எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.

181. நல்ல வேளை ஃபேஸ்புக் ஃபீட்ல சைட்ல இன்னார் இன்னாரோட மெசேஜை லைக் பண்றாங்க. இன்னார் இன்னாரோட ஃபோட்டோவை லைக் பண்றாங்க. கமெண்ட் பண்றாங்கன்னு மட்டும் வருது. ( லைக்ஸ் & கமெண்ட்ஸ் மட்டும் .. பப்ளிக் பப்ளிக் நு அலர்ட் கொடுக்குறாப்புல.)

இன்னார் இன்னாரோட ஃபோட்டோவை பார்க்கிறாங்க.. இன்னார் இன்னாரோட ஸ்டேடசைப் படிக்கிறாங்கன்னு வந்தா எப்பிடி இருக்கும்.. ஹாஹா.. பாதிப்பேர் எங்க போட்டுக்கொடுத்துருமோன்னு டெரர்லயே ஃபேஸ்புக் வரமாட்டாங்க.. :)


182. இங்கே நாளைதான் தீபாவளி.

இனிப்பு, எண்ணெய்ப் பலகாரம் சாப்பிட வீட்டில் யாரும் இண்ட்ரஸ்ட் காட்டுவதில்லை. புதுத் துணிகள் அவ்வப்போது வாங்கியதே இருக்கு. பட்டாசு வெடிச்சிப் பல வருஷமாச்சு. அக்கம் பக்கம் இருக்கும் வாண்டுகள் அப்போ அப்போ வெடிப்பது ஒன்றுதான் தீபாவளி என்பதை ஞாபகப் படுத்துது.

சின்னப் புள்ளையில் வீட்டில் அனைவருக்கும் வாங்கின ட்ரெஸை எடுத்து வச்சு வீட்டுக்கு வர்றவங்க கிட்ட எல்லாம் ஜவுளிக் கடைக்காரங்க மாதிரி விரிச்சுக் காட்டுறதும். சில நாள் முன்பிருந்தே ஏலம் நெய் மணக்க அம்மா செய்யும் மைசூர்பாகு, தேன்குழலும், தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து (!) கண்ணில் எண்ணெய் விழ கரகரப்பாக சீயக்காய் தேய்ச்சுக் குளிச்சு மஞ்சள் தொட்டு வைச்ச பாவாடை,சட்டையை அப்பாவிடம் விழுந்து வணங்கி வாங்கி அணிவதும் . கோயிலுக்குச் சென்று வந்து அம்மா சுடச் சுடச் செய்யும் கல்கண்டு வடை, வெள்ளைப் பணியாரம், மிளகாய்த் துவையல், இட்லி, முருங்கை கத்திரி உருளை பச்சைமிளகாய் போட்டு செய்யும் சாம்பார் எல்லாம் சாப்பிட்டுட்டு. அக்கம் பக்கம் வீடுகளுக்கு இனிப்புகள் சப்ளை செய்துட்டு அவங்க கொடுக்கும் பலகாரத்தை டேஸ்ட் செய்தபடி அண்ணன் தம்பிகள் வெடிக்கும் வெடியைப் பங்குபோட்டு வெடித்ததும் ஹ்ம்ம்ம். கனவு போலிருக்கு. !


ஆமா இப்பல்லாம் தீபாவளின்னா என்ன.. ஒரு எக்ஸ்ட்ரா லீவ் நாள். வீட்ல நல்லா தூங்கிட்டு தூங்குறவங்களை எழுப்பி திட்டு வாங்கிட்டு நாம மட்டும் சம்பிரதாயமா செய்யவேண்டிய சிலதை மட்டும் செய்துட்டு கோயில் இருக்க திசையைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுட்டு, நமக்கும் எண்ணெய் வேண்டாம் ஸ்வீட் வேண்டாம் . ஒண்ணு ஒண்ணு மட்டும் எடுத்துப்போம்னு பயந்து பயந்து சாப்பிட்டுட்டு டிவியோ ஃபேஸ்புக்கோ பார்த்து ஸ்டேடஸ் போடுறதுதான். !

183. ப்ரொஃபைல் ஃபோட்டோ போடுவதில் லைக் மட்டும் போட்டால் நல்லது. கருத்து( கமெண்ட் ) தேவையில்லைன்னு நினைக்கிறேன். ( தனிப்பட்ட முறையில் ஃபோட்டோ ஏன் போடுறோம்னு விளக்கம். -- ஒரு மாதிரி கண்ணாடியில் நம்மை நாமே திரும்ப திரும்ப அதே மாதிரி பார்ப்பது போலிருப்பதால் கொஞ்சம் ப்ரொஃபைலை மாத்திக்கிறது . அதுல சில சமயம் வரும் கமெண்ட்ஸ் நம்மை சங்கோஜப்படவும் சங்கடப் படவும் வைக்கும்.

184. fb:- what's on your mind ?
me :- onnumey illa.. romba blank aa irukku. athu innikuthan therinchuthu.

185. யார்னே தெரியாம ஏன் ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்ட் கொடுக்குறீங்க. அப்புறம் இன்பாக்ஸ்ல வந்து இன்ஃபர்மேஷன் கேக்குறீங்க.
‪#‎கொலைவெறி_வருது‬.

186. நண்பர்கள் லிஸ்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சிலர் எழுத்துக்களைத் தேடித் தேடிப் படிக்கத் தூண்டுவது எது..
‪#‎எழுத்தீர்ப்புவிசை‬

187.கத்திய வச்சு வெட்டுறங்கள கசாப்புக் கடைக்காரர்னு சொல்வோம். ஆனா

,#கலை விமர்சகர்னு பாராட்டுறாங்க

188. எப்பப் பார்த்தாலும் பேக் பெயின், நீ பெயின் ஷோல்டர் பெயின் பிஸியோ தெரஃபி பத்தி ஹோம்பேஜுல வருதே. நான் என்ன பேஷண்டா.. என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே எஃப் பி. வர வர எப்ப எப்பவோ போட்ட ஸ்டேட்ஸை எல்லாம் நீ மறக்குறதே இல்லைன்னு தெரியுது.

189. எல்லாரும் போஸ்ட் பண்ணிட்டங்க. நாமளும் ஜோதில ஐக்கியமாயிடணும். எங்களுக்குப் பிடித்த கமல் பாட்டு. வாழ்க வளமுடன் என் தலைவருக்குப் பிடித்த கமல்-- /// உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல. :) /// 

190. எல்லாருக்கும் பயன்படுற நல்ல விஷயங்களை, பொதுநல விஷயங்களை ஒன்லி ஃப்ரெண்ட்ஸுக்கு மட்டும் ஏன் ஷேர் பண்றீங்க மக்காஸ். பப்ளிக் ஆப்ஷன்ல ஷேர் பண்ணலாம்.

 191. மெசேஜ் செண்ட் ஃபெயில்ட் ஆனா ஒன்னார்ரூபா எடுத்துக்கிட்டியே வோடஃபோன். இப்பிடி எத்தன மெசேஜ், எத்தன மக்கள், எத்தனை நாள் எத்தன ஒன்னார்ரூபா..

என்னோட ஒன்னார்ரூபாயை என் அக்கவுண்ட்ல க்ரடிட் பண்ணிடு..அத்தனை பேருக்கும் அவங்க அவங்க அக்கவுண்ட்ல கிரடிட் பண்ணிடு. என்ன அநாவசியமா அந்நியள் ஆக்காதே வோடஃபோன். .  J J J   

192. பார்க்குப் போனா பூக்களை ரசிக்கிறது, பீச்சுக்குப் போனா அலையில நிக்கிறது, ரெஸ்டாரெண்ட் போனா பிடிச்சத ஆர்டர் பண்ணி சாப்பிடுறது.. இதெலாம் 5 வருஷத்துக்கு முன்னால.

இப்பல்லாம் எங்க போனாலும் வீட்ல இருக்கவங்க முறைச்சாலும் சலிச்சாலும், சலிக்காம ஃபோட்டோ எடுத்து போடுறது.. இதான்:) :) :)

193. ஓ மை கடவுளே.என் ப்லாகே அப்பிடியே அச்சு அசலா இன்னொரு இடத்துல.. எப்பிடி இப்பிடி.ப்லாகே காப்பியடிச்சுப் போட்டுக்கிறாங்களா..

RSSing na enna.. hmm

http://mickles10.rssing.com/chan-6393068/latest.php


194. பாசமுள்ளவர்களுக்குப் பொறாமை வருவதில்லை.:) 

195. எல்லாப் பறவைகளும் பறப்பதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது மரக்கிளையிலமர்ந்து ஒரு பறவை. தனக்குச் சிறகுகள் இருப்பதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் காற்றில் முதலடி வைத்தால் , அசைத்தால் பறக்கலாமென்பது தெரிந்திருந்தும் ஏதோ ஒரு உந்துவிசைக்காகக் காத்திருக்கிறது., நிலவும் இருளும் சூழ உதயமும் வெப்பமும் கரைய உறங்காத கண்களுக்குள் கோடிக் கனவுகளோடு. 

196. ஏன் கவுண்டமணி மாதிரி ரெண்டு நாளா தன்னைத் தானே மஞ்சள் சாட்டையால அடிச்சிக்குது ஃபயர்ஃபாக்ஸ். :)

197. தங்கள் எழுத்துகளில் கூட சுயம் வெளிப்பட்டுவிடாமல் எழுதுவது சிலருக்கே சாத்தியம்.

198. யாம் யார்க்கும் எதிரி அல்லோம்.

199. மனஸ்தாபங்கள் நேரும்போது இனி மீண்டும் ஒட்டவே முடியாது எனத் தெரிந்தும் முறித்துப் போட்டுவிடுகிறோம் நாம் வளர்த்த நட்புக் கிளைகளையே.

200. சில அலுமினியப் பறவைகள், சில இரும்புப் புரவிகள், சிலதுருப்பிடித்த ட்ராகன்கள் எப்போதும் காத்திருக்கின்றன . தேகமெங்கும் ஆரோகணித்திருக்கிறது பயணத்தின் வாசனையும் இரும்பின் ருசியும்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



7 கருத்துகள்:

  1. நியாயமான கேள்விகளுடன் பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    நான் FB பக்கமே அதிகமாகச் செல்வது இல்லை. எப்போதாவது ஒருசில முறை மட்டுமே அதுவும் ஒருசிலருக்கு மட்டுமே, LIKE or COMMENT கொடுப்பதோடு சரி.

    //185. யார்னே தெரியாம ஏன் ஃப்ரெண்ட்ஷிப் ரெக்வெஸ்ட் கொடுக்குறீங்க. அப்புறம் இன்பாக்ஸ்ல வந்து இன்ஃபர்மேஷன் கேக்குறீங்க. ..... ‪

    #‎கொலைவெறி_வருது‬. //

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். சபாஷ் ! :)

    அதே அதே !! கொலைவெறிதான் வரக்கூடும்‬.

    பதிலளிநீக்கு
  2. யம்மாடி...! எத்தனை தகவல்கள்...!

    உலகம் சுற்றும் வலையரசிக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா! எம்புட்டு இப்படி!!! அதுவும் ரொம்ப ரசனையாக.....பல விஷயங்கள்!!! அது சரி அந்த லிங்க் போய் பார்த்தோம் அடப் பாவிங்களா.....!!! அது சரி இங்கிலிஷ் காரங்க போல இருக்கு....அவங்களும் தமிழ் வாசிக்கறாங்களா.....என்னமோ போங்க ஆச்சரியாமாத்தான் இருக்கு...இப்படிக் காப்பி அடிப்பதைப் பார்த்தால்....

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் கோபால் சார். கருத்துக்கு நன்றி :)

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசிதரன் சகோ ஆமா.. !!

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. அனைத்தையும் ரசித்தேன்.

    Friend Request - தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.... அதனால் இப்போதெல்லாம் யாரென்று பார்ப்பது கூட இல்லை!

    பதிலளிநீக்கு
  7. ஆம் வெங்கட் சகோ. கருத்துக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...