எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 நவம்பர், 2015

நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.

401.நாம எழுதின கதையைப் படிச்சிட்டு விளக்கம் கேக்குறவங்கள எல்லாம் என்ன செய்யலாம்.

‪#‎கோனார்_நோட்ஸ்_காலத்தவர்கள்‬.

402.ப்லாக் ஒரு காலத்துல ப்ளேபால் க்ரவுண்ட் மாதிரி இருந்துருக்கு.
ஒரே நேரத்துல ஆடுறவங்களையும் பார்க்குறவங்களையும் ரத்தக் கொதிப்பேத்துறமாதிரி.

‪#‎ப்ரபலமானவர்களின்_பழைய_போஸ்ட்ஸ்_அட்ராசிட்டீஸ்‬.

403. கள்ளப் புன்னகைன்னு ஒருத்தரைச் சொல்லும்போதே சொல்றவங்களுக்கு அவர் மேல ஒரு கள்ள ரசிகத்தனமும் கள்ள அபிமானமும் இருக்கது தெரியுது.

404. அடர் கானகம்
ஈரநிலத்தில்
தேன்கூடுடைய
சிதறிச் சரிகிறது
நதியைப் போல நிலவு



மதங்க நீர் வழிய
களிறின் பிடியில்
குவளை இதழ்களில்
சிக்கித் தவிக்கிறது
ஒரு நெபந்தஸ் முத்தம்.

405. சமையல் குறிப்பு வாரம் ரெண்டாவது போடலாம்னா எடுத்தது எல்லாம் மொக்கை ஃபோட்டோவா ( சாம்பார், ரசம், பொரியல் கூட்டு ) இருக்கு. அல்லது அசைவம். தீபாவளி சமயம் என்ன செய்தீங்கன்னு எல்லாரும் கேப்பாங்களே.. ஏதாவது கடைப் பலகாரத்தை சுடலாமா..

406. கண் வலிக்குது. சிஸ்டத்தையே மொறைச்சு பார்க்குறதுதான் போல இருக்கு.. இது யாருக்கெல்லாம் இருக்கு.. ( நாம் பெற்ற துன்பம் எத்தனை பேருக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்கதான்..

407. பாகுபலி பாகுபலி பாகுபலி..
,
,
,‪#‎டிவில_கத்துறாங்கப்பா_நானில்லை  :P

இது பிரம்மாண்டம் எனச் சொல்ல வரல. இப்போதான் பார்க்கிறேன்.  லாஸ்ட் எம்பரர், ஹெலன் ஆஃப் ட்ராய், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் , க்ளாடியேட்டர் போன்ற படங்களோடு பார்க்கும்போது கொஞ்சம் ஏமாற்றமாத்தான் இருக்கு. ஆனா இது ப்யூர் தெலுகு மசாலா. அப்படித்தான் இருக்கும். 


408.தொடுவானம் கானல்நீர்
இருந்தில்லாதிருக்கும்
இரண்டுங்கெட்ட
இளவயதுக் கவர்ச்சி

தனக்காயல்லாமல்
தட்ப அறிவுப்புக்காய்
தன்னை நிரப்பித்
தோகை விரிக்கும் மயில்.

409. ஒண்ணு சொல்ல நினைக்கிறேன்.
>
ஆனா அதுல..

>
>
ஒண்ணு ..மில்ல. :)
எல்லாரும் மொத்துறதுக்குள்ள.. விடு ஜூட். 

410. வேதாளம்டா .
,

அப்பிடின்னு இன்னும் யாரும் கத்தக் காணோமே.
இல்ல கண்ணுல தட்டுப்படலையா..:)

411. கவிதாயினிகள் கோலமிட்டு சமைக்கும் போது ( அதாவது குறிப்புகள் எழுதும்போது ) உலக மகா கலைஞன் விளம்பரத்துல நடிக்கிறது தப்பில்ல. :)  இருந்தாலும் போத்தீஸ் வீட்டு வாசல் காம்பவுண்ட்ல போஸ்டர் மாதிரி இப்பிடி ஒட்டி இருக்கது கொஞ்சம் கூடப் பிடிக்கலை.. ஹ்ம்ம். கோடிக்கெல்லாம் விலை போகுமா கோபுரம்..

‪#‎சமாதானம்_சமரசம்‬.

412. தூங்காவனம் பார்க்கல. ஆனாலும் அது ஒரு அழகிய இன்ஸ்பிரேஷன்.

#சுய இரக்கம், சோர்வு , மனத்தடை , மன அழுத்தம், விரக்தி இல்லாமல் தொடர்ந்து செயல்படுவது எப்படி என்பதைக் கற்பிக்கும் தலைவனுக்கு மனமார்ந்த வந்தனங்கள்.

413. நரகாசுரன் செத்ததுக்கு மூணு நாள் துக்கம் போலருக்கு

‪#‎கடைகள்_அடைப்பு‬. !!!

414.  மருளடைந்து இருள்மரத்துள்
ஒடுங்கிக்கிடக்கிறது ஒரு பறவை.
தண்ணிலவில் சுருள்கிறது காற்று.
நனைந்து கிடக்கின்றன மலர்கள்.
மருப்பொசிக்கும் மாதவனும்
மையலுற்றே முயங்குகிறான்.
விருப்புற்றுக் கேட்பதற்கு
வெண்சங்கும் பக்கமில்லை.
நிம்பர்கரின் பேதா அபேதம்
குழல் ஒலிக்கக் காத்திருக்கும்
புள்ளினம் மட்டும் கீசு கீசென்று
தனக்கு மட்டுமாய்த் தன்னகத்துள். 

----- நான் சொல்ல வந்தது துவைதாத்வைதம். அந்த சூட்சுமப் பொருளுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பு.. குழலொலிக்குக் காத்திருக்கும் ராதை, கோபர்,கோபியர், கோமாதா. எல்லாம் அவனே.

415. எப்பிடித்தான் சிலர் வருஷக்கணக்கா ப்ரொஃபைல் பிக்சரை மாத்தாம இருக்காங்களோ.. ஹாஹா Damodar Chandru அண்ணா ஜி.. காலை தொட்டுக் கும்புட்டுக்குறேன்

416. அபிமன்யுவாய்ப் பிறந்திருக்கக் கூடாது. எதையும் சரிவரக் கேட்டுக் கொள்ளாமல் எதனோடு போரிடுகிறோம் என்பது தெரியாமல் தன்னைச் சுற்றிச் சக்கரவியூகம் அமைத்துப் போராடும் தன்னைக் கொய்யும் அபிமன்யுவாய்ப் பிறந்திருக்கக் கூடாதுதான்..

உலகம் தொலையுமட்டும் தொலைந்தலையும் அஸ்வத்தாமன்களை உருவாக்கும் அபிமன்யுவாக..

417. எதற்காக எதை விட்டுக் கொடுப்பது என்பதில் கவனம் வேண்டும்.. .

#நோ_லேட்_திங்கிங்.

418. உலகம் புதிதாகத்தான் இருக்கிறது மனசுதான் பழசாக இருக்கிறது.

419. வயமிழந்த வார்த்தைகள் வசப்பட்டவர்களையும் இழக்க வைக்கும்.

420. ஞாபகமறதி -- அல்ஸைமர் -- மிக அதிக காலம் நோய் நொடியின்றி வாழ்பவர்களை சமீபகாலமாகச் சிதைக்கும் நோய்.

#நமக்கு_எப்போதோ.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.




3 கருத்துகள்:

  1. எல்லாமே அழகு....ரசித்தோம்..

    நரகாசுரன் செத்தப்ப...3 நாள் கடை அடைப்பு...ஹஹஹ் சென்னையே தண்ணில இல்ல வெனிஸ் மாதிரி போட்ல இருந்துச்சே....

    அல்சிமர்...அதை நினைத்தால் பயமாகத்தான் இருக்கு...கெட்டது மட்டும் மறந்தா
    பரவால்ல...நல்லதும் இல்லையா மறந்து போகின்றது..

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...