எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப்போட்டி - 2016 முடிவுகள்.

ஆத்தா நான் பாஸாயிட்டேன். :) ஹாஹா நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் இந்த வருடமும் என் கவிதைக்கு மூன்றாம் இடம் பரிசு கொடுத்தமைக்கு !

உங்கள் இடையறாத வேலையிலும் பல்வேறு பட்ட பணிகளிலும் நேரம் ஒதுக்கி இலக்கிய சேவை செய்து வருவதற்கு பாராட்டுகளும் பரிசுக்கு அன்பும் நன்றியும். !!!!

இரு வருடங்கள் முன்பு ( ஃபக்ருதீன் சகோ இந்தியா வந்திருந்த போது ) எனது ”புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா” என்ற கவிதைக்கான பரிசுத்தொகையையும் விருதையும் அனுப்பி கௌரவம் அளித்ததை இந்த நேரத்தில் இன்பமாக நினைவுகூர்கிறேன்.


/////*ரியாத் தமிழ்ச் சங்கம்*
*கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி - 2016* 🌺🌺🌺
முடிவுகள்:

முதலிடம் : உரூ.பத்தாயிரம்

திங்கள், 30 ஜனவரி, 2017

தேசப்பற்றும் தேசப்பித்தும்.

1241. Omg.! Hubby drive pannumpothuthan theriyuthu road la rendu side layum paLLam. Plz save us.

1242. Millet adai & mosambi juice


1243. Welcoming pongal



1244. அடிக்கும் காற்றில் மொட்டை மாடியில் நடப்பது இறக்கையில்லாமல் இலக்கற்றுப் பறப்பது போலிருக்கிறது  :)

1245. கூர் தீட்டிப் பார்ப்பது போல்
முனை முறித்து விடுகிறேன்.,
திரும்ப சாணை பிடிக்கத் துவங்குகிறாய்
இனிமையான உணர்வுகளை..

சனி, 28 ஜனவரி, 2017

உரத்த சிந்தனை - 2017 இல் உங்கள் பங்களிப்பு.

சிகரங்கள் நமக்குத் தூரமில்லை
சிறகுகள் அதுவரை ஓய்வதில்லை.

-- என்ற கேப்ஷனோடு வெளியாகவிருக்கிறது உரத்த சிந்தனையின் 33 ஆம் ஆண்டு மலர் ( 12. 3. 2017 அன்று )

வெள்ளி, 27 ஜனவரி, 2017

வாங்க பழகலாம் – ஒரு பார்வை.


வாங்க பழகலாம் – ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( ஐந்தாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

செவ்வாய், 24 ஜனவரி, 2017

தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

1221. நாட்டு நடப்பில் ஙேஙேஙே என்று காதல் பரத் மாதிரி ஃபேஸ்புக், ப்லாக், வாட்ஸப்பில் சுற்றிக் கொண்டிருந்தால் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றுகிறது.

#கருத்து_கந்தசாமி_அலர்ட்.

1222. You have used an old password. If you have forgetten request for a newone ---- athusari naney use pannathatha nee een memory la vaichirukey .. Haha login problems..

1223. BAN PETA. I SUPPORT JALLIKKATTU.
#jallikkattu

1224. The real problem is talking.. I mean takling with the overwhelming situation.

#conrolllllll☹

1225. Thenammai Lakshmanan
Attended Fatima College
Lives in Hyderabad, Andhra Pradesh, India
2,484 followers|27,572,184 views

The version that you're using will be replaced soon. Click here to switch to the new Google+.


-- ஆமா இத  அடிக்கடி நியூ வெர்ஷனுக்கு மாத்தப் போறேன்னு ஏன் டார்ச்சர் கொடுக்குது கூகுள் ப்ளஸ். பழைய ஆல்பத்தை பார்க்குற மாதிரி தினம் இந்த வியூஸை பார்த்து 2 கோடியே எழுபத்தி ஐந்து லட்சம் பேர் பார்த்திருக்காங்கன்னு நான் சந்தோஷப்படுறது கூகுளுக்கே பிடிக்கலையா :)

இந்த லெட் அஸ் கோ வைத் தெரியாமத்  தட்டிடுவமோன்னு தினம் நான் தவிக்கிற தவிப்பு.. யப்பா கூகுளாத்தா விட்டுடு. பொழைச்சுப் போறேன். 

சனி, 21 ஜனவரி, 2017

கோகுலத்தில் புதிய தொடர் - விடுதலை வீரர்கள்.

கோகுலத்தில் வரும் ஃபிப்ரவரியில் இருந்து ஓராண்டுக்கு ”விடுதலை வீரர்கள்” என்ற தொடர் வெளியாகிறது.

கடந்த ஓராண்டாக ”சிறார்க்கேற்ற சத்துணவு ” என்ற தலைப்பில் பன்னிரெண்டு சத்துணவுக் குறிப்புகள் இடம் பெற்றன.


மேட்டித் துணியில் பச்சைக்கிளியும் பட்டாம்பூச்சியும் பூக்கூடையும்..

பட்டு பருத்தி சில்க் போன்ற எல்லாத் துணிகளிலும் எம்பிராய்டரி செய்யலாம் என்றாலும் மேட்டித்துணி எம்பிராய்டரி கொஞ்சம் ஸ்பெஷல். இதைக் கண்ணுத்துணி என்றும் சொல்வார்கள். கண்ணியை எண்ணிப் பிரித்து இண்டு இண்டுவாகத் தைத்து டிசைன் செய்வது. அதாவது க்ராஸ் தையல்.

அம்மா பின்னிய பச்சைக்கிளி.
எனது பட்டுப் புடவையில் நானே டிசைன் செய்த கட்ச் எம்பிராய்டரி.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

இருகோடுகளும் இணைகோடுகளும்.

ஹாலிடே நியூஸ் செந்தில் சகோவின் ஒரு இடுகையில் இண்டர்நேஷனல் ரயில்வே ஸ்டேஷன் & ஏர்போர்ட்ஸ் பார்த்திருக்கிறேன். இருகோடுகளில் இணைகோடு போட்டுப் பயணிக்கும் இரயில் வண்டி என்றால் எனக்குக் காதல். :)

மும்பை, சென்னை, ஹைதை, டெல்லி, பெங்களூரு, குவாலியர், குல்பர்கா,கோவா, மைசூர், பழனி, மதுரை, காரைக்குடி, திருச்சி, ( துபாய், சிங்கப்பூர் ) ஆகிய இடங்களில் என்னை எப்போதும் கவரும் ரயில்வே ஸ்டேஷன்களையும், சென்னை, மும்பை, ஹைதை, துபாய், சிங்கப்பூரில் ஏர்போர்ட்டையும் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப் & செல்ஃபோன்களில் ஹோகயா.

வீட்டில் அட்வான்ஸ்டா இருக்கு என்று ஃபோன் மாத்தி சிம் போட்டு கொடுத்ததும் ஙேஙேஙேதான்.சரி விடுங்க இருக்கத வைச்சு இடுகையைத் தேத்துவோம் :) வாங்க போவோம் கூஊஊ பூம்ம்ம்ம் சிகுபுகு சிகுபுகு :)

டாப் 1. மனங்கவர்ந்த காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன் நியூ எண்ட்ரன்ஸ் :)



மிக மிக நீண்ட கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன். 
 
கருத்தைக் கவர்ந்த ஹைதை/மும்பை ஏர்போர்ட் . ( நாளாச்சுல்ல மறந்தே போச்சு :(

நம் மரபு நம் உரிமை.

சர்வதேச அரசியலில் சிக்கிக்கொண்டு நம் பாரம்பரிய விளையாட்டுகள், உணவு, விவசாயம், ஆகியன படும் சிக்கல்களைக் கண்டு நொந்துபோய் இருக்கிறேன்.

நம் உணவு, விவசாயம் ஆகியன நஞ்சாகி வருகின்றன. ஜெர்சி பசுவின் பால் டயபடிக் உண்டாக்கக் கூடியதாம். அதேபோல் வெள்ளைச் சீனி வயிற்றுக்கு நஞ்சு. கடலையையே ஒரு தலைமுறை மறக்கடிக்க வைத்துவிட்டார்கள். அது கொழுப்பு இது கொழுப்பு என்று நம் பாரம்பரிய உணவு வகைகளை வெறுக்க வைத்துவிட்டார்கள். சர்வதேச மருத்துவச் சந்தையில் இதனால் உண்டாகும் வியாதிகளுக்கான மருந்துகளுக்கு இந்தியாதான் முதல் கன்ஸ்யூமர். இனியாவது விழிப்போம்.

நம் மொழி நம் உணவு  நம் பாரம்பர்யம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.


வியாழன், 19 ஜனவரி, 2017

கம்பன் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)


இந்த இணைப்பிலிருந்து எடுத்துப் பகிர்ந்திருக்கிறேன். முழுமையாகப் படித்து விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் பங்குபெற வேண்டுகிறேன். ஆய்வுக் கட்டுரைகளும் அனுப்பலாம். அதன் விபரங்களும் உள்ளன.



          
/// காரைக்குடி கம்பன் கழகம்
நடத்தும்
‘செட்டிநாடும் செந்தமிழும்’
என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
                      அறிவிப்புமடல்
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.
      கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்ருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக அவதரித்த நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார். கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 33 ஆண்டுகளாக கம்பன் விழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.  

புதன், 18 ஜனவரி, 2017

ஆதவன் மறைவதில்லை.


ஜனவரி பதினைந்தாம் தேதி இரவு ஒரு துயரச்செய்தியை ”லவ்லி லேடீஸ்” வாட்ஸப் குழுமத்தில் தோழி அகிலா பகிர்ந்திருந்தார். நம் அன்புக்குரிய வானவன் மாதேவி அவர்கள் இயற்கை எய்திய செய்திதான் அது. உண்மையை ஏற்றுக் கொள்ளாது அதிர்ந்தது நெஞ்சம். திரும்ப நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து அதை உறுதிப்படுத்தினார் தோழி எழில் அருள்.

தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இறந்த அனுராதாவைப் பற்றி என்னுடைய சாதனைஅரசிகள் நூலில் எழுதி இருக்கிறேன். இவர்களைப் பற்றி தோழி கீதா இளங்கோவன் முகநூலில் தனித்தகவலில் பகிர்ந்தவுடன் இவர்களின் பேட்டி வேண்டி இன்பாக்ஸில் தொடர்பு கொண்டேன். 

இவர்களிடம் என்னை அணுக்கமாக உணரச் செய்ததே இவர்களின் பேரும் இலக்கிய ஆர்வமும்தான். தன்னம்பிக்கை மிக்க பெண்ணரசிகள். முதலில் இயல் இசை வல்லபியிடமும் அதன் பின் வானவன் மாதேவியிடமும். ஆனால் ஏனோ பேட்டியாக வெளியிட சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. 

12.10 2014 இல் நான் அவரிடம் கேட்ட கேள்விகள்.


////நீங்க ரெண்டு பேரும் எந்தத் தருணத்தில் இப்படி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்னுமுடிவெடுத்தீங்க ? 


உங்களோடு கரம் கோர்த்து செயல்படுவது யார்
இன்னிக்கு வரைக்கும்.?


அந்த நெகிழ்ச்சியான தருணத்தையும் அந்த நபர்களைப் பத்தியும் பகிருந்துக்குங்க.


மேலும் ஆதவ் ட்ரஸ்டுக்கான இடம் கட்டிடம் சம்பந்தமாவும் சொல்லுங்க


ஏன் ஆதவ் நு பேர் வச்சீங்க./////


இதற்கு பிஸியாக இருப்பதால் பின்னர் பதில் அளிப்பதாகக் கூறி  இருந்தார். 

தோழி கீதா அனுப்பிய உள்டப்பித்தகவல்.

 ////இந்நோயால் இயங்கும் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. இயக்கம் முழுமையாக முடக்கப்பட்டு, கடைசி கட்டத்தில் நோயாளி மரணமடைகிறார்.
இந்நோயின் மூலக்காரணம் மரபணு என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், இந்நோய்க்கான மருந்து இன்றுவரை கண்டறியப்படவில்லை என்பதே மிக வேதனை தரும் செய்தி.


தம்மைப் போல இந்நோயால் பாதிக்கப்பட்ட, வசதியற்ற நோயாளிகளுக்கு இந்த சகோதரிகள் மாற்று மருத்துவ சிகிச்சையை இலவசமாக அளிக்கிறார்கள். இதற்கென சேலத்தில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.


வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி பற்றிய `நம்பிக்கை மனுஷிகள்’ குறும்படம் வியாபார நோக்கம் இன்றி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகமான மக்களின் பார்வைக்கு கொண்டு போய் சேர்ப்பதன் மூலம் மக்களுக்கு வாழ்வின் நல்ல சங்கதிகளின் மீது நம்பிக்கை மிகுதிப்படும். இவர்கள் நடத்தும் பொதுத்தொண்டுக்கு உதவவும் வாய்ப்பாகும்.


இக் குறும்பட வெளியீட்டு விழாவை, இம்மாதம் 22ம் தேதியன்று (சனிக் கிழமை) காலை 10 – 12 மணிக்கு முகநூலில் நடத்த இருக்கிறோம், உங்கள் முன்னுரை விமர்சனத்தோடு அந்த வெளியீட்டு விழா தொடங்க வேண்டும் என விரும்புகிறோம்.


படத்தின் youtube link இது : https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4
படத்தை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை விமர்சனமாக எழுதுமாறும், வெளியீட்டு விழா நிகழும் 22 ந் தேதி அன்று உங்கள் பக்கத்தில் நிலைத்தகவலாக அந்த விமர்சனத்தைப் பதிவு செய்யுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி.
தோழமையுடன்
கீதா இளங்கோவன்////

/////அன்புக்குரிய நண்பர்களுக்கு, எங்களைக்குறித்த ஒரு ஆவணப்படம் "நம்பிக்கை மனுஷிகள்" என்னும் தலைப்பில் கீதா இளங்கோவன் மேம் பதிவு செய்திருக்கிறார்கள். அதன் வெளியீடு நாளை உங்களுக்கு மிகவும் பிடித்த (உங்களை அடிமையாக்கி வைத்திருக்கிற :P) இந்த முகனூலில் காலை 10.00-12.00 மணிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் Link உங்களில் சில நண்பர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த படத்தைப்பார்த்தவர்கள் அது குறித்த விமர்சனத்துடன் அந்த linkஐ நாளை காலை 10 மணிக்கு மேல் உங்கள் முகனூல் பக்கத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி:)////

குறிப்பு: வீடியோவின் linkஐ நிச்சயம் நாளை காலைதான் வெளியிடனும்  அதுவரை சஸ்பென்ஸ் ஆக நம்மிடம் மட்டுமே இருக்கட்டுமே , ப்ளீஸ்:)



பொதுவாக நான் அப்சர்வ் செய்த வகையில் சேலமும் அதைச் சார்ந்த ஊர்களிலும் பிறக்கும் பெருவாரியான குழந்தைகள் இந்நோய்த் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். மரபணு மாற்றப் பயிர்கள் , உரங்கள், இரசாயனங்கள், பூச்சிக் கொல்லிகள் தெளித்த காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உட்கொண்ட தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள் இந்நோயால் அதிகம் பாதிப்படைந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு என்ன என்பதுதான் தெரியவில்லை. 

நம் நாட்டைச் சிதைக்கும் குளோபல் வியாபாரிகள் வெளியேற்றப் பட்டால்தான் இயற்கை விவசாயமும் விவசாயியும் நாமும் பிழைக்கலாம். 

செவ்வாய், 17 ஜனவரி, 2017

நீங்க நல்லா இருக்கோணும் இந்த நாடு முன்னேற..


வீட்டில் அனைவரும் மேட்னி ஷோவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அச்சோ சினிமாவா நமக்கு பீதியளிக்கும் விஷயமாச்சே. யார் யாரோ பிரம்மாண்டமா திரையில் வந்து பேசுவாங்க பாடுவாங்களே.

நான் வல்லை நான் வல்லை என அனத்திக் கொண்டிருந்தது அந்தப் பிள்ளை. அப்ப சரி நீ வேலை செய்யும் லெக்ஷ்மி அக்கா வீட்டில் இரு எனச் சொல்லிவிட்டு அனைவரும் சினிமாவுக்குச் சென்று விட்டார்கள். அக்கா வேலை முடித்து வந்து கஞ்சியைக் குடித்து விட்டு எங்கோ அழைத்துச் சென்றார்கள்.

அட இதென்ன ஒரே கூட்டம். ஏதோ சின்ன பொந்து போல ஒரு கவுண்டர் இருக்கு.  ஒரு ஆள் மட்டுமே போகக்கூடிய அளவு சிமிண்ட் சுவரு. மூச்சு முட்டுது. எதுக்கு க்யூவுல நிக்கிறோம். திடீர்னு மணி அடிக்குது. நிக்கிற ஆள் தோள் மேலே ஆள் ஏறி ஓடுறாங்க.

ஞாயிறு, 15 ஜனவரி, 2017

முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம்.

முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்.




முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்.

முயற்சி திருவினையாக்கும் திரு.இராஜமாணிக்கம்

 

தீர்க்கமா சிந்தியுங்கள் தீர்மானமா முடிவெடுங்கள் ஜெயிப்பீர்கள் என்கிறார் வலையப்பட்டி திரு இராஜமாணிக்கம் அவர்கள். சுயம்பு எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்ட சுயம்பு இவர்கள்.

வெள்ளி, 13 ஜனவரி, 2017

மேகம் கருக்கையிலே..

இப்பிடி ஒரு பாட்டு கேட்டிருப்பீங்க. ஹொகனேக்கல் போனபோது இந்தப்பாட்டு மனசுல ரீவைண்ட் ஆயிட்டே இருந்தது. விலாவாரியான இடுகை பின்னாடி போடுறேன். இப்ப சில புகைப்படங்கள்

இந்த வட்டு/பரிசல்ல சுத்தும்போது கொஞ்சம் பயமா கூட இருந்தது. நாலு பேர் போனா சீப். ரெண்டுபேர் போனோம். ரெண்டு பேர் போனா 750 ரூ ந்னு நினைக்கிறேன் ( ரங்க்ஸ் கிட்ட கேக்கணும் ) .போட்காரர் பத்ரமா திருப்பி கொண்டாந்து விட்டதுக்காக (!) அவருக்கு 100 ரூ டிப்ஸ் கொடுத்தார்.

என்ன கொடுத்தீங்க ஏது கொடுத்தீங்கன்னு எதையும் அதிகம் விசாரிச்சா எகனை மொகனை ஆயிடும்னு கேக்குறதுல்ல. கூட்டிட்டுப் போனாங்களா ஜம்முன்னு சுத்திட்டு ஃபோட்டோவை சுட்டமான்னு வந்திட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை பாருங்க. ஹிஹி.

ஹொகனேக்கல் கர்நாடகா பார்டரில் இருப்பதால் இங்கிருந்து அந்த பார்டர் உள்ள கரை வரை சென்றுவிட்டு திரும்பி வரலாம். அவர்கள் ஹொகனேக்கல் வந்து திரும்பலாம்.

போட்காரர்களுக்கும் யூனிஃபார்ம். நீல யூனிஃபார்ம் போட்டவங்க தமிழ்நாட்டுத் தோணியர்கள். மஞ்சள் யூனிஃபார்ம் போட்டவங்க கர்நாடகா தோணியர்கள்.

நாங்க போட்டிருந்த லைஃப் ஜாக்கெட்டுமே இரு கலர்கள். நமக்கு ஆரஞ்ச் கலர் லைஃப் ஜாக்கெட். கர்நாடகா மக்களுக்கு ப்ளாக் கலர் லைஃப் ஜாக்கெட் கொடுத்திருக்காங்க. அதையும் வெயிட் பார்த்து அணிந்து கொண்டு போட்டில் ( வட்டில் ) ஏறணும்.

ஓகே இனி கொஞ்சம் போட்டும் ஃபோட்டோஸும்.

ஹைட்டுப் பார்த்து வெயிட்டுப் பார்த்து பாலன்ஸ் பண்ணி வட்டுல ஏறி உக்கார்ந்தாச்சு. 

அடித்துச் செல்லும் தண்ணீர்ப்பயணம்.
ஆகாச கங்கை பூந்தேன் மலர் தூவி..
அங்கே இருந்த பொந்துக்குள்ள போய் பார்த்துட்டு வர்றாங்க இளைஞர்கள்.. என்னே ஒரு ஆராய்ச்சி. செய்யாதேன்னா செய்யணும்.

வியாழன், 12 ஜனவரி, 2017

பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

1201. காரைக்குடியில் இத்தனை விஜய் ஃபேன்ஸ் இருக்காங்களா.? #பாண்டியன்_தியேட்டர்_பைரவா

1202. அட !. இன்னும் டைப்ரைட்டிங்க் இன்ஸ்டிட்யூட் இருக்கு. அதுல ஹவுஸ்ஃபுல்லா டைப்படிச்சிட்டு இருக்காங்க. ஸ்ரீவித்யா டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட். :)
#மெய்யா_பொய்யா

1203. எல்லா வியாதியையும் விட மக்களுக்கு பல் பிரச்சனை ஜாஸ்தியாயிடுச்சு போலிருக்கு.ரோட்டுக்கொரு டெண்டிஸ்ட் க்ளினிக் இருக்கு.
#டெண்டிஸ்ட்_காலேஜ்_அதிகமாயிடுச்சோ.

1204. பாலைப் பிரித்துண்ணும் அன்ன பட்சியாய் இரு என என்னிடம் அவ்வப்போது கூறுவார் என் கணவர். அதுவே என்னுடைய கவிதைத் தொகுப்பின் பெயராகியுள்ளது.

வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து வந்த, சில சமயம் இருண்மையை யும் பல சமயம் ஒளியையும் உண்ட ஒரு பெண்ணின் குரலாய் ஒலிக்கும் ”அன்னபட்சி:..” இந்தப் புத்தகத் திருவிழாவிலும் உங்கள் மேலான வாசிப்புக்கு வருகிறது.

நன்றி சுசீலாம்மா, அகநாழிகை பொன் வாசுதேவன். நன்றி செல்வி & ராமலெக்ஷ்மி

1205. அக்கா இந்த “போக்”கை எங்க ஒளிச்சு வச்சுருக்க...எனக்கும் சொல்லி தாங்க

தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
கவலை உனக்கிலை ஒத்துக் கொள்

- என சிறுவயதில் படித்த ஞாபகம். உண்மைதான். கைத்தொழில்கள் வருவாயை ஈட்டியும் தரும். வீட்டு உபயோகப் பொருளாகவும் ஆகும். இன்றைய டென்ஷன். டிப்ரஸ்டு, ஸ்ட்ரெஸ் நிறைந்த உலகில் ஸ்ட்ரெஸ் ரிலீஃபையும் கொடுக்கும்.

விருந்தினர் வந்தால் தற்போது எல்லாரும் சோஃபாவிலேயே உட்கார்ந்து பேசுகிறோம். முன்னே எல்லாம் விருந்தினர் வந்தால் உபசரிக்கத் 621. தடுக்குப் போட்டு அமரச் சொல்வார்கள். இப்போதும் காரைக்குடிப் பகுதியில் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் ஆண்கள் சோஃபாவில் அமர்வார்கள். பெண்கள் அமர 622.பர்மாப் பாய் விரிப்பார்கள் . சிலர் வீடுகளில் முகப்பிலோ பட்டாலையிலோ 623. சடப்பிரம்பாய் விரித்திருப்பார்கள்

பொதுவாக திருமண நடைமுறைகளிலும் விருந்திலும் தடுக்கு உபயோகப்படுகிறது. பெண்ணின் ஐயாவும் மாப்பிள்ளையின் ஐயாவும் தலைப்பா கட்டி சாமி அறையில் தடுக்கில் அமர்ந்து இசைகுடிமானம் எழுதிக் கொள்வார்கள். ( திருமண ரெஜிஸ்ட்ரேஷன் )

624. பந்திப்பாய், 625. பந்திச் சமுக்காளம் போன்றவையும் விருந்தளிக்க விரிக்கப்படுகிறது . ஒருவர் அமர்ந்து சாப்பிட வேண்டுமானால்  தடுக்குப் போடுவதுண்டு. இப்போவெல்லாம் டைனிங் டேபிள்தான் . யாராலும் கீழே அமர முடிவதில்லை. எனவே தடுக்கு எல்லாம் மியூசியம் ஐட்டம் ஆகிவிட்டது.

எங்க அப்பத்தா 625. சிகரெட் அட்டைகள் வைத்து செய்த தடுக்குகள் பார்த்திருக்கிறேன். அதன் பின்புறம் துணியால் தைக்கப்பட்டிருக்கும். அதே போல் 626. பிரம்பில் முடைந்த தடுக்குகளும் அப்போதையை கைவினைப் பொருட்கள்.

நவீன மோஸ்தரில் 627. ப்ளாஸ்டிக் தடுக்குகளும் வந்துவிட்டன. சாரல் தடுக்கவும் 628.நீளப் பாய்கள்/அல்லது 629. ரெட்டுத் துணிகளில் திரைகள் பட்டாலைகளில் போடுவதுண்டு. அது இதில் சேராது.

தடுக்கு, 630.கூடை 631. கொட்டான்கள் போன்றவை முன்பு பிரம்பில் செய்யப்பட்டது இப்போது ப்ளாஸ்டிக் ஒயர்களில் பின்னப்படுகிறது. லாங்ஸ்டாண்டிங் என்பதால். ஆனால் பிரம்புத் தடுக்குகள் பழமையானாலும் நெடு நேரம் அமர்ந்திருந்தாலும் உடல் சூட்டை உண்டாக்காதவை.

632. கன்னுத் துணியில் நடுவீட்டுக் கோலம் பின்னி, பின்புறம் தடுக்கோடு இணைத்து நீலப் பட்டி வைத்துத் தைத்திருக்கிறார்கள் இதில். இது சாமி வீட்டில் போடப்படுவது. இதில் பாதி நான் பின்னியது.

மெல்லிய பிரம்புத் தடுக்கு. மிகச் சன்னமாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். 633. வட்ட பர்மாத் தடுக்கு. வட்டமாகச் செய்து நீலப்பட்டி வைத்திருக்கிறது. மேலே விலாசம் ( இனிஷியல் கூட தைத்திருக்கிறது பாருங்கள். :) பக்கா :)

புதன், 11 ஜனவரி, 2017

சிவப்புப் பட்டுக் கயிறு - நமது மண்வாசத்தில் விமர்சனம்.


  எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தேனம்மை லெக்ஷ்மணன் பல்வேறு இதழ்களில் எழுதி வெளியான  கதைகளின் தொகுப்பு இந்த சிவப்பு பட்டுக்கயிறு நூல். 

புத்தகத் தலைப்பாகியுள்ள சிவப்புப் பட்டுக் கயிறு கதையானது மனதை உலுக்குகிறது.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

தங்கல் - குஸ்தி யுத்தம் - ஒரு பார்வை. (REVIEW OF DANGAL )

காரைக்குடி போன்ற ஊர்களில் ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஆங்கிலம் >தமிழ்  மொழிமாற்றப் படங்களே வருவது அரிது. அதில் ஒரு ஹிந்திப்படம் செகண்ட்ஷோவில் கூட ஹவுஸ்ஃபுல்லாக சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ( படம் பார்த்துப் பத்து நாளாச்சு. புதியமாதவியின் பதிவு பார்த்ததும் எழுதத் தோன்றியது :) :) :)

ஐந்து தியேட்டர்களே உள்ள மாபெரும் நகரமான காரைக்குடியில் ( சத்யம், சிவம், பாண்டியன், நடராஜா, இராமவிலாசம் - இதில் இராமவிலாசம் மூடிக் கிடக்கு ) சத்தியமும் நடராஜாவும் நவீனமயமாக்கப்பட்டிருக்கின்றன. சீட்டிங் எல்லாம் வசதியா இருக்கு. மினி தியேட்டர் கெட்டப்புக்கு மாறிடுச்சு. ஆனா டிக்கெட் விலைதான் 100 ரூ. குடும்பத்தாரோடு குதூகலமா போனா ஆயிரக்கணக்குல டிக்கெட்டுக்கு குடுக்கணும். இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டுலயும் வரிவிலக்கு கொடுக்கலாம்.

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

தல ஃபேன்ஸும் கலகலப்பும்.

1181. MEGADOODH PUNJABI DHABA..

குளிருக்கு இதமா கொஞ்சம் .. JOWAR ROTI, NAAN, ALOO MUTTER WITH PANEER.. YUMMY.. NEAR UJJAIN

1182.  காற்றைப் புசித்து உயிர்த்திருப்பது தியானம்..

 1183. நாற்கரச் சாலைகள் ஒளிரப் போகின்றனவா..

 1184. பொருட்களை நாம் சார்ந்திருக்கிறோமா.

1185. identified as the self accusing nafs..

#me

1186. Sabar Khan
22 December 2013  Riyadh, Saudi Arabia ·

மனம் கவர்ந்த பெண் கவிதாயினிகள்...

Thenammai Lakshmanan......
Kurunchimalar Malar
Meera Blossom.....
Sundari Kathir......
நல்ல எழுத்துக்கு சொந்தக்காரங்க சிலரும்.....

-- நன்றி சபர்கான் சார் !


புதன், 4 ஜனவரி, 2017

கசியும் மௌனம்- மலீக்கா ஃபாருக்கின் கவிதை நூலுக்கு முன்னுரை.



ூடியிரைவில் வெளிவ இருக்கும் அன்பத்ங்கை மீக்கா ஃபாருக்கின் கிை நூலுக்கானுன்னுரையை எழி ஓரிரு வுடங்கள் ஆகிறு. அை இங்கே பிர்வில் மிழ்ிறேன். பத்ம் ச்கிரம் விவந்து வெற்றியையாழ்த்ுகள். அன்பும் மிழ்ச்சியும் மீக்கா :)

 தமிழ்ப் பெண்களின் வாழ்வியலை அதன் உயிர்த்துடிப்பை இவ்வளவு அருமையாக ரத்தமும் சதையுமாகப் பகிர முடியுமா என வியக்க வைக்கிறார் மலீக்கா ஃபாரூக். என் வலைப்பதிவ சகோதரியான இவர் நீரோடை என்ற வலைப்பதிவு மூலம் அறிமுகம். கன்னடக் கவிஞர் பி லங்கேஷின் கவிதைகளைப் படித்தபோது ஏற்பட்ட உணர்வு எனக்கு இவரின் கவிதைகளைப் படிக்கும்போதும் ஏற்பட்டது. 

நிறைய விருதுகள் பெற்றிருக்கும் இவர் இந்நூலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் கவிதைகள் திருமணமான பெண்ணின் மனையியலையும் மனவியலையும் பேசுகின்றன கசியும் மௌனம் மூலம். ஓரிரு கவிதைகள் ஆண்களையும் தாங்கிப் பிடிக்கின்றன. 

ஆணின் அத்தனை
லாமுக்கு அடியிலும்
ஆரா சுமையின்
லாடங்கள் அடித்திருப்பதை “

“ஆண் மகன் அழுவது
அழகல்ல என்ற காரணத்தால் “

“அன்பிருந்தும்
அதை அழுத்தி அழுத்தியே
அழுத்தக்காரனாய் ஆக்கப்பட்டதென”

செவ்வாய், 3 ஜனவரி, 2017

இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )

காரைக்குடியில் இன்று சிவானந்தா ஹாலில் நடந்த பிள்ளையார் நோன்பு விழாவில் இழை எடுத்த பின்பு இளம் தொழில் முனைவோருக்கான ஒரு அறிமுகக் கூட்டம் நடந்தது.

தேவகோட்டை ராமனாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். காரைக்குடியைச் சேர்ந்த முத்தாள் வெங்கடாசலம், மேனகா சொக்கலிங்கம், அண்ணாமலை, அழகப்பன், வள்ளியப்பன், ராமையா ஆகிய இளம்தலைமுறைத் தொழில் முனைவோர் ஐபிசின்னின் வழிகாட்டுதலுடன் தங்கள் தன்முனைப்பைச் செதுக்கிக்கொண்டதை அழகாகக் கூறினார்கள். இதன் காரணகர்த்தாக்களான துபாய் வாழ் நகரத்தார்களான சொக்கலிங்கம், ரமேஷ், மெய்யப்பன் ஆகியோரைப் பாராட்டினார்கள்.

இவர்கள் பாரம்பரிய உடையில் வந்திருந்ததோடு மட்டுமல்ல.  தயக்கம் இல்லாமல் துணிச்சலோடும் அழகாகவும் தமிழில் உரையாற்றினார்கள். !


Related Posts Plugin for WordPress, Blogger...