எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 3 செப்டம்பர், 2015

காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

காரைக்குடிப்பக்க வீடுகள் 147. மூன்று கட்டு கொண்டவை முகப்பே மிக அம்சமாக இருக்கும். அபூர்வமாக இரு நிலையிலும் தெய்வங்கள் வைக்கப்பட்டு மிக அழகாகப் பராமரிக்கப்படும் வீடுகளில் இதுவும் ஒன்று.



இது முதல் கட்டின் வளவும் வாசலும் .தூண்களில் எவ்வளவு  அழகான பெயிண்ட் செய்திருக்கிறார்கள். பொதுவாக அகலப்படையில் நான்கு தூண்கள் இருக்கும் & நீளப்படையில் 6 முதல் 8 , 10 தூண்கள் தான் இருக்கும். இங்கே 12 தூண்கள் இருக்கலாம்.


தூண்களில் அழகான வேலைப்பாடுகள் இருக்கும் என்றாலும் இதில் அதிகப்படியான வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. சாண்ட்லியருக்கு ஏற்றாற்போல தூண்களின் நாலா பக்கங்களிலும் தொங்கும் பூ மொட்டுக்கள் போல முடிந்திருப்பது அழகு. நடைக்கு நேரே லெக்ஷ்மியும் வண்ண விளக்குகளும் கொண்டு அலங்கரித்திருக்கிறார்கள்.

இது மேல் மாடியிலிருந்து கீழ் வாசல் மற்றும் மாடி அறைகள். சினிமாக்களில் வரும் வீடு போல் இருக்கிறதல்லவா. ( சேரனின் தவமாய்த் தவமிருந்து படத்தில் செட்டிநாட்டு வீடுகளைப் பார்த்தது போல் )


தூண்களும் அறைகளும். ஜன்னல்களும்தூண்களில் இங்கே நாகம் போல் இல்லாமல் தாமரை போன்ற வடிவத்தில் அமைத்திருப்பது காணலாம். ஜன்னல் & கதவுகளின் மேல் லேசான ஓவியச் சாயல்கள் தெரிகின்றன. 148. முன்பு வரையப்பட்ட ஓவியங்களின் மேல் வெள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம்.அல்லது அவை காலப்போக்கில் வண்ணம் இழந்திருக்கலாம்.


149. கல் மாடிப்படி. இவை ஒரே மாதிரியாக ( பட்டியக்கல் அமைக்கப்படும் ) வெள்ளைக் கற்களால் வடிவமைக்கப்பட்டவை. மிக உறுதி.

வீட்டுக்குள்ள சுத்திப்பார்த்து ரொம்பதூரம் நடந்து களைச்சுப் போச்சு. வாங்க சாப்பிடலாம் . இது 150. பந்திப்பாய். தடுக்கு டிசைனில் செய்திருக்காங்க. ஒற்றைத் தடுக்கு இப்படி டிசைனாக இருக்கும் அதையே தொடர்ந்து நெய்ய சொல்லி  ஆர்டர் செய்து வாங்கி இருக்கலாம். ( மினி விருந்துக்கு மினி பந்திப்பாய் )

151. தரை டிசைன். பொதுவாக ஆத்தங்குடிக் கல் போடுவாங்க. இத்தாலியன் மார்பிள்ஸும் இருக்கும் சில வீட்டில். இது உறவினர் ஒருவர் வீட்டில் எடுத்தது. என்ன கல்னு தெரில. பட் டிசைன் நல்லா இருந்தது எனவே எடுத்தேன்.

தாழ்வாரங்களும் உள் வளவும் தூண்களும் இன்னொரு கோணத்தில் . தாழ்வாரங்களில் அப்போது செய்யப்பட்ட டிசைன்களைப் பார்த்தால் மிக அழகாக இருக்கும். இதைச் செதுக்கிய 152. பெருந்தச்சர்கள் எல்லாம் இப்போது எங்கே எனத் தெரியல. காரைக்குடி வீடுகளை அழகாக்கியதில் அவர்கள் பங்கும் பெரிது.


திரும்ப வாசலுக்கே வந்துட்டோம். தாங்க்ஸ் சொல்லிக்கலாம். வணக்கம் மீண்டும் வருகன்னு சொல்றாங்க. ஏன்னா இவங்க விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற வீட்டுக்காரங்க. :) நன்றி நன்றி.




டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்




6 கருத்துகள்:

  1. கலைநுணுக்கம் கொண்ட செட்டிநாட்டு வீடுகளை அழகான வண்ணப் படங்களில் ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. செட்டிநாட்டு வீடுகளை பார்த்துக்கிட்டே இருக்கலாம், அவ்ளோ அழகு, நேர்த்தி. என் ஆயா வீடு முன்பு கண்டனூர் (வாடகை வீடுதான்). இப்போ அழகாபுரி. கண்டனூரில் என் ஆயா குடியிருந்த வீட்டுக்கு எதிரே பா. சிதம்பரம் வீடு. அடேயப்பா! அந்த பள்ளிப்பருவத்து விடுமுறை நாட்களை அந்த அழகிய, அமைதியான வீதிகளையும், ஊரணியும், வீடுகளையும் மறக்க முடியுமா!!!

    பதிலளிநீக்கு
  3. என்னம்மா இருக்கு வீடுகள்! செட்டிநாடு வீடுகள் கலை அழகின் அம்சங்கள் என்பது தெரியும்தான். அவற்றைப் பார்க்கும் போது..மனம் லயித்துவிடுகின்றது.

    அருமை படங்கள் அனைத்தும்...

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஊர் வீடுகளின் படங்கள் அழகு அக்கா...

    பதிலளிநீக்கு
  5. பிரிவோம் சந்திப்போம் படத்தில் பார்த்த வீடு போல இருக்கிறது தேன். வெகு நேர்த்தி.

    பதிலளிநீக்கு
  6. நன்றி தமிழ் இளங்கோ சார் :)

    நன்றி மைதிலி :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    நன்றி குமார் சகோ

    நன்றி வல்லிம்மா. :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...