எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஆகஸ்ட், 2014

காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.


காவிரிப் பூம்பட்டினம் மழைமேக மூட்டத்தோடு கூடிய ஒரு விடுமுறைநாளில் சென்றுவந்தோம். கடல்கொண்ட மிச்சம்தான் இருக்கிறது.

ஒரு லைட் ஹவுஸும், சிலப்பதிகார நினைவுத்தூணும் நிறுவப்பட்டுள்ளது.

1973 இல் அமைக்கப்பட்ட கண்ணகி சிலை 1994 இல்  கடல் சூழ்ந்து அழிக்கப்பட்டு உள்ளது. கரை அரிப்பால் கண்ணகி சிலையை இடம் பெயர்த்து மாற்றி உள்ளார்கள்.


உப்புவணிகமும் பின் தனவணிகமும் செய்துகொண்டிருந்த தனவைசியர்கள் எனப்படும் நகரத்தார் அங்கே பெரும் செல்வாக்கோடு வசித்து வந்திருக்கிறார்கள். கடல் கொண்டபின்
அங்கிருந்து காஞ்சீபுரத்துக்கும் அதன் பின் சோணாட்டிற்கும், பாண்டிநாட்டிற்கும் வலசை வந்திருக்கிறார்கள்.

பூம்புகாரைக் கடல்கொண்டதால்தான் அவர்கள் செட்டிநாட்டில் கட்டிய கோட்டை போன்ற வீடுகள் தரையிலிருந்து 10 அடி உயரத்தில் அமைந்துள்ளன.

இங்கே சிலப்பதிகாரக் கலைக்கூடத்தில் இசைக்கருவிகள், தோற்கருவிகள் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.  பூம்புகாரில் வாழ்ந்து வந்த கண்ணகி கோவலன் கதையும் மாதவியுடனான வாழ்வு, பிரிவு, மதுரை செல்லல், பாண்டிய நாட்டை கண்ணகி எரித்தல், கேரள தேசம் செல்லுதல் ஆகியன சிலப்பதிகாரத்தின் நினைவாக நிறுவப்பட்டுள்ளன.

சிலம்பு பதிக்கப்பட்ட நுழைவாயில், 5 நிலை கொண்ட கட்டிடம், அதைச் சுற்றிலும் நடைபாதையோடு கூடிய அழகிய சோலை, அதில் சிலம்பை இயற்றிய இளங்கோவடிகளும், கரிகால் சோழனும் சிலைகளாகச் சமைக்கப்பட்டுள்ளனர்.

மண்டபத்தில் சிலம்பின் கதை 49 புடைப்புச் சிற்பங்களாகவும், கண்ணகி, மாதவி சிலையும்  தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

மணிமேகலையும் அறவண அடிகளும் கடல்கோள் கொண்ட சமயம் தப்பிப்பிழைத்துக் காஞ்சீபுரம் வந்திருக்கிறார்கள்.


சங்க காலத்தைச் சேர்ந்த கட்டிட அமைப்புகள் தென்படுகின்றனவாம்.கண்ணகி சிலைக்கருகில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிட அமைப்பும் தென்படுகிறதாம்.

பொதுவாகவே அலைவேகம் அதிகம். இந்த ஆக்ரோஷ அலைகளால் வனகிரி எல்லையம்மன் கோயில் அழிக்கப்பட்டிருக்கிறது.

http://drs.nio.org/drs/bitstream/2264/1161/2/INCHOE_Proc_2004_2_820.pdf

Indian National Conference on Harbour and Ocean Engineering (India).  

இங்கே வருடா வருடம் பட்டினத்தார் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. திரைகடலோடித் திரவியம் தேடியிருக்கிறார்கள் முன்னோர்கள். 

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று மருதனார் பட்டினத்தடிகளுக்கு உணர்த்திய இடம். 

கடல் அழித்த மிச்சம். பல கடற்கரைகள் போல சங்கு சிப்பி ஏதும் இல்லை. அங்கங்கே இடிபட்ட பாதி அழிந்தும் அழியாமலும் உள்ள கட்டிடங்களின் எச்சம் காணக்கிடைக்கிறது.

உச்சமாக ஓங்கிவீசும் கடலலைகளைத் தாக்குப் பிடிக்க பாறைகளைப் போட்டிருக்கிறார்கள். அடித்து அடித்து நுரையோடு எழும்பி பயம் கிளப்புகிறது அது.

 பரம்பரையின் ஏதோ ஒரு முன்னோருடன் தொடர்பு உடைய இந்த ஊரை இப்போது பார்க்கின்றபோது நமக்கும் அந்த இடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலத் தோன்றுகிறது. 

 கண்ணகியே வாழாத ஊர். மாதவியையும் வாழவிடாத ஊர். கண்ணகியின் துயரமும் ஏன் மாதவியின் துயரமும் சேர்த்து வெறுமையும் விரக்தியும் சுமந்து தனித்துக் கிடக்கிறது அலையடிக்கும் எண்ணங்களோடு. 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



8 கருத்துகள்:

  1. அருமையான படங்கள். ஒவ்வொரு முறை பூம்புகார் பற்றிய செய்திகள் படிக்கும்போதும் அங்கே செல்லும் ஆசை தோன்றும் என்றாலும் இதுவரை சென்றதில்லை.... விரைவில் செல்ல வேண்டும்!

    பதிலளிநீக்கு
  2. karuththukku nandri Venkat. kattayam poi parungka. parkavendiya oor.( ennavo NHM writer work panala. enavey thanglish la comment.

    adutha comment copy paste :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி !! பூம்புகார் நான் பிறந்து வளர்ந்த ஊர்..என் வீட்டுக்கு அருகில் தான் பல்லவவனம் கோவில் உள்ளது அதற்க்கு அருகில் தான் நகரத்தார் விடுதி ஒவ்வொரு ஆடி மாதம் நகரத்தார் பத்து தினங்கள் இங்கு வந்து தங்கி பட்டினத்தார் திருவிழாவை நடத்துவார்கள்.சிறு வயதில் அந்த திருவிழாவில் நாங்கள் அடித்த கும்மாளம் இன்னும் என் நெஞ்சில் நீங்காமல் இருக்கிறது தேனம்மை ....

    பதிலளிநீக்கு
  5. படங்களும் உங்கள் வரிகளும் அருமை. புடைப்புச் சிற்பங்கள் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  6. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  7. நன்றி குரு

    நன்றி ராமலெக்ஷ்மி. நேத்து தமிழ் மணத்தில் இணைத்தமைக்கும் நன்றிப்பா. :)

    நன்றி யாழ்பாவண்ணன் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...