எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 டிசம்பர், 2015

நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.

521. ரெய்ச்சூரின் அருகில் உள்ள கர்நாடக கிராமத்தில் நேற்று விவசாயிகள் பவர் கட்டை எதிர்த்து ஸ்ட்ரைக்.. நாம் போக வேண்டிய ஊருக்கு 40 கிலோமீட்டர் சுத்திப் போக வேண்டி வந்தது.

கிராமங்களை ஊடுருவிப் போகும்போது வருத்தமாக இருந்தது. பஞ்சு பயிரிடப்பட்ட நிலங்களைக் கடந்தோம். மோசமான குடிசையாகக் கூட இல்லை அவர்களின் வீடுகள். எங்கே வசிக்கிறார்கள்.. ஹ்ம்ம்ம்
முன்பு கும்பகோணத்தில் இருந்தபோது அங்கே டிசம்பரில் குறுவைப் பயிருக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் கஷ்டப்பட்டார்கள்.

மின்சாரமும் தண்ணீரும் வழங்கப்பட்டால்தான் விவசாயம் செய்ய முடியும். விவசாயி வாழ்க்கை செழிக்கும் என்று சொல்லி கார் ட்ரைவர் தெலுங்கில் & ஹிந்தியில் வருத்தப்பட்டார்.

இன்னும் இரு தினங்களில் இங்கே விவசாயிகள் தர்ணா செய்யப் போறாங்க. கிட்டத்தட்ட 3 மாதங்களில் 300 விவசாயிகள் தற்கொலை. தீபாவளி அன்னிக்கு 13 விவசாயிகள் தற்கொலை.. எங்கே போயிட்டு இருக்கோம் நாம்.

நதி நீரையும் மின்சாரம் வழங்குவதையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் வைக்கணும்.. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கான மின் சலுகைகள் வழங்கவும் மற்ற சலுகைகள் வழங்கவும் உடனடியா முடிவு எடுக்கப் படணும்..இதைத்தான் கோரிக்கையா சொல்ல முடியுது.

522. நோக்கு வர்மம் பொல்லாதது...

523. இருள் நதியில்
நீந்திக்கொண்டிருக்கிறது
நிலவு மீன்..

524. super super i love you fb.. please give that Smileys option in status too..  


525. தமிழர்கள் மட்டுமில்ல. குஜராத்திகளும் வேஷ்டி கட்டுறாங்க. எல்லாரும் வேஷ்டி ஃபோட்டோ போட்டுருக்காங்க.
‪#‎நாமளும்_போடுவோம்‬

526. o my kadavulee.. thideernu oru naal vanthu ippidi 50 likes 100 likes kodukkuraangka. pathattama irukey :) :)

527. ட்ரெயின்ல நல்ல சமோசாவும் கடுமையான டீயும் கிடைக்குது. ‪#‎NORTH_WESTERN_RAILWAY‬

528. காரணங்களால் அடுக்கப்பட்ட படகு
தத்தளிக்கிறது சுற்றிச் சுழன்று.
எந்தக் காரணமும்
இறங்கமாட்டேனென்று அடம்பிடிக்க
மேலும் சில காரணங்கள்
ஏறிக்கொள்ளக் காத்திருக்க
காற்று வீசும் திசையில்
கவிழத் துவங்குகிறது படகு.
படகும் ஓட்டையும் காரணங்களும்
பாரபட்சமில்லாமல் மூழ்குகின்றன.
தின்னப்பட்ட காரணங்கள் குமிழாய்க் கரைய
எங்கெங்கும் காற்றும் நீரும் மட்டுமே
நிரம்பியிருக்கின்றது.


529. இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் சாட்டர்டே போஸ்டுக்காக யாரிடம் எல்லாம் கேள்வி கேட்டு இருக்கேனோ அவங்க எல்லாம் -- பல மாதம் கழித்து -- இன்னிக்காச்சும் பதில் அனுப்புங்க. ஹையோ ஒவ்வொருத்தரையும் எழுத வைக்கிறது என்ன பாடா இருக்கு.. அம்மே..  


530. மழைக்குள் குடை
குடைக்குள் காதல்..

531. நான் இதுவரை யாருக்கும் பை சொன்னதேயில்லை.ஆனா இப்ப சொல்றேன்.பை பை குட்பை. ப்ளீஸ் மழையே அடுத்த வருஷம் வா.

532. #‎ப்ரியம்‬ என்பது தினம் தினம் கவிதையோ கட்டுரையோ கோலமோ போட்டு உங்களை எல்லாம் படுத்தி எடுப்பதுதான்.. ஹாஹாஹா .

533. வலசை.. வலசை சென்றவர்களின் துயரம். வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டவர்களின் வலி.. படைப்புக்களின் வழி மொழியாகியுள்ளது.

#வலசை


534. Lalitha Murali லல்லியோட அம்மாலேருந்து எல்லா அம்மாவையும் பார்த்தாச்சு. இன்னும் மிச்சமிருக்காங்க. லாகவுட் செய்யவே முடியல. அன்பினால் நிரம்பியது உலகம். வாழ்க அன்னையர் தினம். 

535. real friends ai vida friends aa ilathavangka & back/fake idsthanpa athiga alavula like kodukkuraangka.. hats off them..

536. WHAT'S ON YOUR MIND?

வேறென்ன புதுசா சொல்லிடப் போறேன். தினம் காலை பத்துமணியான ப்லாக் போஸ்டை ஃபேஸ்புக்குல போடணும். இல்லாட்டா நேரம் ஓடிருச்சேன்னு பதற்றமா இருக்கு.. 

537. தமிழில் தொழில் நுட்பத் தகவல் பக்கத்துல எத்தனை பேரு என் பேரை டாக் பண்றதா இருக்கீங்க.. தினம் தினம் ஏன் இப்பிடி.. Y .. Y... Y.. அழுதுடுவேன்.. ஆமாம்.. 

538. urgent visit to fb. laptop 26ncham karab. ... koncham 2ara0.. Karab.. s6 shift key repair.. so next week santhikkiren makkas.. 

539. நேற்றுப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை

540. அக்கா உங்க வீட்டுக்காரர் நேத்து போன்ல சிரிச்சுப் பேசிட்டே நவக்கிரகத்தை சுத்திட்டு இருந்தாரு

எந்தக் கிரகத்தை வேணாலும் சுத்தட்டும் சந்தோசமா இருந்தா சரித்தான்.

“,,ஙே..”

 டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

4 கருத்துகள்:

  1. //540. அக்கா உங்க வீட்டுக்காரர் நேத்து போன்ல சிரிச்சுப் பேசிட்டே நவக்கிரகத்தை சுத்திட்டு இருந்தாரு

    எந்தக் கிரகத்தை வேணாலும் சுத்தட்டும் சந்தோசமா இருந்தா சரித்தான்.

    “,,ஙே..” //


    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)

    என்ன ஒரு சலிப்பு இந்த பொஞ்சாதிகளுக்கு !!

    பதிலளிநீக்கு
  2. எம்பதியும் சிம்பதியும் பதிவில் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா கோபால் சார் :)

    நன்றி பாலா சார்.. :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...