எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 டிசம்பர், 2015

ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

 581.தானாடாவிட்டாலும் தசையாடுகிறது., நட்புலகத்திலும்.

582.என்னோடு இருப்பவர்கள் என்னானார்களோ தெரில. நான் மட்டும் சேஃபா இருக்கிறேன்னு முகநூலில் குறிப்பது அபத்தமானதுன்னு ஸ்டேடஸ் போட்டிருந்தார் ஒரு நண்பர்.

///உங்களைத் தேடும் மற்றவர்களுக்காகத்தான். நிம்மதியின்மை சூழ இருப்பவர்கள் தன்னோடு தொடர்புடையவற்றைத்தானே தேடுவார்கள் ஒரு பற்றுக் கோடாக அப்பாடா நிம்மதி என்று. தனக்குத் தெரியாதவர்களும் நலமுடன் இருக்கவேண்டும் என்பது பிரபஞ்சக் காதல். அது சித்தித்தாலும் முதல் தேடல் தன்வீடு தன் மக்கள் தன் மனைவி தன் “நட்பு” இதுதானே.///

583.கதறிக் கதறிக் கொட்டுன மழைக்கு வணக்கம்
பதறிப் பதறிக் கேட்ட மார்க்குத் தம்பிக்கு வணக்கம்
சிதறிச் சிதறிக் கிடந்த சென்னையச் சேர்த்த வெள்ளத்துக்கு வணக்கம்
கதறாமப் பதறாமச் சிதறாம ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களுக்கும் வணக்கம்.

#நெம்பப்_பிடிச்சவங்கள்ளாம்கூடப்_பிடிக்காமப்_போயிடும்போல
_ஆக்கின_இயற்கைக்கும்_வணக்கம்.

584.அழகில் அன்பிருக்கலாம். ஆனால் அன்பில் அழகு பொங்கி வழிகிறது.


585. சென்னை கடலூர் மக்காஸ் நலமா..

586. பெய்த பெருமழையில் எழுதிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச பதிவர்களையும் காணோம் . ஹ்ம்ம்

587. எழுத்தில் ஒருவிதமாகவும் பேச்சில் ஒருவிதமாகவும் நிஜத்தில் ஒரு விதமாகவும் வெளிப்படுகிறோம். நாம்  முப்பரிமாண வடிவங்கள் என்பது உண்மைதான். ! :)

#3D.


588.சிலருக்குப் பொடரியில கூட கண் இருக்குது. ! ஒரு வேளை ஞானக் கண் தெச திரும்பிடுச்சோ. :P

589.பொய் சொல்லுங்கப்பா வேணாங்கல. பட் அத பொருந்தச் சொல்லுங்கப்பா வெளையாட்டில்ல. :p

590.meditation,method & divine support of master to attain the ultimate spiritual goal.

#Sahaj_Marg

591.வெளிப்புற மாற்றம் -> உள்முக வளர்ச்சி -> முடிவற்ற கடவுட்தன்மை எய்துதல்.

#சித்திக்குமா.

592.எதை அழித்தபின்னும் ஏதோ எஞ்சுகிறது.

593.துக்கம் வந்தால் தூக்கம் தொலைந்துவிடுகிறது.

594.தித்திக்கின்றன
தவழ்கின்றன
தழுவுகின்றன
திகட்டுகின்றன.
தாப்பூ தாமரைப்பூவென
தாய்ப்பு காட்டி மறைகின்றன
மதுவரக்க வார்த்தைகள்.

595. ஒதடா அது மொரடா. :)

596.சும்மாவை சும்மா போடுறதுக்காக எத்தனை இடத்துக்கு சும்மா சும்மா போக வேண்டி இருக்கு..:)

தமிழ் மணம், கூகுள் ப்ளஸ், ட்விட்டர், இண்டி ப்லாகர்.. இதில எல்லாம் புதுசா சேர்ந்திருக்கு.

597. மனிதர்களைத் தொலைத்துவிடும் வன்மம் மிகுந்தவை வார்த்தைகள்

598. ப்லாக் ஃபாலோயர்ஸ் 750 லேருந்து 737 ஆகிட்டாங்க.

‪#‎நல்லா_இரு_தம்பி_பிரபு_எம்‬.

599. ஆமா இது என்னது.. ? டெய்லி வருது.. :)

///Daily revenue statement for Dec. 17
On Dec. 17 you earned $4.77
All-time revenues: $2,273.54///


 600. நன்றி திருத்தம்பி :) !


///Thiru Thambi

December 19, 2013 at 7:31pm ·

சிறந்த பதிவர் 2013 (4)

*கவிதைகள்*

(பெண்கள்)


Thenammai Lakshmanan

Tamilnathy Rajarajan

Sakthi Jothi

Bhuvana Ganeshan

தமிழ் அரசி

குழந்தைநிலா ஹேமா

Sasikala Babu

இந்திரா கிறுக்கல்கள்

ரேவா பக்கங்கள்

Power Ful Brain


இவர்களில் சிலர் ஏற்கெனவே பிரபலமான கவிஞர்கள்.சிலர் கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளனர்.இதுவரை வெளியிடாதவர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.ஏனெனில் இவர்களுடைய மொழிநடை அத்தகையது,அபாரமானது.திறம்படைத்த தரமான கவிஞர்கள்.இவர்களது படைப்புகளைப் பற்றி விமர்சனம் செய்வதே கடினம்,அதற்கான தகுதியும் எமக்கில்லை.இவர்களது நட்பில் இருப்பதே பெருமைக்குரிய ஒன்றாக கருதுகிறேன்.

இவர்களைத் தவிர இயல்பான நடையில் இனிமையாக கவிதை வடிக்கும் ஏராளமான கவிதாயினிகள் எம் நட்பு வட்டத்தில் உள்ளனர்.அவர்களுக்கும்,மேற்சொன்னவர்களுக்கும் என் நன்றிகளும்,வாழ்த்துகளும்...///


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

3 கருத்துகள்:

  1. // 581.தானாடாவிட்டாலும் தசையாடுகிறது., நட்புலகத்திலும்.//

    ஆமாம், பதிவுலகத்திலும்கூட !

    //593.துக்கம் வந்தால் தூக்கம் தொலைந்துவிடுகிறது.//

    கரெக்டூஊஊஊ

    //596.சும்மாவை சும்மா போடுறதுக்காக எத்தனை இடத்துக்கு சும்மா சும்மா போக வேண்டி இருக்கு..:)//

    சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே நறுக்குன்னு சொல்லிட்டீங்கோ :)

    பதிலளிநீக்கு
  2. 581.தானாடாவிட்டாலும் தசையாடுகிறது., நட்புலகத்திலும்.

    ரசித்தோம் இங்கும் தான் சகோ...

    588.சிலருக்குப் பொடரியில கூட கண் இருக்குது. ! ஒரு வேளை ஞானக் கண் தெச திரும்பிடுச்சோ. //
    ஹஹஹஹ்

    589.பொய் சொல்லுங்கப்பா வேணாங்கல. பட் அத பொருந்தச் சொல்லுங்கப்பா வெளையாட்டில்ல.//
    அதானே....
    593.துக்கம் வந்தால் தூக்கம் தொலைந்துவிடுகிறது//

    சில சமயம் அப்படித்தான்...

    596.சும்மாவை சும்மா போடுறதுக்காக எத்தனை இடத்துக்கு சும்மா சும்மா போக வேண்டி இருக்கு.//

    அட!!! சுவாரஸ்யம்...ரசித்தோம்

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...