எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 அக்டோபர், 2012

எடைமேடை.

தன்னைத்தானே நீதிமானாகக்
கற்பித்துக் கொள்ளும் ஒருவன்
பார்க்கும் அனைத்தையும்
எடையிட்டுக் கொண்டிருக்கிறான்.

கடந்து செல்லும் ஒரு பெண்ணை
உற்று நோக்குகிறான்.
அவள் திரும்பப் பார்த்தால்
மகிழ்வடைகிறான்.
 பிடித்தமானவள் என்றோ
உத்தமி என்றோ
குறியீடு இடுகிறான்.


அவள் அசட்டையாய்க்கடந்தால்
 திமிர்பிடித்தவளாகிறாள்
வேறு யாரையும் நோக்கிப்
புன்னகைத்தால் அவன் கணிப்பில்
வேசையாகிறாள்..

குழந்தையைப் போலக்
கடக்கும் சிலரை என்ன செய்வது
என்று தெரியவில்லைஅவனுக்கு..
அதுபோல் அவனைக்கண்டு
வினையற்றுக் கடக்கும்
அவனுடைய மனைவியையும்..

அதிர்ச்சியடையும் அவன்
கணிக்கும் கண்களை மூடி
தன்னை ஆராயத் துவங்குகிறான்
தன்னைப்போன்ற பிம்பத்தை.,
அதன் கணிப்புகளை அவதானத்தை

அதன் அலட்சியத்தை.
அதன் கர்வத்தை .,போக்கை
அந்த எடையிடலை., சுமத்தலை..
யாராக இருக்கிறோம் அந்த தருணத்தில்
என எண்ணும்போது உள் மறைகிறான்.
எடைமேடையும் காலியாகிறது.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 25,செப்டம்பர் 2011 திண்ணையில் வெளியானது


4 கருத்துகள்:

  1. தன்னை ஆராய வேண்டும்...

    அருமை வரிகள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...