எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஜூன், 2015

மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

இன்னிக்கு தெலுங்கானாவுக்கு பர்த்டே. ஜெய் தெலுங்கானான்னு இங்கே சொல்லிட்டா எந்த ப்ராப்ளமும் இல்லை.. :) :) :) 

301. இன்னிக்குக் காலையிலதாங்க உங்களுக்கு ஃபோன் பண்ணனும்னு நினைச்சேன்.
.
ஒரு மூணு நாலு பேர் ரெண்டு நாளா நான் ஃபோன் பண்ணும்போது இப்பிடியே டயலாக் விடுறாங்க.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... நான் சாயங்காலம் ஃபோன் பண்றவரைக்கும் என்னதான் பண்ணாங்களோ.

302. சிலருக்கு அம்மாகிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு. உங்களுக்கு வந்திச்சா..எனக்கும்தான் வந்திச்சு..
!
!எங்க அம்மாகிட்டயிருந்துங்க.


303. ப்லாகையும் ஃபேஸ்புக்கையும் பார்க்கும்போது காயின்ஸ் கலெக்‌ஷன் &
ஸ்டாம்ப் ஆல்பம் பார்க்கிற மாதிரி இருக்கு.

#ஹாபி_மாறிடுச்சு_பழக்கம்_மாறல. :)

304. வெறும் 36000 நாட்கள் கூடத் தாண்டமுடியாத இந்த வாழ்வில் யாருடனும் கோபித்துக்கொள்ள ஏதுமில்லை.

305. எது எதுக்கோ கடைசித் தலைமுறை நாமதான்னு நேத்து ஒரு மெயில் வந்தது. முக்கியமா சிறுகதைத் தொகுதிக்கோ, கவிதைத் தொகுதிக்கோ விருது வாங்கின கடைசித் தலைமுறையும் நாமளாதான் இருக்கும் :)

306. என் ஃப்ரெண்ட்ஸுல 47 பேர் இடுகையை ப்ரமோட் பண்ண பணம் கட்டி இருக்காங்களாம். -------தினம் என் ஃபேஸ்புக் பேஜுல வந்து இந்த செய்தியை செல்லுதே எஃபி.

ஒரு போஸ்டுக்கு மூவாயிரத்து எண்ணுத்திச் சொச்சமாம். ஆமாம் இம்புட்டு குடுத்து ஏன் ப்ரமோட் பண்றாங்க. ஒரு அஞ்சு போஸ்டுக்கு ப்ரமோட் பண்ற காசை வைச்சு ஒரு புக்கே போட்டு இலவசமா கொடுக்கலாமே.

ப்லாக்ல போட கூகுள் ஏதும் கேக்குறதில்ல. ஆனா நாம் போடுற எல்லாத்தையும் சார்ட் அவுட் செய்து இமேஜஸ் & கீ வேர்ட்ஸ்ல சேர்த்துடுது. என்னதான் லாபம் அதுக்கு ?

307. சொல்லத்தான் நினைக்கிறேன்.. யார் காதுலயாவது விழுமா தெரில..

குடிச்சுட்டு வண்டியை ஓட்டாதீங்க ஓட்டுநர்களே.. நீங்களே மது விக்காதீங்க அரசாங்கமேன்னு. கேடு கேடுன்னு விளம்பரப் படுத்திட்டு வருமானத்தை மட்டுமே பார்க்காதீங்க பெண்களின் குழந்தைகளின் பயணிகளின் நிலைமையைப் பாருங்க..

இங்கே ஹைதையில் எல்லாம் ஐந்து கிலோமீட்டருக்கு ஒரு ஒயின் ஷாப் பார்த்தால் அதிசயம். இதுவரை நான் ஒரு மதுக்கடையைக் கூட இங்கே கண்டதில்லை இது ஹை டெக் சிட்டியாக இருந்தும் சாஃப்ட்வேர் மக்களால் நிரம்பி இருந்தும்.

‪#‎கேபிஎன்_பஸ்ல_இனி_ட்ராவல்பண்ணலாமா‬.

308. ஃபேஸ்புக்குல நாம ஷேர் பண்றோம். ஆக்சுவலா
>
ஃபேஸ்புக்கோட ஷேர்ஸ் நாமெல்லாம். ( SHARE Equities )

309. வர வர எந்த இடத்துக்குப் போய்வந்தாலும் , எதை சாப்பிட்டாலும் பத்ரிக்கை ஆர்ட்டிகிளாவும், ப்லாக் & ஃபேஸ்புக் போஸ்டாவுமே தோணுதே. ஓ மை காட் smile emoticon
 
‪#‎கொஞ்சம்_சீரியஸா_போயிக்கிட்டு_‬ இருக்கோ

310.டெண்டையும் ட்ரெண்டையும் மாத்திக்கிட்டே இருக்கவங்கதான் எங்கயும் ஜீவிக்கலாம்

‪#‎டார்வினிஸப்_பரிமாணம்‬.

311.  நடிகைகள் படம் இல்லாவிட்டால் பாதி பத்ரிக்கைகளே வெளிவராது என்று தோன்றுகிறது.

312. கழுத்திலே கருகமணி
காதோரம் சம்பங்கி,
இடுப்பிலோ கண்டாங்கி,
இதயத்திலே காண்டாமணி
சருகுச் சீலை சரசரக்க
சேவக்கொண்டை அசைந்தாட
கருதறுக்கப் போறவளே
கால்வீசும் வேகத்துல இளந்
தோள் என்னை அழைக்குதடி
துணையாகக் கூட்டிப்போ

312.  మళ్ళీ తెలంగాణం
Maḷḷī telaṅgāṇaṁ :) :) :) 


பேக் டு பெவிலியன் மாதிரி ஒரு பயணத்துக்குப் பின்னே மீண்டும் ஹைதை திரும்பிட்டேன். 

313. அட நாம வந்திருக்கோம்னு படம் காமிச்சாதான் (ஐ மீன் ப்ரொஃபைல் பிச்சர் மாத்தினாதான்) மக்காஸுக்குத் தெரியுது..

314. என்றும் அம்மா எதிலும் அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள்பா.. லேட்டா சொன்னாலும் பத்ரமா வந்து சொல்லி இருக்கேனாக்கும்


315. அடிமைப்படுத்தும் விஷயங்கள் ஒரு கட்டத்தில் அடியோடு பிடிக்காமல் போவதில் ஆச்சர்யமில்லை. :)

316. --உங்க ஸ்லிம்னெஸ்க்குக்குக் காரணம்..

--தினம் பக்கத்துப் பார்க்குல காலைல 2 ரவுண்ட் வாக்கிங் & ஈவினிங்க்ல 2 ரவுண்ட் தண்ணியடிக்கிறதுதான்

--என்ன சொல்றீங்க !!

--ஆமாங்க பார்க்குல இருக்குற அடிபம்புல வீட்டுக்குத் தண்ணி அடிச்சுப் பிடிச்சிட்டு வருவேன். :)

317. கரப்பான் தொல்லை அதிகமா இருக்கு. குட்டிபோட்டு வேற வம்சத்தைப் பெருக்கிக்கிட்டு இருக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க. ( லெக்ஷ்மண் ரேகா & ஹிட் போட்டுப் பார்த்துட்டேன் ) புற்றீசல் போல அங்கங்கே வருது.. ஹ்ம்ம்

318. ஜெமோவின் பத்மவியூகமும் பாடலிபுத்ரமும் படிச்சேன்.சான்ஸே இல்லை. 97 இலேயே அவர் இத எல்லாம் எழுத தீர்மானிச்சிருக்கணும். அவரப் போல நுணுக்கமான விவரணைகளை சுவாரசியமா புகுத்தி எழுத இன்னொருவர்தான் பிறந்து வரணும். பர்ஃபெக்ட் !

( ஒரு மாசத்துக்கு முன்னாடி போட்ட பின்னூட்டம் ) !

-- வெண்முரசு பத்தி.

319. கண்டநாள் முதலாய் காதல் பெருகுதடி...

வழியெங்கும் மரக் குழல்கள் அசைய ஜிகு புகு ஜிகு புகு என ஓடத்துவங்கும் ரயிலுடன் எப்போதும் சிறுமியாக்கி ஓடத்துவங்குகிறது மனசு.

எட்டிப் பார்க்கும் நிலா கூட ஓடி வர நதியிலும் கால்வாயிலும் விழுந்து எழுந்து தடுமாறுகிறது.

பன்னீர்ப் பூவோ காட்டு அரளியோ நாசியை நெருட மயக்கத் துவங்கும் இருளில் மேகக் கோலமிடுகிறது வானம்.

கண்ணாடி ஜன்னல்வழி ஒரு துளி பூமியும் ஒரு துளி வானமும் கொடுக்க மறுப்பதில்லை எந்த ரயிலும்.

புகையடிக்க ஓடிவந்த ஆதி ரயில் என்னை மயக்கிய அழகான ராட்சசன். இன்றுவரை அந்த மயக்கம் தீராமல் என்னைத் தாலாட்டித் தூங்கவைக்கிறான். காணும் கணம்தோறும் கண்விரித்து வியக்கவைக்கிறான்.

மீளாக் காதல் ஒரு ஏழு வயதிலிருந்து..

காசியிலிருந்து அப்பத்தாவின் அஸ்தியைக் கரைத்துத் திரும்பிய அம்மா அப்பா எங்களை ஸ்டேஷனில் சந்தித்துவிட்டு ராமேஸ்வரம் கிளம்ப அவர்களைத் திரும்பக் காணும் ஆவலில் காரைக்குடி ரயிலடிக்கு ஓட்டமும் நடையுமாக தனியாய்த் தைரியமாய்ப் போனபோது வழியில் பார்த்த யாரோ ஒரு அண்ணன் சைக்கிளில் சென்று திரும்பச் சந்தித்து திரும்பி ஆயாவீட்டிற்கு வந்து வாங்கிய அன்பு டோஸ் மறக்கமுடியாதது.

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி.. ரயிலே உன்மீது.

320. சில நட்புகள் என்றென்றும் புரிந்துணர்வுடன் இருப்பது அதிர்ஷ்டம். என்றோ எப்போதோ பேசினாலும் விட்ட இடத்திலிருந்து தொடருவது போல ஒரு யதார்த்தம். புரிந்துகொள்ளல்தான் எந்த உறவையும் நிலைக்க வைக்கிறது.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.
 

5 கருத்துகள்:

  1. //304. வெறும் 36000 நாட்கள் கூடத் தாண்டமுடியாத இந்த வாழ்வில் யாருடனும் கோபித்துக்கொள்ள ஏதுமில்லை. //

    கரெக்ட். அதனால் நானும் உங்களைக் கோபித்துக்கொள்ளப் போவது இல்லை ..... இந்த என் http://blogintamil.blogspot.in/2015/06/2.html இன்றைய வலைச்சரப்பதிவுக்கு வராவிட்டாலும் கூட.

    பதிலளிநீக்கு
  2. கரப்பான் பூச்சி தொல்லைக்கு pest control யாரையாவது கூப்பிடு சொன்னா போதும். 500 rs ல வீடு புல்லா பேஸ்ட் வச்சிட்டு போயிருவான். அப்புறம் ஒரு வருஷம் கவலை இல்லாமல் இருக்கலாம்.
    ஜெய் தெலுங்காணா. கிட்டத்தட்ட ரொம்ப நாளுக்கு அப்புறம் நசுக்கப்பட்டவர்களுக்கு ஒரு உரிமை கிடைச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  3. புக்கே போட்டு இலவசமா - அதானே...?

    காயின்ஸ் கலெக்‌ஷன் - ஸ்டாம்ப் ஆல்பம் : ஒப்பீடு அருமை...

    பதிலளிநீக்கு
  4. கழுத்திலே கருகமணி
    காதோரம் சம்பங்கி,
    இடுப்பிலோ கண்டாங்கி,
    இதயத்திலே காண்டாமணி
    சருகுச் சீலை சரசரக்க
    சேவக்கொண்டை அசைந்தாட
    கருதறுக்கப் போறவளே
    கால்வீசும் வேகத்துல இளந்
    தோள் என்னை அழைக்குதடி
    துணையாகக் கூட்டிப்போ // அட அட.....

    304 அருமை....316 ஹஹஹாஹ்ஹ்...

    (கீதா: ரயிலின் மீது காதல் எனக்கும் உண்டு.....அதுவும் ஜன்னலோரம் கிடைத்துவிட்டால்...ஆஹா)

    309...உண்மை உண்மை உண்மை......

    அனைத்தும் ரசித்தோம்...சகோதரி..

    பதிலளிநீக்கு
  5. ஹாஹா நன்றி விஜிகே சார் :)

    கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி பெயரில்லா.

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ & கீதா :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...