எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஜூலை, 2013

தடாகத்தில் பூத்த தாமரை - 10

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் சார்பாக திருமதி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி சகோதரி என்னிடம் எடுத்த பேட்டியை   முகநூலில் பகிர்ந்திருந்தார்.

அதை நான் இங்கு அப்படியே பகிர்ந்துள்ளேன். எம்மை ஊக்குவிக்கும் கலைமகள் சகோதரிக்கும் , தடாகம் இலக்கிய வட்டத்துக்கும் அதன் செயலாளர் சகோதரர் ரமலான் தீனுக்கும் நன்றி.

///தாமரை-10

நான் தேடிப் பெற்ற புதையல் - தேனம்மைலெக்ஷ்மணன்

இவர் , படித்தது இளங்கலை வேதியல் ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)


தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம் 


01)வினா -உங்கள் குடும்பம் வாழ்க்கை பற்றி கூறுங்கள்?உங்களைப் பற்றிக் கூறுங்கள்? -

விடை நான் இல்லத்தரசி. வேதியலும் அரசியல் அறிவியலும் படித்திருக்கிறேன். எனக்கு இரு ஆண் பிள்ளைகள். கணினிப் பொறியாளர்கள். என் கணவர் வங்கிப் பணியில் இருக்கிறார்.

02 வினா எழுத்து தொடக்கம் எப்படி தொடங்குகியது?

விடை
-சின்னப் பிள்ளையில் அப்பாவின் பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக் கவிதை எழுதினேன். அதை அப்பாவும் அம்மாவும் ஃப்ரேம் செய்து இன்னும் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார்கள். பின் கல்லூரிப் பருவத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.

03)வினா தமிழ் கவிதை தமிழ் மொழி இவைகளுடனான உங்கள் நெருக்கம் பற்றி சொல்லுங்கள்.


விடை
என் கல்லூரிப் பருவத்தில் ஃபாத்திமா அம்மா, பாலாம்பா மிஸ் ஆகியோர் தமிழ்ப் பாடம் எடுத்திருந்தாலும் எனக்கு நெருக்கமானவர் என்றால் அது என் தமிழன்னை எம் .ஏ. சுசீலாம்மாதான். அவர் அப்போது தற்காலத்தில் பெண்களின் நிலைமை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதனால் அவர் ஆய்வுப் பணிக்காக வாங்கிய நூல்களை எங்களிடம் தினம் ஒன்றாகக் கொடுத்துப் படிக்கச் சொல்வார். அதிலிருந்து நாங்கள் கருத்துக்களை மறுநாள் எங்கள் டைரியில் எழுதிக் கொடுக்க வாசித்து திருத்தங்கள் விளக்கங்கள் சொல்வார். ஊக்கம் கொடுப்பார். இதனால் தினம் ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. விவேகானந்தர் பற்றிய ஒரு கவியரங்கத்தில் நாங்கள் கவி பாடிய போது “ இவர்கள் எல்லாம் பேனாவின் கழுத்து வலிக்கும் வரை எழுதுபவர்கள் “ என்று கூறி ஒரு பேனாவைப் பரிசளித்தார்.

04.வினா மரபுக் க்கவிதைகள் , புதுக்கவிதைகள் எது உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கிறது. ?

விடை
மரபுக் கவிதைகள் சீர் அசையுடன் தளை தட்டாமல் எதுகை மோனையுடன் சந்தத்துடன் இருக்க வேண்டும். புதுக்கவிதைக்கு சந்தமும் சில எதுகை மோனையும் போதும். எல்லாருமே நினைத்ததைக் கவிதையாக , துளிப்பாவாகப் பாட முடியும். தமிழில் ஓரளவு தேர்ச்சியும் சொல்ல வந்ததைத் தெளிவாக மொழியறிவோடும், பொருட்குற்றமில்லாமலும் சொன்னால் போதும். எனவே நான் கல்லூரியில் படித்த போது கவிதை எழுதுகிறேன் என்றால் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள். இப்போது அநேகமாக அனைவருமே எழுதுவதால் அது வியப்புக்குரிய ஒன்றாக இல்லை.

05வினா .மூத்த எழுத்தாளர்களின் எழுத்தக்களை வாசிக்கிறீர்களா? யாராவது நேரடியாக வழிகாட்டகிறார்களா?


விடை
என் ஆசிரியைதான் என் வழிகாட்டி. அவர் மூலம் நான் மகாகவி பாரதி, சி. சு. செல்லப்பா, வை. மு. கோதை நாயகி அம்மாள், கி. ரா., லா. ச. ரா, தி. ஜா.ரா, கல்கி, அசோக மித்திரன், புதுமைப் பித்தன், சுஜாதா , ஸ்டெல்லா புரூஸ், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, பாலகுமாரன், மாலன், சுப்ரமண்ய ராஜு,சிவசங்கரி, இந்துமதி ஆகியோரைப் படித்திருக்கிறேன்.


என் அம்மா வாங்கித் தந்த ரஷ்யப் புத்தகங்களில் மீகயில் கோர்பசேவ் கதைகள் பிடிக்கும். தஸ்தாவ்யெஸ்கி, விக்டர் ஹியூகோ , மார்க்கஸ் அரேலியஸ் , வெர்ஜீனியா உல்ஃப், தாகூர் , சரத் சந்திரர் படித்திருக்கிறேன். வெகுஜனப் பத்ரிக்கைகளில் மணியன், சாவி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் படித்திருக்கிறேன். முத்துலிங்கம், பாரதி மணி, ஷாஜியின் எழுத்துக்கள் பிடிக்கும். 


ஆனால் எனக்குப் பிடித்தவர்கள் வைக்கம் முக்கம்மது பஷீர், தோப்பில் முகம்மது மீரான், கமலாதாஸ்.. இவர்கள் நூல்கள் என்னைப் புதுப்பிக்கின்றன. திரும்ப திரும்பப் படித்தாலும் அலுக்காத நூல்கள் இவை. நேரடியாக இவர்கள் வழிகாட்டவில்லை என்றாலும் இவர்களைப் போல எல்லாம் சிறந்ததான ஒன்றைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் மீதூறுகிறது., இவர்களைப் படிக்கும்போதெல்லாம்.

(தோப்பில் முகம்மது மீரான், மிக மிக நெருக்கமான சகோதரர் எனக்கு
அண்மையில் இலங்கை வந்து போனார் )அவர் கதைகள் எனக்கும் படிக்கும்

06 வினா எழுத்தில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருக்கிறதா?

விடை
நிறையப் படிக்க வேண்டும். அப்போதுதான் நம் எழுத்து செம்மைப் படும். நிறைய பயணங்கள் மற்றும் நம்மைச் சுற்றி நடப்பவற்றை நன்கு கவனித்து வந்தாலே எழுத்துக்கு உதவும்.

07 வினா சமகால கவிதைகளை எப்படி வாசித்து வருகிறீர்கள் எப்படி இருக்கின்றன?

விடை

கவிஞர்களில் கண்ணதாசன், அப்துல் ரஹ்மான், வைரமுத்து, தபூ சங்கர், மனுஷ்யபுத்திரன், நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை. ஆகியோரைப் பிடிக்கும். சிறப்பாக இருக்கின்றன.

08வினா கவிதைக்கான இணைய தளங்கள் உங்கள் எழுத்திற்கு எந்தளவில்உதவுகின்றன.

விடை
முக நூலிலும் வலைத்தளத்திலும் அநேகர் எழுதினாலும் என்னைக் கவர்ந்த கவிஞர்கள் நேசமித்திரன், விஜய், பாரா, கமலக் கண்ணன், நவாசுத்தீன், ராகவன், ரிஷபன், தமிழரசி, பத்மா, சக்தி செல்வி, விஜயலெக்ஷ்மி, மயோ மனோ, ஈழவாணி, ஹேமா, .இவர்கள் கவிதைகள் நம் எண்ணங்களோடு இயைந்து இருக்கின்றன.

09வினா 10உங்களுக்கு கவிதையின் மீதான ஆர்வம் ஏற்பட்டது எப்படி? அது எப்போது ?

விடை
நீ நன்றாக கவிதை எழுதுகிறாய் என்று என் ஆசிரியை சுசீலாம்மா சொன்ன போது ஏற்பட்டது. புதுக்கவிதை பற்றிய ஒரு கட்டுரையை கவிதை வடிவில் சமர்ப்பித்த போது ஐந்துக்கு நாலே முக்கால் மதிப்பெண்களை ஃபாத்திமா மிஸ் வழங்கியபோது ஏற்பட்டது. கல்லூரிக் காலத்தோடு நின்றுவிட்ட அது பின் என் ஆசிரியையைத் திரும்ப சந்தித்தபோது புத்துயிர் பெற்றது.

10 வினா 1புதுக்கவிதை, நவீன கவிதை இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு பற்றி கூறமுடியுமா ?கவிதை பற்றி யாது கருதுகிறீர்கள்?


விடை
புதுக்கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம். நவீன கவிதைக்கு பின் நவீனத்துவம், செவ்வியல், லேட்டரல் திங்கிங், இதெல்லாம் பகுத்துப் பிரித்துச் சொல்லத் தெரியும் அளவுக்குக் கவிதை சொல்லத் தெரியணும்.

11 வினா கவிதைகள் மூலம் சாதிக்க விரும்புவது என்ன ?


விடை
கவிதை என்பது எண்ணப் பகிர்வு . கருத்துப் பகிர்வு.

12வினா கவிதை மட்டும் தான் உங்களுக்கான வடிவமாக இருக்கின்றதா? நாவல், சிறுகதை என்று வேறு இலக்கிய வடிவங்களில் உங்களுக்கு ஆர்வமில்லையா ?


விடை
நாவல் பற்றி யோசிக்கவில்லை. 4 வரியிலோ, 10 வரியிலோ கவிதை சொல்லும் இன்பம் ஒரு முழு நீள நாவலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட விடவில்லை. நினைத்தை உடனே சொல்லிவிட வேண்டும். சிறுகதைகள் சில எழுதி இருக்கிறேன். தினமணி நடத்திய போட்டியில் ஊக்கப் பரிசு வாங்கி இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது சில சிறுகதைகள் எழுதி இருக்கிறேன். சிறுகதை இலக்கியத்தில் ஆர்வம் இருந்தாலும் எண்ணக் கோர்வையை எழுத்தாக்கப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது சிந்தனை வேறு திசைகளில் ( முகநூல் ) செல்வதால் சிதறி விடுகிறது.


13வினா உங்கள் முயற்சிக்கு தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா ?

விடை
திருமணம் ஆனதும் எழுத்துப் பணியில் ஈடுபட முடியாமல் அடுத்து
அடுத்துக் குழந்தைகள் . அவர்கள் வளர்ப்பு, பின் இப்போது முகநூல்
கவனச் சிதறல்.


14வினா -இறுதியாய் என்ன சொல்ல போகிறீடகள்.?
 

விடை
முன்பு கவிதை, பின்பு சிறுகதை , இப்போதெல்லாம் இன்வெஸ்டிகேடிங் ஜெர்னலிசம்தான் அதிகம் படிக்கப்படுகிறது. மொழியின் ஆட்சியில் ஒவ்வொன்றும் புதுவடிவம் எடுத்து வருகிறது. எது மக்களைக் கவருகிறதோ அதுவே வெல்லும். எனவே பழயன கழிந்து புதியனவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். நிறையப் படிக்கவும் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.


15வினா  படிமங்களையும் குறியீடுகளையும் உங்களால் எவ்வாறு மிக இலாவகமாக கையாள முடிகிறது?


விடை
என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் படிமக் கவிதைகளே. ஒன்றை இன்னொன்றாய் இனம் காணும் போது அல்லது ஒன்றில் இன்னொன்றை இனம் காணும் போது இந்தப் படிமங்களை லாவகமாக அதில் பொருத்தும் உத்தி கைவருகிறது. மூன்று வரி என்றாலும் சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.


16வினா எமது படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் நிலை எவ்வாறு உள்ளது?

விடை
படைப்பாளிகள் அதிகரித்து விட்டார்கள் . மற்றும் படைப்புக்களும் அதிகரித்து விட்டன. முன்பு புத்தகம் போடுபவர்கள் குறைவு. வாசிப்பவர்கள் அதிகம். இப்போது புத்தகம் வெளியிடுபவர்களும் வாசிப்பவர்களும் அதே வட்டத்தில்தான் வருகிறார்கள். எனவே சிறப்பான ஒன்றே வெல்லும். “ ஈழ எழுத்துக்களில் எனக்கு கலைமகள் ஹிதாயா ரிஸ்வி , ரிஷான் ஷெரீஃப், அஸ்மி , ஈழவாணி, மாயோ மனோ, குழந்தை நிலா ஹேமா ஆகியோரை மிகவும் பிடிக்கும். மிகுந்த படைப்பாற்றல், ஈழத்தை , அதன் வலியை வலிமையோடு பகிரும் தன்மை, மனித நேயம் கொண்ட எழுத்துக்கள் ஆகியவற்றுக்காகப் பிடிக்கும். ஒரு காலகட்டத்தின் மக்களின் வாழ்வியலை அவர்களின் பிரச்சனைகளைப் பேசும் அவர்களின் எழுத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இன்னும் அவர்களின் எழுத்து பலரையும் சென்று அடைய வேண்டுமென எண்ணுகிறேன். “

இவரைப் பற்றிய என் மன டயரியின் பதிப்பு 




பெயர் :- தேனம்மைலெக்ஷ்மணன் இளங்கலை வேதியல் பட்டதாரி, ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்)

தற்போது  புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர்நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.)

 1.
ஐந்து புத்தகங்களின் ஆசிரியர்.

1. ”
சாதனை அரசிகள் ” - போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்

2. ”
ங்கா “ - குழந்தைக் கவிதைகள்.

3.
அன்ன பட்சி - கவிதைத் தொகுப்பு.

4.
பெண் பூக்கள்  - கவிதைத் தொகுப்பு
5. சிவப்புப் பட்டுக் கயிறு – சிறுகதைத் தொகுப்பு.  


புஸ்தகாவில் இவரது பத்து மின்னூல்கள் வெளியாகி உள்ளன.

அவை

1.பெண்மொழி – மெல்லினம் கட்டுரைகள்.
2.தீபலெக்ஷ்மி – சிறுகதைத் தொகுப்பு.
3.தேன் சிறுகதைகள் – சிறுகதைத் தொகுப்பு.
4.நீரின் பயணம். – கவிதைத் தொகுப்பு.
5.அக்கா வனம் – கவிதைத் தொகுப்பு
6.அவர் பெயர் பழநி – கவிதைத் தொகுப்பு
7.அன்ன பட்சி – கவிதைத் தொகுப்பு
8.பெண் பூக்கள் – கவிதைத் தொகுப்பு
9.சிவப்புப் பட்டுக்கயிறு – சிறுகதைத் தொகுப்பு
10.சாதனை அரசிகள் – கட்டுரைத் தொகுப்பு.

2.
சிறுகதை எழுத்தாளர்.

தினமணி & காரைக்குடி புத்தகத் திருவிழா ( 2012) இணைந்து நடத்திய
சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசுபெற்றவர். தினமலரில் நான்கு சிறுகதைகள், தினமலர் வாரமலரில் ஒரு சிறுகதையும், குங்குமத்தில் நான்கு சிறுகதைகள் புதிய தரிசனத்தில் இரு சிறுகதைகள் பெண்கள் ராஜ்ஜியத்தில் ஒரு சிறுகதையும் அமெரிக்கத் தென்றலில் இரண்டு சிறுகதைகளும் ஆச்சி வந்தாச்சுவில் ஒரு சிறுகதையும்  வெளியாகி உள்ளன.
பன்னாட்டு புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சிறுகதைப் போட்டியில் இவரது சூலம் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றுள்ளது.
செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு” என்ற நான்காம் உலகத் தமிழ் கருத்தரங்கத்தில் “ வெ.தெ. மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் “ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். அது அன்றே புத்தகமாக்கம் செய்து வழங்கப்பட்டது. 

3.
வானொலி:-
 
1.
எப்போதும் உங்களுடன் 106.4 ஹலோ எஃப். எம்மில் திரைப்பட விழா
சமயத்தில் சர்வதேச சினிமா பற்றி கருத்து கூறி உள்ளார்.

2. திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி ஹலோ எஃப். எம்மில்  சிறந்த பெண்  வலைப்பதிவராக அஞ்சரைப் பெட்டி நிகழ்ச்சிக்கு ஜெயகல்யாணி பேட்டி எடுத்துள்ளார்
 
3.
என்னைக் கவர்ந்த சாதனைப் பெண் யார் என்று அஞ்சரைப்
பெட்டிஎம்மில் சிறந்த  நிகழ்ச்சிக்காக திருச்சி திருநெல்வேலி தூத்துக்குடி ஹலோ எஃஃப் எம்மின் ஆர் ஜே ஜெயகல்யாணி பேட்டி எடுத்துள்ளார்.


4,
வலைப்பதிவர். :-

சிறந்த பெண் வலைப்பதிவருக்கான சமூக இணையப் பங்களிப்புக்காக
” ”
ஈரோடு சங்கமத்தில்விருது பெற்றார் . 15 ஆண் பதிவர்களுடன்
சிறப்பானவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் பதிவர் இவர்
.
2009
ஜூலையில் இருந்து தொடர்ந்து வலைப்பதிவு எழுதி வருகின்றார்

சும்மா என்று ஒரு வலைப்பதிவு ஆரம்பித்த இவர் தொடர்ந்து 5
வலைப்பதிவுகள் ஆரம்பித்து தற்போது எழுதி வருகின்றார் .


இவரது  வலைப்பதிவுகள்.

1. சும்மா

2. டைரிக்கிறுக்கல்கள்.

3. THENU'S RECIPES

4. கோலங்கள்

5. CHUMMA !!!

வலைப்பூ எழுத்துக்காக கிட்டத்தட்ட 25 விருதுகளுக்கு மேல் வாங்கி
இருக்கின்றார்.


இவருடைய சும்மா என்ற வலைப்பதிவு சுமார் 8,65,500 ( எட்டு லட்சத்து அறுபத்தையாயிரத்து ஐநூறு ) பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இவரது கூகுள் ப்ளஸ் பக்கம் இரண்டு கோடியே எழுபது லட்சம் பார்வைகள் அடைந்துள்ளது. இவரது வலைப்பதிவு 237 வோட்டுக்களும் பெற்றுள்ளது.

அவள் விகடனில்வலைப்பூவரசிஎன்ற பெயரோடு இவர் வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டது.


பொதிகை தொலைக்காட்சியின் கொஞ்சம் தேநீர் கொஞ்சம்கவிதை நிகழ்ச்சியில்  இவரது கவிதை ஒன்றை லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜா ராகவன் வாசித்திருக்கிறார். ( விடுவிப்பு என்ற கவிதை ).

நெல்லை ஹலோ எஃப் எம்மில் இவரது கவிதை ஒன்று 17.07. 2013 அன்று 8.30 - 9 மணி நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டிருக்கிறது.

இவரது வலைப்பூக்கள் :-

1.
http://honeylaksh.blogspot.com/ - தமிழில் சும்மா . சிறுகதை, கவிதை, கட்டுரை, சினிமா, புத்தக விமர்சனம், நிகழ்வுப் பகிர்வுகள், புத்தக வெளியீடு, பத்ரிக்கைகளில், இணையங்களில் வெளியான தன்னுடைய படைப்புகளைப் பகிர்ந்து வருகின்றார்

2.
http://thenoos.blogspot.com/.- . THENU'S RECIPES இது இவருடைய சமையல் குறிப்புக்கள் அடங்கியது. ஆங்கிலம் மற்றும் தமிழில் சமையல் குறிப்புக்களை எழுதி வருகின்றார் ,

3.
http://thenusdiary.blogspot.com/ - டைரிக் கிறுக்கல்கள். இதில் இவருடைய இளமைக்கால, குழந்தைப் பருவ, மற்றும் தற்போதைய கவிதைகள், குறுங்கவிதைகள், பொதுவாக எழுதி வருகின்றார் கல்லூரிக் காலத்தில் எழுதிய பழைய கவிதைகளும் இதில் உள்ளது .

4,
http://muthukkolangal.blogspot.com/கோலங்கள் . இதில் அவர் போட்ட கோலங்கள் மற்றும் பத்ரிக்கைகளில் வெளிவந்த தன்னுடைய கோலங்களைப் பகிர்கின்றார் .


5.
http://thenammailakshmanan-chumma.blogspot.in/ CHUMMA !!! இதில் ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகள் எழுதி வருகிறார்.
.


5. கவிஞர் & சுதந்திரப் பத்ரிக்கையாளர் :-


கிட்டத்தட்ட 1500 கவிதைகள் கல்லூரிக்காலத்தில் இருந்து எழுதி உள்ளார். அவை ப்ரபல பத்ரிக்கைகள் & இணையப் பத்ரிக்கைகள் பலவற்றில் வெளியாகி உள்ளன. 




லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், சூரியக்கதிர், நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஷல் ஆகியவற்றில் கட்டுரைகள், பேட்டிகள், நேர்காணல்கள் , கோலங்கள் அவ்வப்போது எழுதி வருகிறார்.

1.
குங்குமம்:- வலைப்பூக்கள் பற்றிஇணையதள எழுத்தாளர்என்ற தலைப்பில் குங்குமத்தில் எழுதி உள்ளார் .

குங்குமத்தில் மேலும் 4 சிறுகதைகளும், 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன.
வலைப்பேச்சு பகுதியில் இவருடைய  முகநூல் ஸ்டேடஸ்கள்  வெளியாகி உள்ளன..

அரட்டைக் களமா, ஆபாசத் தளமாஎன்ற தலைப்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் பிரபல பதிவர்களின் கருத்து என்ற தலைப்பில் இவருடைய கருத்தும் இடம் பெற்றுள்ளது.


2. -
குங்குமம் தோழி:- இரண்டு பக்கங்கள் குழந்தைக் கவிதைகள் வெளிவந்துள்ளன.”ஒரு மனசு , ஒரு கேள்விபகுதியில் ஷேர் ஆட்டோ பற்றிய கருத்து வெளியாகி உள்ளது.

குங்குமம் தோழி இணைப்புகளில் சமையலறை டிப்ஸ்கள் வெளியாகியுள்ளன.

.
குங்குமம் தோழியின் முகநூல் பக்கத்தில் இவருடைய கவிதைகளும், சமையல் குறிப்புக்களும், “நானென்பது யாதெனில்என்ற தலைப்பில் கட்டுரைகளும் முகநூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி உள்ளன.

செட்டிநாடு ஸ்பெஷல் என்ற குங்குமம் தோழி சமையல் இணைப்புப் புத்தகத்தில் இவரது 30 சமையல் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

குங்குமம் ஸ்டார் தோழியாக 2015 ஜனவரி இதழில் சிறப்பிடம் பெற்றிருக்கிறார்

3.-
குமுதம். :- 4 கவிதைகள் வெளியாகி உள்ளன.
இதில் முதலில் வந்த கவிதை குமுதத்தில் இரண்டு பக்கங்களில் வெளிவந்தது
. 11
ஹைக்கூக்கள் அடங்கியஅம்மா யானைஎன்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகள். சீனியர் சிட்டிசன்களுக்கான சமையல் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.

. 4.
குமுதம் பக்தி ஸ்பெஷல்:- இரு கட்டுரைகள் வெளிவந்துள்ளன
.
திருவாசகம் பற்றியும், குன்றக்குடியின் குடைவரைக் கோயில்கள் பற்றியும் . ”பூஜையறைக் கோலங்கள்என்ற தலைப்பில் 400 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன. விநாயகர், சிவன், முருகன்,அம்மன், ஐயப்பன்,சித்திரை, ஆயுள் , ஆரோக்கியம், அருள், பொருள், ஸ்தல விருட்சம், காவிக்கோலங்கள், கிராமத்து தெய்வங்கள், இராசிக் கோலங்கள், படிக்கோலங்கள், நவராத்திரி, ஓணம், தீபாவளி, ஆனித் திருமஞ்சனம், பொங்கல்,அட்சய திரிதியை, ராம நவமி, புத்தாண்டு என பல தீம்களில் கோலங்கள் வெளியாகி உள்ளன.

குமுதம் பக்தி ஸ்பெஷலில் தீபாவளி, நவராத்திரி, மகான்கள் பற்றிய சமையல் குறிப்புகள் 3 தனி இணைப்புப் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.

5-
குமுதம் ஹெல்த் ஸ்பெஷலில்மேக்கப்புக்கு பேக்கப்என்ற தலைப்பில் இவருடைய கருத்து வெளியாகியுள்ளது.

6-
ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன.

7.
கல்கியில் 5 கவிதைகள் வெளியாகியுள்ளன.

கல்கியின் பவளவிழா மலரில் கோகுலம் விழா பற்றிய இவரது கட்டுரை வெளியாகி உள்ளது.

கல்கி தீபாவளி மலரில் கோகுலம் பக்கங்களில் பண்பு நிறைந்த பாத்திரங்கள் என்ற தலைப்பில் இவரது கட்டுரை இடம் பெற்றுள்ளது. 

8.
இந்தியா டுடே ரஜனி சிறப்பிதழில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளியாகி உள்ளது.

9. -
அவள் விகடனில் அம்மா பற்றி ஒரு கவிதை வெளியாகியுள்ளது. இவருடைய வலைப்பூவை அறிமுகப்படுத்திவலைப்பூவரசிஎன்ற பட்டம் கொடுத்துள்ளார்கள்.

பொங்கல் பானைபற்றிய ஒரு கட்டுரையும் ( செட்டிநாடு சார்ந்து ) வெளியாகி உள்ளது

10 -
தேவதையில் இரு கவிதைகள் வெளியாகியுள்ளன.
ப்ளாகர் அறிமுகம் பக்கத்தில் வலைப்பூக்களும் படைப்புக்களும் பகிரப்பட்டுள்ளன
.
11
மல்லிகை மகளில் இரு கவிதைகள் வெளியாகி உள்ளன.
ஒரு பக்கம் முழுக்க 9 குட்டிக் குழந்தைக் கவிதைகளும் வெளியாகி உள்ளன.

12. ”
மெல்லினம்இதழில் ( ஆஸ்த்ரேலியாவிலிருந்து வெளிவருகிறது )   “பெண் மொழிஎன்ற தலைப்பில் 38  கட்டுரைகளும், ஒரு கவிதையும் எழுதி உள்ளார். இவரது முகநூல் ஸ்டேடஸ்களும் வெளியாகி உள்ளன

. 13.“
இன் அண்ட் அவுட் சென்னை” – ஃபோர்ட்நைட்லி இதழில் இவருடைய 10 கட்டுரைகளும், 8 பிரபலங்களின் அறிமுகங்களும் இடம் பெற்றுள்ளது.

.14. ”
சென்னை அவென்யூ” – ஃபோர்ட்நைட்லி இதழில் 2 கட்டுரைகளும், 2 சமையல் குறிப்புக்களும் ஒரு பேட்டிக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

.15.
யுகமாயினியில் ஒரு கவிதை இடம் பெற்றுள்ளது.

16 -
பூவரசி காலாண்டிதழில் ஒரு கவிதையும் ஒரு கட்டுரையும், ஒரு புத்தக விமர்சனமும் இடம் பெற்றுள்ளது.

17-
பரிவு என்னும் இதழில்என் முதல் புத்தக வெளீயீடுஎன்ற தலைப்பில் கருத்தும் இரு கவிதைகளும் வெளியாகி உள்ளன

18 -
சமுதாய நண்பனில் 9 கவிதைகள் வெளியாகியுள்ளன.

19 -
நம் தோழியில் ஒரு கவிதையும், ஒரு பேட்டிக் கட்டுரையும், “ மாதவிடாய் என்ற குறும்பட விமர்சனமும் இடம் பெற்றுள்ளன. “நகரத்தார் திருமணம்என்ற கட்டுரையும் திருமண சிறப்பிதழில் வெளியாகி உள்ளது.

20-
லேடீஸ் ஸ்பெஷலில் 20 போராடி ஜெயித்த பெண்கள் பற்றிக் கட்டுரை எழுதியுள்ளார் . 7 மருத்துவ விழிப்புணர்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 20 பெண் வலைப்பதிவர்களையும், 7 ஆண் வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவருடைய ஒரு சினிமா விமர்சனமும், அம்மா பற்றியும், சொர்ணலிங்கேஸ்வரர் பற்றியும், தீபலெக்ஷ்மி பற்றியும் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 3 கவிதைகளும் வெளிவந்துள்ளன.

21 -
சூர்யக் கதிரில் வடிவுக்கரசி, ஊர்வசி, பாத்திமா பாபு, பாரதிமணி, பாடலாசிரியர் விவேகா, மாணிக்க விநாயகம், ரெனினா ரெட்டி, லெக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஹூசைனி, வினோ சுப்ரஜா ஆகியோரை பேட்டி எடுத்துள்ளார் 3 கவிதைகள் வெளியாகியுள்ளன.

.22.
இவள் புதியவளில்வலைப்பூக்களில் கலக்கி வரும் புயல் பூக்கள்என்ற தலைப்பில் பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.

பெண்கள் சுய உதவிக் குழுக்கள், மருத்துவர்கள் பேட்டி, பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், பள்ளிப் பிள்ளைகள், வி ஆர் எஸ், பண்டிகைப் பலகாரங்கள், பொங்கல் பற்றிக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.

23-
திருச்சி பதிப்பு தினமலர் பெண்கள் மலரில் இவரு டைய பட்டாம்பூச்சிக் கவிதைகள் வெளிவந்துள்ளன.

24-
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி, நாகர் கோயில், திருவனந்தபுரம், ராமநாதபுரம் தினமலர் எடிஷனில்ஹலோ சரண்யாஎன்ற சிறுகதை ( இரு வாரங்கள் ) வெளியாகி உள்ளது.”நான் மிஸ்டர் எக்ஸ்என்ற சிறுகதையும் வெளியாகி உள்ளது.( மின்சாரக் கண்ணா என்ற சிறுகதையும், தினமலர் வாரமலரில் “ திருநிலை “ என்ற கதையும் ( ஃபேஸ்புக் பிரபலங்களின் கதைகள் என்ற பெயரில் ) வெளியாகி உள்ளது. கூந்தலின் ஆயுள் ஆயில் சார்ந்ததா என்ற கட்டுரையும் வெளியாகி உள்ளது. )

25-
தினகரன் வசந்தத்தில்இணையத்தில் கலக்கும் இலக்கியப் பெண்கள் என்ற தலைப்பில் இவரைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள்இவரது வலைத்தளம் சும்மா பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ”தாய்மொழிப்  பயன்பாடுபற்றிய கருத்தும் வெளியாகி இருக்கிறது.

தினகரனில் இவரது நிலா கவிதை வெளியாகி உள்ளது.

26.
பாக்யாவில் எதிரொலி நாயகியாக சிறப்பிக்கப்பட்டுள்ளார். ”மக்கள் மனசுபகுதியில் ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரும் விஷயத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

27.
தினமணிக் கதிர்- சிவப்பு பட்டுக் கயிறு என்ற சிறுகதைக்கு ஊக்கப்பரிசு கிடைத்தது. தினமணி நாளிதழில் அதனால் சிறப்பிடம் கிடைத்தது. தினமணிக்கதிரில் ராமாயணம் பாராயணம் பற்றிய பதிவு இடம் பெற்றுள்ளது.

28.
புதிய தரிசனம். - புதிய தரிசனத்தில் 10 கவிதைகளும், ஒரு சிறுகதையும் அன்ன பட்சி பற்றிய இரு விமர்சனங்களும், இரு சமையல் குறிப்புகளும் ( கீரை வெரைட்டீஸ், நவதான்ய சமையல் குறிப்பு ) ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது

29.
பெண்கள் ராஜ்ஜியம் - பெண்கள் ராஜ்ஜியத்தில்பிள்ளைக்கறிஎன்ற சிறுகதை வெளியாகி உள்ளது.

30.
புதிய தலைமுறை - பெண்கள் டைரி என்னும் பகுதியில் எழுதி உள்ளார்.

31.
ஆச்சி வந்தாச்சு.- இவரது சிவப்புப் பட்டுக் கயிறு என்னும் சிறுகதை இதில் மறு பிரசுரம் ஆகி உள்ளது.

32.
புதிய பயணி - புதிய பயணியில் இரண்டு பயணக்கட்டுரைகள் எழுதி இருக்கிறார் (குவாலியர் கோட்டை & பிதார் கோட்டை பற்றி. )

33.
ஷெனாய் நகர் டைம்ஸ் - இதில் இவரது 2 கட்டுரைகளும் நான்கு பயணக் கட்டுரைகளும்  ஒரு சமையல் குறிப்பும் வெளியாகி உள்ளது.
  
34.
அமீரகத்தின் தமிழ்த் தேர் - தாய்மை & காதல் இனிது.ஆகிய தலைப்புகளில் இவரது கவிதைகள் பிரசுரமாகி உள்ளன.

35.
நமது மண் வாசம். - இதில் ஆறு கவிதைகளும் ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.

36. கோகுலத்தில் குழந்தைப் பாடல்களும், குழந்தைகளுக்கான சமையல் குறிப்புகளும் ஒருவருடமாக இடம்பெற்று வருகின்றன.

விடுதலை வேந்தர்கள்” என்னும் தலைப்பில் கோகுலத்தில் ஒரு வருடத்துக்கான தொடர் எழுதிவருகிறார்.

37. ஹாலிடே நியூஸ் பத்ரிக்கையில் பயணக் கட்டுரைகள் இடம்பெற்று வருகின்றன. 5 பயணக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

38. கொளத்தூர் மெயிலில் சில சமையல் குறிப்புகளும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

39. மங்கையர் மலரில் இவரது 32 செட்டிநாட்டு காரசார ரெசிப்பீஸ் உணவுக் குறிப்புகள் தனி இணைப்பாக இடம்பெற்றுள்ளன. 32 வகையான பழ உணவுகள் தனி இணைப்பாக வெளிவருகிறது.

40. ஐபிசிஎன்னுக்காக சாதனை நகரத்தார்களைப் பற்றி எடுத்த பேட்டி ஒன்று ஆகஸ்ட் 2016 ஐபிசிஎன் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இதே கட்டுரை ஆச்சி வந்தாச்சு இதழிலும் வெளியாகி உள்ளது. இன்னும் இரு சாதனையாளர்களின்  கட்டுரைகளும் வெளியாகி உள்ளன. மொத்தம் ஐந்து சாதனையாளர்களை ஐபிசின்னுக்காகப் பேட்டி எடுத்திருக்கிறார்.  

41. நமது மண்வாசம் இதழில் பெண்களுக்கான உதவிச் சட்டங்களும் உதவும் திட்டங்களும் என்ற கட்டுரையும் , 4 கவிதைகளும், மரபும் அறிவியலும் என்ற தலைப்பில் பல கட்டுரைகளும் வெளியாகி வருகின்றன.

42. ”மகளிர் தரிசனம்” என்ற நூலில் இவரது பேட்டிக் கட்டுரைகளும் விழிப்புணர்வுக் கோலங்களும் சமையல் குறிப்புகளும் இடம் பெற்றுள்ளன.




43. ”சென்னை ஸ்கூப்” என்ற ஃபோர்ட் நைட்லி இதழில் இரு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. 

இணைய இதழ்கள்.:- இளமை விகடன், திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், அதீதம், முத்துக் கமலம், கழுகு, வலைச்சரம், ஊடகம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல் ஆகிய இணையங்களில் எழுதி வருகின்றார் . திண்ணை இதழில் author=15 என்று தேடினால் இவரது 200 சொச்சம்  படைப்புகள் வாசிக்கக் கிடைக்கும்.

6.
இவரைப் பற்றி வெளியிட்ட பத்ரிக்கைகள்.

1. ”இணைய தள ப்ளாகர்என்ற தலைப்பில்நம் உரத்த சிந்தனைஇதழில் இவரைப் பற்றி வெளியாகியுள்ளது.

2. ”
தீக்கதிரில் சாஸ்த்ரிபவனில் நடைபெற்ற விழாவில் பேசிய இவருடைய கருத்து வெளியாகி உள்ளது.


3.
இவருடைய நூல்கள்சாதனை அரசிபற்றியும், ”ங்காபற்றியும்திருச்சி தினமலர்பதிப்பிலும்இந்தியா டுடேயிலும், ”லேடீஸ் ஸ்பெஷலிலும் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. ”பெண்பூக்கள் ” பற்றியும் ”சிவப்புப் பட்டுக்கயிறு” பற்றியும் லேடீஸ் ஸ்பெஷலில் நூல் அறிமுகம் ஆகி உள்ளது. பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இந்தப் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. ”சிதம்பரம் மகளிர் கல்லூரி”யிலும், ”பென்னிங்டன் லைப்ரரி”யிலும் காரைக்குடி ”கம்பன் கற்பகம் பள்ளி”யிலும், ”ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளி”யிலும் இவை சிறப்பிடம் பெற்றுள்ளன.

4. 
மக்கள் தொலைக்காட்சியில் இவருடைய சாதனை அரசிகள் புத்தகம் , நூல் விமர்சனம் பகுதியில் இடம் பெற்றது.


5. அன்ன பட்சி பற்றி அதீதத்திலும் புதிய தரிசனம் இணையத்திலும் புதிய தரிசனம் நூலிலும் விமர்சனம் வெளியாகி உள்ளது. தினமணிக் கதிரில் இவருடைய ப்லாக் சும்மா இடம் பெற்றுள்ளது. 6 பதிவர்களில் 5 பேர் ஆண்கள். ஒரே பெண் பதிவராக இவருடைய வலைப்பதிவு  இடம் பெற்றுள்ளது. 

6. கோவை இலக்கிய சந்திப்பில் இவரது நூல் அன்னபட்சி நூல் விமர்சனம் பெற்றது. 

7 . தென்றல் :- அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தென்றல் பத்ரிக்கையில் தெரியுமா வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன் என்ற தலைப்பில் இவரது வலைப்பதிவுகள் பற்றிக் கூறி சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது ”கல்யாண முருங்கை” சிறுகதை தென்றலில் வெளியாகி உள்ளது.

8. ”சிவப்புப் பட்டுக் கயிறு” பற்றிய நூல் அறிமுகம் லேடீஸ் ஸ்பெஷல் இதழிலும், நூல் விமர்சனம் கல்கி இதழிலும் வெளியாகி உள்ளது.

9. 20.4.2017 தி தமிழ் இந்து நாளிதழிலும், தினமணி நாளிதழிலும் உலகப் புத்தக நாளுக்காக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வழங்கியது வெளியாகி உள்ளது.


7.
சிறப்புப் பேசாளர் மற்றும் சிறப்பு விருந்தினராக.

1.
லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் சுய உதவிக் குழு மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள் ( 2010) பற்றி பேசியது.

2.
சென்னை சங்கமம் 100 கவிஞர்களுள் ஒருவராகப் பங்கேற்றது(2011)

3,
சேரன் மிஷ்கினுடன்யுத்தம் செய்கலந்துரையாடல்,( கலைஞர் தொலைக்காட்சி)

4.
ஸ்ரீ கான குஹா இசைப்பள்ளி ஆண்டுவிழாவில் தலைமையேற்று உரையாற்றினார்.


5.
சென்னை போர்ட் ட்ரஸ்ட்டில் துறைமுகப் பேரதிபர் அதுல்ய மிஸ்ராவுடன் சிறப்புப் பேச்சாளராக 2011 இல் பங்கேற்றார்

6.
சிறப்புநீயா நானாவில் தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிய கருத்து.

7.
அட்சயா ஃபவுண்டேஷன் சார்பாக அரும்பாக்கம் அரசுப் பள்ளியில் அம்பேத்தார் பிறந்த நாள் விழாவில் தலைமையேற்றார்

.8. 
சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் கமலா செல்வராஜுடன் சிறப்புப் பேச்சாளராக 2011 இல் பங்கேற்றார்.

9.விக்னேஷ்வரா லேடீஸ் க்ளப். ராமாவரம், சென்னை. .

10
ஜவஹர் வித்யாலயாவில் நடனப் போட்டியில் நடுவராக.

11.
ஸ்ரீ ராம்குவார் தேவி ஃபோம்ரா விவேகானந்தா வித்யாலயா-- வில் (குரோம்பேட்டை) 110 ஆசிரியர்கள் முன் ஆசிரியர் தின உரை

12.
பெண் சிசுக்கொலை விழிப்புணர்வு பற்றி பொதிகை காரசாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

13.
சூசைபுரம் தூய வளனார் பள்ளியில் மகளிர் தின உரை . 2012.

14.
சாஸ்த்ரி பவனில் மகளிர் தினத்தில் டாக்டர் சாந்தாம்மாவுடன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு மதர் தெரசா அவார்டு வழங்கி கௌரவிக்கப்பட்டா ர் . ( 2012)

15.
மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சுதந்திரதின உரையாற்றினார் . ( 2012)

16.
புதுக்கோட்டை கற்பகவிநாயகர் ட்ரஸ்டின் ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளில் ( 4 ) மார்ச் 7 , 2013 அன்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் தின உரையாற்றினார்.

17.
திருப்பூர் பார்க் கல்லூரியில் செப். 5 2013 ஆசிரியர் தினத்தன்று  மகளிர் மன்ற விழாவை ஆரம்பித்து உரையாற்றினார்
18. கல்கியின் பவளவிழாக் கொண்டாட்டத்தில் கோகுலத்தின் சார்பில் குழந்தைகள் நிகழ்ச்சியில் ஜூன் 11, 2016 அன்று  நடுவராகப் பங்கேற்றார்.
19. லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கையின் 20 ஆவது ஆண்டு விழாவில் ஸ்பெஷல் லேடியாக கௌரவிக்கப்பட்டார்.
20. சாஸ்த்ரி பவனில் இந்த (8.3.2017) மகளிர் தினத்தன்று சிறப்புப் பேச்சாளராகக் கௌரவிக்கப்பட்டார்.
21. காரைக்குடி கம்பன் விழாவை ஒட்டி நடத்தப்பட்ட நான்காம் உலகக் கருத்தரங்கில் முனைவர் ”வெ. தெ. மாணிக்கனார்” பற்றிய ”செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு” என்ற கருத்தாய்வில் அவரது மருதத்திணை பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார்.
22. உலகப் புத்தக தினத்தில் ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வழங்கினார்.



23. நமது மண்வாசம் இதழின் மூன்றாம் ஆண்டுவிழாவில் தானம் அறக்கட்டளையின் பட்டறிவுப் பதிப்பகம் வெளியிட்ட “நாமும் நலமும்” என்ற நூலைப் பேராசிரியர் திரு ஞானசம்பந்தன் வெளியிடப் பெற்றுக் கொண்டார். மேலும் நமது மண்வாசத்தில் இரண்டாண்டுப் பங்களிப்புக்காக திருவள்ளுவர் பொறித்த தஞ்சாவூர்த்தட்டு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. .8. ஸ்கிரிப்ட் எழுத்தாளராக:-

சிகரம்.காம் என்ற வெப்சைட்டுக்காக எழுதப்பட்ட விளம்பர ஸ்க்ரிப்ட்.
1.
http://www.youtube.com/watch?v=UYIlEFyOZ_4

2.
http://www.youtube.com/watch?v=_FttcSqzi2U


9.
பாடலாசிரியராக.
http://honeylaksh.blogspot.com/2010/03/blog-post_07.html


10.
ஒருங்கிணைப்பாளராக.

1.
லேடீஸ் ஸ்பெஷல் சார்பாகமெரீனாவில் ஒரு மாலைஎன்ற நிகழ்ச்சி.
https://www.facebook.com/media/set/?set=a.227027420644611.74468.100000120633183&type=3

2.
இவள் புதியவளுக்காக. ”வலைப்பூக்களில் கலக்கிவரும் புயல் பூக்கள் நிகழ்ச்சி
https://www.facebook.com/media/set/?set=a.203474279666592.60111.100000120633183&type=3

3.
பெண்கள் தினம் பற்றி ஸ் ஆர் எம் யூனிவர்சிசிட்டியின் எஃப் எம் ரேடியோவுக்காக 6 சிறப்புத் தகுதிப் பெண்களை ஒருங்கிணைத்துப் பேட்டி
https://www.facebook.com/media/set/?set=a.393283094019042.108923.100000120633183&type=3


11.
விருதுகள்:-

1. “ WOMEN EMPOWER AWARDS “ AT SASTRI BHAVAN ON 2011 BY CENTRAL GOVERNMENT WOMEN EMPLOYEES WELFARE ASSOCIATION, SASTRI BHAVAN. FOR PATHWAY TO DECENT WORK FOR WOMEN ( BY DFP- DIRECTORATE OF FIELD PUBLICITY).

2. “COMMUNITY SERVICE AWARD” BY ATCHAYA FOUNDATION. CHENNAI. ( FOR THE DISTINGUISHED HUMANITARIAN SERVICE TO THE COMMUNITY.)


3. சமூக இணையப் பங்களிப்புக்காக சிறந்த பெண் பதிவராக ஈரோடு சங்கமத்தில் வழங்கப்பட்டது.


4. ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய கல்யாண் நினைவுக் கவிதைப் போட்டியில்மூன்றாமிடம் பெற்று பரிசுத் தொகையும் நினைவுக் கேடயமும் சான்றிதழும் பெற்றுள்ளார்.
 

5. அரிமா சக்தி விருது. :- திருப்பூர் அரிமா சங்கத்தின் அரிமா சக்தி விருது இவரது நூலான அன்னபட்சிக்குக் கிடைத்திருக்கிறது.  
6. லேடீஸ் ஸ்பெஷல் சார்பாக “ஸ்பெஷல் லேடி” விருது.


12.
தொலைக்காட்சிகள்:-

1.
சென்னை சங்கமம் பற்றிய இவரது கருத்து கலைஞர் தொலைக்காட்சி செய்தி சானலில் காண்பிக்கப்பட்டது.
http://www.youtube.com/watch?v=UoJYMWNoz3A

2.
சேரன் மிஷ்கினுடன் யுத்தம் செய் கலந்துரையாடல்கலைஞர் தொலைக்காட்சி.
.
http://honeylaksh.blogspot.com/2011/03/blog-post.html

3.
ஸ்பெஷல்நீயா, நானா..” – விஜய் டிவி
http://www.tubetamil.com/view_video.php?viewkey
38f7637ab6d9fa1da209&page=1&viewtype=&category=

4.
பெண் சிசுக்கொலை பற்றிய விழிப்புணர்வு தேவைகாரசாரம்பொதிகைத் தொலைக்காட்சி.
http://honeylaksh.blogspot.in/2012/07/blog-post.html

5.
பபாசி பற்றிய கருத்துசன் நியூஸ். தொலைக்காட்சி.
http://honeylaksh.blogspot.in/2012/01/thanks-bapasi-discovery-sun-news-tv.html

 
6.
எஸ் ஆர் எம் யுனிவர்சிட்டியின் முத்துச்சரம் வானொலி நிகழ்ச்சி சர்வதேச மகளிர் தினத்துக்காக.

http://edaa.in/preview.php?site=muthucharamcr&program=1354


7.
இரு வானொலி நிகழ்ச்சிகளும் SOUND CLOUD இல் பதியப்பட்டுள்ளன.

http://soundcloud.com/sabalaksh/hellofm-18-september-2012-13
http://soundcloud.com/sabalaksh/hellofm-18-september-2012-13-1
https://soundcloud.com/sabalaksh/thenammai-lakshmanan-acheiver


8. Thenammmai Lakshmanan Speech, Thenammai Lakshmanan’s Independence Day Speech
என்ற தலைப்புக்களில் YOU TUBE இல் நிகழ்ச்சிகள் பதியப்பட்டுள்ளன.

http://www.youtube.com/watch?v=UoJYMWNoz3A
http://www.youtube.com/watch?v=4Ew1lK2W9mE
http://www.youtube.com/watch?v=njfw4XPI_dU
http://www.youtube.com/watch?v=-f642m_XsC4
http://www.youtube.com/watch?v=2LaY6eShYW8
http://www.youtube.com/watch?v=uueyqtiG1ds
http://www.youtube.com/user/sabalaksh/videos


9. புதுக்கோட்டை ஜெ ஜெ குழுமக் கல்லூரிகளில் மகளிர் தின உரையாற்றியதும் பரிசு வழங்கியதும் யூட்யூப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
10. புதிய தலைமுறையின் புதிய யுகம் தொலைக்காட்சி




11. வானவில்/ ஃப்ளாஷ் தொலைக்காட்சி. சி



12. ”இதழில் எழுதிய கவிதைகள்” என்ற கவிதைத் தொகுதிக்கு அணிந்துரை  எழுதியுள்ளார்.

13. இவரது இரண்டு கவிதைகள் ஆங்கிலத்திலும், மூன்று கவிதைகள் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கன்னடத்தில் வெளியாகும் “சகி “ என்னும் இதழில் இவருடைய கவிதைகளின் மொழிபெயர்ப்பு வெளியாகி உள்ளது. ( மொழிபெயர்த்தவர் - திரு. காளிமுத்து நல்லதம்பி அவர்கள் )
Attachments area





இவை அனைத்தையும் சாதனையாகசெய்து உள்ள அன்பான சகோதரி
தேனம்மைலெக்ஷ்மணன்அவர்களை தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு(லங்கா தீபம் விருதும் கலைதீபம் பட்டமும் )வழங்கி கௌரவப் படுத்துவதற்கு தெரிவு செய்யப் பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது அமைப்பினர்கள் எல்லோரது வாழ்த்துக்களும் உங்களுக்கு சமர்ப்பணம் .



நன்றி சகோதரி
பேட்டி ---கலைமகள்ஹிதாயா ரிஸ்வி =இலங்கை
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு////


நன்றி சகோதரி. :)


10 கருத்துகள்:

  1. /// பேனாவின் கழுத்து வலிக்கும் வரை எழுதுபவர்கள்... ///

    சந்தேகமே இல்லை... 100% உண்மை...

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு

  2. Idrees Yacoob முதலில் கலைமகள், சகோதரி ரிஸ்வி அவர்களுக்கு நன்றிகள் (இந்த உரையாடலை பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி). சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களைப் பற்றி கூற எதுவும் புதிதில்லை. அவர் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷங்களில் ஒருவர். உரையாடலை வாசிக்க வாசிக்க மிகவும் பெருமையாக இருந்தது. உண்மையிலேயே என்னைப் போன்றவர்களுக்கு இவரது இந்த பகிர்வு நல்ல வழிகாட்டியாக இருக்கும். இலக்கியம் சார்ந்த பல திறன்களை இவரது அற்புதமான அடையாளங்கள் பறை சாட்டுகின்றன. சொல்ல சொல்ல என் வரிகள் கூடிக் கொண்டே போகும். எழுத்தின் ஆர்வத்தில் வரும் புதியவர்களை எந்த ஒரு பாகும்பாடும் பாராது மிகவும் ஊக்குவித்து ஆதரிப்பவர். உதாரணம், சகோதரி ஒரு நாள் என்னுடைய ஒரு கவிதையை மிகவும் ரசித்து பாராட்டினார் எனக்கு அன்றெனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது, நல்ல உத்வேகமாகவும் இருந்தது. இந்த சாதனை அரசியுடன் தடாக இலக்கிய வட்டத்தில் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தேனம்மை அவர்கள் மேலும் மேலும் உயர என் அன்பான வாழ்த்துக்கள். இந்த உரையாடலை பகிர்ந்த தடாகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    Delhi Ganesh அடே அப்பா...எவ்வளவு அனுபவம்..இதனை வயதிற்குள்...ரொம்ப ரொம்ப பிரமாதம். நீங்கள் எப்படி கரிச்சான் குஞ்சு ..வை எழுத மறந்து விட்டீர்கள்...
    Delhi Ganesh அடே அப்பா... எவ்வளவு அனுபவம் இந்த வயதில். பாராட்டப்படவேண்டிய பெண்மணி தான் நீங்கள். வாழ்த்துக்கள். தேனம்மை லக்ஷ்மணன் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
    3 hours ago · Unlike · 1
    Delhi Ganesh மெல்லினத்தில் வந்த பகுதியை படித்தேன்.வழக்கம்போல அருமை

    பதிலளிநீக்கு
  3. நன்றி தனபாலன்

    நன்றி குமார்

    நன்றி இத்ரீஸ்

    நன்றி டெல்லி கணேஷ் சார்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அன்புடையீர்,

    வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாராட்டுகள். வாழ்த்துகள்.

    இணைப்பு: http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

    பதிலளிநீக்கு
  6. வலைச்சரத்தில் தங்களது வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள். எனது வலைப்பூக்களைக் காண அழைக்கிறேன்.
    http://drbjambulingam.blogspot.com/
    http://www.ponnibuddha.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. //தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். இப்படி இவர் திறமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம் //

    அஷ்டாவதானினு கேள்வி பட்டிருக்கேன் .இவர்கலின் திறமை எல்லாம் பார்த்தால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  8. ஓடி வரும் நீரில் எந்த நீரை இனிக்கும் என்பேன் நான்?
    பயின்று வரும் படைப்புகளில் எதையெடுத்து பாராட்டுவேன்...
    தோழியின் பதிவுகளில் தொலைந்து போய் தேடுகிறேன் என்னை...
    முழுதும் படிக்காமலே மூழ்கிவிட்டேனே....
    அமுதசுரபியின் மகிமையை இன்னும் படித்து விட்டு பாராட்ட வருவேன் பதிவரே...

    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  9. nandri Yathavan Nambi sago

    nandri Aadhi Venkat

    nandri Jambu sir

    Nandri Poonthalir

    Nandri Ilango.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...