எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 செப்டம்பர், 2015

பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.

341.பணத்தை அடித்து உழைப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். ஆனால் முகஸ்துதியை வீசி எதையுமே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடும் வித்தைக்காரர்களும் இருக்கிறார்கள்.

‪#‎உழைத்துக்_களைத்தவர்கள்_ஐ_மீன்_நம்மைப்போலே_ஏமாளி_எவனுமில்லே‬

342. சரக்கில்லாத முகநூல் சரக்கே கிடையாது போலிருக்கே. ஓ மை காட். ஒரே சரக்குதான்..


343.தானே சோகத்தோடு அமர்ந்து தோசை ஊத்தித் தின்னும் ஆத்தாவைப் பார்த்த ஒரு மகன் தாய்க்காக ஒரு க்ளோன் ஆத்தாவைக் கண்டுபிடிக்கிறார்.


சந்தோஷமாக ஆத்தாவிடம் ஓடி வந்து ”ஆத்தா ஆத்தா இனி நீங்க கடைசியா தனியா உக்கார்ந்து தோசை ஊத்தித் திங்க வேண்டாம். உங்களுக்கும் சுடச் சுட முருகல் தோசை ஊத்திக் கொடுக்க ஒரு க்ளோன் ஆத்தாவை உருவாக்கிட்டேன்.”




ஏம்பா ஏன் ( சிவாஜி எஃபக்டில் படிக்கவும் ) க்ளோனை உருவாக்க செலவழிச்ச இத்தனை வருஷத்துல நீ ஒரு குண்டான் இல்ல பல குவிண்டால் தோசையே ஊத்திக் கொடுத்திருக்கலாமே இந்த ஆத்தாவுக்கு.


-- 00.30 V/

-- சோக ஆத்தா க்ரூப்.


‪#‎ஆத்தா_நானும்_வாட்ஸப்_ரைட்டராயிட்டேன்‬.

ஆத்தா :- @*#&!*&^^%$#@ dundanadun..


ஒண்ணுமில்லங்க எங்க ஆத்தா கோவமாயிட்டாங்க


( ட்ரான்ஸ்லேஷன். - ப்லாகர் ஃபேஸ்புக்ல எல்லாம் எழுதி எங்களைப் படுத்தினதுபத்தாதா .வாட்ஸப்புல வேறயான்னு கோபமா ஃபோனைத் தூக்கி அடிச்சிட்டாங்க. :)

344. செம்புப் பாத்திரத்துல தண்ணீர் வைச்சுக் குடிச்சா நல்லதாமே.. :)

----அம்மா அப்பா சீரா கொடுத்த ஒவ்வொரு பொருளும் சிறப்பானது. கல்யாணத்துக்கு வச்ச பொருள் ஒவ்வொண்ணா உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். பெட்டர் லேட் தென் நெவர்.

345. அக்னிச் சிறகுகள் கொடுத்தவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

346. ஒரு மாலையைப் பொன் மாலைப் பொழுதாக்குவதில் ஃபில்டர் காஃபியைத் தவிர சிறந்ததான ஒன்னு இருக்கா என்ன. ? :) 


347. சிக்னல்ல வண்டி நிறுத்திட்டு ஆட்டோக்காரங்க & டாக்ஸி ட்ரைவர்கள் எல்லாம் எச்சி துப்பிக்கிட்டே இருப்பது ஏன்.

பான் உடல் நலத்துக்கு நல்லதோ..
‪#‎ஹைதை_அட்ராசிட்டீஸ்‬. :)

348. புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015. இதை என் ப்லாகில் honeylaksh. blogspot. in il பாருங்கள். ஏனென்று தெரியவில்லை. முகநூலில் என் ப்லாக் போஸ்ட் போட முடியவில்லை இன்று.
‪#‎எனக்குக்கூட_எதிரிகளா_ஏன்_மக்கா_ஏன்‬?

349. நேற்று போட்ட பதிவின் விளைவு போல . இன்னிக்கு ப்லாக் போஸ்ட் போட்டா என் ப்லாக் அன்சேஃப்னு சொல்லுது எஃபி . அது எப்பிடி 2009 லேருந்து போஸ்ட் பண்றேன். இன்னிக்கு மட்டும் அன்சேஃபா ஆகும். வளர்ச்சி பொறுக்காதவங்க செயல்போல தெரியுது.
‪#‎நல்லா_இருங்க‬

350. புதுகையில் வலைப்பதிவர் திருவிழா - 2015.
http://honeylaksh. blogspot.in/2015/08/2015. html
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!.
Your message couldn't be sent because it includes content that other people on Facebook have reported as abusive.
Close

-- எம் ப்லாக் மேலே என்ன தப்புன்னு வந்து என் ப்லாகுக்கு விசிட் பண்ணி பாத்துட்டு தடுன்னு கடுதாசி மேல கடுதாசி போட்டு முகநூல்ல திரும்ப போஸ்ட் போட ஆரம்பிச்சிட்டமாக்கும்.

351. நல்லா சொல்லி இருக்கீங்க குமரன்.

செய்த நன்மை தீமைக்கான விளைவுகளை,
ஆயுளுக்குள் சந்தித்தே தீருவோம்.///

352. வீட்டுக் கதவைப் பூட்டிட்டு பக்கத்துலேயே உக்கார்ந்து அப்போ அப்போ திறந்து பார்த்துட்டு இருக்கமாதிரி இருக்கு.
.
.
.ட்ரயின் ப்ரயாணத்துல செல்ஃபோன்ல லாக் செட் பண்ணிட்டு அஞ்சு நிமிஷத்து ஒரு தரம் நம்பர் போட்டு ஒரு பையன் லாக்கை ஓபன் பண்ணிட்டு இருந்தத பார்த்தபோது தோணியது.

353. ஆடி பதினெட்டுக்கு ஸ்பெஷல் என்னன்னா Sajju Ramu மேடம் கூடப் பேசினதுதான். அடிஷனல் போனஸ் ப்ரகாஷ் Prakash Ramaswami சகோவுடனும் பேசியது.

ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் அவர்கள் உருவத்துக்கு ஏற்ற குரல் நம்முள் ஒலிக்கும். அச்சு அசலா நான் உருவகித்த அதே குரல் இம்மி பிசகாமல் தொலைபேசியில் ஒலித்தது.

{{பெண்பூக்கள் நூலை தாமோதர் சந்துரு அண்ணன் ( Damodar Chandru ) , இளங்கோ சார் ( Kt Ilango & Padma Ilango )மேம் , & சஜு மேம் & ராமசாமி சார் ( Sajju mam & Venkataramana Ramaswami ) ஆகியோர் வெளியிடணும்னு எண்ணம். ஆனா இளங்கோ சார் & பத்மா மேம் சென்னையில். சஜூ மேம் & வெங்கட்ரமணா சார் அந்த சமயம் ப்ரகாஷ் சகோவுடன் திருச்செந்தூரில் . )

கணவர் புத்தகத் திருவிழா சமயம் ஈரோட்டில் இருந்ததால் புத்தகம் கொடுத்தனுப்பி விட்டேன்.:)

அது அண்ணன் அவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுவிட்டது. மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். }}

என் விருப்பத்தைத் தொலைபேசியில் முதல் அறிமுகத்திலேயே சொன்னபோதுதான் அவர்கள் திருச்செந்தூரில் இருப்பது தெரிந்தது. கோவை செல்லும்போது அந்த ஆதர்ச தம்பதிகளைச் சந்திக்க வேண்டும். வெங்கட்ரமணா சார்கூடப் பேசலைன்னு கொஞ்சம் வருத்தம்தான். ஃபோனை வைச்சபின்னாடிதான் தோணுச்சு. ஹ்ம்ம் திரும்ப ஃபோன் செய்தால் அவசர திருத்தல யாத்திரையில் இருக்கும் அவர்களை டிஸ்டர்ப் செய்தது போலாகிவிடும் என்று இருந்துவிட்டேன்.

ஆனா சஜுமேடமிடம் பேசியது புத்துணர்ச்சியா இருந்தது. அவங்களும் பத்ரிக்கைகளுக்காக எழுதி இருக்காங்க. அவங்களோட பல படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் மிகப் பரந்த மனப்பான்மையோடு பத்ரிக்கைகளில் வெளிவந்த என் படைப்புகள் பற்றிப் பாராட்டியதோடு மட்டுமல்ல என் கோலங்களையும் ரசித்து எடுத்து வைத்துக் கொள்வதாகக் கூறினார்.

பிள்ளைகள் ஆன்லைனில் எழுதக் கற்றுக் கொடுப்பதாக சொன்னார். ஒரு ப்லாக் ஆரம்பித்து அனைத்தையும் பகிரச் சொன்னேன். ( ஆல்வேஸ் திங்க் லைக் எ ப்லாகர் :)

. பரவசமாக இருவரும் பத்து நிமிடங்கள் பேசிக் கொண்டே இருந்தோம்.

தோழமைக்கு வயதுண்டா என்ன.

கடைசியாக ஃபோனை வாங்கிய ப்ரகாஷ் கேட்டார்.

“ அம்மா முடிச்சிட்டாங்களா .. இன்னும் இருக்கா.:)



பொறாமை ப்ரகாஷ் உங்களுக்கு ஹாஹாஹா.

-- அருமையான அம்மாவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி ப்ரகாஷ்.

பி. கு :- சென்னை செல்லும்போது இளங்கோ சார் & பத்மா மேம் கையாலும் கோவை செல்லும்போது சஜு மேம் & வெங்கட்ரமணா சார் கையாலும் என்னுடைய நான்காவது கவிதைத் தொகுதியைத் திரும்ப வெளியிட்டு அவர்கள் அன்பையும் ஆசியையும் பெற எண்ணியுள்ளேன்.

354.ஒவ்வொரு நட்பும் துளிர்க்கும்போதே இலையுதிர் காலத்துக்குத் தயாராகி விடுகிறது.

355. அவர்கள் காத்திருக்கிறார்கள்.

.
.
அடுத்த அடி சறுக்க.

356. கறை நல்லது.

.

. அக்கறை நல்லது :)

357. மந்தைத்தனம் என்பதுதான் சமூகத்தோட நார்ம். அதை விட்டு மேலேறி வெளியேற விரும்புறவங்க ஒவ்வொருத்தரையும் அது கொடூரமாப் பழி வாங்கும்.
-- விகடனில் நடிகன் என்ற சிறுகதையில் போகன் சங்கர். மிக அதிர்வேற்படுத்திய கதை. ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்கொள்ளும் தார்மீக காரணங்கள். அதை எதிர்த்து தன்னை நிலைநிறுத்தப் போடும் எதிர்நீச்சல், முடிவில் மந்தைத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம். சில மணி நேரங்களாகிவிட்டாலும் இன்னும் அதன் தாக்கத்தில் இருக்கிறேன்.
அருமையான கதையைக் கொடுத்த விகடனுக்கும் போகன் சங்கருக்கும் ஹேட்ஸ் ஆஃப்.

358. குத்துவிளக்கொன்று
கைவிளக்கொன்று
நிலவொளித் துண்டு சுற்றி
பின் தொடரும் முன் வீழும்
பிரிந்திணையும் நிழல்களோடு
உலவிக் கொண்டிருக்கின்றாளவள்.
தனியளென்று யார் சொன்னது.. ?


359. அந்த தியேட்டர்ல ஒரே கிலியா  இருக்கே என்ன படம்.

-- பாகுபலியா, பாயும் புலியா.

-- அதெல்லாமில்ல. வெறும்புலிதான். படமில்ல ஸூலேர்ந்து ஒரு புலி தப்பிச்சி தியேட்டர் பக்கம் வந்திருக்காம். !

360.  டென்ஷன் டென்ஷன்கிறாங்களே. பிபி எகிறுது.

வெளிய கிளம்பினா டென்ஷன்
உடம்பு முடிலன்னா டென்ஷன்,
ட்ராவல் பண்ணா டென்ஷன்,
பைக்ல வேகமா போனா டென்ஷன்,
தனியாவே இருந்தா டென்ஷன்
ஃப்ரெண்ட்ஸோட ஆட்டம் போட்டாலும் டென்ஷன்.

சொல்லக் கேக்காத புள்ளங்க பொண்ணா இருந்தா என்ன பையனா இருந்தா என்ன டென்ஷந்தான்பா. :) 

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



3 கருத்துகள்:

  1. எல்லாமே ரசித்தோம்...அது சரி...நட்பு துளிர்க்கும் போதே இலையுதிர் காலத்திற்குத் தயாராகிவிடுகிறது என்று சொல்லியிருக்கீங்களே...ம்ம்ம்ம் வாக்கு நல்லாத்தான் இருக்கு ..ஆனா என்னவோ மனசு கஷ்டமாயிடுச்சு...

    டென்ஷன் ...ம்ம்ம் அதுதான் இப்போ பரபரப்பு...

    பதிலளிநீக்கு
  2. ஆம் ஸ்ரீராம்

    ஹ்ம்ம்ம் :( துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...