எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.



115. இது ட்ரேதான். ஆனால் மரத்தில் செய்யப்பட்டு பறவையும் கிளையும் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.



116.இது மணவறையில் உபயோகப்படுத்துவது. அரசாணிக்கால் நடுவது. முதல் நாள் இரவே பங்காளிகள் வந்து இதில்தான் கிலுவைக் கம்பையும் பாலைக்கம்பையும் ஊன்றி அரசிலைகளைச் சுற்றி வைப்பார்கள். அரசன் ஆணைக் கால் என்று பெயர். அரசனின் ஆணையோடு திருமணம் செய்விப்பதாக இதை வைப்பது





117. பித்தளை ஸ்லேட்டு விளக்கு. இதற்கு ஏன் அப்படி ஒரு பெயர் என்று தெரியாது. ஆனால் ஸ்லேட்டு விளக்கு என்று சொல்வார்கள். உள்ளே தண்டில் ஒரு ஸ்பிரிங்கும் அதன் மேல் மெழுகுவர்த்தியும் வைக்கப்பட்டிருக்கும். அதை மூடினாற்போல் ஒரு க்ளாஸும் உண்டு . அந்த க்ளாசின் மேல் ஒரு குமிழும் இருக்கும். ( க்ளாஸ் முட்டைக்ளாஸ் போல இருக்கும்.  இங்கே க்ளாஸ் வைக்காமல் எடுத்துள்ளேன் ).





118. கோலக்கூட்டு என்பார்கள் இதை. பச்சரிசியை ஊறவைத்து அரைத்து அதை பால் சங்கில் சொட்டுச் சொட்டாக துணியிலோ அல்லது ப்ளாஸ்டிக் ஷீட்டிலோ ஊற்றிக் காயவைத்து எடுப்பார்கள். வெள்ளை வெளேரென்று இருக்கும் இதை நடுவீட்டுக் கோலமிடப் பயன்படுத்துவார்கள். இன்னும் கலர் சேர்த்து பலவித உருவங்களிலும் செய்வார்கள். அது மாமியார் சாமான் என்று வைக்கப்படும் சீர் சாமானில் அலங்காரமாக வைக்கப்படும்.





119. மங்குச் சாமான்கள். இவை கொழும்பிலிருந்தும் ரெங்கோனிலிருந்தும் கொண்டுவரப்பட்டவை. இவை உட்புறம் வெண்மையாகவும் வெளிப்புறம் பல்வேறு வண்ணங்களிலும் கண்ணைக் கவருபவை. இவற்றில் தயிர் உறை ஊற்றுவார்கள். கிண்ணங்களில் ஊறுகாய் வைத்திருப்பார்கள். படத்தில் காதுவைச்ச மங்குச் சட்டியும், ஊறுகாய் செட்டும். செவ்வகக் கிண்ணமும் இன்னுமொரு ஊறுகாய் போட்டுக் காயவைக்கும் பச்சை மங்குப் பாத்திரமும் இருக்கு.





120. இவற்றைத் துத்தநாகத் தகரங்கள் என்று சொல்வார்கள்.  இவற்றில் வருடத்துக்கான மிளகாய் மல்லியை வாங்கிக் காயவைத்து சேகரித்து வைத்திருப்பார்கள். மூடி நல்ல டைட் என்பதால் கெட்டுப் போகாது. வண்டு வராது. J





121. மங்கில் செய்யப்பட்டுள்ள இதை எச்சிப் பணிக்கம் என்று சொல்வார்கள். உள்ளே வெண்மையாகவும் வெளியே பச்சைக்கலரிலும் இருக்கும் விளிம்பில் சிவப்பு லைனிங் கொடுத்தது போல் இருக்கும். 

இதை சாப்பிட்டவுடன் கைகழுவப் பயன்படுத்துவார்கள். அந்தக்காலத்தில் உள்ள பெரிய வீடுகளில் தோட்டத்துக்குச் சென்று கை கழுவ வேண்டும். அப்படி இல்லாமல் விருந்து முடிந்ததும் இதில் கை கழுவுவார்கள். ஏறக்குறைய இது வாஷ்பேசினின் உபயோகம்.



சிறு மர அலமாரிகளில் பதிக்கப்பட்ட பெல்ஜியம் கண்ணாடிகள். தேக்கு அலமாரிகளில் எனாமலால் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியன் மார்பிள்ஸ் போல உள்ள ஆத்தங்குடிக் கல்.


122. சுவரில் இருக்கும் கண்ணாடியும் பெல்ஜியம் கண்ணாடிதான்.


123. செட்டிநாட்டின் பாரம்பரியத் தடுக்கு. இது மாப்பிள்ளை அழைப்பின்போது மாப்பிள்ளைக்காகப் போடப்படுவது. மேலும் முக்கிய தினங்களில் வீட்டிற்கு வரும் விருந்தினர் அமர்ந்து உணவருந்தவும் போடப்படுவது. ( திருமண நாட்களில் தடுக்கில் அமர்ந்துதான் பெண்ணின் அப்பத்தா வீட்டு ஐயாவும் மாப்பிள்ளையின் அப்பத்தா வீட்டு ஐயாவும் ஏடும் எழுத்தாணியும் கொண்டு இசைகுடிமானம் ( மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் - திருமண ஒப்பந்தப் பதிவு ) எழுதிக் கொள்வார்கள். !


டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



6 கருத்துகள்:

  1. இப்பொழுதும் ஏடும் எழுத்தாணியும் இருக்கிறதா? அதில் எழுத த் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா? வெகு காலத்திற்கு முன்பு நான் செட்டிநாடு சென்றிருந்தபோது ஒரு எழுத்தாணி வாங்கி வந்து வீட்டில் வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. அழகு படங்கள்.....குறிப்பாக ஏடும் எழுத்தாணியும்.....

    பதிலளிநீக்கு
  3. இருக்கிறது கந்தசாமி சார்.வெள்ளியில் கூட ஏடும் எழுத்தாணியும் செய்து வைத்து சரஸ்வதி பூசையன்று வணங்குவார்கள் ( பெண்ணுக்கு வெள்ளிச் சாமானில் திருமணச் சீராகக் கொடுக்கப்படுகின்றது. ) ஏடுகளைப் பார்க்கலாம். எழுத்தாணியை அம்மாவிடம் கேட்டு புகைப்படம் இடுகின்றேன்.

    நன்றி துளசி சகோ :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...