எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 மார்ச், 2013

ஃப்ரெஷ்

”ஏம்மா லஞ்ச் பாக்ஸ் ரெடியா..”

”சாக்ஸை எடுத்துக் கொடு.”

”லெமன் ஜூஸ் போட்டுடு.. காஃபி வேணாம்..”

டிவி நியூசைப் பார்த்தபடி ஒர் கையில் பேப்பரோடு சொன்னான் ஆனந்த்.


அரக்க பரக்க ரெடியான மனைவியுடன் பைக்கில் ஆஃபீஸ் கிளம்பினான்.

முன் பைக்கின் பில்லியனில் இருந்த பெண் அம்சமாக ட்ரெஸ் பண்ணி இருந்தாள்

அட... நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா..

ஓவர்டேக் பண்ணியபோது தெரிந்தது அவள் கல்லூரித்தோழி..பானு.

சிக்னலில் பக்கம் பக்கமாக நின்ற போது கண்டு பேசி ஒரு காஃபி ஷாப்பில் சந்திக்க முடிவு செய்தார்கள்.

மாலையில் காஃபி ஷாப்பில் .,”என்ன பானு காலேஜ்ல பார்த்தமாதிரியே இருக்கே ஃப்ரெஷ்ஷா..”

”என் கணவர்தான் காரணம். ரெண்டு பேரும் ஆபீஸ் போறதால ஷேர் பண்ணித்தான் வேலை செய்வோம். ”என சிரித்தாள்.

வீடு சென்றபின் செய்ய வேண்டியவேலை குறித்து யோசித்தபடி .,காலையில் தலை பின்னக்கூட நேரமில்லாமல் க்ளிப் போட்ட கூந்தலை வருடியபடி களைத்து அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்ததும் சுருக்கென்றது இவனுக்கு.

 டிஸ்கி:- இந்தச் சிறுகதை 23, அக்டோபர் , 2011 திண்ணையில் வெளிவந்தது.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...