எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 ஏப்ரல், 2018

உறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி. தினமலர் சிறுவர்மலர் -15.

உறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி.
தாமிரபரணி ஆறு சலசலத்தோடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் அமைந்திருக்கிறது குருகூர் என்ற ஊர். அந்த ஊரில் மிகப் பெரிய புளியமரம் ஒன்றிருந்தது. மிக நீண்ட அடர்ந்த கிளைகள், நல்ல சாட்டை சாட்டையாய்ப் புளியம்பழங்கள் நிரம்பி இருந்தன. அதன் ஒருபுற வேரும் கிளைகளும் நீரைத் துழாவிக் கொண்டிருந்தன.
அந்த மாபெரும் புளியமரத்தில் பல்வேறு பறவைகளும் கானம் பாடிக் கொண்டிருந்தன. இரவில்கூட அம்மரத்தின் இலைகள் சலசலத்துக் கொண்டிருக்கும்.  எனவே அதை ஊரார் உறங்காப்புளி என அழைத்தார்கள். அந்தப் புளியமரத்தில் ஒரு மிகப் பெரும் பொந்து ஒன்று இருந்தது. அங்கே அமர்ந்திருக்கும் ஒருவரைத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
ஆமாம். யார் அவர்? ஏன் அந்தப் பொந்துக்குள் அமர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்குப் பதினாறே வயதுதான். இச்சிறுவயதில் அங்கே அமர்ந்திருக்கக் காரணம் என்ன ?

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

வேதங்களைக் காத்த கல்விக் கடவுள். தினமலர் சிறுவர்மலர் - 14.


வேதங்களைக் காத்த கல்விக் கடவுள்.

ங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அறியாமையின் இருள். நான்கு வேதங்கள் கொண்டுதான் பிரம்மன் படைப்புத்தொழிலைச் செய்துவந்தார். ஆனால் இதென்ன அந்த வேதங்களை திடீரென எங்கிருந்தோ வந்த இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டனவே. அதனால் சூழ்ந்த இருள் பிரம்மனின் மனத்தில் மருளை உருவாக்கிவிட்டது. தன் தந்தையாராகிய விஷ்ணுவிடம் ஓடிச் சென்று முறையிடுகிறார்.

“தந்தையே .. வேதங்களை இரு குதிரைகள் திருடிச் சென்றுவிட்டன. அவற்றைக் காப்பாற்றித் தாருங்கள். “

”என்னது குதிரைகளா.. எதற்காகத் திருடிச் சென்றார்கள் “

” ஆம் தந்தையே குதிரைகளேதான். தாங்களே புதிய உயிர்களைப் படைக்க எண்ணிப் பறித்துச் சென்றார்கள் அப் பரிகள் ”

”எங்கே சென்றன. ?”

“அவை பாதாளலோகம் நோக்கிச் சென்றன.அங்கே ஒளித்து வைத்திருக்கின்றன. அவற்றை நீங்கள் மீட்டுத்தந்தால்தான் நான் சிருஷ்டிகளை உருவாக்க இயலும்.”

வேதங்களை மீட்க விஷ்ணு ஒரு உபாயம் செய்தார். அதற்காக ஒரு வித்யாசமான வடிவையும் எடுத்தார்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

வாக்கைக் காத்த கங்காதத்தன். தினமலர் சிறுவர்மலர் - 13.


வாக்கைக் காத்த கங்காதத்தன்.

சூரியன் வடக்கு நோக்கி நகர்கிறது. குருக்ஷேத்திரப் போர் பூமி. ரத்தமும் சதையும் நாலாபக்கம் நிண வாசமுமாக இருக்கிறது. எட்டாம் நாள் போர் அது. அங்கே அம்புகளையே படுக்கையாகக் கொண்டு ஒருவர் வீழ்ந்து கிடக்கிறார். என்னது அம்புப் படுக்கையா ஆம் அம்புப் படுக்கையேதான். அவ்வளவு மனோ வலிமை வாய்ந்தவர் யார்.?

விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களையும் துதித்தபடி வானோக்கி இருக்கிறது அந்த தேஜசான முகம். யார் முகம் அது ? நெருங்கிப் போய்ப் பார்ப்போமா. அஹா இது கங்கையின் புதல்வன் தேவவிரனின் முகம் அல்லவா. தந்தைக்காக திருமணம் மறுத்து பிரம்மச்சர்ய விரதம் பூண்ட பீஷ்ம பிதாமகர் அல்லவா அங்கே வீழ்ந்து கிடக்கிறார்.

கௌரவப் படையின் சேனாபதியான அவர் மட்டுமா வீழ்ந்து கிடக்கிறார் .  அநியாயத்தின் பக்கம் நின்றதால் அங்கே சத்தியமும் வாக்கு தத்தமும் அல்லவா வீழ்ந்து கிடக்கிறது. அவரை வீழ்த்தியது எது ?

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நாம் அஸ்தினாபுரம் அரண்மனைக்குப் போவோம்.

சனி, 21 ஏப்ரல், 2018

பிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.

பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.

ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் பூக்கும் சூரிய தேவன் தன் வெப்பத்தால் அதைத் தூய்மையாக்கிக் கொண்டிருந்தார்.

அந்த இடத்தின் பெயர் சாம்பபுரம். அது தேவர்களுக்கெல்லாம் தேவன் சூரியன் உறையும் இடம். அதற்கு ஏன் சாம்பபுரம் என்ற பெயர் ஏற்பட்டது? ஜாம்பவதியின் புதல்வன் சாம்பன் ஏன் ரோகம் பீடித்த உடலுடன் அங்கே சூரியதேவனைப் பற்றிக்கொண்டு தவமியற்றிக் கொண்டிருக்கிறார்.

தந்தையே மகனுக்கு சாபம் அளிக்க முடியுமா.. அதுவும் கொடுவினையாகிய தொழுநோய் பீடிக்கும்படி.? சில நிகழ்வுகள் நிகழ வேண்டியே இந்த சாபம் உண்டானது. அவை என்னென்ன நிகழ்வுகள். ?

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 76 - 100 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

76.ஆண்-பெண் என்ற பிளவு உளவியல் ரீதியானதா சமூகவியல் ரீதியானதா?

உடலியல் ரீதியானதும் கூட. அது சமூக ரீதியாகப் பரிணமிக்கிறது. உள்ளத்தால் இருவருமே டாமினட் ஆகத்தான் நினைத்துக் கொள்கிறார்கள். சீரற்ற முறையில் சமூகம் ஏற்றி வைத்ததை இன்று அது நம் மீது சாற்ற நாம் அனுபவிக்கிறோம்.

77.ஆண்மைக்குரியது பெண்மைக்குரியது என்பது இயல்பானதா வலிந்து உருவாக்கப்பட்டதா?

உடலியல் கூறுகள் பொறுத்து உருவாக்கப்பட்டது. (தினம் வெளியே சென்று பேருந்தைப் பிடித்தோ, ஆட்டோவிலோ அல்லது அலைந்தோ வேலைக்குச் சென்று வருவதை என் உடல்கூறு தாங்குவதில்லை. ) அதே போல் கவிதையிலும் அப்படித்தான். முரட்டுப் பாய்ச்சலாய் எழுதும் பெண்களையும் மெல்லிய உணர்வோடு கவிதை புனையும் ஆண்களையும் தரிசிப்பதால் இது இருபாலாருக்கும் பொதுவானதுதான்.

78.இந்தப் பிளவை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?

ஆணைப் போல உடல் & மன வலிமை உள்ள பெண்கள் இருக்கிறார்கள். அதே போல் பெண்ணைப் போல மெலிந்த இதயம் படைத்த ஆண்கள் இருக்கிறார்கள். இது அவரவர் எதிர்கொள்ள வேண்டியது.

79.இதிலிருந்துதான் ஆண் மேலாதிக்கம் உருவானதா?

முன்பு இருக்கலாம். ஆண் மேலாதிக்கம் என்ற ஒன்றே இப்போது இல்லை. வீடுகளில் விட்டுக்கொடுத்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் ஆண்களே. அப்படியானால் இப்போது பெண்கள் நடந்துகொள்வதும் எழுதுவதும் பெண் மேலாதிக்கம் என்று கொள்ளலாமா.

80.பெண்ணியம் ஆண்களையும் உள்ளடக்கியதுதானே?

பெண்ணியம் என்பது தனது சுதந்திரத்தையும் சுயநலத்தையும் மட்டும் பேணுவதல்ல. அதில் அடுத்த மனிதருக்கான கருணை இருந்தால் அது ஆண்களையும் உள்ளடக்கியதுதான்.

வியாழன், 19 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் . 51 - 75 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

51.அத்தகைய எழுத்துத் தான் எப்போதும் வாசகர்களுக்குத் தேவையா?

ஆம். அவைதான் அவர்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றன. ஆனால் அவை நீதிநெறி விளக்கமாக இருக்க வேண்டாம்.

52.வாசகர்களின் தரம் உயர்ந்திருக்கிறதா?

நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் அதிகமாகப் புது வாசகர்கள் உருவாகவில்லை. ஆழ்ந்த எழுத்தை வாசிக்கும் இளையர்கள் சிலர் நம்பிக்கை தருகிறார்கள்.

53.வாசகர்களின் தரத்தை உயர்த்துவது எழுத்தாளர்களின் வேலையா?

நல்லபடைப்புகளைக் கொடுப்பது மட்டும்தான் எழுத்தாளர்களின் வேலை. அதைப் பகுத்துப் படித்துக் கொள்வது வாசகர்களின் தேவையின் பொருட்டு நடக்கிறது.

54.எழுத்தாளர்களும் வாசகர்களா?

அதிலென்ன சந்தேகம் J

55.எழுத்தாளர்களின் தரத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்?

நிறைய வாசிப்பு, நிறைய கவனிப்பு, நிறைய அவதானிப்பு ,நிறைய நிதானிப்பு வேண்டும்.

புதன், 18 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம் 26 - 50 கேள்விகளும் பதில்களும்.


”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்


26.உங்கள் வாசிப்பு அனுபவம் எழுதுவதற்குத் துணைபுரிகிறதா?

நிச்சயமாக. அதிகம் வாசிக்காத பொழுதுகளில் நான் வெறும் குடுவை போல காலியாக உணர்ந்திருக்கிறேன். வாசிக்கும்போது எழுத்து என் எழுதுகோலிலிருந்து தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

27.பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு பொதுவாகப் பெண்களிடம் அதிகரித்திருக்கிறதா?

பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வாக அது இல்லாமல் தவறான புரிதல்களாக அவை அதிகரித்திருக்கின்றன. உடை அணியும் சுதந்திரம், பாலியல் பற்றி சுதந்திரமாக எழுதுவது இவற்றை விடுங்கள். கல்வி வேலைவாய்ப்பு, கருத்து சுதந்திரம் இருந்தாலும் தனது தனிப்பட்ட சுதந்திரம் என்பதைப் பெரியவர்களையும் கணவனையும் மதிக்காமல் இருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அன்று ஆண்  மற்றும் சமூகம் செய்ததைத் திருப்பி அவர்களுக்குச் செய்வது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக தங்கல் படத்தைச் சொல்லலாம். தன் பெண் விளையாட்டு வீராங்கனையாக அண்ணன் பையனை அமீர்கான் கோழி சமைக்கச் சொல்வது. அவர் பெண் உயர்வு என்பதால் அண்ணன் பையன் எங்கே தாழ்வாகப் போனான். அவன் எந்தப் பெண்களையும் எந்த விதத்திலும் இழிவு படுத்தாத போது அவனை ஏன் இழிவுபடுத்தவேண்டும். 

28.பெண்ணுக்குக் குடும்பம்தான் இன்னும் பாதுகாப்பான அமைப்பா?

அது ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட முடிவைச் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை திருமணமாகிவிட்டதால் அது எனக்குப் பாதுகாப்பானதாகத் தோன்றுகிறது. டார்ம் மற்றும் பிஜிக்களும் கூட பாதுகாப்பான அமைப்புகள்தான். அது அவரவர் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் பொறுத்தது. 

29.பெண்தான் குடும்பத்தை உருவாக்குபவளாக இருக்கிறாளா?

இப்போது ஆணும் குடும்பத்தை உருவாக்குபவனாக ஆகி வருகிறான். நிறையப் பொறுப்புகளை ஆண்களும் தங்கள் தோளில் சுமக்கிறார்கள்.

திங்கள், 16 ஏப்ரல், 2018

தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்



”தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம்” என்ற நூலுக்காக கவிதாயினி முபின் சாதிகாவுடன் கலைஞன் பதிப்பகத்தின் 100 கேள்விகளும் என்னுடைய பதில்களும்

1.உங்கள் இளம் வயது அனுபவங்கள் பற்றிச் செல்லுங்கள்?

ப:- இளம்வயதில் வாழ்த்துப்பாக்கள் எழுதுவதைக் கவிதை என எண்ணி இருக்கிறேன். கல்லூரிக்கு வந்தபின் கவியரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அடுக்குமொழிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

2. எப்போதும் விருப்பமாக படிக்கும் நூல்கள் எவை? என்ன காரணம்?

கவிதைகளில் ( முன்பு படித்தது ) ந. பிச்சமூர்த்தி, நீல பத்மனாபன், ஆத்மாநாம், ஆழியாள், அனார் , தாமரை, அப்துல் ரஹ்மான், வண்ணதாசன், ஈழவாணி, ரிஷான் ஷெரீஃப், நேசமித்திரன், நதனிகா ராய் கவிதைகள். ஔவை, ஆண்டாள் ஆகியோரையும் பிடிக்கும். புனைவுகளில் பஷீர், மீரான், கல்கி, ப. சிங்காரம், சுசீலா தேஷ்பாண்டே, எம் ஏ சுசீலா, திலகவதி, ஸ்டெல்லா புரூஸ் பிடிக்கும்.

3.கவிதை எழுதத் தூண்டிய அனுபவம் எது?

முதன் முதலில் கவிதை எழுதத் தூண்டியது வாசிப்பனுபவம்தான். கல்லூரிக்கு வந்தபின் கவிதை நூல்கள் வாசித்ததும் எழுதத் தோன்றியது. பதின்பருவக் கிளர்ச்சி எழுதுவதை எல்லாம் கவிதை என எண்ணத் தூண்டியது.

4. எழுதுவதில் திருப்தி இருக்கிறதா?

நிச்சயமாக. எழுத்து என்னைப் புதுப்பிக்கிறது. எழுதும் கணம் தோறும் நான் புதிதாய்ப் பிறக்கிறேன்.

5.யாருடைய எழுத்துகள் பிடிக்கும்?ஏன்?

பஷீரின் எழுத்துக்கள்தான். பரந்து விரிந்த அனுபவமும் ஹாஸ்யமும் ஒருங்கே கொண்டவை. வண்ணதாசனின் கவிதைகளும்.

6. வாழ்க்கை அனுபவம் எழுத்தை உருவாக்குகிறதா?எப்படி?

வாழ்க்கை அனுபவம்தான் அநேகமாக எழுத்தாகிறது. சில சமயம் பிறர் எதிர்கொள்ளும் அனுபவங்களும் நம்முள் புகுந்து எழுத்தாகின்றன. திருமணத்துக்கு முன் காதலைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். திருமணமான பின் பல்லாண்டுகள் கழித்து என் வாழ்வியல் அனுபவங்களைக் கவிதையாக்கினேன்.

/// ஃபீனிக்ஸ்

கூட்டுப் புழுவைப்போல் கூண்டுக்குள் இருந்தேன்,
கூட்டை உடைத்த போது தெரிந்தது நான்
வண்ணத்துப் பூச்சிதானென்று. ...!!!!

அன்னத்தைப் போல் இல்லையே என வருந்தினேன்,
என் குரல் வெளிப்பட்ட போது தெரிந்தது நான்
குயில் தானென்று.....!!!

சாம்பலாகி விட்டோமென்று நினைத்தேன்,
உயிர்த்தெழுந்த போது தெரிந்தது நான்
ஒரு பீனிக்ஸ் பறவையென்று....!!!

புலங்கள் பெயரும் பறவை என இருந்தேன்....
கண்டம் விட்டுக் கண்டம் சென்று
கணங்கள் தோறும் அனுபவங்கள் சேகரித்தேன்....!!!!

விழித்துக் கொண்ட போது தெரிந்தது,
நான் வாழ நினைத்ததை விட
அற்புதமாய் வாழ்ந்து இருக்கிறேனென்று....!!!!!///

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

கம்பன், தஸ்தயேவ்ஸ்கி பற்றிய இலக்கியப் பங்களிப்பில் சுசீலாம்மாவும் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களும்.

கம்பன் தொட்ட சிகரங்கள் என்ற தலைப்பில் மார்ச் 27 ஆம் தேதியன்று காரைக்குடிக் கம்பன் விழாவில் எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அன்னை சுசீலாம்மா அவர்கள் உரையாற்றினார்கள். அது அன்றே விஜயா பதிப்பகத்தாரால் நூலாகவும் பதிப்பிக்கப்பட்டது. அதற்காகவும் தஸ்தயேவ்ஸ்கியின் நூல்களைத் தமிழில் கொணர்ந்ததற்காக ரஷ்யன் கல்சுரல் செண்டரில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய பாராட்டு விழாவுக்காகவும் அம்மாவுக்கும் என் அன்பையும் வாழ்த்துக்களையும் பணிவான வணக்கங்களையும் செலுத்துகிறேன். வாழ்க வளமுடன் அம்மா என்னும் தேவதை.  
அத்துடன் தமிழக அரசால் அம்மா இலக்கிய விருது பெற்ற முனைவர் சிங்கை லெக்ஷ்மி அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவரின் தமிழ்ப்பணியும் போற்றுதலுக்குரியது. பல்வேறு ஆய்வு நூல்களும் கட்டுரைத் தொகுப்புகளும் எழுதிய இவர் சென்ற நான்காம் உலகத்தமிழ் கருத்தரங்கில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள் என்ற தலைப்பில் என் படைப்புகள் பற்றியும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். நமது செட்டிநாடு இதழின் ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். இவருக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும். 

வியாழன், 12 ஏப்ரல், 2018

உகுநீர்க்கல்லில் ஒரு வட்டுலா. நீலமும் மஞ்சளும்.

கர்நாடகா போய் காவிரியைத் தொட்டு சந்தோசப்பட்ட நிமிடங்களை மறக்கமுடியுமா . உகுநீர்க்கல்னா ஹொக்கனேக்கல்தான். 

எங்க புள்ளைங்க கர்நாடகாவுல வேலை பார்க்குறாங்க. எதேச்சையா ( அநேகமா எல்லா ட்ரெஸும் கறுப்பு கலர்ல வைச்சிருப்பானுங்க. ) கறுப்பு டீ சர்ட் போட்டுட்டுப் போனா என்ன காவிரிக்காகவான்னு ஆஃபிஸுல கேட்டானுங்களாம். கெதக்குன்னுச்சாம் புள்ளைக்கு. வீட்டுக்கு பார்த்து உஷாராப் போ அப்புன்னாங்களாம்.

ஒவ்வொரு தரமும் போராட்டம் நடத்தும்போதெல்லாம் இருதலைக் கொள்ளி எறும்பா தவிக்க வேண்டியிருக்கே. இங்கே கஷ்டப்படுற  நம்ம மக்களும் அங்கே கஷ்டப்படுற  நாம பெத்த மக்களும் நல்லா இருக்கோணும் சாமி. அம்புட்டுத்தான் நம்ம வேண்டுதல். காவிரியே நீ கண் திறந்து பொங்கிப் பெருகி வந்து எல்லா இடைஞ்சலையும் தவிடு பொடியாக்கு.

பொங்கிப் பெருகுது.

பெண் ஏன் அடிமையானாள் ? ஒரு பார்வை.


பெண் ஏன் அடிமையானாள் ? ஒரு பார்வை.



இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( இரண்டாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

புதன், 11 ஏப்ரல், 2018

தேன்பாடல்கள். 29. பூக்களும் பாக்களும் அடுக்குத் தொடர்கள்.

1. ஷெண்பகமே ஷெண்பகமே. இது அந்தப் பெண்ணையா இல்லை. அந்தப் பசுவையா என்று இனம் பிரிக்க முடியாமலும் காவியத் தரத்திலும் உள்ள ஒரு கட்டுத்தறிப் பாடல். :)



2. மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு என்று தேவயானியும் ரம்பாவும் பாடும் பாடல். சகோதரிக்குள்ளான ஒரு பரஸ்பர பாசமும் அன்பும்  பொங்கும் பாடல்.



திங்கள், 9 ஏப்ரல், 2018

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் அவதி.

பங்குனி உத்திரத்திற்கு அடுத்த நாள் விடுமுறை என்பதால் பழனிக்குச் சென்றிருந்தோம். அங்கே கடல் அலைபோல் கூட்டம். அசந்தே போனோம். நடக்கக்கூட இடமில்லை. மலை முழுவதும் பால் காவடி, பன்னீர்க்காவடி, சர்க்கரைக் காவடிகளும் இன்னும் பல காவடிகளும் அணிவகுத்தன.

இதோ பறவைக்காவடியாக கிரேனில் நால்வர் வரும் காட்சி. பார்த்ததும் புல்லரித்தது. இறையருளால் அன்றி இது சாத்யமே இல்லை. இன்னுமொருவர் டிவிஎஸ் 50 இல் கழுத்தில் சூலம் குத்தி முதுகில் ஆறு வாள்கள் ( இடப்பக்கம் மூன்று வலப்பக்கம் மூன்று ) செருகியபடி ஓட்டி வந்தார். இவர்கள் அனைவரும் யானையடிப்பாதையில் மலை ஏறினார்கள்.

தங்கியிருந்த இடத்தில் இருந்து கேபிள் காருக்கு ஆட்டோவில் வந்தோம். ஒரே வெய்யில் வேறு வின்ஞ்சிலும் டிக்கட் விலை வாரியாக க்யூ. அதிலும் அதிக விலை டிக்கெட்டுக்கு அதிக க்யூ. வெய்யில் கொளுத்துகிறது. மணியோ பதினொன்று. விஞ்சுக்குச் சென்றாலும் அதே கதிதான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்துத்தான் விஞ்சோ, கேபிள் காரோ ஏற முடியும் அவ்வளவு க்யூ.

அதன் பின் ஒரு குதிரை வண்டி பிடித்து யானையடிப் பாதை வழியாகப் போகலாம் என்று போனால் குதிரை வண்டியை விட்டு இறங்கும்போது வலது பாதம் சுரீரென சுளுக்கோ ரத்தக் கட்டோ பிடித்தால்போல வலித்தது. முருகா இது என்ன சோதனை என்று அங்கேயே அமர்ந்தால் ரங்க்ஸ் நீ இங்கேயே இரு என்றார். அங்கே உக்காரவா இவ்வளவு தூரம் வந்தது.

கலகலப்பு - 2 தாறுமாறு. ஒரு பார்வை.



ஹோலிப்பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்பட்ட தமிழ்ப் படம். ஆமா அந்தப் பொடி எல்லாம் சுவாசிச்சா கெடுதல் இல்லையா.. ஒரு லாரி இல்லை. ஒரு கண்டெயினர் முழுக்க கலர் பொடி கொண்டாந்து கொட்டியிருப்பாங்க போல.

டெல்லியில் இருந்தபோது இப்பிடி வண்ணங்களையும் பீச்சாங்குழல்லயும் பலூன்லயும் வண்ண நீரையும் நிரப்பி அடிப்பாங்க. அதுக்காகவே வெள்ளை உடை உடுத்தியிருப்பாக டெல்லிவாலாக்கள். :)

போர் விவசாயமும் அவள் விருதுகளும்.

1761. 600 கிமீ பயணத்துல ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை. தமிழர்களின் ஒற்றுமை அற்புதம்.

1762. சாலியமங்கலம். ஒரு காலத்துல வயல் இருந்த ஊர். இன்னிக்கும் பயிர்பச்சை இருக்கு போர் உபயத்துல. வயல்தான் இல்ல.

1763. மன்னார்குடி வீட்டுல லேசா மழை பேஞ்சாலே ஊத்தெடுக்கும். இன்னிக்கு வாய்க்கால் வறண்டு கிடக்க போர் விவசாயம். காலக் கொடுமை.

1764.எதிரிகளே இல்லாமல் போவது அபாயகரமான நிலை. தேக்கத்திற்கு வழிவகுக்கும்.

1765. வருஷப் பிறப்பன்று எண்ணெய் தேய்ச்சு தலை முழுகுறது தமிழ் கலாச்சாரமா.. சொல்லவே இல்ல.. ;) ( நல்லா சொல்லுறாய்ங்கய்யா டீடெயிலு :)

#மீராஹெர்பல்#அவள்விகடன்அவார்ட்ஸ்

பூக்களின் பின்னால்.. - நமது மண்வாசத்தில் மரபுக் கட்டுரை.

பூக்களின் பின்னால்..




சனி, 7 ஏப்ரல், 2018

மலாயில் மொழிபெயர்க்கப்பட்ட எங்கள் கவிதைகள்.

1ஆதிரா முல்லை

சிப்பி
தன் மீது விழத் தயாராக இருந்தது
அந்த மழைத்துளி
அப்போதே
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்
முகமேந்தி
அந்தக் குளிர்ச்சியை
வடவாடைக் காற்றாலோ
வனசாரியின் ஈர்ப்பாலோ
விலகிச் சென்றதந்த
இதமான முதல் துளி

வசப்படாத
வாழ்க்கையைக் கடப்பது
எப்படி என்று
வழக்கிடும் இதயத்தோடு
வாழ்தல்
வழக்காகிப் போக
ஏக்கங்கள் தாங்கிச் செல்லும்
அந்த மழைத்துளியைச்
சந்திக்கும் போதெல்லாம்
வாய்க்காத முத்தத்துக்காய்
ஏங்கியபடி
வான் நோக்கிக் கிடந்தந்த
சின்னச் சிப்பி!

புதன், 4 ஏப்ரல், 2018

வாடாமலர் மங்கை. (தினமணி ஊக்கப்பரிசு பெற்ற கதை).



வாடாமலர் மங்கை

"ங்க அடி மங்க இஞ்ச.. எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா " என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி.

"இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல " என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை

"அடி மகராசியா இருப்பே , அந்தப் போகணில தண்ணியைக்கொண்டா  கையக் கழுவோணும் " என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி

'இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக ' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டுவந்தாள் மங்கை

கையைக் கப்பில் விட்டுச் சுழற்றிக் கழுவிவிட்டுப் படுக்கையில் சாய்ந்துகொண்டார்கள்  வாடாமாலை ஆச்சி.

 "நச்சுப்பிடிச்ச வேலைன்னுதான் செட்டிய வீட்டுக்கு ஒத்துக்குறதுல்ல"என்று முனகியவாறு கப்பைக் கழுவி ஊற்றிவிட்டு செல்போனை எடுத்துக் பார்த்தாள் மங்கை

"வயசான ஆச்சி மட்டும்தான். அவுகளக் கவனிச்சிக்கினாப் போதும்",என்று சொல்லித்தான் சேர்த்துவிட்டு இருந்தார் பாண்டியக்கா.
Related Posts Plugin for WordPress, Blogger...