எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

பெங் குவின்களும் வால்ரஸ்களும்.

961. சொல்பேச்சு கேட்பதில்லை
கடுக்கிறாள் அக்கா
கத்திக் கத்தி வயிறு புண்ணாப் போச்சு
கோபிக்கிறாள் அம்மா
எதையும் காதில் போட்டுக் கொள்வதில்லை
சலிக்கிறாள் மனைவி
கேளுப்பா கன்னம் பிடித்துக்
குழைகிறாள் மகள்.
இடையறாது கூவிக் கொண்டிருக்கிறது
யாரையும் நோகாது குயில்

962. பர்சனல் பழிவாங்கலுக்காக கைதிகளைத் தப்ப விட்டுக் கொண்டிருந்தால் மக்களின் கதி என்ன.

963. சொல்ல எவ்வளவோ இருந்தும், சின்ன இடத்திலிருந்து உற்பத்தியாகி எல்லா அழுக்குகளையும் கரை நிறையச் சுமந்தும் தனக்குத்தானே பேசிக்கொண்டு மௌனமாய்ச் சங்கமமாகிறது பெருநதி.

964. ஹலுவா.. ஆரஞ்ச், பிஸ்தா டேஸ்டுல.



965. பனிப்பாறைகள் சூழ்ந்த தீவிலும்
தனியே வாழும் பெங்குவின்கள்.
தனித்தலையும் வால்ரஸ்கள்.
புது யுக வாழ்வு..
தனித்துவம் தான் தத்துவம்
இறுகிக்கிடக்கிறது
தாம்பத்யக் குகை..
வெளியேற வழியற்று
உறைந்து கிடக்கின்றன மீன்கள்
சூரிய வெப்பம் சாட்டவிடாமல்
இருண்டு கிடக்கிறது
தென் துருவமும் வடதுருவமும்

966. அக்கா அம்மா என்ற சாயங்கள் இல்லாமல் தோழிகள் தோழிகளாகவே ஏன் இருக்கக் கூடாது.

967. தொலைப்பதற்கென்றே திருவிழாவுக்குக் கூட்டிச் செல்கிறார்கள்
.
.
கணவனை மனைவியும்
மனைவியைக் கணவனும்.
தொலைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடும் திரும்புகிறார்கள். 3:)

#திருமணமும்_இருமணமும்.

968. 1. துர்க்கை செவ்வரளி சாமந்திப்பூ எலுமிச்சை சாதம் பாசிப்பயறு சுண்டல் இனிப்பு

2. ராஜராஜேஸ்வரி சிவப்புக் கொன்றைப்பூ எள்ளு சாதம் மொச்சை மசாலா சுண்டல்.

3. கல்யாணி செம்பருத்தி தாமரை தயிர்சாதம் காராமணி கார சுண்டல்

4. ரோஹிணி செந்தாமரை சர்க்கரைப் பொங்கல் பட்டாணி சுண்டல்

5. காளிகா செவ்வரளி மாலை பால் சாதம் கார்ன் வெஜ் சுண்டல்

6. சர்ப்பராஜ ஆசனம் சண்டிகா தேவி. ரோஜா கல்கண்டு சாதம் ராஜ்மா சுண்டல்

7. சாம்பவி மல்லிகை வெண்பொங்கல் கடலைப்பருப்பு சுண்டல்

8. துர்க்கை முல்லை வெந்தாமரை தேங்காய் சாதம் கொண்டைக்கடலை சுண்டல்

9. காமேஸ்வரி அடுக்கு மல்லி நந்தியாவட்டை.வெல்லப் புட்டு பாசிப்பருப்பு சுண்டல்


- நவராத்திரிக்காக ஒரு ப்லாகில் பார்த்தது.


969. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துவிட முடியாது.

970. Kilambitennu sollu. Nan logout pannitennu sollu. Inbox la thaniya pesittu thituravangakitta sollu

971. பூக்கள் மலர்கின்றன
வாசமொழி பேசி..
புரியவில்லை
ஆனாலும் நுகர்கிறேன்

972. பேரன்புக் காற்றுப் பட்டாலும்
நடுங்கிச் சிலிர்க்கிறது
தோட்டத்தின் மூலையில்
புதிதாய்ப் பூத்திருக்கும்
ஒற்றைப்பூ.

973. தொடரத் தெரியாதவர்கள் தொடங்கவே கூடாது.

974. புண்படுத்தவும் பண்படுத்தவும் யாருக்கும் நேரமில்லை. அவரவர் நியாயம் மட்டும் அவரவருடன்.

975. நமது மனநிலைக்கு ஏத்தமாதிரி நாம் ஸ்டேடஸ் போட அதைப் படிப்பவர்கள் மனநிலைக்கு ஏத்தமாதிரி புரிஞ்சுக்கிறாங்க. தப்பில்லாததத் தப்புத்தப்பா புரிஞ்சிக்கிட்டா எவ்ளோ தப்பு..

976.  ஒரு வெறுப்பு
ஒரு கோபம்
ஒரு சந்தேகம்
ஒரு எரிச்சல்
ஒரு எண்ணத்திரை
ஒரு கண்ணீர்த்துளி
இணைக்கிறதா
பிரிக்கிறதாவெனப் புரியாமல்
பொத்திவைத்துக் கொள்
உள்ளக்கிடங்குள்.
ஆரம்பமும் முடிவும்
இவற்றுள்ளே சுழல்கின்றன
உன்னையும் சுழலவிட்டு

977. அர்த்தமற்ற கோபம் அன்பானவர்களையும் எரித்துவிடும்

978. Veyyil vantha malai varum. Malai vantha kulir varum. Kulir vantha pani varum. Pani vantha pinna enna veyyilthan. 😉vaazhkkai oru vattam ulagam oru urundaingirathu unmaithan

979. kannu vera therila. nan fb kku varala . ethaiyum padikkala. 3:)

980. Vambu namma valai veesi thedi varuthey. Meenpola maatama fb pot lerunthu thappippathu eppudi. 😱


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.



41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.

4 கருத்துகள்:

  1. 967 ஹஹஹ் என்ற...உணர்வு..ரசித்தோம் அனைத்தையும்...ஒற்றைப் பூவை மிகவும் ரசித்தோம்....

    பதிலளிநீக்கு
  2. நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...