு அயர்லாந்தில் 1952 ஜூன் 7 இல். அம்மா பெயர் காதரின் அப்பா பெர்னார்ட் நீஸன்.  லியம் நீஸனோட இயற்பெயர் வில்லியம் ஜான்  நீஸன். ட்ராக் ட்ரைவர், ஆர்க்கிடெக்ட், பாக்ஸர் போன்ற தொழில் புரிந்தவர் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.  

வியாழன், 21 செப்டம்பர், 2017

சென்னைக் கோவளமும் கேரளக் கோவளமும்:- எட்டு வித்யாசங்கள்.

கடலைப் பார்த்தால் மனதில் அலையடிக்க வேண்டும் கடல் புகைப்படத்தைப் பார்த்தாலும்.

கடலுக்கருகில் எடுத்த நிறைய புகைப்படங்கள் கரைந்துவிட்டதால் இருப்பவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

கேரளா சென்றிருந்தபோது திருவனந்தபுரத்திலிருந்த நண்பர் கொச்சுவேலி பீச்சுக்கும், கோவளம் பீச்சுக்கும் அழைத்துச்சென்றார்.
இரண்டுக்கும் பேர் ஒன்றானாலும் குறைந்தது ஆறு வித்யாசங்கள் இருக்கலாம்.

1. இரு கடற்கரைகளிலும் சிறு பாறைகள் காணப்படுகின்றன.

ஆனால் கேரளத்தில் பாறைகள் அதிகம். சுண்ணாம்புக்கல் பாறைப்படிவம் போல.


2. இரண்டாவது கேரளா கடற்கரையில் அலையை ஒட்டியே நிறைய உணவங்கள் உண்டு கேரளா கோவளத்தில்.  விதம் விதமான மீன்கள், கடல்சார் உணவுகள் பார்வையைக் கவரும். ஆனால் நாற்றமே இருக்காது. !

இங்கேயோ சென்னையில் மீன் வறுவல் கடைகள் உண்டு. ஆனால் பீச் முழுவதும் கவுச்சி வாடை ஆளைத் துரத்தும்.  


3. நம்மூரு பீச் சீரான பீச் ஆனால் கேரளா கோவளம் வளைந்து நெளிந்து நிறைய ரகசியங்கள் கொண்டது.
4. மணல் & பாறைகள் மேல் பச்சைக் கொடிகள் செடிகள் வளர்ந்து நிற்கும் கேரளாவில். ஆனால் இங்கே செடியும் கொடியும் பீச்சில் இருக்கவே இருக்காது.


5. வெளிநாட்டுக்காரர்களைக் கவர அங்கே பீச் தண்ணீருடன் கோப்பைத் தண்ணீரும் உண்டு. குடித்துவிட்டு ஆட்டம்போடுவது மட்டுமில்லை தண்ணீர் விளையாட்டுகளும் உண்டு. 
6. இங்கே நாமோ பெட்ஷீட் விரித்தமர்ந்து சுண்டல் கொண்டு சென்றோ வாங்கியோ சாப்பிடுவோம். அங்கே அவர்களுக்கு சுண்டல் என்றால் என்னவென்றே தெரியாது.


கடற்கரையிலும் கழிவுகளைக் கொட்டியும் ஆடுமாடுகளைக் கட்டியும்  மேய்ப்போம் நாம் அங்கே அது இல்லை.  
நம்முடைய காவல் தெய்வங்கள் கடற்கரையையும் காவல் காக்கின்றார்கள். அங்கே கோயில் எல்லாம் கிடையாது. அது ஒரு கேளிக்கை & வியாபார ஸ்தலம் மட்டுமே.
என்ன இருந்தாலும் சுண்டல் இல்லாத பீச் ஒரு பீச்சா. ? பீச் மண்ணு முகத்துல வீச சுட சுட ஊதியபடி பஜ்ஜியும், சின்னப்புள்ளைங்க மாதிரி புசுபுசுன்னு அமுக்கி பஞ்சு மிட்டாயும், கண்ணாடி போட்ட டின்னிலோ, இல்ல தூக்குவாளியிலோ வெதுவெதுப்பான தேங்காய் மாங்காயோட முழிச்சுக்கிட்டு இருக்குற பட்டாணியையோ வாங்கித் தின்னாட்டி பீச் விஜயம் முற்றுப் பெறுமா.

இளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்தன நடராஜரும், கங்காதரரும்.

இளையாற்றங்குடிக் கைலாசநாதர்கோயில் காரைக்குடியில் இருந்து 27 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது பற்றி விரிவாக இன்னொரு இடுகை எழுதுவேன். இப்போது அங்கே கண்டு தரிசித்த தெய்வத்திருவுருவங்களின் ஓவியங்கள் சில உங்கள் பார்வைக்கு.
நர்த்தன நடராஜர். கைலாசநாதரும் நித்யகல்யாணி அம்மையும்.

வாயிலிலேயே இன்னொரு ப்ரம்மாண்ட நடராஜர் பின்னர்  வருகிறார்.

புதன், 20 செப்டம்பர், 2017

நகரச்சிவன் கோயில் சூரக்குடி.

காரைக்குடியில் இருந்து கானாடுகாத்தான் செல்லும் பைபாஸ் சாலையில் பத்து கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். ஐந்து நிலை ராஜகோபுரம் தென்புறமும் அமைந்திருக்க கிழக்குப் பக்கம் ரிஷபாரூடராகவும் நிலையில் காட்சி தருகிறார் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் - சிவபெருமான்.


பதினாறு கால் மண்டபம் அழகாக இருந்தாலும் அதன் முன் பக்கம் பக்கவாட்டில் எல்லாம் ஒரே மண் தரைதான். நடைபாதை போடவேண்டும். மழைக்காலம் என்றால் சேறு சகதி ஆகிவிடும். கோயில் புனருத்ராதாரணம் செய்யவேண்டிய கட்டம் என நினைக்கிறேன்.

வேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில்

காரைக்குடியில் இருந்து  ( 9 கிமீ தூரத்தில்) புதுக்கோட்டை செல்லும் வழியில் கோட்டையூரில் உள்ள வேலங்குடியில் அமைந்துள்ளது அருள்மிகு கண்டீஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோயில். அருகில் ஒரு பெருமாள் கோயிலும், சொக்கேட்டான் ( விநாயகர் ) கோயிலும் அமைந்துள்ளது. எதிரே பெரிய மைதானமும் மாபெரும் ஊருணியும் இருக்கிறது.

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இதுவும். வேல மரங்கள் அதிகம் இருந்த காரணத்தால் இது வேலங்குடி என அழைக்கப்பட்டதாம். மிகப்பெரும் கம்பீரமான கோயில் இது.

கிழக்குப்பக்கம் மூன்று நிலை கொண்ட இராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. ஆனால் கோயிலின் தெற்கு வாயில் அம்பாள் சந்நிதியின் பக்கமே திறந்துள்ளது.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

நமது செட்டிநாடு , நகரத்தார் திருமகள், ஆச்சி வந்தாச்சு ஆகிய மூன்று பத்திரிக்கைகள் உறவினர் மூலம் வாசிக்கக் கிடைத்தன.

இன்னும் நகரத்தார் மலர்,  நகரத்தார் குரல் தற்போது தனவணிகன் என்ற பெயரிலும் ,  காரைக்குடியையும் செட்டிநாட்டையும் மையமாக வைத்து வெளி வரும் பத்திரிக்கைகள் ஆகும். குமரி மலர் முன்னர் வெளிவந்த பத்திரிக்கை. நகரத்தார் போஸ்ட் என்றொரு பத்திரிக்கையும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

ரோஜாவின் நகரத்தார் திருமகள் பத்திரிக்கையின் ஆசிரியர் திருமதி வள்ளிக்கண்ணு நாகராஜன்  திரு ரோஜா முத்தையா அவர்களின் புதல்வி. இதன் விலை ரூ 25/- , இது 2014 இல் இருந்து கோட்டையூரில் இருந்து வெளிவருகிறது. இதில் தலையங்கம், செட்டிநாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயில் பற்றிய விபரங்கள், சமையல் குறிப்பு, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் மாதங்களின் சிறப்பு ஆகியன தொடர்ந்து வெளியாகின்றன. சிலசமயம் சிறுகதைகளும் வெளியாகின்றன.

நகரத்தார் என்னும் சந்திரகுல தனவைசியர் என்ற தலைப்பில் மின்சாரத் தந்துவிடு தூது என்ற பகுதியை - தசாங்கம் என்ற கவிதையாக - (பாட்டுடைத்  தலைவனின் மலை, நதி, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகிய பத்து அம்சங்களை )  கவிஞர் சக்தி என்பவர் பகிர்ந்து உள்ளார். இன்னும் வெளியிடப்படாத பழைய நூலில் உள்ளது இது என்கிறார்.

நகரத்தார் சங்கத் தகவல்கள், வாசகர் கடிதம், சோம வள்ளியப்பன் அவர்களின் கட்டுரை, நகரத்தார் திருப்பணிகள், அறக்கட்டளைகள், சிறுவர் பகுதி, செட்டிநாட்டு வட்டகை & 72 ஊர் ( ஒவ்வொரு மாதமும் ஒரு ஊர் )  விபரம், கம்பன் பற்றிய இலக்கியச்சுவை, கர்ணன் கதை, தீபாவளிப் பண்டிகை, சுற்றுலாக் கட்டுரை, தமிழ்க்கடல் இராயசொ, அரசர் முத்தைய வேள், ஆகிய கட்டுரைகள் உள்ளன.

இத்துடன் அன்புள்ள ஐயா என்ற தலைப்பில் திரு. ஏ. கே. செட்டியார் பற்றிய வள்ளிக்கண்ணுவின் அபாரமான கட்டுரை கண்களில் நீர் கோர்க்கச்செய்தது. மனம் தொட்ட பகுதி அது. திரு ஏ கே செட்டியாரின் முழுப்பெயர். ஏ கருப்பஞ்செட்டியார். உலகம் சுற்றிய முதல் தமிழர்., முதல் உலகப் பயணக் கட்டுரையாளர்.

கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி திருக்கோயில்
கோயிலின் தெற்கு வாயிலில் திருவிதாங்கூர் ராஜா
ஆற்றுக்கால் பகவதி கோயில்

திங்கள், 18 செப்டம்பர், 2017

ஒரு தேரில் இத்தனை சிற்பங்களா ?

கடியாபட்டி பூமிஸ்வர சுவாமி கோயிலின் தேரைப் பார்த்து இன்றுவரை வியந்துகொண்டே இருக்கிறேன். ஒரு தேரை கிட்டத்தில் இவ்வளவு தெளிவாகப் பார்த்தது அன்றுதான்.


திருமயம் கோட்டை குடைவரை லிங்கக்கோயில்.

ஒரே வழுக்கும் பாறைகள் . எங்கும் பிடிமானம் இல்லை. படி இறங்கி வந்தால் இன்னும் பள்ளம் .அங்கே ஏணி மாதிரி இரும்புப் படியிலிருந்து எல்லாரும்  இறங்கிக்கிட்டு  இருக்காங்க. கொஞ்சம் எட்டிப் பார்த்தா அட ஏறிட்டு அதன்பின் இறங்கிகிட்டு இருக்காங்க ! அங்க என்ன இருக்கு ? அதீத ஆவலோடு போனோம்.

சனி, 16 செப்டம்பர், 2017

ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.

ஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.

நிலவைப்போல் தேய்ந்து மறைந்து பின் புதிதாய் உருவாகி வருகிறது இன்றைய காதல். ஆனால் இளமதி பத்மாவின் காதலோ  என்றும் ஒளிரும் சூரியனாய் மிளிர்ந்துகொண்டே இருக்கிறது. இரண்டாண்டுகளே ஆயுள் கொண்ட அவரது காதலின் (காதலன்  ) நினைவில் பொழிந்த கவிதைகளிலும் அக்காதல் ஆகர்ஷிக்கிறது. நம்மையே புரட்டிப் போடுகிறது. மாலை ஏக்கத்தில் ஆழ்த்துகிறது. இரவெனும் தனிமையில் தோயச்செய்கிறது. மறுநாளாய்ப் பூக்கிறது. மனம் கொண்டு மணம் சேர்க்கிறது.

தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

உங்களுக்குத் தாய்மாமா இருக்கிறாரா. ? ஒன்றா இரண்டா.  ? ஒன்றோ இரண்டோ மாமாக்கள்  இருக்கின்றார்கள் என்றாலே நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்தான்.  எனக்கு நான்கு அம்மான்கள் இருக்கிறார்கள். அப்போ நான் மிகுந்த தவப்பயன் செய்தவள்தானே.

எப்போதோ ஒருமுறை பார்த்துக் கொண்டாலும், எப்போதும் உங்களுடன் தொடர்பில் இல்லாதபோதும் முக்கியமான தருணங்களில் அவர்கள் அன்பு உங்களை ஆசீர்வதிக்கும். தாய்க்கு நிகர் தாய்மாமாக்கள்.  என்றால் மிகையில்லை.

என்னுடைய மூத்தமாமா தெய்வத்திரு சுப்பையா அவர்கள் காரைக்குடியில்  திருக்குறள் கழகத்தினை நிறுவியவர்களுள் ஒருவர். மூன்றாவது மாமா லயன் திரு வெங்கடாசலம் இன்றும் அக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றி வருடம் ஒருமுறை விழா நடத்தி அக்கழகத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். மேலும் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களை அதன் செயலாளாராகத் திறம்பட நடத்துபவர்கள். நான்காவது மாமா நாணயம் திரு நாகப்பன் அவர்கள் பங்குச்சந்தையின் இயக்குனராகவும், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பங்குச்சந்தை பற்றிய நுண்ணிய தகவல்களை அளித்தும் அது தொடர்பான கருத்தரங்குகள் நடத்தியும் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்கள்.  
இங்கே நான் சிறப்பாகக் குறிப்பிட வந்தது என் இரண்டாவது மாமா ஜோகூர் திரு ராமநாதன் அவர்களை பற்றி. அவர்களை பற்றி முன்பே சிலமுறை எழுதியும் சென்னை அவென்யு, கொளத்தூர் டைம்ஸ், ஆகிய பத்ரிக்கைகளுக்காகப் பேட்டி எடுத்தும் வெளியிட்டுள்ளேன்.  வைரவன்பட்டியில் நடந்த அவர்களின் பீமரத சாந்திக்கு வெளியிடப்பட்ட நூல் பற்றியும் அவர்களின் பண்புநலன் பற்றியும் இங்கே எழுத விழைகிறேன்.
சிறுவயதில் எங்கள் ஐயாவுடன் மலாயாவுக்கு சென்றவர்கள் எங்கள் மாமா. கல்லுரிப் படிப்பு சென்னை கிறிஸ்டியன் காலேஜ். அதன்பின் திருமணம், மலாயாவில் கெமிஸ்ட்ரி டீச்சராகப் பணி புரிந்து தாயகம் திரும்பி செபியின் அங்கத்தினராகி பங்குச்சந்தை வணிகம். இப்போது கற்பித்தலை ஹாபியாகச் செய்துவருகிறார்கள்.

காலைத் தென்றலில் கயலும் நானும் :-




வெள்ளி, 15 செப்டம்பர், 2017

இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்மன் திருக்கோயில் :-

மாத்தூரில் இருந்து ஒரு கிமீ தொலைவிலும் காரைக்குடியில் இருந்து ஐந்து கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் கோயில். கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இது.
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். மூன்று சுற்றுப் பிரகாரங்கள். வெளியே ஒரு கோபுரம், உள்ளே ஒரு கோபுரம்.
கொங்கணச்சித்தர் ஈசனை வழிபட்டு இங்கே இருந்த பைரவர்  உதவியால் ஐநூறு மாற்றுத் தங்கத்தில் இருந்து ஆயிரம் மாற்றுப் பொன்  தயாரித்தபோது அது பூமியில் ஜோதி ரூபமாக அழுந்தி பொன்னிற லிங்க வடிவில் காட்சி அளித்தது. பிரகாசமாக இறைவன் இவ்வுருவில் சுயம்புவாகத் தோன்றியதால் இவ்வூர் இறைவனுக்குத் தான்தோன்றிறீசுவரர் என்றும் சுயம்பிரகாசேசுவரர் என்றும்  பெயர்.

மாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக்கோயில்

காரைக்குடியில் இருந்து ஆறு கிமீ  தூரத்தில் அமைந்துள்ளது மாத்தூர் கோயில். நகரத்தார் கோயில்கள் ஒன்பதும் அடுத்தடுத்து இரு நாட்களில் தரிசிக்கும் பேறு பெற்றேன் . எல்லாக் கோயில்களுமே கிட்டத்தட்ட ஐம்பது கிமீ சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன. முதலில் மாத்தூர்.

இக்கோயில் பற்றி முன்பே சில இடுகைகள் எழுதி உள்ளேன். இரண்டாம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட மிகப்.பழமையான கோயில் இது.   மாத்தூர் கோயில் ஊரணியின் பெயர் கமலாலய தீர்த்தம். ஸ்தலவிருட்சம் மகிழமரம்.மாசிமாத திருவிழா பிரசித்தம்.

கொங்கணச்சித்தர் என்னும் முனிவர் ரசவாத வித்தையால் தங்கம் தயாரிக்க முற்பட அவரைத் தடுத்தாட்கொண்ட ஈசன் குடிகொண்ட கோயில் இது. தங்கத்துக்கு மாற்றுரைத்த ஈசன் என்பதால் ஐந்நூற்றீசுவரர் என்றழைக்கப்படுகிறார். தேவி பெரியநாயகி அம்மன்.


வியாழன், 14 செப்டம்பர், 2017

பிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிகள்.

பிதார் பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். அங்கே சோலே கம்பா மாஸ்க் எனப்படும் பதினாறு தூண் மசூதியைப் பற்றியும்,  சிற்பங்கள், அக்கம் பக்கமிருக்கும் வழிபாட்டு ஸ்தலங்கள் பற்றியும் எழுதி உள்ளேன். தங்கள் கோட்டையை குண்டு துளைக்காமல் கட்டி இருக்காங்க. ஆனா அங்கே இருந்த இந்த  பீரங்கிகள் எந்தக் காலத்துல உபயோகமாச்சுன்னு தெரியல. 


பிதார் கோட்டையில் கல்வீணை ?!

பஹாமனியர்கள், முகம்மது பின் துக்ளக், பிஜப்பூர் சுல்தான், நிஜாம்கள், முகலாயர்கள் என்று பலர்  கை மாறினாலும் இன்னும் அழகும் எழிலும் மிச்சமிருக்கும் இடம் மொஹமதாபாத் என்று முன்னர் அழைக்கப்பட்ட பிதார் கோட்டை.

பிதார் கோட்டை போட்டோகிராபர்களின் டிலைட் எனலாம். எங்கெங்கு பார்த்தாலும் சிதைந்த இடத்திலும் கொள்ளை அழகு கொட்டிக் கிடைக்குமிடம் பிதார்.

பெர்சியன், துருக்கிய, இஸ்லாமிக் , இந்தியக் கட்டிடக்கலைக்கு கூட்டான எடுத்துக்காட்டு இந்தக் கோட்டை.

இந்தத் தூண் சிற்பத்தில் இந்திய அரசனும் நடனமங்கையரும் . மேலே குதிரை சிங்கம் யாளி யானை ஆகியன அணிவகுக்கின்றன .ரோஜாப்பூக்கள், சிவலிங்கங்கள் நாகங்கள் கூட. பெர்சியன் கலைக்கு  நடுவில் குறுக்கு கோடுகளும், சதுரமும்  பூக்களும்.
கிரானைட் தாமரை இல்லை இது, மினி வாட்டர் ஃபவுண்டன்.

இந்த சீர் போதுமா ?!

மாபெரும் பணக்கார உறவினரொருவரின் இல்லத் திருமண விழாவில் எடுத்தது.
*813பதினாறு பட்டுப்புடவைகள் டிசைனர் ரவிக்கைகளுடன்.
வீட்டில் மாட்ட உயர்தர பெயிண்டிங்குகள் & மாடர்ன் சுருக்குப் பைகள்  
Related Posts Plugin for WordPress, Blogger...