எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 செப்டம்பர், 2014

தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.

181. அம்மா என்றால் அன்பு.
ஜெயலலிதாம்மா பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல். அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு. ஆசான் என்றால் தெய்வம். என்ற அந்தப் பாடல் அம்மாவின் குரலுக்காகவே பிடிக்கும்.படம் அடிமைப்பெண்.

182. அன்பே அமுதா.
ரவிச்சந்திரன் விஜயகுமாரி நடித்த பாடல். ./// நீ பாலமுதா, சுவைத் தேனமுதா இல்லை பாற்கடலில் பிறந்த சொல் அமுதா, உந்தன் சொல் அமுதா இல்லை சுவை அமுதா. கொஞ்சம் நில் அமுதா அதைச் சொல் அமுதா./// ப்ளஸ்டூவில் என்னோடு படித்த அமுதாவிடம் தினம் ஒரு முறையாவது இந்தப் பாடலைப் பாடி இருப்போம். 

183. மெல்ல மெல்ல மெல்ல என்மேனி நடுங்குது மெல்ல
ஜெமினியும் சரோஜா தேவியும் நடித்த பாடல். படம் பணமா பாசமா. ///மெல்ல மெல்ல மெல்ல என் மேனி நடுங்குது மெல்ல. சொல்ல சொல்லச் சொல்ல என் சிந்தை குளிருது சொல்ல. ஒரு பெண்ணின் மென்மையான காதல் உணர்வுகளை, மெல்லிய காமத்தை அற்புதமாகப் படம் பிடித்த வரிகள்.



184. நெஞ்சமடி நெஞ்சம் அது நான்கொடுத்தது.
அழகன் படப் பாடல். மம்முட்டி பாடியது. உணர்ச்சி பொங்கும் பாடல். என் நெஞ்சை நீயும் அனுப்பி விடு. என வலியோடு கோரிக்கை வைக்கும் பாடல். பானுப்ரியாவும் அற்புதமாக நடனமாடி இருப்பார்.

185. நிலவும் மலரும் பாடுது.
சிரித்துச் சிரித்து உறவு வந்தால் நிலைத்து வாழுமா.. என்று யோசிக்க வைத்த பாடல் வரிகள்.ஜெமினியும் வைஜெயந்தி மாலாவும் தேன் நிலவு படத்தில்.


186. மழையும் நீயே வெய்யிலும் நீயே
அதே அழகனில் ஊடலும் கூடலுமான பாடல். ஊடலுக்குப்பின் தான் கூடல் ருசிக்கும் என்பதாய் இந்தப் பாடலில் ஊடியும் கூடியும் மயங்கியும் நம்மை மயக்கியும் இருப்பார்கள் பானுப்ரியாவும் மம்முக்காவும். 

187.கோழி கூவும் நேரமாச்சு தள்ளிபோமாமா
அழகனில் முதல் பாடல். அழகான உயரமான வாளிப்பான பானுப்ரியா அம்சமாக ஆடி இருப்பார். பாடல் வரிகள் முடிவில் சோகம் உண்டாக்கும்.

188. சாதிமல்லிப் பூச்சரமே
மம்முட்டிக்கு அவரது ட்யுடோரியல் கல்லூரி ஆசிரியை கீதா எழுதிக் கொடுத்த பாடலை இங்கே அவர் பானுவுக்காகப் பாட அதைக் கேட்டபடி வந்து வருத்தத்தோடும் கோபத்தோடும் திரும்பிச் செல்வார் கீதா. அவ்ளோ பெரிய பண்ணை வீட்டு நீச்சல் குளத்தருகிலும், தோட்டத்திலும், அதை ஒட்டிய ஹாலிலும் மம்முட்டி நின்று பாடுவதும், பானுப்ரியா வளைந்து நெளிந்து மயிலைப் போல ஓடி அசைந்து நடனமாடுவதும் கொள்ளை அழகு.// காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம். கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு ///

189.நின்னுக் கோரி வர்ணம் வர்ணம்
அக்னி நட்சத்திரத்தில் பிரபுவும் அமலாவும் பாடும் காட்சி. அமலா ஃபிட்டான ட்ராக் சூட்டில் செம அழகோடு அரை இருட்டில் பிரபுவைச் சுற்றிச் சுற்றி ஆடுவார். மாறி மாறி விழும் லைட்டிங்கே அந்த ரூமுக்கும் அந்தக் காட்சிக்கும் அழகு சேர்க்கும். பாலே டான்சர் மற்றும் பரத நாட்டியமாடுபவர் என்பதால் அமலாவின் நடன அசைவுகள் நளினமாக அற்புதமாக இருக்கும்.

190. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு.
அமர்க்களம் படத்தில் யார் கண்ணுக்கும் தெரியாமல் ( இப்ப ரியல் ஜோடியான ) தல அஜீத்தும், ஷாலினியும் பாடும் பாடல். ஒவ்வொரு சீனும் நல்லா இருக்கும். அதிலும் ஷாலினியின் கண்களும் அஜீத்தின் கண்களும் செம கவர்ச்சி. காதல் பாஷையைப் பேசியபடி ஜோடிக்கிளிகளாய்ப் பறந்து கொண்டிருப்பார்கள் பாடல் முழுவதும்.

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



2 கருத்துகள்:

  1. ஆஹா அத்தனையும் எனக்கும் என் பெண்ணுக்கும் பிடித்த பாடல்கள். நின்னுக் கோரியில் பிரபுவின் டிம்பிள் அழகு பார்த்திருக்கிறீர்களா தேன். ஜாதிமல்லிப் பூச்சரமே கவிதை.பாடல் ஆடல்.இமோஷன் என்று அப்னைத்துமே உச்சகட்ட உயர்வு. உன்னோட வாழாத வாழ்வென்ன வாழ்வு,இந்த ஜோடி திரும்ப நடிக்காதா என்று ஏங்கவைக்கும்.அவ்வளவு நேச்சுரல். மெல்ல மெல்ல பாடலை நினைவு பட்சுத்தியதற்கு நன்றி தேனம்மா. ரசிகை நீங்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...