எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 2 ஆகஸ்ட், 2017

அதீதம் - மின்னிதழ்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

இதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.

தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html

இக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.

"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். "

எனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,  இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்

/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம்,  வலைச்சரம்,  சுவடு, பூவரசி, தகிதா, புதிய” , அவள் பக்கம்தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////

ஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.

எனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.

எல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.

வரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.

அன்பும் நன்றியும்,

தேனம்மைலெக்ஷ்மணன். 


என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.


அதீதம் மின்னிதழ் ஆசிரியர் தோழி இராமலெக்ஷ்மிக்கு நன்றிகள். 

கீற்று நந்தன் அவர்களும் சொல்வனம் மைத்ரேயன் அவர்களும் இது பற்றி மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அவர்களால் இது குறித்து முழுமையான தகவல்கள் அனுப்ப இயலவில்லை. எனவே வெளியிடவில்லை.


அதீதம் - மின்னிதழ்

2011_ஆம் ஆண்டு ஜனவரி 15, உழவர் திருநாளில் “படைப்புகளுக்கென்றே தனித்துவமாய்..” என ஆரம்பமானது ‘அதீதம்’ இணைய இதழ். பரிசல் கிருஷ்ணா, ஆதி தாமிரா மற்றும் (குசும்பன்) சரவணவேல் ஆகியோர் தொடங்கிய இந்த இதழ் கதை, கவிதை, கட்டுரைகள் என இலக்கியத்தோடு விளையாட்டு, பொருளாதாரம், சமூகம், அரசியல், சினிமா, ஆன்மீகம், மொழிபெயர்ப்பு, அனுபவத் தொடர்கள், ஒளிப்படப் பக்கம் என அனைத்துத் துறை சார்ந்த படைப்புகளையும் வெளியிட்டு ஒரு பல்சுவை இதழாகப் பரிமளித்தது.

ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆசிரியர் குழு விலகிக் கொள்ள “சுவை படச் சொல்’ எனப் புதுப் பொலிவுடன்  (ஜீவ்ஸ்) ஐயப்பன் கிருஷ்ணன், ராமலக்ஷ்மி ராஜன்,  கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் மற்றும் பிரஸாத் வேணுகோபால் ஆகியோர் பொறுப்பேற்று அதே பாதையில் சிறப்பாக எடுத்துச் சென்றனர்.

‘வாமனன்’ என்பது ஆசிரியரின் பொதுப் பெயராக  இருந்தது. சில காலத்தில் கார்த்திக்கும் விலகி விட மற்ற மூவரும் இதழை நிர்வகித்து வருகின்றனர். மாதம் இருமுறையாக வந்து கொண்டிருந்த இதழ் தற்போது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் என்றில்லாமல் படைப்புகள் வர வர பதியப்பட்டு வெளியாகி வருகிறது.

சந்தித்த சிக்கல் என்றால், 2014_ல் Domain புதுப்பிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஆசிரியர், இணையம் அருகே வர முடியாத பணிச் சூழலில் வெளிநாட்டில் மாட்டிக் கொள்ள, அதுகாலமும் சேமித்திருந்த படைப்புகள் அனைத்தும் அமிழ்ந்து போயின. அவற்றைத் தரவிறக்கம் செய்கிற அவகாசமும் இருக்கவில்லை.

ஆயிரத்துக்கும் மேலான சிறப்பான பதிவுகளை இழக்க நேரிட்டாலும் மீண்டும் புதிதாக  டாட் காம் சேவை மூலமாகத் தொடர்ந்து வருகின்றனர். ‘2011-14 படைப்புகள்’ எனும் பகுப்பின் கீழ் மின்னஞ்சல் சேமிப்பில் இருப்பவை மட்டும் மீண்டும் அவ்வப்போது வலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

அதீதம் சுவைபடச் சொல்!: http://www.atheetham.com  
படைப்புகள் அனுப்ப:  articlesatheetham@gmail.com
FaceBook மற்றும் G+ ஆகியவற்றில் படைப்புகளைத் தொடர:




டிஸ்கி:- விபரங்கள் கொடுத்து உதவியமைக்கு நன்றி இராமலெக்ஷ்மி.

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. அன்பின் தேனம்மைக்கு வணக்கம் அதீதம் மின் இதழுக்கு எழுதி அனுப்பின என் ஒரு அனுபவத்தைப் பகிர்கிறேன் அதீதமின் இதழுக்காகஎன்னிடம் அதற்கு முன்வெளிடப்படாத ஒரு படைப்பு எழுதக் கேட்டிருந்தார்கள் நானும் அனுப்பிக் கொடுத்தேன் ஆனால் எந்த பதிலும் இருக்க வில்லை என் படைப்பும் வெளியாக வில்லை ஏதாவது காரணத்துக்காக ரிஜெக்ட் செய்வதென்றால் அட்லீஸ்ட் எனக்குத் தெரியப் படுத்தியாவது இருக்க வேண்டும்பிறர் படைப்புகளில் இதழ் நடத்துவோர் குறைந்த பட்சம் உண்மையாகவாவது இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...